{கந்த
சஷ்டி, திருக்கார்த்திகை, விசாகம், ஒவ்வொரு மாத சஷ்டியிலும் முருக உபாசகர்கள்
தியானிக்கத் தக்க ரூபங்கள் தாரகாரி ஸ்வாமி தியானம்}
______________________________________________
பத்தாவது ரூபம் தாரகாரி ஸ்வாமி தியானம்
இந்த ரூபம் தாராகாசூரனை வதம் செய்த கோலம்; இது எமக்குள் இருக்கும்
பிறவிக்கு காரணமான அசுரகுணங்களை, வினைகளை அழித்து பிறவிப் பிணியில் இருந்து நீக்க
வல்ல தியானஸ்வரூபம் என்று சொல்கிறது குமார தந்திரம்
வரத மங்குச த்வஜேச கட்க சாப வஜ்ரகம்
அபய பாச சக்ர கட்க முஸல் சக்தி மன்வஹம்
த்விதச பாணிபிர் ததா நமருண கோடி ஸந்நிபம்
பஜஹ்ட தாரகாரி மத்ர பவ வி நாச காரணம்
1. வரத கரம்
2. அங்குசம்
3. கொடி
4. கேடயம்
5. வில்
6. வஜ்ரம்
7. அபயம்
8. பாசம்
9. சக்ரம்
10. கட்கம்
11. உலக்கை
12. சக்தியாயுதம்
ஆகிய பன்னிரெண்டு ஆயுதங்களைப் பன்னிரெண்டு கரங்களில் தரித்தவரும்,
கோடி சூரியப் பிரகாஸமானவரும்
ஸம்ஸார துக்கத்தை அழிக்க
வல்லவரும்
தாரகாசுரனை வதம் செய்தவருமான தாரகாரி ஸ்வாமியை தியானிக்கிறேன்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.