குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, November 06, 2023

யோகப் பயிற்சி

 



யோகம் பயிலச் செல்கிறோம் என்று தம்மைக் குழப்பிக்கொண்டு வருபவர்களது எண்ணிக்கை அதிகரிக்கிறது.

எனவே இந்தப் பதிவு!

நீங்கள் செய்யும் யோகப் பயிற்சிகள் சரியாகச் செய்கிறீர்களா என்பதை எப்படி அறிந்துகொள்வது:

உங்கள் பயிற்சி முடிவில், அல்லது குறித்தளவு காலப் பயிற்சியின் பின்னர் உங்கள் மனதிலும், உடலிலும்

1) அமைதி

2) ஆனந்தம்

3) தெளிவு

இந்த மூன்றும் ஏற்பட்டிருந்தால் நீங்கள் பயணிக்கும் பாதை மிகச் சரியானது என்று பொருள். உங்கள பண்புகள் முன்னரை விட உயர்ந்திருக்க வேண்டும்; உடல் ஆரோக்கியம் பெற்றிருக்க வேண்டும்! மனம் தெளிந்த நிலையில் கலக்கம் இன்றி இருக்க வேண்டும்!

இதனால் உங்கள் குடும்பத்தின் மீது, தொழில் கடமைகள் மீது பலனை எதிர்பாராமல் உற்சாகமாக வேலை செய்யும் மனம் உருவாகி இருக்க வேண்டும். இதுவே யோகத்தின் குறிக்கோள்!

இப்படியில்லாமல் வாழ்க்கையில் வெறுப்புத் தோன்றுகிறது, தொழிலை விட்டுவிட்டு யோகம் செய்யப்போகிறேன்; தாடி வளர்த்து, கலர் கலராக சட்டைபோட்டு, உடல் எல்லாம் பட்டையும் கொட்டையும் போட்டுக்கொண்டு திரிய மனம் சொல்கிறது என்றால் நீங்கள் ஆன்மீக சாதனை எதுவும் செய்யவில்லை என்று அறிந்துகொள்ளுங்கள். ஆன்மீக சாதனை செய்யப் போய் ஏற்பட்ட மன அழுத்தத்தை நீக்கிக்கொள்ள புதுப் புது வழிகளைக் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

யோகத்தின் நோக்கம் எமது வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் செம்மையாக்கி, உயர்ந்த தெய்வீகப் பண்புள்ளதாக மிளிரச் செய்வது!

எல்லாப் யோக ஆன்மீகப் பயிற்சிகளதும் நோக்கம் எமக்குள் உறைந்திருக்கும் தெய்வீகப் பண்புகளை வெளிக்கொண்டுவருவது.

இதை

நாம் செய்யும் செயல் மூலமாகவோ - கர்ம யோகம்

உடல் பிராணனைக் கட்டுப்படுத்துவன் மூலமாகவோ - ஹடயோகம்

மனதினைக் கட்டுப்படுத்துவதன் மூலமாகவோ - இராஜயோகம்

மனதை இறைசக்தியில் கலப்பதாலோ = பக்தி யோகம்

இறை சக்தியை கவர்ந்து மனதில் கலப்பதாலோ - மந்திர யோகம்

கூர்ந்த புத்தியால் விசாரணை செய்வதாலோ - ஞான யோகம்

தெய்வீகத்தை வெளிப்படுத்தும் தொடர்ச்சியான முறைப்படுத்தப்ப்பட்ட படிகளை/ உத்திகளை / க்ரமத்தை பின்பற்றுவதாலோ = ஆகம/ தந்திர யோகம்

நாம் அடைய முடியும்.

எல்லாராலும் எல்லா முறைகளையும் பின்பற்ற முடியாது; அதேபோல் குரு என்று சொல்லிக்கொள்ளுபவர் எல்லா முறைகளிலும் தேர்ச்சி பெற்றவராக இருக்க மாட்டார்; இப்போது அனேகர் அரைகுறையாக ஆறுமாதம் யோகாசனமும் பிரணாயாமமும் செய்து விட்டு தம்மை கவர்ச்சிகர விளம்பரம் செய்து யோகா குரு என்று கூறிக்கொண்டு அனுபவம் இல்லாமல் தமக்கு தெரிந்த அரைகுறை வித்தையை மற்றவர்கள் தலையில் இறக்கி விடுகிறார்கள்.

யோகம் பயிலப்போகிறோம் என்று செல்லும் மாணவனுக்கு தாம் எதற்காக யோகம் பயில வேண்டும் என்ற தெளிவு இல்லை! ஏதோ ஆறு மாதங்களில் சூப்பர்மேனாகப் போவதாக கற்பனை செய்து சென்று பிறகு மனம், உடல் குழம்பி இந்தப் பழம் புளிக்கும் என்று சென்று விடுகிறார்கள்.

குரு என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு மாணவனுக்கு எழும் சந்தேகங்களைப் போக்கி அவனது மனதைப் பயிற்சியில் செலுத்தும் ஞானமும், ஆற்றலும் இல்லை!

குருட்டினை நீக்கா குருவைக் கொள்வர்

குருட்டினை நீக்கும் குருவைக் கொள்ளார்

குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி

குருடும் குருடும் குழி வீழுமாறே


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...