குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, November 24, 2019

தலைப்பு இல்லை

பலகாலமாக ஓய்விலிருந்த வைத்திய நூல்கள் படிக்கும் படலம் நேற்றிலிருந்து உத்வேகம் கண்டிருக்கிறது. அகத்தியர் வைத்திய காவியம் 1500 படிக்க ஆரம்பித்திருக்கிறோம். 
படிப்பது தனியே படிக்காமல் சேர்ந்து படித்தால் அறிவு வளரும்! அதற்கு நல்ல களமாக இந்த முக நூல் இருக்கிறது. 
ஆகவே தொடர்ந்து உரையாடுவோம்.
As Guided by Agathiya Maharishi, 
The Ethical Physician must learn, understand and mastered the Vaidhya Sastra as though by Siddhas and every month he must allocate time for his learning to improve his medical knowledge.
-Agathiyar Vaidya Kaviyam 2000 -

அகத்தியர் வைத்திய காவியம் - 1500 அறிமுகம்

இந்த நூல் 1500 பாடல் கொண்ட வைத்திய முறைகளை கூறும் நூலாகும்.

காப்புச் செய்யுளில் இரண்டு லட்சம் பாடல்களில் இருந்த வைத்திய காவியத்தை படிக்க இலகுவாகச் சுருக்கி ஆயிரத்து ஐந்நூறு பாடல்களாக பாடி வைத்ததாக கூறுகிறார். நூலின் அமைப்பில் பல்வேறு வாகடச் சுவடிகளைத் தொகுத்து பார்த்து, உலகில் ஏற்படும் நோய்கள் அனைத்திற்கும் நல் மருந்து சொல்வதாக புலத்தியர் என்ற சீடனுக்கு கூறுவதாக நூல் ஆரம்பமாகிறது. 

இந்த அறிமுகத்தில் முதல் ஐந்து பாடல்களின் அமைப்பு பற்றி ஓர் அறிமுகம் பார்ப்போம். இது வைத்தியர்களுக்கு சில அடிப்படைகளைத் தெளிவிக்கும். 

முதல் அடிப்படை நாடிகளின் தோற்றமும் வகையினையும் அது உடலில் இருக்கும் நிலை பற்றியும் அறிதல், மொத்த நாடி எழுபத்தியீராயிரம், அவற்றில் தெரியக் கூடியது பத்து, அவற்றில் வாத, பித்த கபம் படர்வதை தெளிவாக அறியக் கூடியது மூன்று அழகாக system ஆகச் சொல்லுகிறார். 

அடுத்த அடிப்படை இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்றிலும் எப்படி வாத, பித்த, கபம் சேர்கிறது என்பதும் வாத பித்த கபம் ஸ்தூல உடலில் எங்கு இருக்கிறது என்பது பற்றியும் விபரிக்கிறார். 

வாதம் மலத்திலும், சிறு நீரில் பித்தமும், விந்தில் ஐயமும் சேரும் என்று குறிப்பிடுகிறார். 

அடுத்து இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்று நாடிகளும் உடலில் எங்கு தோற்றம் பெற்று எங்கு முடிகிறது என்று கூறுகிறார். 

ஆக வைத்தியன் அறிய 

வேண்டிய முதல் அடிப்படை

1. நாடிகள் எத்தனை?

2. அறியக் கூடிய நாடிகள் எவை?

3. அவை எப்படி வாத பித்த கபத்துடன் தொடர்பு படுகிறது?

4. வாத பித்த கபம் ஸ்தூல உடலில் எதில் உறைகிறது? 

5.இடகலை, பிங்கலை, சுழுமுனை நாடிகள் உடலில் எங்கிருந்து எங்குவரை பரவுகிறது?


தலைப்பு இல்லை

இன்று Dr. Hegde இன் உரைகளைக் கேட்கும் போது அவர் சொல்லுவதையெல்லாம் அகத்திய மகரிஷி தனது வைத்திய காவிய 2000 இல் வைத்தியன் இலக்கணத்தில் கூறியுள்ளார். இது பற்றி நான் எழுதிய பாடலின் உரை வருமாறு;
அகத்தியர் வைத்திய காவியப்படி 
வைத்தியன் இலக்கணம்
***********************************
பார்தனில் வேதந்தன்னை பார்த்ததில் பெரியோன் சொன்ன
சீர்பெரு வாகடத்தை செய்பவர் குணங்கள் கேளாய்
நேருரை மாறானாகில் நினைவுதன் மனைவியன்றி
யாரையு முடன் பிறப்பா மென்றவை யவன் வல்லானே
பொய்யது பேசானாகப் புகழறிவுடையோனாக
மெய்யது சொல்வோனாக வினங்குகுரு மறவோனாக
தொய்யவே தாட்சியுண்டாய் சொல்மன தீர்க்கமுண்டாய்
நைவினைப் பாவமின்றி நன்மையில் நடப்போன்றானே (௧௩)
நீதியாய் வாகடத்தை நெறியுடன் திங்கள் தோறும்
ஓதிய பொருள் கடன்னை யுசாவியே யிருப்பானாகில்
தீதிலா னவைக ளுள்ளான் செகமதி லிருக்க மட்டு
மேதினி யதனில்காலன் விதியல்லால் வியாதியுண்டோ
சினவெறி யேறு போலத் திடமுள்ளான் மனதுமுள்ளான்
கனமென வுயிரைக் காக்குங் கருணையான் கதித்தசீரில்
இனமுள்ளா னேத்தமுள்ளா னேற்கையால் தோற்ற முள்ளான்
மனமதில் தயவுள்ளான் வைத்தியனாகு மென்றே (௧௪)
பொருள்: அகத்தியர் வைத்திய காவியத்தில் வைத்தியன் ஒருவன் எப்படி இருக்க வேண்டும் என்ற இலட்சணம் கூறப்படுகிறது.
தான் சொன்ன சொல் மாறக் கூடாது.
தன் மனைவி தவிர்ந்த வேறு பெண்களை தன் உடன் பிறந்தவளாக கருதவேண்டும்.
பொய் பேசக்கூடாது
யாவரும் புகழக்கூடிய அறிவினை பெற்றிருத்தல் வேண்டும்
உண்மை பேசுவோனாக இருத்தல் வேண்டும்
குருவை மறவாதவனாக இருத்தல் வேண்டும்
மனதில் இரக்க குணமும் தாட்சண்யமும் நிறைந்தவனாக இருத்தல் வேண்டும்
மனதில் தீர்க்கமான தெளிவுடையவனாய், 
செய்யும் செயல்களில் பாவம் செய்யாதவனாக நன்மையினை நாடியே தனது செயல்களை செய்வோனாக
வைத்திய சாத்திரத்தை நன்றாக கற்று மாதம் தோறும் அதனை மீண்டும் தனது அறிவினை செப்பனிட்டவனான, அதில் கூறிய விடயங்களின் பொருளை தெளிவாக அறிந்தவனாக
தீமைகளை அகற்றியவனாக இருக்கும் வைத்தியனுக்கு காலனால் விதிக்கப்பட்ட ஆயுள் காலம் வரை நிம்மதியாக வாழ்ந்து உயிர் நீக்குவானே அன்றி வியாதிகளால் உயிர் பிரியாது.
மனதிலும் உடலிலும் சினம் கொண்ட சிங்கம்போல் வலிமையுடன் திடசித்தமாக இருப்பவனாக
நோயுற்ற உயிரை கருணையுடன் காப்பவனாக
நல்லொழுக்கம் உடைய குடும்பத்தில் பிறந்தவனாக
நல்ல வசீகரிக்கும் தோற்றம் உள்ளவனாக
மனதில் தயை உடையவனாக ஒரு வைத்தியன் இருக்க வேண்டும்.

