{கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, விசாகம், ஒவ்வொரு மாத சஷ்டியிலும் முருக உபாசகர்கள் தியானிக்கத் தக்க ரூபங்கள் ஷண்முக ஸ்வாமி
த்யானம்}
______________________________________________
ஒன்பதாவது ஷண்முக ஸ்வாமி
தியானம்
இந்த ரூபம் ஆறுகரங்களும் பன்னிரு கைகளும் உடைய ரூபம்; இரு கைகளிலும்
உள்ள ஆயுதங்களின் வேறுபாட்டிற்கு அமைய ஆறுவகை சண்முக வடிவங்கள் உள்ளது; இந்த
வேறுபாடுகள் அந்த ரூபத்தினை மந்திர தந்திர சாதனைகளால் தியானித்துப் பெறப்படும்
பயன் களுக்கு அமைய வேறுபடும் இரகசியம் உள்ளது; அதை குருமுகமாக அறிய வேண்டும்;
இங்கு குமார தந்திரம் சொல்லும் பொது வடிவம் கூறப்படுகிறது.
அதுபோல் வள்ளி, தேவானை அம்மையார் நின்ற திருக்கோலத்தில் அருகில்
இருப்பதாக தியானிக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.
வன்தே ஸிந்தூர காந்திம் சரவிபிந
பவம் ஸ்ரீ மயூராதிருடம்
ஷடட்வக்த்ரம் தேவ நாதம் மதுரி
புத நயா வல்லபம் த்வாதசாக்ஷம்
சக்திம் பாணம் க்ருபாணாம்
த்வஜமபி ச கதா சாபயம் ஸவ்ய ஹஸ்தை:
சாபம் வஜ்ரம் ஸரோஜம் கட்கமபி
வரம் சூலமந் நையர் ததாநம்
செந்தூர பொரி போல் சிகப்பானவரும், சரவணப் பொய்கையில் உண்டானவரும்,
மயிலின் மேல் அமர்ந்தவரும் தேவர்களை சேனையாகப் பெற்றவரும், 12 கண்களை
உடையவரும்
வலது கரங்களில்
1. சக்தியாயுதம்
2. அம்பு
3. கட்கம்
4. கொடி
5. கதை
6. அபயமுத்திரை தரித்திருப்பவரும்
இடது கரத்தில்
1. வில்
2. வஜ்ரம்
3. தாமரை
4. கடக முத்ரை
5. சூலம்
6. வர முத்திரை தரித்திருப்பவருமான
ஆறு முகங்கள் உடைய ஷண்முகப்பெருமானை வணங்குகிறேன்.
அடுத்தது தாரகாரி ஸ்வாமி தியானம்
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.