குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, March 24, 2022

தலைப்பு இல்லை

 

காளி தருவாள்

எண்ணி லாத பொருட்குவை தானும்,

ஏற்றமும், புவி யாட்சியும் ஆங்கே

விண்ணில் ஆதவன் நேர்ந்திடும் ஒளியும்

வெம்மை யும்பெருந் திண்மையும் அறிவும்,

தண்ணி லாவின் அமைதியும் அருளும்

தருவாள் இன்றென தன்னை யென்காளி;

மண்ணி லார்க்குந் துயரின்றிச் செய்வேன்,

வறுமை யென்பதை மண்மிசை மாய்ப்பேன்.

தானம் வேள்வி தவங்கல்வி யாவும்

தரணி மீதில் நிலைபெறச் செய்வேன்,

வானம் மூன்று மழைதரச் செய்வேன்

மாறி லாத வளங்கள் கொடுப்பேன்;

மானம் வீரியம் ஆண்மை நன்னேர்மை

வண்மை யாவும் வழங்கறச் செய்வேன்,

நான்வி ரும்பின காளி தருவாள்.

பாரதியார்


Sunday, March 20, 2022

தலைப்பு இல்லை


Learning Venu (carnatic flute)

சரளிவரிசை 04 பூர்த்தி்…

புதிதாக கற்றல் மூளைக்கு ஒரு பேரின்பம்… நாத அனுபவம்…

புதிதாக ஒன்றைக் கற்கும் போது நாம் எவ்வளவு இளமையாக இருக்கிறோம் என்பதை அறியலாம்! அதுவும் இசை கற்றல் இளமையிலும் இளமையாக இருக்கிறோம் என்பதை அறியலாம்! மூளை எவ்வளவு நுண்ணறிவுடன் இயங்குகிறது என்பதை உணரலாம்! ஐம்புலன்கள் எவ்வளவு அந்தக்கரணங்களுடன் ஒத்திசைந்து வேலை செய்கிறது என்பதை அறியலாம்!

ஹே தேவி,

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான் எண்ணும் பொழுது எளிது எய்தநல்காய்!

மண்கண்ட, வெண்குடைக்கீழாக, மேற்பட்டமன்னரும், என்

பண்கண்ட அளவில், பணியச்செய்வாய்! படைப்போன் முதலாம்

விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும், விளம்பில் உன்போல்

கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே

யோகமாணவர்களின் பண்புகள்

 யோகம் பயிலும் மாணவர்களை நான்கு நிலைகளில் வகைப்படுத்தலாம்

1) ஆரம்ப சாதகர்கள்

2) மத்ய நிலை சாதகர்கள்

3) அதிமத்ய நிலை சாதகர்கள்

4) இறுதி நிலை சாதகர்கள்


இங்கு முதல் இரண்டு நிலை சாதகர்களின் குறிகுணங்கள் இங்கே தந்துள்ளோம். ஒவ்வொரு சாதகர்களும் சுய பரீட்சை செய்துகொள்ள வேண்டுகிறோம். 


ஆரம்ப சாதகனின் குறிகள்:


1) மந்தஉத்ஸாகம் - ஆர்வம் குறைவு

2) புத்திசூன்யம் - புரிந்துகொள்வதற்கான அறிவு குறைவு

3) ரோககிரஷ்டா  - ரோகங்கள் உடையவனாக இருத்தல்

4) குருதூஷகா - குருவின் வார்த்தைகளில் குற்றம் கண்டுபிடித்துக்கொண்டிருப்பவன்

5) லொவி - பேராசை கொண்டிருத்தல்

6) பாபகார்யேலிப்த - பாபகாரியங்களில் ஈடுபட்டுக்கொண்டிருப்பது

7) பகுபோஜனசில் - அதிக உணவருந்துதல்

8) ரமன்ப்ரிய - பெண்கள் மீது மையல் கொண்டிருப்பது

9) சஞ்சலம் - பதட்டம் சஞ்சலத்துடன் இருப்பது. 

