{கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, விசாகம், ஒவ்வொரு மாத சஷ்டியிலும் முருக உபாசகர்கள் தியானிக்கத் தக்க ரூபங்கள் கார்த்திகேய ஸ்வாமி
தியானம்}
______________________________________________
ஏழாவது ரூபம் கார்த்திகேய ஸ்வாமி
இந்த மூர்த்தி வரத ஹஸ்தம் – கரத்திற்கு மேல் வஜ்ராயுதமும், கேடயமும் உடையவராகவும், அபய ஹஸ்தத்திற்கு மேல் சக்தியாயுதமும், கட்கம் கத்தி உடையவராகவும் ஸாதுக்களால் தியானிக்கப்படுபவராகவும் குமார தந்திரம் சொல்கிறது.
ஸாது என்றால்
நன்மையான நெறியை
உறுதியாகப் பின்பற்றுபவர் என்று அர்த்தம்.
கட்கம் என்பது எமது
பந்தங்களை அறுத்து
விவேகத்தைத் தருவது;
கேடயம் தீய எண்ணங்களிலும், செயல்களிலும் இருந்து
பாதுகாப்பினைத் தருவது;
சக்தியாயுதம் எம்மில்
உள்ள அசுரத்தனங்களை அழிக்கும்.
வஜ்ராயுதம் எமது
உறுதிபெற்ற மனம்.
ஆறுமுகங்கள் எம்
உடலில் இருக்கும் ஆறு
ஆதாரங்களையும் வலுப்படுத்தும் தெய்வ சக்தி.
கார்த்திகேய சுவாமி
தனது கட்கத்தால் விவேகத்தைத்
தந்து, கேடயத்தால் தீமைகளிலிருந்து பாதுகாத்து, அசுரத்தனத்தை
சக்தியாயுதத்தால் அழித்து,
வஜ்ராயுதம் போன்ற
உறுதியான மனத்தை,
தனது ஆறு முகங்களால்
அனுக்கிரகித்து ஸாது
என்ற நன்னெறியை வாழ்க்கையில்
வேண்டும் என
தியானிக்கும் சாதகனுக்கு
அளிப்பார் என்பது
இதன் விளக்கம்.
இனித் தியான
சுலோகம்,
வரத குலிச கேடம் வாமஹஸ்த த்ரயேச
தததமபய சக்திம் கட்க ம ந்யத்ரேயேச
தருண ரபி ஸமாபம் ஸாதுபி: பூஜ்யமாநம்
கமல வதந ஷட்கம் கார்த்திகேயம் நமாமி
இதன் பொருள்:
வரதம், வஜ்ரம்,
கேடயம் இவை மூன்றும்
இடது கையிலும்
அபயம், சக்தியாயுதம்,
கத்தி இவை மூன்றும்
வலது கையிலும் தரித்து
இளஞ்சூரியன் போல்
பிரகாசிப்பவரும்
சாதுக்களால் பூஜிக்கப்படுபவரும்
ஆறுமுகங்கள் உடைய கார்த்திகேயரை நமஸ்கரிக்கிறேன்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.