குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, February 29, 2020

தலைப்பு இல்லை

சிவயோக ஞானத்திறவுகோல் நூல் அறிமுக விழா பற்றிய தமிழ் மிரர் பத்திரிகையின் நேற்றைய செய்தி!

Friday, February 28, 2020

தலைப்பு இல்லை

இந்த வாரம் முழுவதும் தகுதியுள்ள ஆற்றல் வாய்ந்த இளைஞர்களைப் பற்றி எழுதவேண்டும் என்பது எனது கடமையாகி விட்டது! 

நான் சந்தித்தவர்களின் தகுதிகளைப் பற்றி எழுதும் போது எமது மாத்தளை ஊரின் பெருமை மிகுந்த அறிவியலாளன், என்னுடன் கூட இருக்கும் தம்பி பற்றிக்கூறாமல் விட்டால் அது சரியல்ல! 
Dr. Nishānthan Ganeshan
சுருக்கமாகச் அவரைப்பற்றி அறிமுகம் சொல்வதானால்; 
"மலையக தமிழ் இளைஞர்களிற்கு கல்விக்கான சமூக வழிகாட்டி!"
தனது முப்பது வயதிற்குள் கலாநிதிப்பட்டத்தினை பல்வேறு அரச விருது, சர்வதேச அங்கீகாரத்துடன் முடித்திருக்கிறார். 
அவரது தந்தை திரு. கணேசன் ஐயாவுடன் உரையாடத்தொடங்கினால் சமூகத்தினதும், மலையகத்தினது கல்வி முன்னேற்றத்தினையும் தவிர வேறு எந்த உரையாடலும் வராது! அந்தளவிற்கு கல்வித்துறையை தனது சிந்தனை முழுவதும் ஏற்றிக்கொண்டவர். தனது மகனையே மலையக தமிழ் சமூகத்திற்கு முன்னுதாரணமாக உருவாக்கிக் காட்டியுள்ளார்! 
"தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்" 
என்ற படி நிசாந்தன் இன்று இவ்வளவு உயரம் தொட நல்மகனை உருவாக்கி எம் சமூகத்திற்கு தந்திருக்கிறீர்கள்! 
அதுபோல் நிசாந்தனும் “மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்னோற்றான் கொல்எனும் சொல்” என்ற படி இந்த இளம் வயதில் தனது கலாநிதிப்பட்டத்தை முடித்து பல்வேறு சாதனைகளுடன் மாத்தளையின் தமிழ் சமூகத்தின் பெருமையாக நிற்கிறார்! 
வாழ்த்துக்கள் தங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும்!

தலைப்பு இல்லை

தமிழருவி மணியன் ஐயா அவர்களைப் பற்றிய அறிமுகம் தேவையில்லை!

சென்றமுறை அகத்திய யோக ஞானத்திறவுகோல் நூல் தமிழருவி மணியன் ஐயா அவர்கள் கைகளுக்குச் சென்றது! அவர் நூலை வாசித்து விட்டு தனிப்பட அருமையாக இருக்கிறது என்று உரையாடினார்! அவரும் யோகப் பயிற்சிகளைச் செய்து வருபவர் என்ற அடிப்படையில் நூல் யோகம் சார்ந்த பல விஷயங்களை தெளிவாக எடுத்து சொல்லியுள்ளது என்று கருத்துச் சொன்னார். 

அதன் பின்னர் தனது "விடைதேடும் வினாக்கள்" எனும் நூலில் தனது வாசகர்களுக்கு அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நூலைப் படிக்கும்படி பரிந்துரைத்திருந்தார்!

இந்த முறை சிவயோக ஞானத்திறவுகோல் அவருக்கு கிருஷ்ணா தந்திருக்கிறார்! படித்துவிட்டு கருத்துரை தருவதாகக் கூறியுள்ளார்!


சிவயோக ஞானத்திறவுகோல் தந்த நட்புகள் - 04

சிவயோக ஞானத்திறவுகோலின் சிறப்பான அட்டைப்படம் நூலிற்கு அழகு சேர்க்கும் அழகான சேலை! உள்ளத்தில் உள்ளதைக் கூற எந்தத் தடங்கலும் இல்லாமல் மனதிலுள்ள உருவத்தில் கொண்டுவரும் ஓவியன் மிகச்சிறப்பானவர். 
சென்ற முறை எனது முதல் நூலான அகத்தியர் யோக ஞானத்திறவுகோலிற்கு அட்டைப்படத்திற்கு அகத்திய மகரிஷி படம் வேண்டும் என்று கேட்க ஒரு ஓவியர் வரைந்து அனுப்பிய படம் விரக்தியடைய வைத்துவிட்டது! உருவங்களில் லட்சணங்களைக் கொண்டுவர மனது அந்த லட்சணங்களை உணர்ந்திருக்க வேண்டும். 
இந்த முறை சிவபெருமான் தியானத்தில் இருக்கும் உருவமும், அந்த உருவத்தில் தியான நிலை வரவேண்டும் என்பது, பொன், வெள்ளி நிறக்கிரணங்கள் வரவேண்டும் என்பதை கச்சிதமாகப் பிடித்துக்கொண்டு எந்தச் சிரமமும் இல்லாமல் லட்சணத்துடன் வரைந்து தந்தார் ஓவியர் கோபி ரமணன். 
தனது கலையை மிகுந்த பெருமையுடனும், தொழில்சார் அணுகுமுறையுடனும் செய்பவர்! விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்திருந்தார்! 
தமது ஓவியத்துறையில் சாதிக்க வாழ்த்துக்கள்!

