அண்மையில் வெளிவந்த திரைப்படத்தில் ரஜனிகாந் வில்லனுக்கு சொல்லுவார்:
"சொல்லியதற்கு
மேலேயும் செய்யக்கூடாது; கீழேயும் செய்யக்கூடாது; சொன்னத மட்டும் செய்யனும்!"
இன்று படிக்க
விரும்பும் மாணவர்கள் எல்லோரும் அந்த வில்லனைப் போல் அதிமேதாவித்தனம் - யோக
மொழியில் விகல்பம் நிறைந்தவர்களாகவே காணப்படுகிறார்.
ஆசிரியர் சொல்லிய
வார்த்தைகளில் உள்ள சொற்கள் ஒவ்வொன்றும் என்ன அர்த்தத்தில் சொல்லப்படுகிறது
என்பதைப் புரிந்து கொள்வதை விட அந்தச் சொற்கள் பற்றி தாம் ஏற்கனவே சித்தத்தில்
சேர்த்து வைத்திருக்கும் குப்பைகளைக் கொட்டி தமது புரிதல் என்று தேவைக்கு அதிகமாக
மேதாவித்தனம் காட்டிக் குழப்பிக் கொள்கிறார்கள்.
இதை விகல்பம் என்று யோக
மொழியில் கூறுவார்கள்! ஆசிரியர் சொல்லியதை கிரகித்து புரிந்துகொள்வதை விட தமது
சித்தத்தில் சேர்த்து வைத்திருக்கும் பதிவுகளை வெளிப்படுத்தி தமது அறிவை நிரூபிக்க
முனையும் அகங்காரத்தின் நிலை! இப்படியான நிலையில் சொல்லிய வரிகளின் பொருளை உணர்வதை
விட நாம் அதுபற்றி கற்பனை செய்து வைத்திருப்பதையே எமது புரிதல் என்ற குழப்பத்தில்
இருப்போம்!
ஆகவே கற்றலுக்கு முதல்
படி எமது சித்தத்தில் எழும் விகல்பங்களில் இருந்து விடுபட்டு ஆசிரியர் சொன்னதைக்
கிரக்கித்தல் மாத்திரம்!
அப்படிக் கிரகித்த
பிறகு, வகுப்பு முடிந்த பிறகு அதை தான் ஏற்கனவே அதுபற்றிய் சேகரித்து
வைத்திருக்கும் விஷயங்களை ஒப்பிட்டு சிந்தித்து விசாரணை செய்ய வேண்டும்.
அர்த்தமாயிந்தா சிஷ்யா!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.