குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, May 31, 2022

தலைப்பு இல்லை

 

மகாலக்ஷ்மி என்பது ஒளியும், இனிமையும் கொண்ட அற்புத வடிவுடன் அழகு, இசைவு, சந்த நயம், நுண்ணிய, வலிமையான அதிசய திவ்ய சம்பத்து, ஜீவனை கவர்ந்து இழுக்கும் காந்த சக்தி, உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் நளினம்,

ஞானமும், ஆற்றலும் மாத்திரம் அன்னையின் வெளிப்பாடு அல்ல. அதி நுண்ணிய இரகசியம் ஒன்று அவளின் இயல்பில் உள்ளது. அது இன்றேல் ஞானமும் சக்தியும் முழுமை பெறாது. பூரணம் பரிபூரணமாகாது. ஞானத்திற்கும் ஆற்றலுக்கும் மேல் என்றுமுள்ள எழிலும், தெய்வீக இரகசியங்களால் பற்ற முடியாத ஒரு இசைவு, எவராலும் தடுக்க முடியாத மோகன சக்தி என்பவை உள்ளது. இதுவே உலகில் உள்ள அனைத்துப் பொருட்களையும், அணுக்களையும், செயல்களையும் படித்து, கூட்டி இணைத்து, மறைவில் நின்று தன்னுடைய லீலையை நடாத்திக்கொண்டு அவற்றை சந்தங்களாகவும், வடிவாகவும் ஆக்கிக்கொண்டு உள்ளது.

இந்த சக்தியையே நாம் மகாலக்ஷ்மி என அழைக்கிறோம்.

ஸ்ரீ அரவிந்தர்

தலைப்பு இல்லை

 

துரதிஷ்டவசமாக, உங்கள் குருவின் உபதேசத்திற்கு உங்களை நீங்கள் அர்ப்பணிப்புச் செய்தால் உங்களது சூழல் அதை எதிர்க்கும். நீங்கள் உங்கள் சமூகத்திலிருந்து விலகி ஏதோ எதிராகச் செய்வதாக உங்களை எண்ண வைக்கும். எல்லா விதமான தடைகளையும் அது உருவாக்கும்.

ஆனால் அதுதான் ஒவ்வொரு சாதகரும் கடக்க வேண்டிய பயிற்சி; அக்கினிப் பரீட்சை.

இதன் மூலம் இறைவன் மேலும், உங்கள் குரு மேலுள்ள உறுதியான நம்பிக்கையின் அளவு அறியப்படும்.

நீங்கள் செய்வது இறைவனதும் உங்கள் குருவினதும் போதனைகளுக்கு அமைவாக உள்ளது என்ற உங்கள் மன உறுதி இந்தத் துன்பத்திலிருந்து உங்களை விடுபடச் செய்யும்.

ஸ்ரீ அம்ருதானந்த நாத சரஸ்வதி

தேவிபுரம்

#குருவாக்கு


Sunday, May 29, 2022

ராம்பிரசாதி காளி மீதான கவிதைகள் – 25 {தாந்திரீக ஞானப்பாடல்கள்}

 

ஹே ஜெகன்மாதா! பிரம்மத்தின் இயக்க சக்தியே!

அனைத்து மனங்களையும் இதயங்களையும் தூய்மைப்படுத்துபவளே!

ஆன்ம தேடலின் பலன் தரும் உயர்ந்த கனியாக

உன் பேரானந்தத்தை அளிப்பவளே!

சிவபரம்பொருளின் களிப்பூட்டும் நாயகியே

நீயே சிவபரம்பொருளை மயக்குபவள்!

இந்தப்புனித தினத்தில் உனது பாத கமலங்களின்

நறுமண நிழலைத் தருவாயாக!

தலைப்பு இல்லை

 

வைகறையில் துயிலெழுந்தால் கண்கள் பிரகாசமாக இருக்குமாம்.

கடந்த சில வருடங்களாக அதிகாலை 0415 இற்கு எழுந்து உலகெங்கும் உள்ள நல்ல உள்ளங்களோடு இணைந்து உயர்ந்த விடயங்களைக் கற்கும் பாக்கியம் கொரோனா தந்தது.

அதிகாலை எழுந்தால்,

புத்தியதற்குப் பொருந்து தெளிவாக்கும்;

சுத்தநரம்பினாற் தூய்மையுறும்- பித்தொழியும்

தாலவழி வாத பித்தம் தத்தநிலை மன்னும்; அதி

காலைவிழிப்பின் குணத்தைக் காண்

புத்தி தெளிவாக இருக்கும்; உடல் நரம்புகள் தூய்மையுறும்; மனக்கவலைகள் நீங்கும்; வாத, பித்த முதலான முத்தோஷங்கள் சமப்படும்; இவையெல்லாம் அதிகாலை விழிப்பினால் உடலிற்கும் மனதிற்கும் கிடைக்கும் நலம்!

இதை பிரம்ம மூகூர்த்தம் என்று குறிப்பிடுவது ஏன்? இது இறைவனுக்குரிய நேரமாக வரையறுக்கப்படுகிறது. சூரியன் உதிக்கும் முன்னர் இருக்கும் ஒரு முகூர்த்த நேரம் - அண்ணளவாக ஒன்றரை மணி நேரம் பிரம்ம முகூர்த்தமாக சொல்லப்படுகிறது.

யோக தத்துவத்தில் நாம் மூச்சு உள்ளிழுக்கும் போது பிராணன் எனப்படும் நுண்மையான உயிர்சக்தி ஆறு ஆதாரங்களில் நிறைவதாகவும் இது மூலாதாரம் வரை செல்லும் நேரமாகவும் பிரம்ம முகூர்த்தம் சொல்லப்படுகிறது.

இஸ்லாமியர்கள் வஜ்ராசனத்தில் இருந்து இறைவனை நினைத்து மூச்சினை மூலாதாரத்துடன் இணைத்து இந்த நேரத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

ஆகவே நாம் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து எம்மைவிட உயர்ந்த ஆற்றலுடன் தொடர்புபடுத்தும்போது எமது ஸ்தூல உடல் தனக்கான சூக்ஷ்ம, காரண உடல்களிலிருந்து முழுமையான பிராண வலிமையினைப் பெறுகிறது.

இந்த நேரத்தின் அதியுச்ச பலனைப் பெற

1) இறைவனை நினைத்தல்

2) அறிவினைப் பெறக் கற்றல்

ஆகிய இரண்டும் பரிந்துரைக்கப்படுகிறது. இதற்கு மேல் உடல் உற்சாகமாக இருக்கும். இரவில் தாமதமாக நித்திரைக்குச் செல்பவர்கள் அதிகாலையில் துயிலெழுந்து பகலில் சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம்!