Thursday, February 27, 2020

சிவயோக ஞானத்திறவுகோல் தந்த நட்புகள் - 03

ஏற்கனவே நினைவோ ஒரு பறவை என்று அவரது கவிதை நூல் வெளியிட்டு அதற்குரிய முக நூலில் நான் பறவை பற்றி தத்துவம் கதைக்க ஏற்பட்ட முகநூல் தொடர்பு! ஆனால் நேரில் சந்திக்கவில்லை!

நூல் வெளியீட்டிற்கு ஹட்டனிலிருந்து காலையில் பயணித்திருந்தார் தம்பி தர்சன்!

நூல் வெளியீட்டிற்குப் பிறகு உணவருந்தும் நேரத்தில் உரையாடும் சந்தர்ப்பம் கிடைக்க வெட்சி என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி இளைஞர்களிற்கு கலை ஆர்வத்தை ஹட்டனில் ஏற்படுத்தி வருகிறார் என்றவுடன் உரையாடல் சுவாரசியமாகியது! 

மலையக இளைஞர்களை தொழில்சார் கலைத்துறையில் ஈடுபடுத்த வேண்டும் என்ற ஆர்வமும் செயலும் கொண்ட நல்ல இளைஞன்! 

ராவணன் தர்சன்

நூல் வெளியீட்டு விழாவிற்கு நீண்ட தூரத்திலிருந்து வருகைதந்தமைக்கு நன்றி தம்பி! 

உங்கள் வெட்சி களம் பரவி, பல மலையக இளைஞர்களை கலைத்துறையில் ஈடுபடுத்த வாழ்த்துக்கள்!


சிவயோக ஞானத்திறவுக்கோல் நூல் தந்த நட்புகள் – 02

இவரின் சைவப்பற்றின் ஆக்ரோஷத்தை முக நூலில் காணுபவர்கள் சற்றுப்பயப்படுவார்கள், நான் உட்பட! 

அழைக்கவேண்டும் என்று உள்மனம் கூறியது, விழாவிற்கு அழைப்போம் என்று முடிவெடுத்தபின்னர் தம்பி ஆதித்தனிடமும், ஹரிசனிடமும் அபிப்பிராயம் கேட்க, இருவரும் ஒருமித்த கருத்தாக பிரதாபனை நேரில் பார்க்கும் போது வேறு அபிப்பிராயம் பெறுவீர்கள் என்று கூறினார்கள்! 

நேரில் பார்க்கும் போது நல்ல சிவப்பொலிவு தரும் முகம்! இனிய பண்பான பேச்சு! சைவ நெறி பேதமற்று காலத்திற்கேற்ற வகையில் மக்களுக்கு உதவவேண்டும் என்ற உறுதியான கொள்கை! விழா முடிந்த பின்னர் அரைமணி நேரத்திற்கு மேல் அமர்ந்து உரையாடும் படி அமைந்துவிட்டது! 

அவர்தான் மருத்துவர் சிவஸ்ரீ ஈசான பிரதாபன் தேசிகர்! 

கையுடன் அலகிலா ஆடல், சிவப்பிரகாசக் கதவம், சைவம் போற்றுதல் ஆகிய மூன்று நூற்களும் தந்தார்! அதில் துலாஞ்சன் எழுதிய அலகிலா ஆடல் முழுமையாக வேக வாசிப்பு செய்தாகிவிட்டது. மற்றவை படித்து முடிக்க வேண்டும்!

உங்கள் சைவப்பணி சமூகப்பணியாக விரிந்து அனேகர் பயன்பெறவேண்டும் என வாழ்த்துகிறோம்!


சிவயோக ஞானத்திறவுகோல் நூல் தந்த நட்புகள் - 01

தகுதியுள்ளவரைத்தான் அழைத்துள்ளோம் என்பதை அவையில் நிருபித்து திருவாசகத்தின் பல்பரிணாமத்தை உரைத்து அவையிலுள்ள பலரையும் பூரிக்க வைத்தீர்கள் துவாரகன்! 

நிகழ்விற்குப்பின்னர் பல பெரியவர்கள் யார் இந்தப்பையன் என்று வினாவும் அளவிற்கு அனைவரையும் ஈர்த்திருக்கிறீர்கள்! 

இன்றைய இளைஞர்களுக்கு சினிமாவும், நடிகை நடிகையரின் சினிமாக் காதலைத் தாண்டி தெய்வீகக் காதலின்பம் சுவைக்க, அகவாழ்வினை அணுக திருவாசகம் உதவும் என்று புது வழிகாட்டியுள்ளீர்கள்! 

இந்த ஆர்வம் குன்றாமல் இன்னும் பல மேடைகளும், அவைகளும் காண மனமார்ந்த வாழ்த்துக்கள்!


