குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, November 15, 2023

பண்டிகைகளும் பழக்கங்களும் பொருளாதாரமும்

 


habit of the person/society create the economical cycle

ஒரு தனி மனிதனின் அல்லது சமூகக் குழுவின் பழக்க வழக்கங்கள் பொருளாதாரச் சுழற்சியை உருவாக்குகிறது.

மனிதன் அடிப்படையில் சுய நலமானவன்; ஒருவன் தனது உழைப்பின் உபரியை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ள இயல்பாக மனமில்லாமையினால், அல்லது அதற்குரிய வழி தெரியாததால் அவனிடம் இருந்து அந்த உபரியை பிடுங்குவதற்கு அரசு பல்வேறு பொறிமுறைகளை உருவாக்குகிறது.

நேரடியாக வரி விதிவிதிக்காமல் பல்வேறு களியாட்டங்களை, புதுப்புது பொருட்களை உருவாக்கி அவற்றை அவனுக்கு தேவையா இல்லையா என்று சிந்தனையில்லாமல் வாங்கவைத்து எம்மிடம் உள்ள உபரிப் பணத்தை பிடுங்குகிறது.

அரசு அதிகாரமையமாகி பொருளாதார சுழற்சியை உருவாக்க மக்களை வலிந்து சில பழக்கங்களுக்கு உண்டாக்கி தனது பொருளாதாரச் சுழற்சியை வருமானத்தை உருவாக்கலாம்;

பெரிய நகரங்களை அமைத்தல், அந்த நகரத்தை பொருளாதார, அரசியல் மையங்கள் ஆக்குதல்; டுபாய், சிங்கப்பூர் போன்றவை இவற்றிற்கு உதாரணம்.

யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தனை வழிபடுவது என்பது ஒரு பெரும் நிகழ்வாக ஆகும் போது அந்தச் சூழல் ஒரு பெரிய பொருளாதார நிதிச் சுழற்சியை உருவாகும். இப்போது அது ஒரு உலகவாழ் நிகழ்வு! இதை நாம் multiplier effect என்போம்; நல்லூர் கந்தனைக் காண வெளி நாட்டிலிருந்து வரும் மக்களின் உணவு, தங்குமிடம், கேளிக்கை இவற்றினூடாக உள்ளூர் மக்களுக்கு பொருளாதார சுழற்சி ஏற்படும்.

சில நாட்களுக்கு முன்னர் திருச்செந்தூர்வாசி ஒருவருடன் உரையாடும் போது இந்த சிலோன்காரங்கள் வெளி நாட்டுக்காசை கொண்டுவந்து உள்ளூர்காரனை விட அதிகமாக பணம் கொடுத்து எல்லாவற்றிற்கும் விலை ஏத்திவிடுகிறார்கள் என்று அங்கலாய்த்தார்!

மாத்தளையில் முத்துமாரியம்மன் தேர் நிகழும் மூன்று நாட்கள் பலரின் வாழ்வாதார நிகழ்வுகள்! சிலருக்கு அந்த மூன்று நாளே சில மாதங்களிற்குமான உழைப்பு.

எமது பாரம்பரியம் - பாரதம் முழுமைக்கும் - இப்படி கோயில் என்ற அமைப்பு பொருளாதாரத்தின் மையமாக இருந்தது என்பதே உண்மை. இதனால் தான் அன்னியர் ஆட்சியில் கோயில்கள் சூறையாடப்பட்டன; அப்படிச் சூறையாடப்பட்டாலும் மீண்டும் மீண்டும் கோயில்கள் பொருளாதார மையமாக எழுவதற்கு காரணம் அதனுடைய தத்துவ - ideological background வலிமையாக மக்களை ஈர்ப்பதுதான்! இதைச் சிதைக்க பலவித நாத்திக வாதங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் அது அழிவதாக இல்லை! அரசு ஏன் கோயில்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்பதை ஆராய்வதன் மூலம் நாம் இவற்றைப் புரிந்து கொள்ளலாம்.

இந்தக் கோயில் என்ற அமைப்பில் பொருளாதாரம் தங்கிருக்காமல் இன்று நவீன அரசுகள் புதுப்புது பண்டிகைகளை உருவாக்கி உபரிப் பணத்தை வேறு நிறுவனங்களூடாக செலவழிக்க வைத்து பணத்தை அரசு கஜானாவிற்கு கொண்டு செல்கிறது.