Saturday, May 28, 2022

ஸ்ரீ அரவிந்தரின் உணர்வின் தளங்களும் காயத்ரி சாதனையும்

 

Plane of Existence: சத்

Plane of Consciousness: சித்

Plane of Delight: ஆனந்த

Plane of Super Mind: விஞ்ஞான

Plane of Pure Mind: மனம்

Plane of Pure Life: பிராணன்

Plane of Pure Matter: அன்ன உடல்

ஸ்ரீ அரவிந்தர் சத் எனும் உயர்ந்த உணர்வுத் தளத்திலிருந்து இறையுணர்வு கீழிறங்கி அன்ன உடலை அடைவதன் மூலம் மனிதன் உருவாகிறான் என்பதை அறிவிக்கிறார்.

இது காயத்ரி சாதனையின் சப்த வ்யாக்ருதிகளினால் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சத் - சத்யம்

சித் - தப

ஆனந்தம் - ஜன

விஞ் ஞான - மஹ

மனம் - ஸ்வஹ

பிராணன் - புவ

அன்ன உடல் - பூர்

சாதகன் முதலில் ௐம் என்ற பரப்பிரம்ம சக்தியை பூர், புவஹ, ஸ்வஹ என்ற அன்ன உடல், பிராண உடல், மன உடலிற்கு புத்தியைத் தூண்டும் பேரொளி மூலம் கொண்டுவந்து நிரப்பி மஹ எனும் விஞ்ஞானமய கோசத்தினைப் பெறுவதே மூன்று வ்யாக்ருதிகள் சேர்ந்த திரிபதா காயத்ரி சாதனையினுடைய நோக்கம்.

இதே செயலை பதஞ்சலி மகரிஷி ப்ரக்ருதி வரையிலான 24 ஆன்ம தத்துவங்களில் ஸமாதி பழகுவதால் யோகி ருதம்பரா ப்ரக்ஞை என்ற தெய்வீக அறிவைப் பெறுகிறான் என்கிறார்.

திரிபதா காயத்ரி மந்திரம் 24 அட்சரங்களால் இந்த 24 தத்துவங்களையும் பேதித்து ருதம்பரா ப்ரக்ஞையைத் தருகிறது.

அன்ன உடல், பிராண உடல், மன உடல் மூன்றையும் தாழ் நிலை முக்கோணம் எனவும் சத், சித், ஆனந்தம் ஆகிய மூன்றையும் உயர் முக்கோணம் என்றும் குறிப்பிடலாம். இந்த இரண்டையும் இணைக்கும் உயர் ஞானம் மஹ எனும் விஞ்ஞானமய கோசம். இதுவே ஷட்கோணத்தின் விளக்கமும் ஆகும்.

காயத்ரி சாதனையின் முதல் நோக்கம் உடல், மனம், பிராணன் ஆகிய மூன்றையும் அந்தப் பேரொளியால் நிறைத்து விஞ்ஞானமய கோசம் பெறுதலாகும்.

Friday, May 27, 2022

தலைப்பு இல்லை

 

Work hard இனை விட work smart ஆக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான்!

Crisis time இல் நிம்மதியாக வாழ்வது எப்படி?

1) அத்தியாவசியத்தேவை தவிர்ந்த அனைத்துப் பயணங்களையும் நிறுத்துதல்.

2) திட்டமிட்டு ஒரே தடவையில் குறைந்த எரிபொருள் செலவுடன் அனைத்துக் காரியங்களையும் ஒரே பயணத்தில் செய்தல்.

3) panic & chaos வருமுன் எரிபொருளை நிரப்பி விட்டு panic & chaos phase இல் அமைதியாக சிக்கனமாக இருத்தல்.

4) panic & chaos phase முடிந்த பின்னர் மீண்டும் எரிபொருளை முழுமையாக நிரப்பிக்கொள்ளுதல்.

இது நாளாந்தம் அதீதமாக வாகனம் பயன்படுத்துபவர்களுக்கு சாத்தியமில்லாவிட்டாலும் எனக்கு சாத்தியமாகிறது.

இதுவரை கியுவில் நிற்காமல் - அதிக பட்சமாக நான்கு வாகனம் முன்னால் நிற்க காரிற்கு பெற்றோல் அடித்தாகிவிட்டது!

a great achievement in the context of Sri Lanka, please appreciate

Thursday, May 26, 2022

பதஞ்சலி யோக சூத்திரம் ஸமாதி பாதம்

 

இன்று ஆர்வமுடைய சாதகர் குழுவுடன் பதஞ்சலி யோக சூத்திரத்தின் ஸமாதி பாதத்திற்குரிய விளக்கவுரை கற்கை பூர்த்தியாகியது;

ஒவ்வொரு சூத்திரத்தையும் எடுத்து மெதுவாக உள்வாங்கி பின்னர் அனைத்தையும் கோர்த்து மாலையாக்கும் முறை பின்பற்றப்பட்டது. இப்படி கோர்க்கப்பட்ட மாலை இங்கே அனைவரும் அறிந்துகொள்ள பகிரப்படுகிறது.

பதஞ்சலி யோக சூத்திரத்தின் முதல் பகுதியான ஸமாதி பாதத்தின் நோக்கம் மைதுனம், உணவு, பயம், நித்திரை ஆகிய நான்கு அடிப்படைகளைக் கொண்டு விருத்தியடையாத சித்தத்திலிருந்து ஏகாக்கிர சித்தம் எனும் உயர் மனதை அடைந்து கடைசியில் ஏகாக்கிரத்தை தாரணா, தியானத்தில் நீண்ட நேரத்தில் நிறுத்த ஏற்படும் நிலையான ஸமாதியால் தெய்வ மனம் எனப்படும் ருதம்பரா பிரக்ஞையான தெய்வ ஞானத்தை அடைவதற்கான படிப்படியான வழிமுறை சொல்லப்படுகிறது.

யோகம் என்றால் சித்த விருத்தியை கட்டுப்படுத்துதல் என்று வரையறுத்து,

சித்தம் என்றால் என்ன?

சித்த விருத்தி எம்மை எப்படிக் குழப்புகிறது?

சித்தத்தின் அமைப்பு எப்படி இருக்கிறது?

சித்த விருத்திகளின் வகைகள் எவை?

சித்த விருத்திகளைக் கட்டுப்படுத்துவதால் ஏற்படும் பயன்கள்?

சித்த விருத்தியைக் கட்டுப்படுத்துவது எப்படி?

அப்பியாசம் என்றால் என்ன?

வைராக்கியம் என்றால் என்ன?

யோக சாதனையில் வரும் தடைகள் எவை?

தடைகளை வெல்லும் பொறிமுறைகள் எவை?

ஸமாதி என்றால் என்ன?

ஸமாதியின் வகைகள் எவை?

ஸமாதியால் அடைப்படும் பேரறிவு என்ன?

இவையெல்லாம் விளங்கப்படுத்தப்பட்டுள்ளன.

வீடியோவைப் பகிர்ந்தால் பதிவு மறைக்கப்படுவதால் தேவைப்படுபவர்கள் கீழே உங்கள் விருப்பத்தைப் பகிருங்கள்.

இதில் பங்குபற்றியவர்கள் தமது அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்வார்கள்.