Tuesday, February 25, 2020

சிவயோக ஞானத்திறவுகோல் நூல் அறிமுக விழா - 03

சிறப்பு பிரதி பெறும் அதிதிகள்

திரு. ஸ்ரீதர் சிங் - பூபாலசிங்கம் புத்தகசாலை

திரு. குகமூர்த்தி - கொழும்பு தமிழ்ச் சங்கம்

திருமதி. குமார் சுப்பிரமணியம்

திரு வியாசா கல்யாணசுந்தரம்

திரு. பாலசுப்பிரமணியம்

சிவஸ்ரீ ஈசான பிரதாபன் தேசிகர் - இலங்கை சைவ முன்னேற்றக் கழகம்

திரு அசோக்பரன் - சட்டத்தரணி

திரு. முகுந்தன் - பொறியலாளர்

திரு. கோபிரமணன் - ஓவியர்

திரு. பிரதாஸ் - Roar Tamil பிரதி முகாமையாளர்

திரு. கனநாதலிங்கம் - ஓய்வுபெற்ற சுங்கத்துறை இயக்குனர்

திரு. கோபிநாத் - இலங்கை சித்தர் பீடம்


சிவயோக ஞானத்திறவுகோல் நூல் அறிமுக விழா - 02

உரைகள்

வரவேற்புரை - திரு. விமலாதித்தன் - செயலாளர், 

சித்த வித்யா விஞ்ஞான சங்கம்

தலைமையுரை - திருமதி. Dr. விக்னவேணி செல்வநாதன்

திருவாசக அனுபவம் - துவாரகன் வேலும்மயிலும்

மணிவாசகம், ஓசை அணிவாசகம் - தவ-சஜிதரன்

மதிப்புரை - பேராசிரியர் ஸ்ரீபிரசாந்தன்

ஏற்புரை - ஸ்ரீ ஸக்தி சுமனன்

நன்றியுரை - ஹரிசன் - பொருளாளர், சித்த வித்யா விஞ்ஞான சங்கம்


தலைப்பு இல்லை

சிவயோக ஞானத்திறவுகோல் நூல் வெளியீட்டு விழா செய்தித் தொகுப்பு News first இல்...

சிவயோக ஞானத்திறவுகோல் நூல் அறிமுக விழா - 01

விழா ஆரம்பம் - மங்கள விளக்கேற்றல்

திருமதி. Dr. இந்திராணி தவயோகநாதன், ஸ்ரீ ஸக்தி சுமனனின் தாயர்

திருமதி Dr. விக்னவேணி செல்வநாதன்

பேராசிரியர். திரு. ஸ்ரீ பிரசாந்தன்

திரு. ஸ்ரீதர் சிங் - பூபாலசிங்கம் புத்தகசாலை

திரு. குகமூர்த்தி - கொழும்பு தமிழ்ச் சங்கம்

திரு. குமரகுரு - ஆத்மயோக ஞான சபா

திரு பாலசுப்பிரமணியம் - கிரியாபாபாஜி ஆரண்ய நம்பிக்கை நிதியம்

திரு. வியாசா கல்யாண சுந்தரம் - அஷ்டாங்க யோகமந்திர்

பஞ்சபுராணம் ஓதல்

திருமதி. அபிராமி விமலாதித்தன்

நிகழ்ச்சி தொகுப்பு 

செல்வி. நளினா செல்வநாதன்


Monday, February 24, 2020

தலைப்பு இல்லை

என் படைப்பு என்னைப் படைத்த அம்மாவின் கையில்....

{என் படைப்பு என்பது மோனைக்காக மட்டும்... }


தலைப்பு இல்லை

நேற்றைய சிவயோக ஞானத்திறவுகோல் நிகழ்வு நிழற்படங்கள் இன்னும் சில மணி நேரங்களில் பகிர்கிறோம்! 
பல அன்பர்கள் நேற்றிலிருந்து எதுவும் பகிரவில்லை என்று கேட்டிருந்தார்கள்! 
தொடர்பயணம்... அடுத்து வேலைகளைத் திட்டமிட வேண்டும்... களைப்பு.. ஓய்வு இவைதான் காரணம்!

Thursday, February 20, 2020

தலைப்பு இல்லை

தமிழ்நாட்டு அன்பர்கள் அனேகரின் கைகளில் புத்தகம் கிடைத்து விட்டது என்ற மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்! 

சிலர் கிடைக்கவில்லை என்று செய்தி அனுப்பியிருக்கிறார்கள். அனேகமாக நாளை கிடைக்கும் என பதிப்பகத்தார் கூறியுள்ளார்கள். 

16ம் திகதிக்கு முன்னராக முன்பதிவு செய்தவர்களுக்கு ஒரு தொகுதியாகவும், நேற்று மாலைக்குள் பதிவு செய்தவர்களுக்கு இன்றும் அனுப்பியுள்ளார்கள். நீங்கள் இருக்கும் பகுதி பிரதான நகரமாக இல்லாவிட்டால் சற்றுத்தாமதமாக கிடைக்கும் என்று கூறியுள்ளார்கள். 