10) பரிஸ்ரமகதர் - சோம்பேறித்தனம்

11) ருக்னதேகம் - பலவீனமான உடல்

12) பராதின் - வேறொருவரில் தங்கியிருப்பவன்

13) அனிந்திரியம் - புலன் கள் மேல் கட்டுபாடு அற்றவன்

14) குஷித்வீர்ய - வக்கிரமான, நெறிதவறிய செயல்களும் எண்ணங்களும் உடையவன்


இந்த 14 குறிகளில் எவை இருப்பினும் அவர்கள் ஆரம்ப சாதகர்களாக கொள்ளப்பட வேண்டும். இவர்கள் தொடர்ச்சியான மந்திர சாதனையின் மூலம் மன, சித்த சுத்திகளை அடைந்து சாதனையில் முன்னேற வேண்டும். 


இப்படி முன்னேறிய சாதகனை கீழ்வரும் குறிகள் கொண்டிருப்பான்

1) சமபுத்தி - குரு சொல்லுவதை சரியாக புரிந்து செய்யும் தன்மை (ஸமபுத்தி)

2) மற்றவர்கள்  செய்யும் தவறுகளை, துன்பங்களை எளிதில் மறந்து விட்டு தனது கடமைகளில் முன்னேறிச் செல்லும் பண்பு (க்ஷமாபான)

3) நல்ல காரியங்களை உற் சாகத்துடன் செய்பவன் 

4) இனிமையாக பேசும் தன்மை உடையவன்

5) தான் செய்யும் காரியங்களின் பலனை எதிர்பார்க்காமல் மகிழ்ச்சியுடன் காரியங்களை ஆற்றக்கூடியவன்.


இவர்களே உயர் யோகங்களான கும்பகப் பிரணாயாமம், பிரத்தியாகாரம் என்பவற்றிற்கு தகுதியானவர்கள். 

Tuesday, March 15, 2022

தாவோவும் இலங்கையும்

 

தாவோவைப் பின்பற்றி

மக்களை வழி நடத்துவோர் தங்கள் ஆணைகளை

நிறைவேற்ற ஆயுதங்களைக் கைக்கொள்வதில்லை

படைகள் செல்லும் இடங்களில் முள்ளும் புதரும் வளரும் பூக்கும்.

படைகள் போர்க்களம் புகுந்தபின்னர்

பட்டினி காலம் பின் தொடரும்.

ஆற்றல் மிக்க தளபதி

ஒற்றைத் தாக்குதலில் வெற்றிக்கு வழி காண்பான்

பிறகு தாக்குதலை அவன் தொடர்வதில்லை

எதிரியை போரில் வெற்றி கண்டபின்

அது பெருமைபட்டுக்கொள்ளும் விஷயமில்லை

போர் முடிந்த பின் மூர்க்கத்தனமே

புதிய பகைவன்.

மாற்று இல்லாதபோது போர் பலனளிக்கும்

எனவே பகைவனை வென்றவன் அவன் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடாது.

காலம் எப்போதும் பலசாலியைப் பலவீனப்படுத்தும்.

லாவோட்சு

தாவோ தே ஜிங்

{தமிழில்: சந்தியா நடராஜன் மொழிபெயர்ப்பு}

*****************************

பதின்மூன்று வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் போரினால் தீர்வு என்றவர்களுடன் போரிட்டு வெற்றி கொண்டவர்கள் தமது புதிய பகைவன் மமதை மூர்க்கம் என்பவர்களிடம் சிக்கி வெல்ல முடியாமல் காலம் இன்று வலிமையற்று கோமாளியாக்குகிறது!

இவர்களை மூர்க்கமாய் வெல்பவர்களை அடுத்த சுற்றில் மீண்டும் காலம் வீழ்த்தும்!

தாவோ இயற்கையின் நியதி!

Saturday, March 12, 2022

தலைப்பு இல்லை

 

எழுதியிருப்பவற்றை தமிழில் சிலேடை, வஞ்சப்புகழ்ச்சி அணி கொண்டு வாசிக்கவும்; இவை என்னவென்று தெரியாத சீரியஸ் தலையர்கள் விலகிச் செல்லவும்!