Wednesday, May 25, 2022

சரஸ்வதி உபாசனையும் காம உருமாற்றமும்

 

நெப்போலியன் ஹில் தான் Sex Transmutation - காமத்தின் உருமாற்றம் பற்றிச் சொன்னாரா என்றால் இல்லை என்பதே பதில். பல ஆயிரம் ஆண்டுகளாக பாரத ரிஷி மரபு இதைத்தான் கற்கவேண்டிய வித்தை என்று கற்பித்து வருகிறது.

சரஸ்வதி உபாசனையின் ஸித்தி எமக்கு ஆறு படிகளில் கிடைக்கும்.

காமத்தினால் உருவாகும் படைப்பாற்றலிலிருந்து பிரவாகிக்கும் ஆற்றலை சரியாக உருமாற்றினால்;

1. முதல் படியில் தடையற்ற எண்ண ஓட்டத்தை உருவாக்கி சிந்திக்கச் செய்வது,

2. இரண்டாவது படியில் சிந்தித்த எண்ணத்தை சரியாக வாக்கினால் சொல்லக்கூடிய ஆற்றல்.

3. மூன்றாவது நிலையில் எழுத்தினால் எழுதக் கூடிய ஆற்றல்.

4. நான்காவது நிலையில் கவித்துவம், நாட்டியம், இசை என்று நுண்கலைகளூடாக எமது படைப்பாற்றலை வெளிப்படுத்தக்கூடிய ஆற்றலைப் பெறுதல்.

5. ஐந்தாவது நிலையில் யோகத்தின் மூலம் பிரபஞ்சத்தின் நுண் அறிவான மேதா சக்தியைப் பெறுதல்.

6. பிரம்மத்தை ஆச்சரித்து பிரம்மம் என்ற இறையுடன் ஒன்றுதல் (பூரண குண்டலினி விழிப்பு)

இதை எப்படி சாதிப்பது என்பதற்கான அடிப்படையைத்தான் கீழ்வரும் மந்திர சங்கல்பத்தின் மூலம் பெறுகிறோம்.

ஓம் சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணீ வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே ஸதா

இது வித்தியாரம்பத்தின் போது பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்கும் மந்திரம்; இதன் பொருள் காம ரூபிணி - காமத்தின் வடிவாக இருப்பவளே எனது எண்ணமும் வாக்கும் நதிபோல (சரஸ்) ஓடச் செய்பவளே நான் உன்னை வணங்குகிறேன்; எனது வித்தையை கற்கும் இந்த ஆரம்ப முயற்சி பலனளிக்கச் செய்வாயாக என்று வணங்குகிறோம்.

இந்த மந்திரத்தின் அடிப்படை நோக்கம் ஒவ்வொரு சிறு குழந்தையும் தனது படைப்பாற்றலை - காம சக்தியை உருமாற்றி தான் கற்கும் கல்வியில் - வித்தையில் சிறந்த எண்ண ஓட்டத்தையும், வாக்கினூடாக மொழியினைச் செம்மையாக உபயோகிக்கும் ஆற்றலையும் பெற்றுச் சிறக்க வேண்டும் என்பதே.

அதாவது ஒரு குழந்தை தனது படைப்பாற்றல் காமமாக வெளிப்படும் போது சரஸ்வதியைக் காமரூபிணியாக உணர்ந்து, உடலில் தாழ்ந்த காமமாக வெளிப்பட்டுவிடாமல் தான் பயிலும் வித்தைக்கு அந்த ஆற்றல் மடைமாற்றப்பட்டு, உயர்ந்த அறிவாக உருமாற்றப்பட்டு நதிபோல மனதிலும், வாக்கிலும் பிரவாகிக்கச் செய்யும்படி தன்னைப் பயிற்றுவிக்க வேண்டும் என்ற சங்கல்பத்தை இந்த மந்திரம் சித்தமாகிய ஆழ்மனதில் ஏற்படுத்துகிறது.

எந்த வித்தையை கற்கும் பொழுதும் இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் ஒவ்வொரு மாணவனும் தனது காமசக்தி உயர்ந்த அறிவாற்றலின் பக்கம் செலுத்தப்பட்டு மனம், அறிவாற்றல் பெற்றவர்களாக உருமாறுவதற்குரிய சங்கல்பத்தைப் பெறுவதே சரஸ்வதி உபாசனையின் நோக்கம்!

சரஸ்வதியின் ஆற்றல் அல்லது செயல் - அதாவது தனது காமத்தை மனோ அறிவு சக்திகளாக உருமாற்றும் திறன் இல்லாவிட்டால் மனிதன் தனது மூலாதார நிலையான ஆகாரம், மைதுனம், பயம், தூக்கம் ஆகியவற்றிற்கு மாத்திரம் தனது ஆற்றலைச் செலவிட்டு மனதை, அறிவை வளர்க்காமல் விலங்காக இருந்திருப்பான்.

Sex Transmutation - காமத்தின் உருமாற்றம்

 

நெப்போலியன் ஹில் இனது வெற்றிக்கான 13 விதிகளில் புரிந்துகொள்ள மிகவும் குழப்பமானது sex transmutation எனப்படும் காமசக்தியின் உருமாற்றம்.

சித்தர் இலக்கியங்களில் விந்து விட்டான் நொந்து கெட்டான் என்று சொன்னார்கள் என்று அரைகுறைச் சித்தவைத்தியர்களும், வாசியோகம் பழகுகிறோம், சித்தர் வழி நிற்கிறோம் என்று இளைஞர்களைக் குழப்பும் யோக ஆசான்களும் இருக்கிறார்கள்.

ஆண், பெண் இருவரும் பருவ வயது அடைந்தவுடன் உடல் படைப்பாற்றலைப் பெறுகிறது. இந்தப் படைப்பாற்றலின் முதல் தூண்டல் உடலில் ஏற்படும் போது அதை சரியாக உருமாற்றத் தெரியாவிட்டால் அவனது மனோ சக்தி அழிந்து போய்விடுகிறது.

இது எப்படி என்றால் பாலை உறை குத்தினால் தயிராகிறது; இந்தத் தயிரில் இருந்து வெண்ணெய் வெளிப்படும் நிலை உடலில் பாலியல் இச்சைகள் தூண்டும் நிலை. வெண்ணையை அதிக காலம் வைத்திருக்க முடியாது, கெட்டுவிடும்; அதுபோல் படைப்பாற்றல்  உடல் இச்சையாக வைத்திருந்தால் அது அப்படியே வீணாகிவிடும். ஆகவே இதை உயர்ந்த மனோசக்தியாக மாற்ற வேண்டும். வெண்ணையை உருக்கி முறுக்கி நெய்யாக்கினால் பல நூறுவருடம் கெடாமல் இருக்கும். இந்த நெய் கடையும் வேலையை மனம் - உடல் - பிராணன் தொகுதிக்குள் சரியாகச் செய்வதையே காமத்தின் உருமாற்றம் என்கிறோம்.

