இன்றைய கல்வி முறையில் "பட்டங்கள்" மீதான மோகம் அறிவு பெறுதலைத் தடுக்கிறது. கல்வி என்பது சிந்திக்கும் முறையை எம்மில் உருவாக்கும் ஒரு பொறிமுறையாக இருக்க வேண்டும். பட்டம் வாங்குவதால் அறிவு சிறந்து விடும் என்று நம்பிக்கை வளர்க்கப்படுகிறது.
சிந்தித்துத் தெளிந்தால் மனதில் உறுதி பிறக்கும், மனதில் உறுதி பிறந்தால் செயல் நடக்கும், செயல் ஒன்றே எமக்கும், மற்றவர்களுக்கும் பிரயோசனமானது! இப்படி தனக்கும் மற்றவர்களுக்கும் பயன் தரும் செயல் புரியத் தூண்டாத கல்வியால் என்ன பயன்?
இது அடிப்படையில் அகம் என்ற ஒன்று இருக்கிறது, அகத்தை மேம்படுத்துவது எப்படி என்ற சிந்தனை கல்வியில் இல்லாமையினால் நடைபெறுகிறது என்று கருதுகிறேன்.
கற்றலை சந்தோஷமான, இன்பமான செயலாகக் கருதாமல் மூளையில் வலியை உணரும் பகுதிக்கு தெறிவினையை அனுப்பும் ஒரு செயலாக வடிவமைத்திருக்கிறோம்.
பலருக்கு பட்டம் என்றால் பறப்பது என்றே மனதில் எண்ணம் தோன்றுகிறது, பட்டம் என்பது கல்வியினால் மனம் பட்டை தீட்டப்பட்டது என்ற பொருளிலேயே உணரப்பட வேண்டும்.
பட்டம் பெறுவது என்பது பறப்பது என்று நினைப்பு இருப்பதால் மனதிற்குள் அகங்காரமும், ஆணவமும், வக்கிரமும் வளர்கிறது. பட்டம் பெறுவது எமது மனதை, அறிவைப் பட்டை தீட்ட, மற்றவர்களுக்கு எமது அறிவால் உதவி செய்ய, எமக்கும் மற்றவர்களுக்கும் பலன் தரும் நபர்களாக நாம் இருக்க என்ற எண்ணம் வளராமல், பட்டம் பெறுவது எல்லாம் தெரிந்தவர்கள் என்ற மாய வலையைப் பின்னிக்கொண்டு வாழும் எண்ணத்தை உருவாக்குகிறது.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.