தற்போது மின்வெட்டுக் காரணமாக மின்சாரம் இல்லாத நேரத்தினை ஓய்வு நேரமாக உறக்கத்திற்கும் இரவில் மின்சாரம் உள்ள நேரத்தில் பணிபுரியும் நேரமாகவும் மாற்றலாம் என்று எண்ணுகிறேன்!

இதைத்தான் Go with the flow என்பதோ?

எப்படியோ நான்கு ஐந்து மணி நேரம் கணனியைப் பார்க்காமல், வேலையில்லாமல் பகலில் ஓய்வெடுக்கச் சொல்லி நாட்டுப் பிரஜைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டிருக்கும் அரசினை நாம் மனமாரப் பாராட்ட வேண்டும்!

அதுபோல் பிறகு செய்யலாம் என்று பிற்போடலாம் என்று வாழும் எம்மையெல்லாம் இந்த நேரத்திற்குள் திட்டமிட்டு பணியாற்றும் ஒழுக்கத்தை இலங்கை வாழ் மக்கள் பழக வேண்டும் என்ற உயரிய எண்ணமும் அரசிற்கு இருக்கிறது என்று தோன்றுகிறது.

மேலும் காபன் மாசு குறைத்தல், இயற்கையுடன் வாழப் பழகி கற்கால வாழ்க்கைக்கு திரும்புதல், இரசாயன உரம் பாவிக்காமல் பழங்காலத்து புராதன அறிவினை பயிற்சித்தல் போன்ற உயரிய கொள்கைகள் நாடி நரம்பில் ஊறிய அரசாக இருப்பது எமக்கெல்லாம் பெருமையான விஷயமன்றோ!!!

இருவேளை உணவே ஒருவன் ஆரோக்கியம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது; ஒரு வேளை உணவு உண்பவன் யோகம் பயின்று சித்திபெறும் தகுதியைப் பெறுவான் என்று உணர்ந்துகொண்ட அரசு விலைகளைக் கூட்டி கண்ட கண்ட நொறுக்குத் தீனி உண்டு ஆரோக்கியம் கெடக்கூடாது; ஒரு வேளை உணவு நாட்டு மக்களுக்கு போதும் என்ற உயர்ந்த எண்ணத்தில் தான் உணவுப் பொருட்கள் விலை கூட்டுகிறது என்ற நல்லெண்ணத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கடந்த சில மாதங்களாக டெமோ காட்டப்பட்டதிலிருந்து எரிவாயு எவ்வளவு ஆபத்தானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சமைத்துச் சாப்பிடாமல் எல்லோரும் பச்சையாக இயற்கை உணவு உண்ண வேண்டும் என்ற கொள்கை வெகுவிரைவில் என்றாவது ஒரு நாள் இரவு தூங்கி எழுந்தவுடன் அமுல்படுத்துவதற்கு இப்பொழுதே ஒத்திகை என்பதை அனைவரும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஏ.சி, மின்விசிறி பயன்படுத்துவதால் உடலில் இருந்து வியர்வை வெளியேறாமல் ஆரோக்கியம் கெடுகிறது என்பதை அறிந்து இந்தக் கோடைக்காலத்தில் நான்கு ஐந்து மணித்தியாலம் வியர்க்க வைத்து உடலாரோக்கியம் பேணவைக்கிறது எமது புத்திசாலி அரசு!

எப்படி இருப்பினும் எம்மைக் காப்பாற்ற சின்னண்ணன் சீனத்து சிங்காரமும் பெரியண்ணன் டெல்லி பாபுவும் இருக்க இலங்கைத் தம்பி கடன் வாங்கினால் என்ன, மீளக்கட்டாவிட்டால் என்ன?

எல்லா வளங்கள் இருந்தும், புத்தனின் ஞானமும் மறந்து, மனிதர்களை இணைக்கத் தெரியாமல் குரோதமும், துவேஷமும், தலைக்கனமும் பிடித்து, பிரிவினை விதைத்து ஆசியாவின் ஆச்சரியமாக மாறிக்கொண்டிருக்கிறோம்!