மதிமயக்கும் மதுப்பழக்கம் என்பதும் மக்களிடமுள்ள பணத்தைப் பிடுங்கி அரசின் கஜானாவிற்கு சேர்க்கும் ஒரு வழி!

ஆனால் எமது தீபாவளி போன்ற அனைத்துப் பண்டிகைகளும், விரதங்களுக்கும் அகச்சார்பான விளக்கம் இருக்கிறது; அதற்கு மேல் புறச்சார்பாக தனிமனிதன், குடும்பம், சமூகம், அரசி கட்டமைத்த பொறிமுறையும் இருக்கிறது.

அகச்சார்பான விளக்கம் என்பது சூரியன் துலா ராசியில் ஐப்பசி மாதம் செல்லும் போது, சதுர்தசி திதி எமது முன்னோர்களை வழிபட்டு, தான தருமம் செய்து மனம் மகிழ்வது என்பது. அகச்சார்பானது என்பது ஒருவன் தனது மனதையும், குடும்பத்தினர் அனைவரையும் அவரவர் குடும்ப பழக்கவழக்கங்கள் சார்ந்து சந்தோஷமாக வைத்திருப்பது. இதை நாம் புறச் சார்பு விளக்கத்தால் குழப்பி இல்லாமல் செய்யக்கூடாது; இது எமது பண்பாட்டின் தொடர்ச்சியை அழித்துவிடும்.

இந்த சதுர்தசி திதியில் தான் நரகாசூரனை கிருஷ்ணன் அழித்தார்; ஆகவே தீபாவளிக்கு இதுதான் சிறப்பு என்று கிருஷ்ண பக்தர்கள் சொல்ல, இல்லை இல்லை இதே திதியில்தான் என்னுடைய கடவுள் அயோத்திக்கு வந்தார் இதைச் செய்தார் என்று இன்னொரு குழுச் சொல்ல, இப்படி ஒரு பண்டிகைக்கு புறச்சார்பு விளக்கம் ஆயிரம் வந்தவுடன் நம் எல்லோருக்கும் பேஸ்புக் என்று கும்மியடிக்கும் தளம் ஒன்று இருக்கிறது என்பதால் நரகாசூரன் திராவிடன், தமிழன் என்று புதுப்புதுச் சந்தேகங்களை கிளிப்பி எமது நேரத்தை செலவிட்டுக்கொண்டிருக்கிறோம்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் மார்க் சுக்கபன் ஆக இலங்கையிலும் - தமிழ் நாட்டிலும் எனது தளத்தில் வருடத்திற்கொருமுறை வெட்டி வேலை செய்யும் கூட்டம் ஒன்று நிறையவே இருக்கிறது என்று தனது மெஷின் லேர்னிங் பொறிமுறையை வைத்து இவர்களை உசுப்பேத்தி அடுத்த முறை நான் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்று திட்டம் போடுவான்!

எனவே நண்பர்களே, எல்லாப்பண்டிகைகளியும் அகச்சார்பான விளக்கத்தைப் புரிந்து கொண்டு உங்கள் குடும்பத்தினருடன் உங்கள் வழக்கப்படி உங்கள் இஷ்ட தெய்வம், குலதெய்வம் இருந்தால், உங்கள் குடும்ப வழிப்படி உணவை சமைத்து, வழிபட்டு உங்களுக்கு பிடித்தமான கதையை ஏற்றுக்கொண்டு உங்கள் வருமானத்திற்குள் கொண்டாடி மகிழுங்கள்!

பணம் உபரியாக இருந்தால் நல்ல உடுப்பு, பலகாரம் வாங்கி செலவழியுங்கள்; இது அந்தத் தொழில் செய்பவர்களுக்கு வாழ்வாதாரம்.

சும்மா வேலை வெட்டியில்லாமல் நரகாசூரன் தமிழனா, திராவிடனா என்று ஆராய்ந்து உங்கள் அகமகிழ்ச்சியைக் கெடுக்காதீர்கள்! அவன் எவராகவும் இருந்துவிட்டுப் போகட்டும்! நாம் நிகழ்காலத்தில் வாழ்வோம்!

 


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...