{கந்த சஷ்டி, திருக்கார்த்திகை,
விசாகம், ஒவ்வொரு மாத சஷ்டியிலும் முருக உபாசகர்கள் தியானிக்கத் தக்க ரூபங்கள் ப்ரம்ம சாஸ்தா தியானம்}
**********************************************************************************பன்னிரண்டாவது ரூபம் ப்ரம்ம சாஸ்தா தியானம்
பிரம்மா
என்பது பௌதீக உலகைப் படைக்கும் சக்தி; ஆரம்பத்தில் ஐந்து தலைகளுடன் சதாசிவருக்கு
சமமான படைப்பாற்றலுடன் இருந்து வீண் ஆணவத்தினாலும் பொய்மையினாலும் காலபைரவரிடம்
ஒரு தலையை இழந்து, பின்னர் பிரணவப் பொருளின் உண்மை விளக்கம் அறியாமல்
சுப்பிரமணியரிடம் மாட்டிக்கொண்டு குட்டு வாங்கியவர்.
ஒவ்வொரு
மனிதனிடமும் படைப்பு ஆற்றல் (creativity) அவனது மனதில் கற்பனைத் திறனாக
இருக்கிறது; ஆனால் அது சிவத்தை நோக்கி இல்லாத போதும், இந்த படைப்பின் இரகசியமான
பிரணவ இரகசியம் அறியாமல் இருக்கும் போது அது விகல்பம், விபர்யம் என்ற பொய்யறிவாகிப்
போகிறது. இதனால் நாம் வீண் ஆணவங்களை ஏற்படுத்திக்கொண்டு துன்புறுகிறோம்.
இப்படி
மனம் விகல்பம் என்ற வீண் கற்பனையும், விபர்யம் என்ற பொய்யறிவாலும் வீண் ஆணவம்
கொண்டிருக்கும் போது நாம் பிரம்ம சாஸ்தா ரூபத்தினை தியானிக்க வேண்டும். சாஸ்தா
என்றால் குரு, தலைவன், அரசன் என்று பொருள். நாம் வலிமையற்று, பொய்யான அறிவினால்,
ஆணவத்தினால் கலக்கமுறும் போது நாம் பிரம்ம சாஸ்தாவை தியானித்தால் அவர் எமக்கு
சரியான வழியில் எமது படைப்பாற்றலை வழிப்படுத்துவார்.
ஆணவம்
அழிக்கும் பூரண சத்துவ மூர்த்தி இவர்!
வாமே கரே ச யுகளே வரகுண்டி கேச
ஸவ்யேக்ஷ ஸுருத்ரமபயம் தததம் விசாகம்
வல்யாயுதம் வனகலோசன மேக வக்த்ரம்
வந்தாமஹே வனஜன ஸம்பவ சாஸிதாரம்
இடது
கரத்தில் வரதம், கெண்டிகையும்
வலது
கரத்தில் அபயம் அக்ஷர மாலையைத் தரித்தவரும்
விசாகன்
என்ற பெயருடையவரும் வள்ளி தேவியுடன் கூடிய,
அலர்ந்த
செந்தாமரை போன்ற கண்கள் உடையவரும் அழகிய முகமுடையவரும்,
பிரம்மாவின் ஆணவத்தைக் குட்டி தண்டித்தவருமான பிரம்ம சாஸ்தாவை வணங்குகிறேன்.
அடுத்தது வள்ளீ கல்யாண சுந்தர ஸ்வாமி தியானம்
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.