{கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, விசாகம், ஒவ்வொரு மாத சஷ்டியிலும்
முருக உபாசகர்கள் தியானிக்கத் தக்க ரூபங்கள் பால ஸ்வாமி தியானம்}
______________________________________________
பதினான்காவது மூர்த்தம் பாலஸ்வாமி தியானம்
பரம்பொருளை வாத்ஸல்யத்துடன் குழந்தையாக கருதி தியானிக்க சிறந்த
வடிவம்; பூரண ஸத்வ வடிவம்! புதிதாக திருமணமாகி நற்குழந்தைகள் வேண்டுபவர்கள் உபாசிக்க
வேண்டிய தியான ரூபம்.
இன்று திருமணமாகி குழந்தைகள் இன்றி இருக்கும் பலர் உடலியல் ரீதியாக
பிரச்சனை இன்றி இருந்தாலும் மனதில் உணர்ச்சியளவில் சத்துவமும், வாத்ஸல்யமும்
இல்லாததால் குழந்தைப் பேறு இன்றி தவிக்கிறார்கள். அவர்கள் மன நிலையே அவர்களுக்கு
குழந்தைப் பேற்றை தருவதில்லை! அவர்கள் இந்த பாலஸ்வாமியினை தியானித்து வந்தால்
நிச்சயம் ஸத்புத்திரப் பேறு கிடைக்கும்.
பலருடைய திருமண உறவு எரிச்சலும், குரோதமும், சண்டையும் நிறைந்த தாமஸ
வாழ்க்கையாகத்தான் இருக்கிறது; இந்த ஸ்வாமியினுடைய ரூபம் ஸத்துவ குணத்தை வளர்க்க
வல்லது.
மேலும் இந்த பாலஸ்வமியைத் தியானிக்கும் யோகி எப்போதும் மனதளவில்
இளமையாக இருப்பான்! ஸ்ரீ லலிதை உபாசனையில் ஏன் பாலை அவசியமோ அதுபோன்றதே
பரமேச்சுவரரை உபாசனை செய்பவர்களுக்கு பாலஸ்வாமி! எமது மனதைக் கள்ளம் கபடம்
இல்லாமல் குழந்தை போல் வைத்திருக்க உதவும் உபாசனை இந்த திருவுருவம்.
தியான ஸ்லோகம்
*****************************
பத்ம ஸவ்ய கடிஸம் யுத வாமம்
பத்ம காந்தி நிபமேக முகஞ்ச
பால விருத்திகர மீச்வர சூநும்
பால முந் நத புஜம் ப்ரணதோஸ்மி
வலது கரத்தில் தாமரையும், இடது கை இடுப்பிலுமாக வைத்துக்கொண்டு, தாமரை போன்ற செந் நிற உடல், இளைமையை அபிவிருத்தி செய்பவரும், உயர்ந்த கையை உடையவரும், பரமேஸ்வரரின் குழந்தையான பால ஸ்வாமியை நமஸ்கரிக்கிறேன்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.