Thursday, March 10, 2022

குருவும் சிஷ்யனும்

 

{இந்தப்பதிவினை பொதுப் பார்வையில் வைத்துக்கொண்டு புரிய முற்படக்கூடாது; குருமுகமாய் பாரம்பரியத்தைப் பின்பற்றி யோகம், உபாசனை பயில்பவர்களுக்கு மாத்திரம் பொருத்தமானது}

பிரச்சனை என்னவென்றால் நீங்கள் எதைக் கேட்க விரும்புகிறீர்களோ அதையே உங்கள் குரு உங்களுக்குக் கூற வேண்டும் என்று எப்போதும் எதிர்பார்க்கிறீர்கள். நீங்கள் விரும்பும் ஒன்றுக்கு மாறான ஒன்றைக் கூறி விடுகிற தவறினை குரு இழைத்துவிட்டாரேயானால், உங்கள் மனதில் குரு என்ற அவருக்கான இடம் மூடப்பட்டு விடுகிறது. பிரபஞ்சம் தழுவிய முழுமையான அடையாளமாக மலர்ந்திருக்கக்கூடிய குரு-சிஷ்ய உறவு, அந்தக் கணத்தில் முடிவுற்று விடுகிறது. இப்படித் தொடர்பு அறுந்துபோகிறபோது, குருவினுடைய பாதை என்று தான் நம்பும் – ஆனால் உண்மையில் அப்படி அல்லாத – ஒரு பாதையில் மாணவன் செல்லக்கூடிய அபாயம் இருக்கிறது. இதில் குருவினுடைய பெயரும் பயன்படுத்தப்பட்டால், அபாயம் பன்மடங்காகிறது.

ஸ்ரீ அம்ருதானந்த நாத சரஸ்வதி

(Dr. N. Prahaladha Sastry)

தேவிபுரம்

Sunday, March 06, 2022

சதுராவர்த்தி தர்ப்பணம் சதுர்த்தி அனுபவம்

 Vanakkam Guru 🙏🏻


சங்கட சதுர்த்தி அனுபவம் (2nd March 2021 - 6th March 2022)

Initially I started Ganapathi Tharpanam with a heavy heart due to other situations but those 44 days transformed me entirely as a new person in perceiving the things around me and motivated me to move forward in my life. I can clearly distinguish my life before and after tharpanam. As you mentioned earlier like if we do Ganapathi Tharpanam for 1 year continuously it will change our destiny, so this triggered me to complete 1 year of Tharpanam 

I have made a note of important things which happened during Tharpanam

April 11(சங்கடக சதுர்த்தி) - Attended Interview and got Selected 
April  27 (சதுர்த்தி) - Got the offer letter
May 15 (சதுர்த்தி) - Ordered laptop but I got on May 15th
May 29(சங்கடக சதுர்த்தி) - Received யோகமும் இயற்கையும் book and prayed for an interview. It got cleared 🙏🏻
June 28(சதுர்த்தி) - Last day in my existing company and prayed to release offer letter from Accenture. Received revised offer letter on June 30th with the package I exepected.
July 13(சதுர்த்தி) - Received Revised offer letter for early joining on July 23rd and received relieving letter from company
September 10th - Got a valuable words from you Guru like You are really blessed as you have seen Kaanaya yogi in your dream.Guru also added that he will call tomorrow so that we can plan for lesson preparation.

Totally I was selected in 3 companies out of which I selected Accenture..  

Few months I missed to note Guru. But most of the important things happened during  Chaturthi in this 1 year.  Even when I went for a trip I carried all the necessary items for Tharpanam in my bag so that I wouldn't miss any Chaturthi days. I surrender my entire life which I got after Tharpanam to Devi & You Guru 🙏🏻 Its all because of Devi,Guru mandalam & your blessings!!! Thank you so much Guru 🙏🏻  Iam also interested in doing intense sadhana like Ganapathi Tharpanam Guru 🙏🏻

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...