தலைப்பு இல்லை

இந்த நூல் Dr. BM Hegde இன் உரையில் கேள்விப்பட்டது.

மருத்துவர்களால் குணமாக்க முடியாது என்றும் சில மாதங்களில் இறந்து போகப் போகிறார் என்றும் கூறப்பட்ட ஒருவர்    தனது மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டு மீண்டு வந்ததைப் பற்றி அழகாக எழுதியுள்ளார். 

இப்படியான சில சந்தர்ப்பங்களை நானும் நேரில் பார்த்திருக்கிறேன். 

உடல் முழுவதும் குணப்படுத்தபட முடியாத புண்கள் உடைய ஒரு பெண் ஒரு அறையில் தனியே ம்ருத்யுஞ்ஜெய மந்திரத்தை மாத்திரம் கேட்டுக் கொண்டு இரண்டு மாதங்களில் பரிபூரண குணமடைந்திருக்கிறார். 

எமக்கு உள்ளே இருக்கும் மருத்துவரை எப்படி சரியாக பயன்படுத்துவது என்பது கீழைத்தேய (சித்த, ஆயுர், சீன) தான் சொல்லித்தர முடியும்.


தலைப்பு இல்லை

The true physician - scientist of the era! worth to listen! 

Very good speech for illogical scientists and whom belong to Science religion.


Saturday, November 23, 2019

எண்வகை குணங்களை உருமாற்றும் தாய்சக்திகள்


நாம் எட்டுவகையான உணர்ச்சிகளால் (emotions) ஆக்கப்பட்டிருக்கிறோம். இந்த உணர்ச்சிகள் அடிப்படையில் மனிதனின் அனுபவத்திற்காக இருக்கிறது. இந்த உணர்ச்சிகளைச் சரியாகப் பயன்படுத்தும் அறிவினைத் தரும் சக்திகளை எண்வகைத் தாய்சக்திகள் - அஷ்ட மாத்ருகா என்று கூறுவோம்.

இது காயத்ரி சாதனையிலும், ஸ்ரீ வித்யா சாதனையிலும் இருக்கும் ஒரு நுட்பம்.
சாதகர்கள் எவராவது தமது உணர்ச்சிகள் ஏற்படுத்தும் தடைகளால் சாதனையில் முன்னேறிச் செல்ல முடியாமல் இருந்தால் இந்தத் தாய் சக்திகளின் உதவியுடன் துரித முன்னேற்றம் பெறலாம்.

1)காமம்/ஆசை - எதையாவது ஆசைப்பட்டுக்கொண்டிருப்போம் ஆனால் நிறைவேற்றமுடியாதபடி இருப்போம். இப்படி எமது மனதிலுள்ள ஆசைகளை நிறைவேற்றும் அறிவினைத் தருபவள் பிராம்ஹி என்ற தாய்சக்தி

2)கோபம் - ஆசை அல்லது நமது எண்ணங்கள் நிறைவேறாத போது ஏற்படும் நிலை. கோபத்தினை உருமாற்றி நிதானத்தினைத் தரும் தாய்சக்தி மாகேஷ்வரீ.

3) லோபம்/பேராசை - தமது தகுதிக்கு வலிமைக்கு மேல் உள்ள விஷயங்களை அடையவேண்டும் என்ற அதி ஆசை, ஆசையிருக்கும் ஆனால் தகுதி இல்லை, ஆனால் அறிவின் சொல்லைக் கேட்காது. ஆகவே அவசரமாகச் செயல்புரிந்து துன்பத்தில் மாட்டிக்கொள்வோம். பேராசையை உருமாற்றி தியாகத்தினைத் தரும் தாய்சக்தி கௌமாரி.

4) மோஹம் - ஒன்றைப் போலியாக எண்ணி மயங்கும் நிலை. பலரும் எதைப்பார்த்தாலும் அதை நம்பி மயங்கி அதை அடைய எண்ணி முயற்சி செய்து துன்பத்தில் விழுந்துவிடுவார்கள். இப்படி மோகத்தை அன்பாக மாற்றும் தாய்சக்தி வைஷ்ணவி.

5) மதம் - தன்னைப்பற்றி அதிகமாகச் சிறப்பாக எண்ணும் தற்புகழ்ச்சி: ஒருவன் தன்னைப் பற்றி அதிகமாகச் சிந்திக்குபோது சிறப்பாக மற்றவர்களுடன் இணைந்து செயற்பட முடியாது. யானைக்கூட்டத்தில் மதம் பிடித்த யானை தனது குழுவுடன் இணைந்து செயற்படமுடியாமல் கூட்டத்துடன் சண்டையிட்டு தன்னைப் கூட்டத்திலிருந்து பிரிந்து அழிவு நடவடிக்கையில் ஈடுபடும். இதைப்போல் மதம் கொண்ட மனிதன் தன்னைப்பற்றி அதிகமாக எண்ணி சுய நலத்துடன் செயல்புரிந்து துன்பம் ஏற்படுத்திக்கொள்வான். இந்த மதகுணமாகிய தற்புகழ்ச்சியை உருமாற்றி அடக்கத்தை அளிக்கும் தாய்சக்தி வாராஹி

6) மாத்ஸர்யம் - பொறாமை: ஒருவன் நம்மை விட சிறப்பாக இருந்தால் மனதில் எப்போதும் ஒரு எரிச்சல் அல்லது அந்த நபரைப்பற்றி ஏதாவது குறை கூறும் மன நிலை இருக்கிறது என்றால் மாத்ஸர்யம் என்று பொருள். இந்த பொறாமை குணம் இருந்தால் நாம் எப்போதும் மற்றவர்களைக் குறை கூறி மன நிம்மதி இன்றி இருப்போம், இப்படி மாத்ஸர்ய பொறாமை குணத்தை உருமாற்றி அமைதியை அளிக்கும் தாய்சக்தி மாஹேந்த்ரீ.

7) பாபம்: நாம் தர்மத்திலிருந்து விலகி செய்யும் செயல்கள் எல்லாம் எமது ஆழ்மனமாகிய சித்தத்தினை பதிவினை ஏற்படுத்தி மீண்டும் மீண்டும் எம்மை பாபங்களை செய்வித்து அதனால் துன்பம் ஏற்படுத்தும் நிலையைத் தரும். இப்படி பாவங்களை உருமாற்றி புண்ணியமாக்கி, மீண்டும் பாவங்கள் செய்யாமல் தடுத்க்கும் தாய்சக்தி சாமுண்டா.

