இன்றைய கர்ம யோகவகுப்பில் தரும வியாதன் கதையின் நீதியாக கர்ம யோக விதிகள் கூறுப்பட்டிருப்பதை உரையாடினோம்.
இதில் ஒரு மாணவருக்கு
எப்படி வாசுகி அம்மையாருக்கு கொங்கணவருக்கு காட்டில் நடந்த சம்பவம் தெரியவந்தது
என்ற கேள்வி, அதற்கு பதில் ;
வாசுகி அம்மையாரும்
தரும வியாதனும் ஆர்வத்துடனும் இதயபூர்வமாகவும் தங்கள் கடமைகளைச் செய்தார்கள்.
இப்படிச் செயல் புரிவதால் மனதிற்கு ஒரு நுண்மையான ஆற்றல் வாய்க்கிறது; அதன் பலனாக
அவர்கள் தெளிந்த அறிவினை/ ஞானத்தினைப் பெற்றார்கள். வாழ்க்கையில் எந்த நிலையிலுள்ள
கடமைகளைச் செய்தாலும், பலனில் பற்றில்லாமல் செய்தால் அது நம்மை ஆன்ம அனுபூதி
என்னும் நிலைக்கு நிச்சயம் அழைத்துச் செல்லும் என்பதாகும்.
புராணங்களை கதைகளைப்
எப்படிப் படிக்க வேண்டும் என்பதை நாம் இளையோருக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும்;
கதை என்பது மனதிற்கு
ஒரு மாதியுரு அறிவினை (model knowledge) இனைத் தரும் கருவிகள்; இங்கு
கதாப்பாத்திரங்களை ஆராய்வதை விட குறித்த சூழலில் அந்தக் கதாப் பாத்திரங்களின் எண்ண
ஓட்டம், அறிவு என்பவற்றை எமது மனதிற்கு தந்து அறிவு புகட்டுகிறது; அதேபோன்ற ஒரு
சூழலில் நாம் அந்த அறிவினைப் பயன்படுத்தலாம் என்பதே எம்மிடம் புராணங்கள்,
இதிகாசங்கள், என்று பல்லாயிரம் கதைகள் இருப்பதன் நோக்கம்!
கதை என்பது கதை
சொல்லியின் மனம் எப்படி இயங்கியது என்பதன் கோட்பாடு! இந்த அனுபவம் எமக்கு எப்படி
உதவும் என்பதைப் பற்றிய சிந்தனை இருக்க வேண்டும்.
கதையால் எனக்கு என்ன
பலன் என்ற சிந்தனையும் நோக்கமும் இருக்க வேண்டும்! எமது வாழ்க்கையில்
இலட்சியத்திற்கு தேவையற்ற கதைகளை ஒதுக்க வேண்டும்!
விஞ் ஞானியாக வேண்டும்
என்றால் நியுட்டனின், ஐன்ஸ்டீனின் கதை படிக்க வேண்டும்! கம்பராமாயணம் உதவாது!
தொழில் முனைவோன்
ஆகவேண்டும் என்றால் ரத்தன் டாடா வின் கதை படிக்க வேண்டும்;
கதைகளுக்கூடாக
அறிவினைப் பெறும் நோக்கம் இருக்க வேண்டும்! அதைவிட்டுவிட்டு இராமன் நல்லவனா,
இராவணன் கெட்டவனா என்று கதையின் பாத்திரங்களை வைத்து வெட்டிக்குதர்க்கம் பேசுவது
மனதிற்கு கிளுகிளுப்பூட்டும் நல்ல பொழுதுபோக்கு! அறிவு வளராது!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.