தீபாவளியை 70
ஆண்டுக்கு முன்னர் இப்படிக் கொண்டாடவில்லை, அப்படிக் கொண்டாடவில்லை! இப்படியொரு
பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கிறது.
இதெல்லாம் என்ன
விதமான சிந்தனை? வாதம்? கொண்டாட்டம் என்பது
பொருளாதாரத்துடனும், அவரவர் மன நிலையுடனும், குடும்ப குல வழக்கத்துடனும்
தொடர்புடையது!
அம்மாவின் உழைப்பில்
சிறுவயதில் வடை சுட்டு சாப்பிட்டு கோயில் போய் பிறந்த நாள் கொண்டாடினோம்! அப்போதைய
குடும்ப நிலை அது! இப்போது கொழுத்த உழைப்பில் காசு மெத்திப்போய் பல்லாயிரம்
செலவழித்து ஹோட்டலில் பிள்ளைகளுக்கு Birthday party செய்கிறோம்! இதை எப்படி
புரிந்துகொள்கிறோமோ அப்படித்தான் எல்லாப் பண்டிகைகளும்!
பணமுள்ளவன் காசை
கரியாக்கி வெடிபோடுவான்; அவனிடமுள்ள அளவுக்கதிகமான பணம் பட்டாசுத் தொழிலாளியை
வாழ்விக்கிறது.
கோயிலுக்கு ஆடம்பரமாக
பூசைக்கு பூ வாங்கிக்கொடுத்தால் அது பூந்தோட்டக்காரனிற்கு வாழ்வாதாரமாகிறது!
ஒருவனுடைய கொண்டாட்டம் இன்னொருவருக்கு வாழ்வாதாரமாகிறது.
மாமிசப் படையல்
போடும் குலவழக்கம் இருந்தால் அது சிலரை வாழ்விக்கிறது! குடும்பத்தை உறவினர்களை
விருந்துக்கு அழைத்து ஒருங்கிணைக்கிறது.
கொண்டாட்டங்கள்,
திருவிழாக்கள் எல்லாம் சமூகத்தை பொருளாதாரத்தை இயக்கும் விசைகள்! சமூகத்தின்
பொருளாதாரம், உறவு என்பவற்றைப் பலப்படுத்தும் தளங்கள்!
இதை அதிமேதாவித்தனமாக
கருத்து சொல்லுகிறோம், ஆராய்கிறோம் என்று கிளம்பி இறுதியில் தீபாவளிக்
கொண்டாட்டத்தில் விரக்தியை கிளப்பாதிங்கப்பா!
கொண்டாட்டம் என்பது
எமது தர்க்க மனதை சற்று தள்ளிவைத்து விட்டு அனுபவிப்பதற்கானது!
சந்தோஷமாக
அனுபவிப்போம்! கொண்டாட்டங்களூடாக சமூகத்தை பலமுறச் செய்வோம்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.