இப்படி மனதிற்கு படைப்பாற்றலை உருவாக்கும் பயிற்சி கொடுக்கப்படாவிட்டால் உடல் தனது இயல்பான வழியில் காம இச்சையில் இட்டுச் செல்லும். இப்படிச் செல்லும் ஆற்றலினால் மனிதன் உயர்ந்த மனம் சார்ந்த கல்வி, கலைகள், அறிவியல் எதிலும் சாதிக்க முடியாது.

பாரம்பரிய வழியில் ஆயகலைகள் 64 இல் சிலதை முறையாகக் கற்க படைப்பாற்றலை நுண்மைப்படுத்தும் சக்தி ஒருவனுக்கு இயல்பாக வரும்! நுண் கலைகள் என்பதன் அர்த்தம் அவற்றைப் பயின்று சித்தி பெற மனம் நுண்மையடைய வேண்டும் என்பதாகும்.

ஆகவே இந்த உடல் உருவாக்கும் படைப்பாற்றலை மனதிற்கு உருமாற்றி அதீத படைப்பாற்றலை உருவாக்குவதையே நெப்போலியன் ஹில் sex transmutation என்று குறிப்பிடுகிறார்.

காமத்தை வெறுமனே உடல் தேவைகளுக்காக மாத்திரம் பாவிக்காமல் மனதிற்கு உயர்ந்த அனுபவத்தை உருவாக்கும் அனுபவத்தையே சிருங்காரம் என்று சொல்லப்படுகிறது.

உபாசனை மார்க்கத்தில் காம தேவ உபாசனை, காம ஆற்றலை மனதிற்கு உருமாற்றும் ஆற்றலை, அறிவைத் தரும்.

இதைத் தகுந்த பயிற்சிகளின் மூலம் மனதின் பல்வேறு தளங்களுக்கு உருமாற்றி தகுந்த படைப்பாற்றலைப் பெறலாம்.

Monday, May 23, 2022

ஹட யோகத்தில் மகா குஹ்ய சாதனா ( = இரகசிய சாதனை)

 

ஹடயோகம் இடகலை, பிங்கலை நாடிகளை சமப்படுத்தி குண்டலினியை விழிப்பிக்கும் யோக சாதனை முறை.

ஹடயோகத்தில் குண்டலினி விழிப்பிற்கு மிக உயர்ந்த சாதனையாக மூன்று பயிற்சிகள் கூறப்படுகிறது; இது மூன்றையும் மஹா குஹ்யம் என்று ஸ்வாத்மாராம யோகீந்திரர் கூறுகிறார். அதாவது மிகப்பெரிய இரகசியம் என்று அர்த்தம்.

முதலாவது மகா முத்திரை - இது மூலாதாரத்தில் உறங்கும் குண்டலினியினை சுருண்டு படுத்திருக்கும் நாகத்தின் வாலில் தடிகொண்டு தட்டி எழுப்பும் பயிற்சி. இதனால் சாதகன் குண்டலினி விழிப்புப் பெறுவான்.

இதற்கு அடுத்து பயிற்சிக்க வேண்டியது; மகா பந்தம்; விழிப்படைந்த குண்டலினி சக்தியை எப்படி நாடிகளில் கட்டுவது - (பந்தம் என்றால் கட்டுதல் என்று அர்த்தம்) என்ற முறை.

மூன்றாவது மகாவேதா - வேதை என்றால் பிளப்பது என்று அர்த்தம். குண்டலினியால் சக்கரங்களை வேதிப்பது என்று அர்த்தம். இந்த மகா வேதா இல்லாமல் முதல் இரண்டும் பயன் தராது.

குண்டலினி சஹாஸ்ராரம் வரை சென்று, கீழிறங்காமல் நின்று, சக்கரங்களை பேதித்து இடகலை, பிங்கலை சமப்பட்டு ஹட யோகம் சாதிக்க இந்த மூன்றும் ஒன்றாக பயிற்சிக்கப்பட வேண்டும்.

ஆசனம் செய்யக்கூடிய எவரும் இந்த மூன்றையும் இலகுவாகச் செய்துவிடலாம் என்று எவரும் நினைத்தால் அதற்குத்தான் இந்த மூன்றையும் சேர்த்து மஹாகுஹ்யம் என்று சொல்கிறார். பார்ப்பதற்கு உடற்பயிற்சி போல் இலகுவாகத் தெரிந்தாலும் இவற்றைச் செய்யும் போது செய்ய வேண்டிய நாடி தாரணைகள், உப முத்திரைகள் எல்லாம் மறைப்பாக குருவிடம் இருக்கிறது.

இயம, நியாதிகள், மிதாகாரம், ஆசனப் பயிற்சி, ஷட்கர்மம், பிரணாயாமம் இவற்றில் முறையாக தனது உடல், மனம் ஆகியவற்றைத் தூய்மைப்படுத்தி குண்டலினி விழிப்பிற்கு தகுதியானவனுக்கு குரு பிரத்தியேகமாக உபதேசிக்கப்படுவதால் மகா குஹ்யம் என்று கூறப்படுகிறது.

இவற்றை உடலால் ஆசனம் செய்யக்கூடிய எவரும் செய்ய முடிந்தாலும் குண்டலினியை விழிப்பிக்க குருமுகமாய் பயிலுதலின் அவசியத்தை ஸ்வாத்மாராம யோகீந்திரர் ஹடயோக பிரதீபிகையின் மூன்றாவது உபதேசத்தின் ஆரம்பத்தில் கூறுகிறார்.

Sunday, May 22, 2022

மறையியலின் இரண்டு பிரதான சிந்தனை முறை

 

Two basic thoughts of occultism

மறையியல் என்றால் மனம் முதலான அகக்கருவிகளை நுண்மையாக்கி இந்த பிரபஞ்சத்தினைப் பற்றி நுண்மையான அறிவினைப் பெறும் வழி என்பதை ஏற்கனவே வரையறுத்திருக்கிறோம்.

ஒருவன் மறையியலின் படி அறிவினைப் பெறவேண்டுமானால் இரண்டு அடிப்படை சிந்தனைப் போக்கு அவனிற்கு இருக்க வேண்டும். இந்த இரண்டு எண்ணங்களும் அவனுக்கு சரியான முறையில் இருக்குமாக இருந்து, நம்பிக்கையுடன் மறையியல் பயிற்சியில் ஈடுபடுபவனாக இருந்தால் அவன் பல சூக்ஷ்ம உண்மைகளை அனுபவிக்கக் கூடியவனாக இருப்பான்.