அப்படிக் கிடைக்காவிட்டால் இந்த மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்: svvspublications@gmail.com

உடனடியாக பொறுப்பாகப் பதிலளிப்பார்கள்! 

கிடைத்த அனைவரும் சிவபுராணத்தின் யோக விளக்கத்துடன் சிவராத்ரியைக் கொண்டாடுங்கள்!


Wednesday, February 19, 2020

தலைப்பு இல்லை

வீரசிவாஜியாருடன் மும்பை ரயில் நிலையத்தில் ஒரு செல்பி! 

இன்று சிவாஜி மகராஜாவின் பிறந்த நாள், 

சிவாஜி கணேசனாரினது அல்ல! ஏனென்றால் பலகாலம் நான் சிவாஜி கணேசனையே சிவாஜி மகாராஜா என்று நினைத்திருந்தேன்! 

சிறுவயதில் கோகுலம் இதழில் சிவாஜி மகாராஜாவின் கதைகள் வரும். அதில் மூன்று கதைகள் என்று ஞாபகத்தில் இருப்பது! 

ஒன்று, அவர் தனது குரு சமர்த்த ராமதாஸிடம் கருவில் உபதேசம் பெற்றார் என்பது, தாயின் கருவிலேயே வீரம் ஊட்டி வளர்க்கப்பட்டார் என்பது! 

இரண்டாவது, சிவாஜி 16 வயதில் இருபது முப்பது பேருடன் தனியாக வாள் சண்டை போட்டு வென்றார் என்பது. இந்தக்கதையை வாசிக்கும் போது நான் சிவாஜி என்பது சிவாஜி கணேசன்தான் என்று பலகாலமாக நம்பிக்கொண்டிருந்தேன். 

மூன்றாவது, சிவாஜி நேரடியாக பெரிய கோட்டையைத் தாக்கித் தோல்வி அடைந்து கிராமப்புறமாக ஒரு மூதாட்டியிடம் உணவிற்காக கஞ்சி அருந்தும் போது கஞ்சியின் நடுப்பாகத்தை உடனடியாக அருந்தி சூட்டினால் வாயை சுட்டுக்கொண்டார். இதைப்பார்த்த அந்த மூதாட்டி அவரை சிவாஜியின் படைவீரர் என்ற நினைப்பில் நீயும் உன் மன்னன் போல் அவசரம் பிடித்தவனாக இருக்கிறாயே என்று கடிந்துகொள்ள, மன்னன் ஆச்சரியத்துடன் ஏன் பாட்டி அப்படிக்கூறுகிறீர்கள் என்று கேட்டான். 

அதற்கு அந்த மூதாட்டி கோப்பையின் கரையில் ஆறிய கஞ்சி இருக்கும். முதலில் அங்கிருந்து அருந்தத்தொடங்கினால் சற்று நேரத்தில் நடுவில் உள்ள கஞ்சி ஆறிவிடும், அதுபோல் எதிரிகளின் அரண்களை மெதுவாக உடைத்து எதிரி வலிமை குறைந்த பின்னர் மத்தியைத் தாக்க வேண்டும், இது தெரியாததால்தான் உனது மன்னன் தோல்வியைத் தழுவினான் என்றாள். 

இதைகேட்ட சிவாஜி தனது போர் உத்திகளை மாற்றினார் என்பதுதான் அந்தக்கதை! 

இந்த நூல் வீரசிவாஜியின் வரலாறு கூறுகிறது! மும்பையில் வாங்கினேன்!


தலைப்பு இல்லை

தமிழிற்கு தொண்டு செய்தவர்களில், தமிழிற்கு இலக்கிய வரலாறு உண்டு என்பதையும், ஆயிரம் ஆண்டு பண்பாடு இருந்தது என்பதையும் உலகிற்கு கொண்டுவந்த தமிழ்த் தாத்தா மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே சாமிநாதைய்யரின் பிறந்த நாள்!

சாமிநாதைய்யரிற்கு மகாமகோபாத்தியாய பட்டத்திற்கு பாரதியார் கூறிய வாழ்த்துப் பாடல்;

பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும்

காலமெல்லாம் புலவோர் வாயில்

துதியறிவாய்! அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்!

இறப்பின்றித் துலங்கு வாயே!

பதிப்பில் மூல நூற்களின் பாடபேதங்கள், பழைய உரையை விளங்கக் குறிப்புரை, அரும்பத அகராதி, நூலில் எடுத்துக்காட்டப்பட்ட நூல்களின் முதற்குறிப்பகராதி, பாடினோர் வரலாறு என விரிவான தெளிவான பதிப்புகள் அவருடைய பதிப்பு நூல்கள்! 

அவரின் பதிப்புகளில் எனது சேகரிப்பிலிருந்த பதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும்!


Tuesday, February 18, 2020

தலைப்பு இல்லை

சிங்கையிலும் சிவயோக ஞானத்திறவுகோல் இன்னும் சில நாட்களில்!

சிங்கபூர் - மலேசியாவில் உள்ள யோக சாதகர்களுக்கு சிவயோக ஞானத்திறவுகோல் நூல் கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளோம்.

