_______________________________________________
பரமேஸ்வரர் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு குமார தந்திரத்தில் கூறுகிறார்;
ஹே, அகஸ்திய முனிவரே
1. ஞான சக்தி தர
2. ஸ்கந்த
3. தேவஸேனாபதி
4. சுப்ரமண்ய
5. கஜாரூட
6. சரவணபவ
7. கார்த்திகேய
8. குமார
9. ஷண்முக
10. தாரகாரி
11. ஸே நானீ
12. ப்ரம்ம சாஸ்தா
13. வள்ளீ கல்யாண சுந்தர:
14. பால
15. க்ரௌஞ்ச பேத நர்
16. சிகி வாஹனர்
ஆகிய பதினாறு ரூபங்களின் நாமங்களை படித்து தியானிக்கிறோம் அவன் எல்லாப் பாவங்களிலுமிருந்து விடுபடுகிறான்.
முதலாவது ரூபமான ஸக்தி தர ஸ்வாமி தியானம்
இந்தப் பதிவில் உள்ள ரூபத்தை பார்த்து கண்களை மூடி மனக்கண்ணில் கண்டவாறும் தியானித்து சக்தி தர ஸ்வாமிகளின் கைகளில் உள்ள வஜ்ரமும், சக்தியாயுதமும் உங்களைக் காப்பதாக பாவிக்கவும்.
ஏகாஸ்யம் த்விபுஜம் வாமே வ்ஜ்ரம் தக்ஷிஜேகரே
இச்சா ஞான கிரியா ஸக்தி ரூப ஸக்தி தரம் பஜே
ஒரு முகமும், இரண்டு கை, இடது கையில் வஜ்ராயுதமும் வலது கையில் இச்சா ஞான க்ரியா சக்திரூபமான சக்தியாயுதத்தை தரித்துள்ள சக்திதர ஸ்வாமிகளை தியானிக்கிறேன்.
இந்த தியானம் எல்லா விதமான அஸ்திர - பாதுகாப்பு சக்தியை எமக்கு தரக்கூடியது.
அடுத்தது ஸ்கந்த மூர்த்தி தியானம்
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.