8) ஐஸ்வரியம்: மேலே உள்ள ஏழுகுணங்களையும் சரியாக உருமாற்றினால் எமக்குக் கிடைக்கும் பலன் ஐஸ்வரியம். எமது மனோ காமியங்களை அடையச் செய்து, கோபத்தினை உருமாற்றி நிதானம், லோபத்தை உருமாற்றி தியாகம், மோகத்தை உருமாற்றி அன்பு, மதத்தை உருமாற்றி அடக்கத்தை, மாத்ஸர்யத்தை உருமாற்றி அமைதியை, பாவங்களை உருமாற்றி புண்ணியத்தை தரும் நிலையினை சாதகன் காப்பாற்றி நிலைபேறாக வைத்திருக்கும் சக்தி மகாலக்ஷ்மி தாய் சக்தி.

Friday, November 22, 2019

சாதனையின் படிமுறைகளை எனக்கு விருப்பமான படி மாற்றிக்கொள்ள முடியுமா?

அண்மையில் ஒரு சாதகர் குரு அகத்திய காயத்ரி சாதனையின் அனைத்துப் படிகளையும் தன்னால் மனவிருப்புடன் செய்ய முடியவில்லை, மனம் ஏற்றுக்கொள்ளவில்லை, அகத்தியர் மூல குரு மந்திரமும், காயத்ரியும் மாத்திரம் தினசரி சாதகம் செய்து வருகிறேன், இது சரியா? என்று கேட்டிருந்தார்.

சாதனையை தொடர்ச்சியாக ஈடுபடுவதற்கு மனம் எம்முடன் ஒத்துழைக்கும் விஷயத்திலிருந்து தொடங்க வேண்டும் என்பது எந்த விஷயத்திலும் நாம் நீண்டகால ஈடுபாட்டுடன் செய்வதற்கு மிக அத்தியாவசியமான நிபந்தனை. ஆகவே தற்போதைய நிலையில் தாங்கள் சரி!

ஆனால் மனதினையும் சித்தத்தினையும் பரிபூரணமாகச் சுத்தி செய்து தெய்வ உருமாற்றம் விரும்பினால் மனம் போன வழியில் சென்று குருகாட்டிய வழியிற்கு தடம் மாறவேண்டும்.

சாதனை முறை என்பது ஒரு Process, பயணத்தின் அனுபவத்தை முழுமையாக அனுபவிக்க வேண்டுமானால் நாம் பயண ஒழுங்கினைப் பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் பயணத்தின் முழு அனுபவமும் கிடைக்காது.

ஆகவே குறித்த இரண்டு மந்திரங்கள் மாத்திரம் எனக்குப் போதும் என்று நினைத்தால் அந்த அனுபவங்களுக்குள் எம்மை மட்டுப்படுத்திக்க்கொள்கிறோம்.

மனிதன் அடிப்படையில் சலனிக்கும் மனமும், சித்தமும் உடையவன், அவன் தனது இயல்புடன் தன்னை உருமாற்ற முடியாது. ஆகவே அவனுக்கு தன்னை விட ஒரு உயரிய சக்தியும் அந்த சக்திக்கான பாதையைக் காட்டும் படிகட்டுகளும் தேவை, இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதே சித்த வித்யா குருமண்டல நாமாவளி.

பின்னர் அகத்தினை ஈசனாக்கும் வழியை இணைக்கும் மூல குரு மந்திரம்.

மனம் நாம் எதற்காக இந்த சாதனையைச் செய்கிறோம் என்ற எண்ணத்தினைக் தெளிவாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இது அற்ப காரணங்களாக அல்லாமல் எமது இறுதி இலட்ச்சியத்தித்திற்கு வழிகாட்டும் சங்கல்பமாக இருக்கவேண்டும். அதற்காக காயத்ரி சங்கல்பம்

பின்னர் மனதினை கூர்மையாக்கி ஒருமைப்படுத்தி மனதினை புத்தியைத் தூண்டும் அந்தப்பேரொளியுடன் இணைக்கும் காயத்ரி மந்திரம், இது பிராணசக்தியை எம்மில் அதிகரிக்கும்.

இப்படி அதிகரித்த சக்தியை எம்மில் தெய்வ உருமாற்றத்திற்கு பயன்படுத்த வேண்டிய கட்டளைகளை எமது ஆழ்மனமாகிய சித்தத்திற்கு தரும் சாதனை சித்த சாதனை.

இறுதியாக எமது உலக வாழ்வு இன்பமாக இருப்பதற்குத் தேவையான பதினாறு பேறுகளையும் பெற துதி.

இப்படிச் செய்யப்படும் சாதனை ஒருவனை இந்தப் பிரபஞ்சத்தின் உயர் ஞான நிலையில் இருக்கும் குருமண்டலத்துடன் இணைத்து, சாதனையைச் சரியாகச் செய்யக்கூடிய வல்லமையை சாதகனில் உண்டாக்கி, அவனது அந்தக்கரணங்களைச் சுத்தி செய்து தெய்வ குணங்களால் நிரப்பத்தொடங்கும்.

ஆகவே இவற்றைச் சிந்தித்து இந்த process இனை பின்பற்றுவதால் உங்கள் பயணம் இலகுவாகும் என்பதை உங்கள் மனதிற்கு உணர்த்தினால் மனம் அதை ஏற்றுக்கொண்டு சாதனையை முழுமையாகச் செய்ய ஒத்துழைக்கும்.

காயத்ரி உபாசனை ஏன் கட்டாயம் தேவை?

காயத்ரி மந்திரம் ஏன் சிறப்பானது, இளமையில் உபதேசிக்கப்படுகிறது என்றால் ஒரு மனிதனின் இளம் வயதில் பிரபஞ்சத்தின் இறைவனின் உண்மை இயல்பு புத்தியைத் தூண்டும் அந்தப்பேரொளி என்ற உண்மை ஆழமாகப் பதியவைப்பதற்காகவே.

ஒரு மனிதன் தன்னை தெய்வ உருமாற்றம் செய்துகொள்ள இறைவனின் உண்மையான ஸ்வரூபம் பற்றி அறிந்திருக்க வேண்டும். பலரும் உருவங்களில் இருக்கும் வடிவத்தை இறைவன் என்று எண்ணி மயங்கிவிடக்கூடாது என்பதற்காக இறைவனின் உண்மை ஸ்வரூபம் பேரொளி என்ற உண்மை சித்தத்தில் பதிய வேண்டும் என்பதாலேயே காயத்ரி உபதேசம் அடிப்படையும் கட்டாயமும் ஆக்கப்பட்டது.

எந்த உபாசனை செய்தாலும் காயத்ரி ஜெபம் கட்டாய என்பது எமது மனதினது, சித்தத்தினது அமைப்பிற்கேற்றவாறு பல்வேறு தெய்வ உருவங்களில் எமது மன ஒன்றுவதால் நாம் இஷ்ட தெய்வங்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் சுதந்திரத்தைனைக் கொடுத்து அதே வேளை அந்த சுதந்திரத்தால் வெறுமனே ஸ்தூல உருவத்தில் மயங்கி இறுதிப்பாதையைத் தவறவிட்டுவிடக்கூடாது என்பதால் இறையின் உண்மை ஸ்வரூபம் புத்தியைத் தூண்டும் அந்தப்பேரொளி என்பது எப்போது ஞாபகத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக எந்த தெய்வ உபாசனை செய்தாலும் காயத்ரி உபாசனை கட்டாயம் என்று சொல்லி வைத்தார்கள்.