சிங்கப்பூர் - மலேசியாவில் வசிப்பவர்கள் உங்கள் பிரதிகளுக்கு வாட்ஸப் செய்யுங்கள்: +6590023895

- சித்த வித்யா விஞ்ஞான பிரசுரம் -


Sunday, February 16, 2020

தலைப்பு இல்லை

நூலிற்கு சிறப்புப்பாயிரம் இருத்தல் வேண்டும் என்பது தமிழ் இலக்கிய மரபு!

இதை எழுதக்கூடியவர்கள் என்ற இலக்கணத்தில் நூலாசிரியரின் ஆசிரியர், நூலாசிரியருடன் உடன் படித்தவர்கள், நூலாசிரியரின் மாணவர்கள் என்ற மூவர் வருகிறார்கள்! 

சிவயோக ஞானத்திறவுகோல் நூலிற்கு முதலாவது சிறப்புப் பாயிரம் என்று முற்காலத்தமிழில் கூறப்படுவதும், தற்கால வழக்கில் Facebook review இனை நூலை முழுமையாகப் படித்து என்னுடன் படித்த சூழலியல் விஞ்ஞான முதுமாணிக் கற்கை வகுப்பு நண்பர் திரு சாந்தரூபன் வழங்கியுள்ளார். 

திரு. சாந்தரூபன் ஒரு சிரேஷ்ட நூலகர், யோகர் சுவாமியின் சிவதொண்டன் இதழை வெளியிடுவதில் பக்க பலமாக இருக்கும் ஒரு தொண்டர்! சைவப்பற்றாளனும் திருவாசகம், தேவார இலக்கியத்தில் ஆழ்ந்த வாசிப்பும் கொண்டவர்! 

பத்து வருடங்களுக்கு முன்னர் சிவபுராணத்தின் யோக விளக்கம் பற்றி அவருடன் நான் உரையாடியிருக்கிறேன் என்பது எனக்குப் புதுமையான செய்தி! 

அவரது இந்த உரையினை மிக்க மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன்! 

நன்றி சாந்தன் அண்ணா!


தலைப்பு இல்லை

இன்றைய ஞாயிறு தினக்குரலிலும், வீரகேசரி வார வெளியீட்டிலும் தம்பி ஆதித்தன், நூல் வெளியீட்டிற்கு அறிமுகச் செய்தி எழுதியுள்ளார்!

Saturday, February 15, 2020

தலைப்பு இல்லை

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (23 Feb 2020) அன்று கொழும்பில் சிவயோக ஞானத்திறவுகோல் அறிமுக விழா நடைபெறவுள்ளது. 

விழாவின் நாயகன் மாணிக்கவாசகப் பெருமானார்! அவரது சிவபுராணத்திற்கு சிற்றறிவுக்கு எட்டிய, குருவின் கருணையால் வாய்த்த யோக அனுபவ உரை சிவயோக ஞானத்திறவுகோலாக வெளிவருகிறது!

காண்பவர்கள், ஆர்வமுள்ள அனைவரும் இந்த அழைப்பை தனிப்பட்ட அழைப்பாக ஏற்று வருகைதர வேண்டுகிறேன். 

எனது பணிச்சுமையும், கொழும்பில் தற்போது வசிப்பதில்லை என்பதாலும் நேரில் வந்து எவரையும் அழைக்க முடியாத சந்தர்ப்பம்! 

மேலும் இது எனது நூல் என்ற கொண்டாட்டம் எதுவும் எனக்கு இல்லை! நான் "கருவி" மட்டுமே என்ற எண்ணமே உள்ளது! நான் கருவியாக இருந்து எழுத இன்னும் "பல கருவிகள்" சேர்ந்து நூலாக வெளிக்கொண்டர, "சில கருவிகள்" சேர்ந்து இந்த விழாவை ஏற்பாடு செய்திருக்கின்றன! 

ஆகவே உங்கள் வருகை இந்த நூலின் கருவிகளாக இருக்கும் அனைவரையும் மகிழ்விக்கும்!

ஆகவே அனைவரையும் அன்புடன் இருகரம் கூப்பி வரவேற்கிறோம்!

ஸ்ரீ ஸக்தி சுமனன்


தலைப்பு இல்லை

நூல் ஒன்றைப் படைத்தல் என்பது நூலாசிரியனுக்கு மகள் பிறந்தாள் என்ற சந்தோஷம்! பிறந்த மகள் வளர்ந்து பல நன்மக்களைப் படைப்பாள்! 

நன்னூல் பலரின் மனதில் புகுந்து பலரின் அறிவை உருமாற்றி புதுமனிதர்களைப் படைக்கும் தாயாவாள்!

மாணிக்கவாசகரின் சிவபுராணத்தின் யோகவிளக்கமான சிவயோக ஞானத்திறவுகோல் தாயாக இருந்து பல யோகசாதகர்களைப் படைப்பாள் என்ற சந்தோஷம்! 

நூல் என்பது பஞ்சின் பல இழைகளை நூற்று ஓரிழைப்படுத்தல், அதுபோல் பரவி விரிந்த கருத்துக்களை அடுக்கி தெளிவுற உரைக்கும் அறிவுக்கோர்வையும் நூலாகும்.


