எந்தவொரு கலையும் எமது
மனதை உயர்ந்த நிலையில் வைத்திருப்பதற்கான ஒரு
தூண்டலாகும்! கவலைகளுக்கும், குழப்பத்திற்கும் உள்ளாகும் மனதை
ஒரு உயர்ந்த ஆனந்த
நிலைக்கு கொண்டு செல்லுவதற்கான ஒரு
தூண்டலே
இசை
நாடகம்
நடனம்
சினிமா
இவை எமது மனதை
ஒரு பரவச நிலைக்கு உட்படுத்தி எம்மை
ஒரு அமைதி நிலைக்கு கொண்டுவரவேண்டும்.
இங்கு அந்தக்கலையின் கருவிகளான நடிகர்,
நடிகையர் மீது வீண்
மோகம் கொள்வது ஒரு
மனப் பிறழ்வு! இந்தக்
கலைகள் சமூகத்தின் மனதை
வசப்படுத்தி கருத்தியலைப் புகுத்த வல்லவை!
கலையின் அனுபவத்தைத் தாண்டி
அந்த அனுபவத்தினைத் தரும்
கருவிகளைக் கொண்டாடத் தொடங்கும் போது
மனிதன் முட்டாளாகிறான்.
கலைகளில் உயர்வு நிலை
கண்ட தமிழர்கள் அதன்
அதியுச்ச பிறழ்வு நிலையில் இருக்கிறார்கள் என்பதை
தற்போது நாம் காணக்கூடியதாக இருக்கிறது.
ஆட்டத்தைப் பாராமால் ஆடும்
மங்கையில் மயங்குதலும்,
நடிகனின் வீர உணர்ச்சியை அனுபவிக்காமல் நடிகனே
வீரன் என்று நம்பும் மனமும்
தான் உருவாகி வருகிறது;
ஒரு நடிகனின் நடிப்பை நடிப்பின் இலக்கணத்தின் படி
சரியாக நடிக்கிறாரா என்று
ஆராயும் பண்பு ஆரோக்கியமானது! ஆனால்
நடிகனை நடிப்பிற்கு அப்பால் சென்று
நடித்த துதிபாடும் மன
நிலையில் இத்தகைய நிகழ்ச்சிகளை நடாத்துவது தவறான
உதாரணம்! கலைகளின் உயர்ந்த இலட்ச்சியத்திலிருந்து தாழ்
நிலைக்கு கொண்டுவரும் நிலை!
இதேபோல் பட்டிமன்றங்கள் - விவாதங்கள் என்பவை
எமது தர்க்க மனத்தை
(logical mind) விருத்தி செய்யும் களங்கள்! ஆனால்
மற்றவர் மூக்கை அறுக்க
வேண்டும், வெட்டிப்பேச வேண்டும் என்ற
தன்மை அதிகமாகும் போது
இவை குதர்க்க மன்றங்கள் ஆகிவிடும்.
கலை மனதை, பண்பை
உயர்த்த உதவும் ஒரு
கருவியாக நாம் பயன்படுத்தும் போது
அது எப்போதும் நன்மையானது! மனதைக்
கெடுக்கும், மனத் தாழ்
உணர்ச்சிக்கு கொண்டு செல்லும் போது
அது தவறானது!
இதை கலைத்துறையின் அறிஞர்கள் தெளிவாக அடுத்துவரும் தலைமுறையினருக்கு கற்பிக்க வேண்டும்!
ஒரு கலைப்படைப்பு நடைபெற்ற யதார்த்த நிகழ்வினை பகிர்வதற்கான ஒரு
ஊடகம், அதை உருவாக்கியவரின் உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கிறது, சிக்கலான ஒரு
விடயத்தை எளிமையாகச் சொல்ல
வருகிறது, ஒரு கருத்தியலைப் புகுத்தி எமது
சமூகத்தின் நடைமுறையை மாற்ற
முயல்கிறது, ஒரு நிறுவனத்தின் கருத்தினை மனதில்
புகுத்துவதற்கு முயல்கிறது போன்ற
தெளிவுகளை இத்தகைய பட்டிமன்ற ஒருங்கிணைப்பாளர்கள் மாணவர்களுக்கு கற்பித்து முறைப்படுத்தப்பட்ட, உயர்ந்த மனப்பாங்குடைய தன்மையில் ஆய்வுப்பட்டி மன்றங்களாக இவை
நடாத்தப்பட வேண்டும்.
விவாதமன்றங்களின் அறிஞர்களாகத் திகழும் Laleesan Laleesan ஐயா, பேராசிரியர் Pirashanthan Srivaratharajan ஆகிய துறை
சார் அறிஞர்களின் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!
Gnanadas Kasinathar Archaren Srirangaraja Vimalathithan Vimalanathan Nalliah Kumaraguruparan Ashokbharan உங்கள் உரையாடலும் இங்கு சிந்தனையைத் தூண்டக்கூடியது.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.