Wednesday, November 20, 2019

சித்த வித்யா சங்கத்தின் இலச்சினை



மூன்று வெளிவட்டங்கள் ஸ்தூல, சூக்ஷ்ம, காரண சரீரத்தைக் குறிக்கும்.

உள்ளே இருக்கும் ஐங்கோணங்கள் பஞ்சபூதங்கள் {ப்ருதிவி,அப்பு, அக்னி, வாயு, ஆகாயம்} பஞ்சதன்மாத்திரைகள் {ரூபம், கந்தம், ஸ்பரிசம், சுவை, ஸப்தம்}, ஞானேந்திரியம் {கண், மூக்கு, தோல், நாக்கு, செவி} கர்மேந்திரியம் {பாதம், கைகள், எருவாய், கருவாய், வாய்} இவற்றை செம்மைப்படுத்தி பஞ்சகோசங்களை {அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமய} உருவாக்கும் யோகமுறையைக் குறிக்கும்.

ஐங்கோணங்களினது நிறங்கள் பஞ்சகோச சித்திகளைக் குறிக்கும்.

சலனிக்கும் நீர் அந்தக்கரணங்களைக் குறிக்கும்.

தாமரை சேற்றிலிருந்து சூரியனை நோக்கி மலர்வது போல் சாதகன் தனது உலக, குடும்பக் கடமைகளிலிருந்து விலகாமல் சாதனையின் மூலம் ஞானத்தை தேடவேண்டும் என்ற உத்வேகத்தின் குறியீடு. தாமரையாக சாதகன் மலரும்போது அனைத்து சம்பத்துக்களும் பெற்ற லக்ஷ்மித்துவம் உடையவனாக சாதகன் இருப்பான்.

தங்க நிறச் சூரியன் ஸவிதாவாகிய புத்தியைத் தூண்டும் அந்தப் பரம்பொருளின் பேரொளி.

சிவப்புப் புள்ளி சாதகனின் உணர்வாகிய ஆன்மா.

சித்த வித்யா என்றால் ஒருவனை செம்மைப்படுத்தும் அறிவு என்று பொருள். விஞ்ஞான என்றால் சரியான புரிதலைத் தரும் என்று அர்த்தம்.

சங்கம் என்பது மேற்குறித்த ஆர்வம் உள்ளவர்கள் சேருமிடம் என்று அர்த்தம்.

சித்த வித்யா விஞ்ஞானச் சங்கம் ஒரு மனிதனின் அந்தக்கரணங்களைச் செம்மைப்படுத்தும் எது உண்மை என்ற அறிவினையும் புரிதலையும் தரும் ஆர்வமுள்ள சாதகர்கள் சேரும் இடம் என்று பொருள்.

தலைப்பு இல்லை

Skepticism - ஐயுறவு - எதிலும் நம்பிக்கை இன்றி கேள்வி கேட்கும் பண்பு தவறானதா? 

இந்தப் பண்பு மனிதன் கையில் இருக்கும் இருமுனைக் கூர்வாள் போன்றது. 

வாள் இருப்பது பாதுகாப்பானது, ஆனால் இடுப்பில் ஒழுங்காகச் சொருகத் தெரியாவிட்டல் ஆபத்தானது. 

அடிப்படையில் skepticism எமக்கு இருக்கும் ஒரு பாதுகாப்புக் கவசம், அறிவினைப் பெருக்குவதற்கும், ஆழமாக அறிதலுக்கும் உதவக் கூடிய ஒரு மன ஆற்றல். 

ஆனால் வாளை வீசத் தெரியாதவன் தனது கைகளையும், உடலையும் வெட்டிக் கொள்வது போல் skepticism இருப்பதால் தாம் பெரிய அறிவாளிகள் என்று பலர் மயங்கி விடுகிறார்கள். 

தமக்கு தெரியாத விஷயத்தை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம் அல்லது அதன் மீது சந்தேகத்தினை மாத்திரம் தெளித்து விட்டு ஏளனம் செய்து கொண்டு இருப்பது மட்டும் போதும் என்று நினைத்தால் அது அறிவைப் பெறும் முறையல்ல. 

ஒன்றைப் பற்றி அறிவதற்கு அதை நன்கு கூர்ந்து கவனிக்க வேண்டும், பின்னர் அது பற்றி எமக்கு முதல் கவனித்தவர்கள் கூறிய கூற்றுக்களை எல்லாம் படிக்க வேண்டும், அப்படிப் படித்த பின்னர் தொகுத்துப் புரிய வேண்டும். தொகுத்துப் புரிந்த பின்னரே அது பற்றி தமது கருத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். 

இப்படிச் செய்தால் மட்டுமே skepticism ஆக்கப் பூர்வ அறிவினைத் தரும். இல்லாவிட்டால் மூளையில் அதிக Cortisone இனை உருவாக்கி மன அழுத்தம் உருவாக்கி பைத்தியத்தை உருவாக்கும்    


தலைப்பு இல்லை

யாரிடமும் உரையாடச் செல்லும் போது எதிர்மறையாக (Negative) உரையாடினால் எமக்கு துன்பமாகவும், அழுத்தமாகவும் உணர்கிறோம் அல்லவா?

அதே நேரம் நேர்மறையாக (Positive) ஆகச் சொல்லும் போதும் மகிழ்ச்சியாகவும் நல்லதாகவும் உணர்கிறோம். 

இதற்குக் காரணம் மூளையில் ஏற்படும் இரசாயன மாற்றம். மூளையில் நரம்புக் கணத்தாக்கினை ஏற்படுத்தும் மில்லியன் கணக்கான மூளைக் கலங்களின் ஒரு கலத்தை Dendrites என்று கூறுவோம். ஒரு எண்ணத்தை நாம் எண்ணத் தொடங்கும் போது அதை சீராக சிந்திக்கப் பழகிக் கொண்டால், யோகத்தில் சீரிய ஏகாக்கிரம் என்று சொல்லுவார்கள், இந்த Dendrites இருக்கும் இணைப்புகள் Serotonin என்ற இரசாயனத்தைச் சுரக்கும். இது இந்த இணைப்பை சுமூகமாக முன்னெடுக்கும். 

இப்படி சீரிய ஏகாக்கிரம் இல்லாமல், நாம் சிந்திக்கும் விஷயத்தை நம்பிக்கயீனமாக எண்ணத் தொடங்கினால் Dendrites இடையில் இருக்கும் இடைவெளியை Cortisone நிரப்பத் தொடங்கும். இது மனதின் ஏகாக்கிரத்தை தடுத்து அந்தக் கணத்தாக்கினை இடைமறிக்கும். இப்படி இடைமறிக்கும் போது எமக்கு துன்பமும், மன அழுத்தமும் ஏற்படும். 