காதலர் தினம் சிறப்பு பதிவு - காதலர் தினத்தில் தமிழரின் அகத்திணை அறிவோம்!

இன்று காதலர் தினம்! காதலிற்கு தினம் வகுத்து அதை உலகறியச் செய்தல் வேண்டும் என்கிறது மேற்கு நாகரீகம். இப்படி பிரகடனப்படுத்தப்பட்ட மற்றோருக்கு தெரியப்படுத்தப்பட்ட காதலை விட தனது அகத்தினை வளப்படுத்தும் நுண் உணர்வுகளை பெற்று இன்பம் துய்க்கும் முறையினை வகுத்தவன் தமிழன், 

ஒரு ஆணும் பெண்ணும் காதலால் இணைந்து தமக்குள்ளே இன்பம் துய்த்து வாழ்தல் அகத்திணை என தமிழர் வாழ்வியலில் இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது. 

அகம் என்பது உள்ளம், திணை என்பது ஒழுக்கம். இந்த இலக்கியங்கள் குறித்த நிலையில் உள்ள ஆணிற்கும் பெண்ணிற்கும் தாம் அக ஒழுக்கத்தில் எந்த நிலையில் இருக்கிறோம் என்று அறிந்து தம்மை மேம்படுத்த உதவும். 

தொல்காப்பியம் அகத்திணையை ஏழாக வகுத்து இலக்கணம் கூறுகிறது; 

1. கைக்கிளை : இது ஒருதலைக்காதல், உதாரணம் காமமும் காதலும் மேலிட்ட ஆண் அதை ஏற்க பக்குவம் இல்லாத பெண்ணை தொல்லைப்படுத்தல். சிறுமையான உறவு அல்லது பெருமையில்லா உறவு என்பது கைக்கிளையின் பொருள். 

2. முல்லைத் திணை : தன்னை விட்டு பிரிந்த தலைவனைப்பற்றி தவறாக எண்ணாமல், வருந்தாமல் தனது தினசரி கடமைகளை செய்தவண்ணம் தலைவன் வரவிற்காய் காத்திருக்கும் நிலை. 

3. குறிஞ்சித் திணை : தலைவன் தலைவியை அவளது வீட்டார் அறியாமல் காதல் செய்யும் நிலை, இங்கு இருவரும் மனமொத்த நிலை வீட்டாரிற்கு தெரியாது. 

4. பாலைத் திணை : போரிலும், செல்வம் சேர்க்கும் பணியிலும் ஈடுபட்டிருந்த தலைவன் தலைவியை பிரிதலும், அவள் குடும்பம் அறியாமல் அழைத்துச் சென்று வாழலும் பாலைத் திணை. 

5. மருதத் திணை : காமக் கிழத்தி, காதற் பரத்தை, சேரிப் பரத்தை என இவர்களைச் சந்திக்க வேண்டித் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்வான். ‘புறத்தொழுக்கம்’ எனப்படும் இத்தீய ஒழுக்கத்தில் ஈடுபட்டுத் திரும்பி வரும் தலைவனிடம் தலைவி பொய்க் கோபம் கொள்வாள். இதுவே ஊடல் எனப்படும். இல்லம் வர விரும்பும் தலைவனுக்காகத் தூது வரும் பாணன் முதலியோரிடமும் சினம் கொண்டு பேசுவாள்.

6. நெய்தல் திணை : பாலைத் திணைக்குக் கூறியதுபோல ஏதேனும் ஒரு காரணத்தின் பொருட்டுத் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்வான். அவன் திரும்பி வருவதாகக் கூறிச்சென்ற காலம் வந்தவுடனோ வருவதற்கு முன்போ தலைவி, அக்காலம் வந்ததாகவும் தலைவன் வரவில்லை என்று வருந்துவது இரங்கல் ஆகும்.

7. பெருந்திணை : காதலிக்கும் ஆணைவிடப் பெண் மிகவும் மூத்தவளாகவோ, பெண்ணைவிட ஆண் மிகவும் மூத்தவனாகவோ இருப்பின் அது பெருந்திணை என்று பெயர் பெறும். இது பொருந்தாக் காமம்.

இன்றைய உளவியலை மிஞ்சும் அறிவு தமிழனின் அகத்திணை; ஒருவன் அல்லது ஒருத்தி தான் காதல் – காம வாழ்க்கையில் எந்த நிலையில் இருக்கிறோம் என தம்மை அகத்தாய்வு செய்து சரியான ஒழுக்க நெறியில் ஈடுபட அகத்திணை உதவுகிறது. 

ஆதலால் தமிழ் கற்று அகத்திணையறிந்து காதல் செய்வீர்!


Thursday, February 13, 2020

தலைப்பு இல்லை

நெருங்கிய சாதக அன்பர் ஒருவர் சிவயோக ஞானத்திறவுகோலை வாசித்து விட்டு இந்த நூல்கள் இரண்டும் தனது யோக சாதனையிற்கான இரண்டு கண்கள் என்று கூறினார்! 