முதலாவது எமது கண்களுக்குத் தெரியும் உலகத்திற்கு மறைவாக, புலன்களுக்கு அப்பாற்பட்ட நுண்மையான உலகம், இயக்கம் ஒன்று இருக்கிறது என்ற உறுதியான நம்பிக்கை. அதன் அடிப்படையில்தான் பௌதீக உலகம், செயல்கள் தோற்றம்பெறுகிறது. நாம் புலன்வழி அதிகம் செல்லும் போது இந்த நுண்மையான, ஆழமான சூக்ஷ்ம உலகை அறியும் திறனை இழக்கிறோம் என்பதும்,

இரண்டாவதாக தனது அந்தக்கரணங்கள் (மனம், புத்தி, சித்தம் ஆங்காரம்) ஆகியவற்றினை நுண்மைப்படுத்தி திறன்களை வளர்ப்பதன் மூலம் இந்த மறைவான, நுண்மையான உலகத்திற்குள் ஊடுருவி அறிவினைப் பெற முடியும் என்பது.

பதஞ்சலி யோகத்தில் சித்த விருத்திகளை அடக்குவதன் மூலம் உருவாகும் சமாதி நிலையால் மனம் நுண்மையாகி ருதம்பரா பிரக்ஞை என்ற பேரறிவு உருவாகுவதாகக் கூறுகிறார்.

காயத்ரி சாதனை தொடர்ச்சியான காயத்ரி ஜெபத்தினால் பலவிதமான நுண் ஆற்றல்கள் மனதிற்கு கிடைப்பதாக கூறுகிறது.

ஹடயோக பிரதீபிகை தொடர்ச்சியான ஹடயோக அப்பியாசத்தால் சாதகன் உன்மணி அவஸ்தையில் லயித்து மனோன்மணி நிலை பெற்று அற்புத சித்திகளைப் பெறுகிறான் என்று சொல்லப்பட்டுள்ளது.

கிரகங்களை தினமும் உபாசிக்கும் ஜோதிடனுக்கு கிரகப்பிரபாவம் நுண்மையாக ஏற்படுத்தப்போகும் பாதிப்புகளை அறியும் உணர்வு வாய்க்கிறது.

ஒரு சித்த மருத்துவன் ஸ்தூல உடலில் உருவாகியிருக்கும் நோயிற்கு சூக்ஷ்ம உடலில் பிராணன் ஓடும் ஓட்டத்தின் நடையினை அறிந்து, காரணசரீரத்தில் முத்தோஷங்களின் நிலையறிந்து சிகிச்சை செய்ய வேண்டும்.

இவையெல்லாம் எமது மனம் ஸ்தூலத்திலிருந்து பயிற்சியால் நுண்மையாகி சூக்ஷ்மத்தைப் பார்க்கும் ஆற்றல் பெறுகிறது என்கிறது மறையியல் விதிகள்.

யோகசோதிடமும் விதியை வெல்லும் காயத்ரி சாதனையும்

 

சிறுவயது முதல் மறையியல், மனோ சக்தி ஆகியவற்றில் ஆர்வம் இருப்பதால் சோதிடமும் கற்றேன். எனது குருவின் குருவான ஸ்ரீ கண்ணைய யோகியார், அவர் தந்தை குருசாமி சாஸ்திரியார் எல்லாம் பெரிய ஜோதிடர்கள். கண்ணைய யோகியார் கிரகங்களையும், பிராண காந்த அலைகளையும் வைத்து ஜோதிடம் கணிக்கும் முறையை ஏற்படுத்தியிருந்தார். அதை ஜீவகாந்த ஜோதிடம் அல்லது யோக ஜோதிடம் என்றும் சொல்வார்; ஜோதிடப் பாடங்கள் எழுதியும் பயிற்றுவித்திருக்கிறார்.

"கிரகங்கள் மனிதனது சித்தத்தை தூண்டியே கர்மங்களை செயற்படுத்துகிறது; யோக சாதனையால் சித்த விருத்திகளைக் கட்டுப்படுத்தினால் கிரகப் பிரபாவங்களின் தூண்டலைத் தடுக்கலாம்" என்பது கண்ணைய யோகியாரது உபதேசங்களில் ஒன்று; ஆகவே யோகத்தில் இப்படி நடக்கும் என்பதை உறுதிப்படுத்துவதற்கு, பலன் சொல்லி மக்கள் மனதைக் குழப்புவதற்கு ஜோதிட சாஸ்திரம் பயன்படுவதில்லை!

சோதிட விதிகளின் மூலம் ஒருவன் துல்லியமாக தான் பூர்வ ஜென்மத்தில் செய்த கர்மங்களின் கணக்கினை கணக்கிட்டுக் கொண்டு, பிறகு திசாபுத்தி, கோட்சாரம் நடக்கும் போது தனது சித்தத்தை எந்தக்கிரகங்கள் தூண்டி தனது விதியினைச் செயற்படுத்தும் என்பதைத் தெரிந்து அதற்கந்த கிரக சாதனைகளைச் செய்வதன் மூலம் எமது கர்ம பிரபாவங்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கலாம்; இறையருளும் சாதனை மூலம் இச்சாசக்தியையும் பெற்றிருந்தால் கிரகங்கள் சித்ததைத் தூண்டும் கர்ம பிரபாவங்களை வெல்லலாம் என்பது யோக ஜோதிடத்தின் அடிப்படை.

காயத்ரி தேவியினுடைய உபாசனையில் சூரியனின் ஆத்ம சக்தி தேவியாக இருக்க மற்றைய எட்டு கிரகங்களும் அஷ்டமாவரணமாக வரும். காயத்ரி உபாஸனை செய்பவன் நவக்கிரக சாதனை மூலம் தனது கிரகப் பிரபாவங்கள் மூலம் வரும் இன்னல்களைத் தடுக்கலாம்.

காயத்ரி சாதனை கிரகபிரபாவங்களை சீர்ப்படுத்துவதில் ஒரு அரிய முறை.

தினசரி காலையில் காயத்ரி சாதனையுடன் நவக்கிரக சாதனைகளும் நடைபெறுகிறது; ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

ஸ்ரீ வித்யா ஸ்ரீ குருபாதுகா மந்திர விளக்கம் -01

 ஸ்ரீ குருபாதுகா மந்திர விளக்கம் -01                                          

தேவிபுரம் ஸ்ரீ அம்ருதானந்த நாத சரஸ்வதி அவரகளது விளக்கம்


ஸ்ரீ வித்யா ஸம்ப்ரதாயத்தில் குருபாதுகை மந்திரம் கீழ்வருமாறு


ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் / ஐம் க்லீம் ஸௌ;

ஹம்ஸ; ஸிவ ஸோஹம் / ஹஸ்க்ப்ரேம் 

ஹஸக்ஷமலவரயூம் ஹஸௌம்

ஸஹக்ஷமலவரயீம் ஸஹௌ;


ஸ்வரூப நிரூபண ஹேதவே ஸ்வகுரவே 

ஸ்ரீ அமுகாம்பா ஸஹித

ஸ்ரீ அமுகானந்த நாத 

ஸ்ரீ குரு ஸ்ரீ பாதுகாம் பூஜயாமி தர்ப்பயாமி நமஹ


இந்த மந்திரத்தின் பொருளைப் புரிந்துகொள்வதற்கு முதலில் இந்த மந்திரத்தின் அமைப்பினைப் புரிந்துகொள்ளவேண்டும். ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் தொடக்கம் ஸஹக்ஷமலவரயீம் ஸஹௌ; வரையுள்ள பகுதி பீஜ மந்திரங்கள் உள்ள உணர்வினை உயர்த்தும் மந்திர சக்தியைப் பிறப்பிக்கும் பாகம். 


