இந்தமுறை சென்னை Higginbotham's இல் வாங்கிய சில அறிவியல் நூல்கள்! இது ஆங்கிலப்புத்தகங்களுக்கு அருமையான இடம்!
எப்படி STEM கல்வியை வளர்க்கலாம், மாணவர்களின் சிந்தனையில்
புகுத்தலாம் என்று ஒரு இளம் அறிவியலாளரின் அனுபவ நூல் - A young innovator's guide
to STEM.
Magic of Matter ஒரு இயற்பிய்லாளரின் பார்வையில் எப்படி
wizardry இருக்கிறது என்ற சுவாரசியமான நூல்!
wizardry இனை condensed matter physics என்கிறார்.
Phantoms in the brain மூளையையும், மனதையும் பற்றிய நவீன
அறிவியல், எளிய மொழியில்!
GRASP மூளை எப்படி நாம் கற்றுக்கொள்கிறோம் என்பது பற்றிய
மூளையியல் விளக்கம்.
சிக்மண்ட் ஃப்ராய்ட் கனவுகளின் விளக்கம் அறிமுகம் தேவையில்லாத
பிரபலமான நூல்
10 commandments for financial freedom சுவாரசியமான புத்தகம்;
சட்டப்பூர்வமாக எங்களை வேட்டையாடும் ஐந்து வேட்டையாளர்களைப் பற்றிக் கூறுகிறது
1) அரசாங்கம் வரியின் மூலம்
2) வங்கிகள் பணத்தை வாங்கி வைத்துகொண்டு கடன் கொடுத்து
3) இரைத்தரகர்கள் எம்மை ஏமாற்றுவதன் மூலம்
4) corporate retailers கண்ணுக்கு முன்னர் பொருட்களைக் கொட்டி
எமது பேர்ஸ்சை கரைப்பதன் மூலம்
5) இறப்பு, அழகு, ஆரோக்கியத்தை வைத்து பயமுறுத்தி பணத்தைப்
பறிக்கும் வேட்டையாளர்கள்
என ஐந்து வகை சட்டபூர்வமான பண வேட்டையாளர்களைக் கூறி
அவர்களிடமிருந்து எப்படி அதிலிருந்து தப்பிப்பது என்று வழி கூறுகிறது.
இப்படி அறிமுகப்படுத்த இன்னும் நூறு புத்தகங்கள் இருக்கிறது
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.