எழுதும் எழுத்தும், செய்யும் செயலும் மற்றவர்களுக்கு பயன் தருகிறது, அவர்கள் மனதை, ஆன்மாவை உயர்த்துகிறது என்பதை விட வேறு என்ன சந்தோஷம் தேவை! 


தலைப்பு இல்லை

நானும் இரு நூல்களும்; 

அகத்தியர் யோக ஞானத்திறவுகோல்!

சிவயோக ஞானத்திறவுகோல்!


Wednesday, February 12, 2020

தலைப்பு இல்லை

அவனருளால் அவன் தாள் வணங்கி!!!

அச்சிடப்பட்ட பொதியிலிருந்து எடுக்கப்பட்ட முதல் புத்தகங்கள் எம்பெருமானாருக்கு வில்வத்துடன் சாத்தப்பட்டது!


தலைப்பு இல்லை

இன்றைய கல்வி முறையில் "பட்டங்கள்" மீதான மோகம் அறிவு பெறுதலைத் தடுக்கிறது. கல்வி என்பது சிந்திக்கும் முறையை எம்மில் உருவாக்கும் ஒரு பொறிமுறையாக இருக்க வேண்டும். பட்டம் வாங்குவதால் அறிவு சிறந்து விடும் என்று நம்பிக்கை வளர்க்கப்படுகிறது. 

சிந்தித்துத் தெளிந்தால் மனதில் உறுதி பிறக்கும், மனதில் உறுதி பிறந்தால் செயல் நடக்கும், செயல் ஒன்றே எமக்கும், மற்றவர்களுக்கும் பிரயோசனமானது! இப்படி தனக்கும் மற்றவர்களுக்கும் பயன் தரும் செயல் புரியத் தூண்டாத கல்வியால் என்ன பயன்? 

இது அடிப்படையில் அகம் என்ற ஒன்று இருக்கிறது, அகத்தை மேம்படுத்துவது எப்படி என்ற சிந்தனை கல்வியில் இல்லாமையினால் நடைபெறுகிறது என்று கருதுகிறேன். 

கற்றலை சந்தோஷமான, இன்பமான செயலாகக் கருதாமல் மூளையில் வலியை உணரும் பகுதிக்கு தெறிவினையை அனுப்பும் ஒரு செயலாக வடிவமைத்திருக்கிறோம். 

பலருக்கு பட்டம் என்றால் பறப்பது என்றே மனதில் எண்ணம் தோன்றுகிறது, பட்டம் என்பது கல்வியினால் மனம் பட்டை தீட்டப்பட்டது என்ற பொருளிலேயே உணரப்பட வேண்டும். 

பட்டம் பெறுவது என்பது பறப்பது என்று நினைப்பு இருப்பதால் மனதிற்குள் அகங்காரமும், ஆணவமும், வக்கிரமும் வளர்கிறது. பட்டம் பெறுவது எமது மனதை, அறிவைப் பட்டை தீட்ட, மற்றவர்களுக்கு எமது அறிவால் உதவி செய்ய, எமக்கும் மற்றவர்களுக்கும் பலன் தரும் நபர்களாக நாம் இருக்க என்ற எண்ணம் வளராமல், பட்டம் பெறுவது எல்லாம் தெரிந்தவர்கள் என்ற மாய வலையைப் பின்னிக்கொண்டு வாழும் எண்ணத்தை உருவாக்குகிறது.


Tuesday, February 11, 2020

தலைப்பு இல்லை

யோகர் சுவாமிகளின் வாக்கு! சிவதொண்டன் நிலையத்தின் வாயிலில்!

தலைப்பு இல்லை

சில நிகழ்வுகள் ஆச்சரியமானவை! பேஸ்புக் இருப்பதால் இவற்றை அறியக்கூடியதாக இருக்கிறது. 

சரியாக மூன்று வருடத்திற்கு முன்னர் இதே தினத்தில் சிவயோக சுவாமிகள் திருவடி நிலையத்திற்குச் சென்று எனது முதல் நூலான அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நூலை சமர்ப்பித்து வந்திருக்கிறேன்!

சரியாக மூன்று வருடங்கள் கழித்து, அச்சிட்ட சிவயோக ஞானத்திறவுகோல் நூல் கைகளுக்கு வரும் போது, இரண்டு நாட்களுக்கு முன்னர் திருமணம் ஒன்றிற்கு செல்ல வேண்டிய சந்தர்ப்பத்தில் மனம் உந்த, திருவடி நிலையம் செல்வோம் என்று செல்கிறேன்! 

இது எதேச்சையானதா? அல்லது திருவருளின் திட்டமா? என்பது பற்றி எனக்கு எந்த வியப்போ கவலையோ இல்லை! ஆனால் இந்த நுண்மையான ஒழுங்கினை அறியும்போது மிக உணர்ச்சியான மகிழ்வான விஷயம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை! 

யோகத்தில் சிறந்த யோகரின் திருவடி வழி நடாத்துகிறது!


Sunday, February 09, 2020

தலைப்பு இல்லை



இன்று காலை யாழ்ப்பாணம் யோகர் சுவாமிகளில் திருவடி நிலையத்திற்கு செல்லும் வாய்ப்பு எதிர்பாராமல் கிடைத்தது.