ஸ்வரூப நிரூபண என்று தொடங்கி தர்ப்பயாமி நமஹ என்பது இப்படி உணர்வு உயர் நிலையை எம்மை அடைவிக்கும் குருவைப் பற்றிய விளக்கத்தை சொல்லும் பகுதி. இந்தப் பகுதியின் சுருக்கமான விளக்கம்: நான் எனது உண்மையான ஸ்வரூபத்தைப் ( நான் உடல் அன்று, மனமன்று, புத்தியன்று எனப்) புரியவைத்து சாதனையால் அனுபவிக்க வைத்த எனது குருவினதும், குருவின் ஸக்தியினதும் பாதங்களை வணங்கி திருப்தியடைகிறேன் என்பது இதன் பொருள். 


இதில் அமுகாம்பா என்ற இடத்தில் அவரவர் குருவின் ஸக்தியும், அமுகானந்த என்ற இடத்தில் அவரவர் குருவின் தீக்ஷா நாமமும் அவரவர் பெற்ற உபதேசத்தின் படி வரும். 


இனி பீஜமந்திரங்களின் பொருள் விளக்கம் வருமாறு;


1. முதல் பீஜ மந்திரத் தொகுதி : ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் 

ஒவ்வொரு பீஜத்தினதும் விளக்கம் சொல்ல முன்னர் பீஜ மந்த்ரங்கள் எப்படி வேலை செய்கிறது என்பதை புரிய மந்திர சாஸ்திர விளக்கம் அவசியம். 


பீஜ மந்திரங்கள் என்பவை அன்னையின் ஒவ்வொரு ஆற்றல்களையும் விதை வடிவில் வைத்திருக்கும் சப்தங்களாகும். இந்தச் சப்தங்களை குருமூலம்  நாம் பெறும் போது அவற்றை மீண்டும் மீண்டும் சொல்லும்  போது அது பிரபஞ்ச ஆற்றலின் குறித்த பகுதியை எமது உடலில் தூண்டி அந்தப் பண்பினை எமக்குள் ஆகர்ஷிக்கும் தன்மையுடையவை. 


ஐம் என்பது அறிவினைத்தரும் சக்தியினை ஆகர்ஷிக்கும் சொல்; ஐம் என்ற சக்தி எமது அந்தக்கரணங்களில் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளும் ஆற்றல் வாய்க்கத் தொடங்கும். இதை நாம் சரஸ்வதி கடாக்ஷம் என்று சொல்லுவோம். 


என்ன நோக்கத்திற்கான அறிவு வேண்டும் என்பதை அடுத்த பீஜ மந்திரம் கூறும்;


ஹ்ரீம் - இது ஒரு செயலைச் வரையறைக்கு உட்படுத்தும் சக்தி; 


ஸ்ரீம் - இது இறைவனின் பரிபூரண கடாக்ஷத்திற்குரிய பீஜ மந்திரம். 


ஆகவே இந்த ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் என்ற மூன்று பீஜமந்திரங்களும் கூறவரும் செய்தி ஒரு சாதகன் இறைவனிலிருந்து ஹ்ரீம் பீஜத்தின் ஆற்றலால் பிரிக்கப்பட்டிருக்கிறான், அவன் தனது உண்மையான தெய்வத் தன்மையை உணர மீண்டும் இறைத்தன்மையைப் பெற தான் எப்படிப் பிரிக்கப்பட்டிருக்கிறேன் என்று அறிந்துகொள்ளும் அறிவு அவசியம். இதை அறிந்து கொண்டால் அவன் மீண்டும் இறைத்தன்மை அடையலாம். இந்த ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் என்பது ஸ்ரீ சக்ர பூஜையில் அனைத்து மந்திரங்களிலும் முதலில் சேர்த்துக்கொள்ளப்படும். இதன் அர்த்தம் "தேவி எனக்கு எனது வரையறைகளையைப் புரிந்து, அதிலிருந்து வெளிவந்து உண்மையான இறைத்தன்மையை அறியக்கூடிய ஆற்றலும் அறிவும் தா" என்பதே ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் என்பதன் விளக்கம். 


ஆகவே ஒரு ஸ்ரீ வித்யா உபாசகனின் முதன்மை நோக்கம் தான் மாய பீஜத்தால் ஆக்கப்பட்ட பௌதீக உலகம், ஆன்ம தத்துவங்களால் தான் எல்லைப்படுத்தப்பட்டு உண்மையான இறைத்தன்மையை அடைய முடியாமல் இருக்கிறேன் என்பதைப் புரிந்துகொண்டு முதலில் இது எப்படி நடக்கிறது என்பதைப் புரியும் அறிவினை ஐம் பீஜத்தின் மூலமும், பிறகு அதை வெல்வதற்குரிய ஆற்றலை ஹ்ரீம் பீஜம் மூலமும், இறுதியாக இறை நிலையான ஸ்ரீம் இனை அடைவதும் இலட்சியமாக இருக்க வேண்டும் என்பதாக இருக்க வேண்டும் என்பதால் எல்லாவற்றிலும் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சேர்க்கப்படுகிறது. 




Saturday, May 21, 2022

யோக சாதனை

 

யோகம் என்பதன் எளிமையான பொருள் "இணைதல்"

எது எதனுடன் இணைதல்?

யோகத்தின் இறுதி இலக்கைக் கருதினால் "ஆன்மா இறைவனுடன் இணைதல்" என்று கொள்ளப்படும்.

ஆனால் அதற்கு முந்தைய நிலையில் ஆன்மாவைச் சூழ இருக்கும் கருவிகளான உடல், மனம் ஆகியவற்றில் பிளவுபட்டிருக்கும் தத்துவங்களை இணைத்தல். ஆன்மாவைச் சூழ இருக்கும் தத்துவங்களை ஆன்ம தத்துவம் என்று கூறுவார்கள். மனம், புத்தி, சித்தம், ஆங்காரம் ஆகிய அந்தக்கரணங்கள் நான்கு, பஞ்சபூதம், பஞ்சதன்மாத்திரைகள், பஞ்சஞானேந்திரியம், பஞ்சகர்மேந்திரியம் ஆகிய (4+5+5+5+5) 24 ம் ஆன்ம தத்துவங்கள்.

இப்படி 24 தத்துவங்களும் இணைக்கப்பட்டிருக்கும்போது சித்தத்தில் எழும் விருத்திகள் இந்த இணைப்பை ஆட்டம் காணவைப்பதால் இந்த சித்த விருத்திகளைக் கட்டுப்படுத்துவதே யோகம் என்பார் பதஞ்சலி மகரிஷி.

