{கந்த சஷ்டியில் தியானிக்க உகந்த சோடஷ (பதினாறு) சுப்ரமணிய
தியானங்கள் - 05 கஜவாஹன ஸ்வாமி}
__________________________________________________________
ஐந்தாவது ரூபம் கஜவாஹன
ஸ்வாமி,
இந்த ரூபத்தின் தினமும்
தியானிப்பவன் இஷ்ட சித்திகளைப் பெறுவான் என்கிறது குமார தந்திரம்.
இஷ்ட ஸித்தி என்பது நான்
நினைக்கும் காரியம் நினைப்பது போல் நடந்தேறுவது. இஷ்ட ஸித்தி பெறுவதற்குரிய வழியாக
குமாரதந்திரம் சொல்லும் வழி நித்யம் நமாமி கஜவாஹன என்பதாகும்; தினசரி கஜவாகன
மூர்த்தியை மனதில் இருத்தி தியானித்து எமது ஆகவேண்டிய காரியங்களை ஸித்தியாகும் படி
தியானித்து வந்தால் கட்டாயம் அந்தக் காரியம் நிறைவேறும் என்பது இந்த தியான
ஸ்லோகத்தின் தந்திர யுக்தி.
இனி தியான ஸ்லோகம்
ஏகா ந நம் த்வி நயனம்
வர குக்குடௌச
வாம்த்வயே நி
சிதசக்த்ய பயத்வயம்ச
ப்ரணமீஸ்வர ஸுதம் தப
நாயுதாபிம்
நித்யம் நமாமி கஜவாஹன
மிஷ்ட ஸித்யை
ஒரு முகம்
இரு கண்கள்
இடது கரங்களில் வர
முத்திரை, சேவல்,
வலது கரங்களில்
சக்தியாயுதம், அபய முத்திரை தரித்துக்கொண்டு
ஈஸ்வரனுடைய குழந்தையும்
பத்தாயிரம் சூரியன் போன்று பிரகாசிப்பவருமான கஜவாகன ஸுவாமிகளை எனது இஷ்ட சித்தியின் பொறுத்து தினமும் நமஸ்கரிக்கிறேன்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.