பொதுவாக ஆய்வுப் படிப்பில் ஈடுபடுபவர்கள், professional skepticism தேவைப்படும் ஆடிட்டிங்க், பொலிஸ், சட்டத் தரணிகளின் மூளை மற்றவர்கள் சொல்லுவதை ஏற்க மறுத்து Cortisone இனால் ஆளப்படும். 

ஆகவே சீரிய ஏகாக்கிரம் பயிலல் அவசியமானது. ஒரு விஷயத்தை பற்றி சிந்திக்க முன்னர் அதைப் பற்றி ஆழமான கருத்துக்களை ஊன்றிப் படித்து மனதில் நம்பிக்கையினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். PhD போன்ற ஆய்வுப் படிப்புகளில் Literature Review இருப்பதன் காரணமும் இதனால் தான். எமக்கு, நாம் கேள்வி கேட்கப் போகும் விஷயத்தில் ஆழமான அறிவு இருந்தால் வீணாக இடையில் எதிர்மறையாகச் சிந்தித்து Cortisone இனை உருவாக்கி எமது மூளையை அழுத்தத்திற்கு உள்ளாக்க மாட்டோம். 

இதே போல் எப்போதும் எவரைப் பற்றியும் மாற்று அபிப்பிராயமும், தவறான அபிப்பிராயமும் கொண்டிருப்பவர்கள் மூளை Cortisone இனால் கணத்தாக்கு உருவாக்கப்பட்டு துன்பப்பட்டுக் கொண்டு இருக்கும். இப்படி அழுத்தத்திற்கு தம்மை உள்ளாக்கிக் கொண்டிருப்பவர்கள் அடிக்கடி நோய் வாய்ப்படுவார்கள். 

ஆகவே தற்போதைய நவீன அறிவியல் மனமும் உடலும் எப்படி இணைந்து துணைபுரிகிறது என்பதைப் பற்றிய ஆழமான புரிதலைத் தருகிறது. இந்த அறிவினை எமது நலமான மகிழ்வான வாழ்விற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


Tuesday, November 19, 2019

தலைப்பு இல்லை

Demoralization அல்லது ஒழுக்கச் சிதைவு என்பது ஒரு சமூகத்தை தனது ஆயிரம் ஆண்டுகாலப் பண்பாட்டிலிருந்து விலகி தம்மை தாழ்வு மனப்பான்மையுடையவர்களாகவும், குழப்பமுடையவர்களாகவும் ஆக்கி சமூக ஒழுங்கை சீர்குலைக்கும் ஒரு தந்திரோபாயம். 

இந்த நிலை குறித்த பண்பாட்டினை பின்பற்றுவர்களின் ஸ்திரத்தன்மையினை இல்லாமல் ஆக்கி மெதுவாக சமூக ஒழுங்கினைக் குலைக்கும். இது பிரித்தானிய ஐரோப்பியவாத அடக்கு முறைச் சிந்தனை. ஒரு கலாச்சாரத்தை குழப்புவதற்கு அவர்கள் பின்பற்றும் முறைகளை தவறு, ஆபாசம் என்று சித்தரிப்பது. இதை மக்கள் மனம் ஏற்றுக் கொள்ளத் தொடங்கினால் சமூகம் ஒன்றிணைந்து செயல்படாது. இப்படி சமூகம் பல கூறுகளாக பிளவுபட்டிருக்கும் போது பிரித்தாளுவதற்கு இலகுவாக இருக்கும். 

ஒரு விஷயத்தைப் பற்றி கருத்துச் சொல்வதாக இருந்தால், எனக்குப் புரியவில்லை தெரியவில்லை அதனால் இவை தவறானது என்று எண்ணுவதை விட முட்டாள் தனம் எதுவும் இருக்க முடியாது. ஒன்றைத் தவறு என்று சொல்வதற்கு அதைப் பற்றி விரிவாகத் தகவல்களைத் திரட்ட வேண்டும், திரட்டிய தகவல்களை தொகுத்து அறிய வேண்டும், அறிந்த தகவல்களைப் புரிந்து கொள்ள வேண்டும், புரிந்த பின்னர் அது சரியா தவறா என்று நிர்ணயிக்க வேண்டும். 

இதை விடுத்து தமது அதிகாரங்களையும், பட்டங்களையும் பதவிகளையும் வைத்துக் கொண்டு எல்லாவற்றிற்கும் கருத்துத் தெரிவித்துக் கொண்டிருப்பவர்கள் முட்டாள்கள். 

நல்ல தெளிந்த சிந்தனையுள்ள சமூகத்தை கட்டமைத்து உயர்ந்த பண்புள்ள மனித குலத்தை உருவாக்குவது ஒவ்வொருவரதும் கடமை!


Monday, November 18, 2019

ஸம்பளா - ஸித்தாஸ்ரமம் - பூலோகத்தின் ஒளி - 03


ஸம்பளா பற்றிய நூற்குறிப்புகள் பெரும்பாலும் திபேத்தியப் பௌத்த நூற்களிலேயே நம்பக்கூடிய மகிமை வாய்ந்த தகவல்கள் கிடைக்கின்றன. எனினும் இந்த திபேத்திய நம்பிக்கைக்கு ஒத்த விஷயங்கள் மற்றைய கலாச்சாரங்களிலும் காணக்கிடைக்கின்றது.

இயல்பாக எழக்கூடிய முதலாவது கேள்வி ஸம்பளா என்ற பெயர் எப்படி உருவாகியது என்பதே. “ஸம்” என்றால் சமஸ்க்ருதத்தில் அமைதி அல்லது சாந்தி என்று அர்த்தம். புராணங்களில் ஸம்பளத் தீவு பற்றிய வர்ணனைகள் கிடைக்கின்றது. அந்த தீவில் அம்ருத வாவி இருப்பதாகக் குறிப்படப்பட்டுள்ளது. திபேத்திய பௌத்த நூற்களில் ஸம்பளாவைப்பற்றிய குறிப்புகள் பல பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏழாம் நூற்றாண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதற்கு முந்திய இரண்டாயிரம் வருங்கள் பழமையான Bon மதப்புத்தகங்களிலும் ஸம்பளா பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றது. Bon மதப்புத்தகங்களில் ஸம்பளாவை அடைவதற்கான வரைபடங்களும் கிடைக்கின்றது.

அறு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஸம்பளாவில் ஏற்படுத்தப்பட்ட விதிகளின் படி ஒவ்வொரு நூற்றாண்டின் முடிவிலும் உலக அமைதிக்கும் ஒற்றுமைக்குமாக ஸம்பள யோகிகள் பூமியில் செயல்பட வேண்டும் என்ற விதி ஏற்படுத்தப்பட்டது.

உலக அமைதிக்கும் ஸாந்திக்குமாக பாடும் ஆன்மீகர்கள் அனைவரும் இந்தத்திட்டத்தில் ஒருபடியாகவே தமது பணிகளைச் செய்கிறார்கள். ஸம்பள யோகிகளின் நோக்கம் உலகைச் சூழ உள்ள ஆகாச ஏட்டில் இருக்கும் நல்ல உணர்வுகளை அதிகரித்து பூமியில் மனித குலம் தெய்வ நிலை அடையும் சந்தர்ப்பத்தை அதிகரித்து தெய்வ குணமுள்ள மனித குலத்தை ஏற்படுத்துவதாகும்.