சாதனை என்பது இந்த கருவிகளுக்கு இடையிலுள்ள இணைப்பினை சலனிக்கச்செய்யும். சித்த விருத்திகளை ஒழுங்குபடுத்தி ஆன்மாவினை அறிய செலுத்தும் ஒழுங்குமுறை என்று அர்த்தம்.

சாதனை என்ற சொல்லின் வேர்ச்சொல் சாத்யமாக்குதல். யோக சாதனை என்றால் சித்தவிருத்திகளை நிறுத்தி ஆன்மாவை நோக்கி ஆன்ம தத்துவங்களை ஒழுங்குபடுத்துவதைக் குறிப்பிடுவர்.

ஹட யோகம் என்றால் இடகலை, பிங்கலையினை சமப்படுத்தி இணைத்தல் என்று அர்த்தம்,

சிவ யோகம் என்றால் முப்பத்தாறு தத்துவங்களும் பேதித்து ஆன்மா சிவத்துடன் இணைதல் என்று அர்த்தம்.

ஒருவன் தனது உலகவாழ்க்கையில் இன்பமாக வாழ வேண்டும் என்றால் தனது 24 தத்துவக்கருவிகளையும் ஆற்றலுடையதாக வைத்திருக்க வேண்டும்.

இதற்குரிய எளிய முறைதான் 24 அட்சரங்கள் கொண்ட காயத்ரி மந்திர சாதனை.

Thursday, May 19, 2022

தலைப்பு இல்லை

 

யோக சாதனை, உபாசனை செய்பவர்கள் பலருக்கு யோகத்தின் பயன் எதுவும் விளைவதில்லை!

சிவபூஜை செய்கிறோம். ஆனால் உள்ளே ராக துவேஷாதிகள் மாறவில்லை!

சக்தியை உபாசிக்கிறோம். ஆனால் எல்லாவற்றிலும் அவளின் ஆற்றலைக் காணமுடியவில்லை!

ஏன் எமது சாதனை பலன் அளிப்பதில்லை என்பதற்கு ஸ்ரீ அரவிந்தர் பதில் தந்திருக்கிறார்; நாம் உயர்ந்த ஒன்றைச் செய்யும் போது மறுபுறத்தில் தாழ் உணர்ச்சிகளையும் பற்றிவைத்துக்கொண்டிருக்கிறோம். இதனால் சாண் ஏற முழம் சறுக்கிக்கொண்டிருப்போம்!

நீ உன்னுடைய ஒருபாகத்தை மாத்திரம் திறந்து வைத்துக்கொண்டு அல்லது சத்தியத்தைக் கடைப்பிடித்துக்கொண்டு அடுத்த பகுதியை சத்தியத்திற்கு விரோதமான சக்திகளிற்கு திறந்து வைத்துக்கொண்டு, தெய்வ அருள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறாய்; தெய்வ ஆற்றலை உனக்குள் வரவேற்க வேண்டும் என்றால் உனது ஆலயத்தை முழுமையாக சுத்தப்படுத்த வேண்டும்!

ஸ்ரீ அரவிந்தர்

சடாட்சர உபாசனையும் ஆறறிவு விருத்தியும்

 

முருகப்பெருமானின் யந்திரம் அறுகோணமுடைய சடாட்சர யந்த்ரம்.

இது மேல் நோக்கிய சிவ முக்கோணமும், கீழ் நோக்கிய சக்தி முக்கோணமும் இணைந்து உருவாகும்.

சிவ ஸக்தி ஐக்கிய ரூபம் முருகன்

அறுபத்து நான்கு சிவ உருவத்திருமேனிகளில் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் சோமாஸ்கந்தர் இந்த தத்துவத்தின் உருவ வடிவாகும்.

இது கூறும் மறையியல் தத்துவம் என்ன?

சிவமாகிய அறிவிலிருந்து வெளிப்பட்ட ஒளிக்கதிர்களை உடலிலுள்ள ஆறு பதுமங்கள் வாங்க அவற்றை ஸக்தி ஒன்றாக்க முருகன் பிறந்தனன் என்பது கந்தபுராணம்.

இந்த ஆறு பதுமங்களும் உடலின் ஆறு ஆதாரங்கள், இந்த ஆறு ஆறாதாரங்கள் ஒன்றுபட்டு இயங்கும் இடம் மூளை! உடலுணர்வுகளை மூளை சரியாக ஒன்றிணைத்து சமநிலையுடன் செயல்புரியும் நிலையின் குறியீடு அறுகோண சடாட்சர யந்த்ரம்.

நவீன மூளை அறிவியல் அடிப்படையில் சொல்வதாக இருந்தால் ஒருவன் தனது வலது மூளை ஆற்றலையும், இடது மூளை ஆற்றலையும் கலந்து எவ்வளவு சிறப்பாக ஆறறிவுடன் செயற்பட முடியும் என்பதன் குறியீட்டு விளக்கம்தான் சடாட்சர யந்திரம் எனலாம்.

ஒருவன் சடாட்சர உபாசனையின் மூலம் தனது வலது, இடது மூளை ஆற்றல்கள் மூலம் சமப்படுத்தும் ஒரு brain cultivation ஆகக் கொள்ளப்பட முடியும்.

தலைப்பு இல்லை

 

இன்று காலை சக்தி டிவி Good Morning Sri Lanka நிகழ்ச்சியில் உரையாடியிருந்தேன். பார்த்தவர்கள் உரைபற்றிய கருத்துக்களைக் கூறுங்கள்.

உரையாடப்பட்ட விடயங்கள்

பொருளியல் அடிப்படையில்,

நாட்டின் இன்றைய அரசியல் சூழலுடன் விவசாயத்துறையின் நிலை.

சேதன விவசாயம் அரசியலாக்கப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்பு

இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும்?

பெருந்தோட்ட மக்களின் நிலையென்ன? அவர்களுக்கான உணவு உற்பத்திக்குரிய முன்மொழிவுகள் சில!

Wednesday, May 18, 2022

குண்டலினி யோகமும் ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமமும்

 

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமத்தில், குண்டலினி சாதனையில் தேவி ஒவ்வொரு ஆதாரச்சக்கரங்களில் இருந்துகொண்டு எப்படி ஒவ்வொரு கிரந்திகளையும் பிளந்து சாதகனை முன்னேற்றுகிறாள் என்பது கூறப்படுகிறது.

மூலாதாரைகநிலயா ப்³ரஹ்மக்³ரந்தி²விபேதி³னீ மணிபூராந்தருதி³தா விஷ்ணுக்³ரந்தி²விபேதி³னீ ஆஜ்ஞாசக்ராந்தராலஸ்தா² ருத்³ரக்³ரந்தி²விபேதி³னீ .