படத்திலுள்ள விறாந்தையில் யோகர் சுவாமிகளின் சீடரான செல்லத்துரை சுவாமிகள் நிலத்தில் மாலை நேரத்தில் வீராசனம் போட்டு அமர்ந்திருப்பார்.
நான்கு மாத காலம் மாலை வேளையில் சுவாமிகளுடன் இந்த இடத்திலிருந்து அமர்ந்து உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது.
செல்லத்துரை சுவாமிகள் குண்டலினி யோகம் பயிற்சித்த ஒரு யோகியாவார். யோகர் சுவாமிகள் ஒரு அறிஞர் கூட்டத்தைக் கொண்டு Serpent Power என்ற ஆர்தர் ஆவலோனின் நூலை மொழிபெயர்த்து பின்னர் சுவாமிகளை மெய்ப்பு பார்க்கச் சொல்லி சிவதொண்டனில் பதிப்பித்தார்!

Saturday, February 08, 2020

தலைப்பு இல்லை

மகாசிவராத்ரி அன்று வெளியாக இருக்கும் மாணிக்க வாசகரின் சிவபுராணத்தின் மீதான யோக விளக்க உரை!

அச்சகத்திலிருந்து முடிவுற்ற நூல்!

First look....

ஆர்வமுள்ள தமிழ் நாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு சிவராத்ரி தினத்தன்று கிடைக்கும் படி சில அன்பர்கள் ஏற்பாடு செய்துள்ளார்கள்.

இந்த இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம்

https://www.instamojo.com/.../pre-order-siva-yoga-gnana.../

All reactions:
Krisha Arivalagan, Nishānthan Ganeshan and 157 others

Friday, February 07, 2020

தலைப்பு இல்லை

இந்தியாவிற்குள் மகாசிவராத்ரி அன்று நூலைப் பெற்றுக்கொள்வதற்கு இந்த இணைப்பில் உங்கள் முன்பதிவுகளைச் செய்துகொள்ளலாம்;

தலைப்பு இல்லை

இந்தியாவிற்குள் மகாசிவராத்ரி அன்று நூலைப் பெற்றுக்கொள்வதற்கு இந்த இணைப்பில் உங்கள் முன்பதிவுகளைச் செய்துகொள்ளலாம்;

Sunday, February 02, 2020

நோயும் குழப்பக்காரர்களும்

நோயும் குழப்பக்காரர்களும்

**************************************
உடல் என்பது பல ட்ரில்லியன் கலங்களின் ஒன்றிணைந்த கட்டமைப்பு!
இந்தப் பல ட்ரில்லியன் கலங்களின் ஒத்திசைந்த செயற்பாடு ஆரோக்கியம்! எதிர் எதிர் கலக்கமும், குழப்பமும் நோய் எனப்படும்!
பல ட்ரில்லியன் கலங்களையும் ஒன்றிணைத்து, ஒத்திசைந்து செயல்புரிய ஏதோ ஒரு அறிவுசக்தி செயற்பட்டுக்கொண்டு இருக்கிறது. அதை பேரறிவு எனலாம், இறைவன் எனலாம், இயற்கை எனலாம்!
உடலைப்போல் ஒரு செயலை எவரும் தனித்துச் செய்ய முடியாது. பலர் ஒன்றிணைந்தால் தான் ஒரு செயல் உருப்பெற ஆரம்பிக்கும். பலர் ஒத்திசைந்து வேலை செய்தால் தான் அந்தச் செயல் சிறக்க முடியும்!
ஆனால் குழுவாக இயங்கும் போது ஒவ்வொருவரின் மன நிலையில் இருக்கும் குழப்பங்கள், சந்தேகங்கள், எதிர்ப்பு உணர்வுகள் வெளிப்பட்டு ஒன்றிணைவையும், ஒத்திசைவையும் குழப்பும்!
இந்தக்குழப்பங்கள் சிலவேளை அந்தத் தொகுதி இருக்கும் நிலையை விட மேம்பட்ட நிலைக்குச் செல்ல உதவியாக புதிய திசையைத் தரும்! அப்படி நகரும் போது அந்தக் குழப்பத்திற்கு காரணமாக இருந்தவர்கள் அந்தக்குழப்பத்தின் பயனாக அந்தத் தொகுதியை விட்டு ஒதுக்கப்பட்டிருப்பார்கள்.
இப்படி குழப்பக்காரர்கள் உரமாகி அந்தத்தொகுதி மேம்பட்ட நிலை அடைகிறது. உடலின் நோயும் அப்படித்தான், நோயால் பாதிக்கப்பட்டவன் ஆரோக்கியத்திற்கு மீளும் போது அதிக நோயெதிர்ப்பு சக்தி பெற்றவனாக உருமாறியிருப்பான்.

தலைப்பு இல்லை

நீண்ட நாள் கிடப்பில் கிடந்த வேலை...
எல்லாம் வல்ல திருவருளால் முடிந்தது...
நல்லுள்ளங்கள் பலர் தோள்கொடுத்தனர்!
சிவராத்திரியிற்கு அனைவர் கைகளுக்கும் கிட்டும்...

************************************************
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...