அடுத்து ஸம்பளா பற்றி ஆன்ட்ரூ தோமஸ் அவர்கள் தமது அறிமுகத்தில் கூறியவற்றை சுருக்கமாகப் பார்ப்போம்.

அந்த நூலின் நோக்கமாக பூலோகத்தில் பிரபஞ்ச ஒளிமிகுந்த ஒரு கலாச்சாரத்தை தெரிவிப்பதற்குரிய ஒரு வழிகாட்டி நட்சத்திரம் என வர்ணிக்கிறார். பல நூற்றாண்டுகளாக மனிதகுலம் தமது அறிவிலும், பண்பிலும் முன்னேறி, புரிதலை மேம்படுத்தி, உயர் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து அனைத்து மனிதர்களும் சகோதரத்துவத்துடன் பழகுவதற்குரிய பண்பினை உருவாக்குவதற்குரிய புரிதலை வழங்குவதற்காக என்று கூறுகிறார்.

உலகில் இருவகையான மனிதர்கள் இருக்கிறார்கள். உண்மையை உண்மை என்று உடனே புரிந்துகொள்பவர்கள் ஒரு வகை, மற்றவர்கள் உண்மை என்பதை இறுதியில் புரிந்துகொள்வார்கள்.

உலகம் உருண்டை என்பதை பலவருடங்களாக ஏற்றுக்கோள்ள மறுத்தவர்கள் சோவியத் ரஷ்டா ஸ்புட்னிக் விணகலத்தின் மூலம் எடுத்த படங்களைக் கோண்டு உருண்டை என்பதை அறிந்துகொண்டனர். ஆனால் அதற்கு பல காலத்திற்கு முன்னரே உலகம் உருண்டை என்பதை அறிந்தவரகள் இருக்கத்தான் செய்தார்கள்.

இதைப்போல மனித குலத்தின் ஆன்ம பரிணாமத்தை ஒரு இரகசிய உயர் ஆன்ம சக்தியுள்ள குழு வழி நடாத்திவருகிறது என்பதை நம்ப மறுக்கலாம். ஆனால் ஒருகாலத்தில் இது உண்மை என்று தெரியும் போது அனைவரும்  ஏற்றுக்கொள்வார்கள்.  ஆகவே இந்த அடிப்படையில் ஸம்பளா பற்றி படிக்கத்தொடங்குங்கள் என்கிறார்.   

ஸம்பளா - ஸித்தாஸ்ரமம் - பூலோகத்திற்கான ஒளி - 02

1957 ம் ஆண்டளவில் எனது குருநாதர் காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகள் தான் வேலை செய்த கம்பனியின் சார்பாக ஏற்பட்ட வழக்கு ஒன்றிற்காக திருச்சியில் தங்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. சுதந்திரம் பெற்று சிறிது காலம் என்பதால் ஆங்கிலேயக்கம்பனியின் வழக்கு திருச்சி நீதி மன்றத்தில் நடந்து வந்தது. அதில் குறித்த வழக்கில் எடுத்துக்கொள்ளப்படும் கணக்கு வழக்குகள் சுவாமிகளில் கைகளால் எழுதப்பட்டது என்பதால் சாட்சிக்கு சுவாமிகள் பங்குபற்றச்சொல்லில் சில மாதங்கள் திருச்சியில் தங்கச் சொல்லிவிட்டார்கள். 

திருச்சியில் ஸ்ரீ ரங்கத்தில் ராமானுஜர் சன்னதியில் நின்றுகொண்டு இருக்கும் போது தனது சிறுவயதில் தன்னைச் சந்தித்து விநாயகர் கவசம் கொடுத்த அதே பெரியவர் அவரை என்னைத்தெரியுமாடா உனக்கு? என்று கேட்டுக்கொண்டு அவர் கையைப் பிடித்து இழுக்க சுவாமிகள் நினைவிழந்து போய்விடுகிறார்.  மீண்டும் பார்க்க அடந்த வனத்திற்குள் இருப்பதை உணர்ந்து எழுந்து பார்க்க அதே பெரியவர் மாட்டிக்கொண்டாயா? என்று கேட்டுவிட்டு மறைந்து விட காட்டிற்குள் சிக்கிக்கொள்கிறார். சிறிது தூரம் நடக்கும் போது வனவாசிகளிடன் மாட்டிக்கொள்ள அவர்கள் ஈட்டியும் அம்பும் எறிய ஓடிச் சென்று ஆற்றில் குதித்தவருக்கு அதன் பிறகு நடந்த எதுவும் தெரியவில்லை. 

நினைவு திரும்பிய போது அடர்ந்த காட்டின் நடுவே ஒரு பர்ணசாலையில் இருப்பதை உணர்ந்து எழுந்த போது, தன்னுடைய உடலில் தழும்புகளும், காயங்கள் முற்றாக மாறி இருப்பதை உணர்ந்தார். அங்கு பல மேல் நாட்டவர்களும், மற்றும் சிலரும் தியானத்தில் இருப்பதையும் எழுந்து அவதானிக்க அவர்களுக்கு குருவாக இருந்த தெய்வீகக் களை பொருந்திய ஒருவர் சுவாமிகளை புன்னகையுடன் "உனது குரு கண்ணைய யோகி, மதராஸில் அம்பத்தூரில் இருக்கிறார், சென்று சந்திப்பாய்" என்று கூறி விட்டு தன்னுடைய இரண்டு சீடர்களை அழைந்து இவர் குணமாகிவிட்டார் அழைத்துச் சென்று விட்டுவாருங்கள் எனக்கூறிவிட்டு தன்னுடைய வேலையைப் பார்க்கப் போய் விட சீடர்கள் அழைத்து வந்து  பணமும் கொடுத்து ரயில் நிலையத்தில் விட்டுச் சென்றனர். அது நீலகிரி ரயில் நிலையம் என்று சுவாமிகள் சொல்லுவார்கள். 

சுவாமிகள் நேர மதராஸ் வந்து, அம்பத்தூர் சென்று கண்ணைய யோகியாரைத் தேடிச் சென்றபோது அங்கு ஒரு பெரியவர் சிறு குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு ஒரு கடையோரமாக இருக்க அவரிடம் சுவாமிகள் சென்று கண்ணைய யோகியாரின் வீடு எங்கிருக்கிறார்? என்று கேட்க, அந்தப்பெரியவர் கண்ணைய யோகி என்று ஒருவரும் இல்லை, கண்ணைய நாயுடு என்று ஒருவர் அந்த வீட்டில் இருக்கிறார் என்று கூறி வழிகாட்ட இவரும் அங்கு செல்ல வீட்டினுள்ளே நாலைந்து  நபர்கள் ஏதோ கற்பதற்கு வந்தவர்கள் போல் அமர்ந்திருந்தார்கள். சற்று நேரத்தில் கடையில் இருந்த பெரியவர் வெள்ளை சட்டை போட்டுக்கொண்டு உள்ளே வர அனைவரும் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினர். அவர்தான் கண்ணைய யோகி என்பது சுவாமிகளுக்கு புரிந்துகொண்டு அவரும் வணங்கினார். பின்னர் யோக வகுப்புகள் தொடங்கியது. சிறிது நேரத்தில் ஒரு மேலை நாட்டு நபர் ஒருவரும் அங்கு வந்து சேர்ந்தார். அவரும் கண்ணைய யோகியாரிடம் மாணவராக கற்கும் படி ஸம்பளா எனும் ஆசிரமத்திலிருந்து ரிஷிகளால் அனுப்பப் பட்டவர் என்பதை பின்னர் சுவாமிகளுக்கு கண்ணைய யோகியார் கடிதம் மூலம் கூறியிருந்தார். 