ஸஹஸ்ராராம்பு³ஜாரூடா ஸுதாஸாராபிவர்ஷிணீ

மஹாஸக்தி குண்ட³லினீ

மூலாதாரத்தில் நிலைகொண்டு பிரம்ம கிரந்தியை பிளப்பவளே

மணிப்பூரகத்தில் வீற்றிருந்து விஷ்ணு கிரந்தியை பிளப்பவளே

ஆஜ்ஞா சக்கரத்தில் வீற்றிருந்து ருத்ர கிரந்தியை பிளப்பவளே

இறுதியாக ஸஹஸ்ரார தாமரையில் வீற்றிருந்து அம்ருதத்தை வர்ஷிப்பவளே,

மஹா ஸக்தியான குண்டலினியே

மூன்று கிரந்திகளின் விபேதனத்துடன், அம்ருதத்துடன் முழுமையான குண்டலினியோகம் -அம்ருதீகரணம் ஸ்ரீ லலிதையால் சித்திக்கிறது என்கிறது ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமம்!

குண்டலினி யோகம் பயில விரும்புகிறோம் என்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டியது சாதகன் தான் உடலையும், மனதையும் பக்குவமுடையதாக வைத்திருந்து சாதனையை ஒழுங்காகச் செய்ய ஸ்ரீ லலிதையே அனைத்தையும் நடத்துகிறாள் என்ற பாவம்!

பிரம்ம கிரந்தி - விஷ்ணு கிரந்தி - ருத்ர கிரந்தி

 

பிரம்ம கிரந்தி - நான் இந்த உடல், இந்த உடல் அழிந்துவிட்டால் எனது இருப்பு போய்விடும்; இந்த உடலை பாதுகாத்துக்கொள்ள நாம் செய்யும் செயல்கள் எல்லாவற்றிலும் நாம் சிக்கியிருக்கும் நிலை; சுவாதிஷ்டான மூலாதார இயக்கம்.

விஷ்ணு கிரந்தி: அதிகாரம்/ஆற்றல் (மணிப்பூரகம்) அன்பு (அனாகதத்திற்குள் சிக்கியுள்ள உணர்வு/ஆன்மா)

ருத்ர கிரந்தி - இடம் காலம் (space and time) ஆகிய இரண்டிற்குள்ளும் சிக்கிய நிலை.

இவற்றுக்குள் சிக்காமல் குண்டலினி சஹஸ்ராரத்தை அடைந்தால் பரிபூரணம்; இல்லாமல் சிக்கும் போது உலகவாழ்க்கையில் அதிகாரம் படைத்தவர்களாக ஆகிறார்கள்.

அரசியல்வாதிகள் மூலாதாரத்தில் சிக்கியவர்கள்

செல்வந்தர்கள்/வியாபாரிகள் சுவாதிஷ்டானத்தில் சிக்கியவர்கள்

அறிவியலாளர்கள் - மணிப்பூரகத்தில் சிக்கியவர்கள்

கலைஞர்கள் - அனாகதத்தில் சிக்கியவர்கள்

ஆசிரியர்கள்/பேராசிரியர்கள் - விசுத்தியில் சிக்கியவர்கள்

யோகிகள் - ஆக்ஞையில் சிக்கியவர்கள்

சகஸ்ராரம் அடைந்தவர்கள் பூரண சித்தி பெற்ற சித்தர்கள்

மேலே உள்ள ஆற்றல்கள் மூலம்தான் பௌதீக உலக சக்திகள் நடைபெறுகிறது.

இதுவே சுருக்க விளக்கம்; இன்னும் விரிவாக எமது குண்டலினி சக்தி வகுப்புகள் பிரதி வியாழன் அதிகாலையில் நடைபெறுகிறது. பங்குபற்றி கலந்துரையாடி தெளிவு பெறுங்கள்.

கணபதி உபாசனையும் யோக விளக்கமும்

 

ஔவையாரின் விநாயகர் அகவலின் முழுமையான விளக்கம் படவடிவில் கீழே தரப்பட்டிருக்கிறது.

மூலாதாரத்தில் இருக்கும் எலியைப் போல் தடுமாறிக்கொண்டிருக்கும் சித்தத்தை கணபதி மந்திரத்தின் துணைகொண்டு மூளையுடன் ஏகாக்கிரத்தினால் தொடர்புகொள்ள வைத்தால் உடலில் இருக்கும் குண்டலினி எனும் மகாசக்தி விழிப்படையச் செய்யும்.

இதையே ஔவையார்

கருத்தினில் கபால வாயில் காட்டி

இருத்தி முத்தியினிதெனக் கருளி

என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து 55

முன்னை வினையின் முதலைக் களைந்து

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)

இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன

அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் 60

எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)

அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்

சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி

அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் 65

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

இதுவே மூலாதாரத்தில் கணபதி உறைகிறார் என்ற விளக்கம்.

இதைச் செய்வதற்கே அதிகாலை - பிரம்ம முகூர்த்தத்தில் - மூலாதாரத்தில் சூக்ஷ்ம சுவாசம் ஓடும்போது செய்வது பலனளிக்கும். இதனாலேயே அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் இறைவனை வழிபட வேண்டும் என்று சொல்லப்பட்டது.

இதைத் தவிர பிள்ளையாருக்கு யானைத்தலை பொருத்தினார் சிவபெருமான் என்று சிறுபிள்ளைத்தனமாக இரசிப்பவர்களுக்கு அவர் அவர் மனப்பக்குவத்திற்கு தக்க ஆயிரம் கதைகள் இருக்கிறது எமது புராணங்களில்!

அவரவர் மனப்பக்குவத்திற்கு தக்க ஏதாவது ஒன்றை எடுத்துக்கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும்.

#கணபதி

#ஸ்ரீவித்யா

#குண்டலினி

#ganapathy

Tuesday, May 17, 2022

தலைப்பு இல்லை

 

இந்தியவியலைக் கற்ற மாக்ஸ் முல்லர் கூறுகிறார்;

மனித மனத்தைப் பற்றி, எம்மைப் பற்றி, நாம் யார் என்பதை உண்மையாக அறிய விரும்பினால், பாரதம் எந்தவொரு நாட்டிற்கும் இரண்டாவது அல்ல! மனித மனதின் எந்தவொரு பகுதியையும் விஷேடமாக கற்க, மொழியோ, தத்துவமோ, புராணமோ, சமூக விதிகளோ, நுண்கலைகளோ, நுண் விஞ்ஞானமோ இவற்றில் எதைக் கற்க வேண்டுமோ பாரதத்திற்குச் செல்ல வேண்டும்! நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் மனித குல வரலாற்றில் மிகவும் பெறுமதியான உபதேசங்கள் பாரதத்தில் உள்ளது! பாரதத்தில் மாத்திரம்தான் உள்ளது!

இது எவ்வளவு பெரிய உண்மை! எமது மனதை செம்மைப்படுத்த எத்தனை எத்தனை சாத்திரங்கள்!

திருமந்திரம்

அகத்தியர் ஞானம்

பதஞ்சலி

விஞ்ஞான பைரவம்

ஹட யோக பிரதீபிகை

யோக வஷிஷ்டம்

பதினெட்டு புராணங்கள்

இதிகாசங்கள்

#indianknowlegesystem

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...