அந்த மேலை நாட்டவர்தான் உலகத்திற்கு ஸம்பளா எனும் சூக்ஷம் ஆசிரமம் பற்றி எழுதிய ஆண்ட்ரூ தோமஸ் என்பவர். இந்த ஆண்ட்ரூ தோமஸ் Shambhala Oasis of Light எனும் நூலை எழுதியிருந்தார். 

ஆண்ட்ரூ தோமஸும், எனது குருநாதரும் ஒரே நாளில் ஸ்ரீ கண்ணைய யோகியாரை சந்தித்தார்கள் என்பது எனது குரு நாதருக்கு வழிகாட்டல் நீலகிரி மலைச்சாரலில் உள்ள சூக்ஷ்ம ஆசிரமத்திலிருந்தும், ஆன்ட்ரூ தோமஸிற்குரிய வழிகாட்டல் ஸம்பளா ஆசிரமத்திலிருந்தும் கிடைத்தது என்பது முக்கிய செய்தி. 

பின்னர் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் ஆன்ட்ரூ தோமஸிற்கு ஆங்கிலத்தில் Sidhman course என்றும் எனது குரு நாதரிற்கு சித்தி மனிதன் பயிற்சி என்றும் பாடத்தொகுப்பு எழுதிக் கற்பித்தார். இந்த சித்தி மனிதன் பயிற்சி என்பது ஒரு மனிதன் தனது அந்தக்கரணங்களை எப்படி வலுப்படுத்தி சித்திகளை அடைவது என்பதற்கான பயிற்சியாகும். 

 நாம் குரு நாதரிடம் இந்த சித்தி மனிதன் பயிற்சிப்பாடங்களைப் பயிலும் போது ஆண்ட்ரூ தோமஸ் பற்றி சுவாமிகள் அடிக்கடி கூறுவார்கள். மிக உயர்ந்த மனப்பிராண ஆற்றல் பெற்று ஸம்பளாவின் ரிஷிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர் என்று அடிக்கடி கூறுவார். 

அவர் எழுதிய நூற்கள் பற்றி அடிக்கடி குறிப்பிடுவார். அவருடைய Shambhala Oasis of Light நூலிலுள்ள விஷயங்களைப் பற்றி இந்தக்கட்டுரைத் தொடரில் உரையாடுவோம். 

ஸம்பளா - ஸித்தாஸ்ரமம் - பூலோகத்திற்கான ஒளி - 01

Image result for SHambala

வைகாசிப்பௌர்ணமி என்பது எமது குருபரம்பரைக்கு மிக முக்கியமான ஒரு நிகழ்வு. இப்படியான ஒரு பௌர்ணமியில்தான் எனக்கும் எனது தாயாருக்கும் குருநாதர் தீக்ஷை தந்தார். 

வைகாசிப் பௌர்ணமியின் சிறப்பு என்னவென்பது பற்றி குருநாதர் தெளிவாகக் கூறியிருந்தார். 

மனிதகுலத்தில் உதித்து ஒளிசரீரம் பெற்ற மகரிஷிகள் பூலோகத்தின் ஹிமாலயத்தின் மிக உட்பகுதியில் அதீத தவ ஆற்றலால் சாதாரண மக்கள் நெருங்கமுடியாதபடி உலகின் பரிணாமம் இறைவனை நோக்கி தெய்வகுணத்துடன் நெருங்குவதற்கு தேவையான சக்தியை, அறிவினை, ஞானத்தினை பூவுலகிற்கு கொடுப்பதற்காக நீண்ட தபஸில் இருந்துகொண்டு, காலத்திற்கு காலம் தகுந்த பக்குவம் பெற்ற மனித உடலில் இருக்கும் ஆன்மாக்களை தேர்ந்தெடுத்து உலகின் பரிணாமத்தை உயர்விக்க தகுந்த சாதனை செய்விக்கிறார்கள், அல்லது சிலரிற்கு தமது சக்தியைக் கொடுத்து அவர்கள் உணர்வினை மேம்படுத்தி பலரையும் அந்த அருள் வட்டத்திற்குள் கோண்டுவந்து உணர்வினை மேம்படுத்தச் செய்கிறார்கள். இப்படி பாரதத்தில் மட்டுமல்லாமல் உலகெங்கும் செயல்கொள்கிறார்கள். 

இதில் தென் நாட்டின் ஆன்ம பரிணாமத்தைத் தீர்மானிக்கும் தலைமை ரிஷி ஸ்ரீ அகத்திய மாமகரிஷியாவார். நீலகிரிமலைச் சாரலில் உள்ள அவரின் சூக்ஷ்ம ஆஸ்ரமத்தில் தகுந்த ஆன்மாக்கள் ஆன்ம பரிணாமத்திற்காக (evolution of consciousnesses) பயிற்றுவிக்கப்படுகிறார்கள். எமது குருபரம்பரை அகத்தியமகரிஷியிடமிருந்து வழிகாட்டல் பெற்று வருகிறது.  வைகாசிப் பௌர்ணமி தினத்தில் அனைத்து ரிஷிகளும் இந்த ஸம்பளா என்ற இடத்தில் கூடி தங்கள் ஆற்றல்களை எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றி முடிவெடுக்கிறார்கள். இதனைப் பற்றி குருநாதர் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் மகரிஷிகளின் மர்ம வாசம் என்ற கட்டுரையில் தெளிவாக விளக்கியுள்ளார்கள். 

இப்படி மனிதகுலத்தின் உணர்வினை (consciousnesses) உயர் நிலைக்கு கொண்டு செல்வதற்கு மகரிஷிகள் காலம் காலமாக பல முயற்சிகளை செய்து வருகிறார்கள். 

பூமியைச் சூழ ஆகாச தத்துவத்தில் மனிதகுலம் தோன்றியது முதல் உருவாகிய எண்ணங்கள் அனைத்தும் அழியாமல் சேமிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதில் தீய எண்ணப்பிரபாவங்கள், நல்ல எண்ணப்பிரபாவங்கள் அனைத்தும் சேமிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் தீய எண்ணப்பிரபாவங்களின் அளவு சிறிதாக இருந்தாலும் அவை வீரியமிக்கதாகவே இருக்கிறது. இதுவரை உலகில் நடைபெற்ற போர்களும், ஓலங்களும், துன்பங்களும், வன்முறைகளும் இங்கு பதியப்பட்டு அதிர்வுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இப்படி ஏற்படுத்தப்பட்ட எண்ணங்கள் எதுவும் ஆகாசத்தில் இருக்கும் பதிவுகள் எதையும் அழிக்க முடியாது.  நல்ல எண்ண அதிர்வுகளால் சமப்படுத்த மாத்திரமே முடியும். இதைச் சாதிப்பதற்கு மனிதகுலத்தினால் மாத்திரமே முடியும் என்பதால் மனிதகுலத்தின் உணர்வினை தெய்வ குணத்திற்கு உயர்த்தி இந்த தீய எண்ண அதிர்வினை சமப்படுத்த முடியும். இப்படி சமப்படுத்துவதற்குரிய நல்ல அதிர்வினை ஏற்படுத்த பூமியில் வாழும் மனிதர்களின் உணர்வு தெய்வ உணர்வாக (Divine consciousnesses) இருப்பதற்காக காலம் காலமாக ஸம்பளாவில் இருக்கும் மகரிஷிகள் செயல்கொண்டு வருகிறார்கள். 

பூலோகத்தின் மனிதனின் உணர்வினை மேம்படுத்தும் அந்த ஒளி ஸம்பளாவில் உள்ள மகரிஷிகளின் வழி மனித குலத்திற்கு கொடுக்கப்பட்டு வருகிறது. 

திபேத்திய மொழியில் ஸம்பளா எனவும் பாரத புராணங்களில் ஸித்தாஸ்ரமம் என்றும் சீன மொழியில் ஷங்ரிலா எனவும் அழைக்கப்படுகிறது. 

எமது சித்த வித்யா குருமண்டல  நாமாவளியில் துதிக்கும் குருமார்கள் அனைவரும் இந்த ஸம்பளா எனும் ஒளி மண்டலத்தைச் சார்ந்தவர்களே. 


தலைப்பு இல்லை

எதைக் கூறினாலும் அவநம்பிக்கையும், வெறுப்பும், விரக்தியும் உமிழ்பவர்களுக்கு எதுவும் திருப்தி தராது. எப்போதும் எமக்கு தீமை தான் நடக்கும் என்று நம்பிக் கொண்டிருக்க அது நடப்பதற்கு ஏற்ற வகையில் மிக நுண்மையாகச் செயலைச் செய்து கொண்டிருப்போம். 
பலமுள்ளது உலகை இயக்குகிறது. நாம் பலமுள்ளவர்களாக வேண்டும் என்றால்; 
பலத்துடன் சார்ந்து பலத்தைப் பெறுவது ஒரு வழி
அல்லது பலத்தை எதிர்த்து பலத்தைக் கைப்பற்றுவது இன்னொரு வழி! 
இரண்டையும் செய்யாமல் இருப்பவன் பலகீனன், பலகீனனின் இயல்பு எதையும் பார்த்துப் புலம்புவது! அவ நம்பிக்கையை தன்னிலும் மற்றவர்களிலும் விதைப்பது! எனது துன்பத்திற்கெல்லாம் மற்றவன் தான் காரணம் என்று குற்றம் சாட்டுவது! 
ஆகவே பழங்கதைகளை வைத்துக் கொண்டு வெறுமனே எதிர்காலம் இருட்டாகி விடும் என்று அவநம்பிக்கையுடன் புலம்புவதை விட்டு பொருளாதாரத்தில், அரச நிர்வாகத்தில், அரசியலில், சமூக நல்லிணக்கத்தில், அபிவிருத்தியில் எப்படி பலம் பெறுவது என்று மாத்திரம் சிந்திப்போம், செயற்படுவோம்!

தலைப்பு இல்லை

ஸ்ரீ லங்காவின் தெரிவு செய்யப்பட்ட ஏழாவது ஜனாதிபதி அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்! 
சிங்களவர், தமிழர், முஸ்லிம் என்று பிளவுபட்டுள்ள மனங்களை ஒன்றிணைத்து நாம் அனைவரும் இலங்கையர் என்ற ஒற்றுமையையும், அனைவரும் சிறந்த எதிர்காலத்துடன் சுபீட்சமாக வாழ நிர்வகிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்!

Sunday, November 17, 2019

தலைப்பு இல்லை

நாட்டின் ஜனாதிபதி தேர்வாகிக் கொண்டிருக்கிறார். 

பலர் முக நூலில் பய அலைகளைப் பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள். 

பயத்தில் இருப்பவன் எப்போதும் தவறு தான் செய்வான், பயம் வெளிச் சூழல்களிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ள உடல் ஏற்படுத்தி வைத்திருக்கும் ஒரு ஏற்பாடு! அதை வீணாக நாமாக கற்பனை செய்து ஏற்படுத்திக் கொண்டு உடலையும் சமூகத்தையும் கெடுக்க கூடாது. 

எல்லா முடிவுகளும் இறுதியில் ஏதோ ஒரு நன்மையைத் தான் தரப்போகிறது. 

ஆகவெ லாவோட்ஸு சொல்லும் அறிவுரையைக் கேட்போம்:

உங்கள் உணர்வை, செயலை முழுமையாக வெளிப்படுத்துங்கள், அதன் பின்னர் அமைதியாகுங்கள்! இயற்கையின் சக்தியைப் போல்! காற்று வீசும் போது காற்றாகவே இருக்கிறது; மழை பெய்யும் போது மழையாக மட்டுமே இருக்கிறது; மேகம் செல்லும் போது அதன் இடைவெளியில் சூரியன் ஒளிர்கிறது; தாவோவிற்கு முழுமையாகத் திறந்திருந்தால் நீங்கள் அந்தத் தாவோ ஆவீர்கள்; நீங்கள் அந்த சந்தர்ப்பத்தை முழுமையாக அனுபவிப்பீர்கள்; அந்தப் புரிதலுக்கு உங்களை முழுமையாக திறந்து வைப்பீர்களாக இருந்தால் அதை முழுமையாகப் புரிந்து கொள்வீர்கள்; அப்படிப் புரிந்து கொண்டால் அந்தச் சந்தர்ப்பத்தை உங்களுக்காக முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். நீங்கள் இழந்திருந்தால் அந்த இழப்பினை ஏற்றுக்கொண்டு உங்களை அந்த இழப்பிற்கு திறந்து கொள்ளுங்கள், அந்த இழப்பைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்வீர்கள். தாவோவிற்கு உங்களைத் திறந்து கொள்ளுங்கள். அதன் பின்னர் உங்களை சூழ நடக்கும் இயற்கையின் செயலை ஏற்றுக் கொள்ளுங்கள்; அனைத்தும் சரியாக நடக்கும். 

So, Be like the forces of nature


தலைப்பு இல்லை

ஜனநாயக தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டோம் என்று கூறுவது அறமற்ற செயல்! மனித மனதிற்குள் ஒளிந்திருக்கும் குள்ள நரித்தனத்தின் வெளிப்பாடு! வெற்றி பெறுவதற்கு இது விளையாட்டு இல்லை! 
அதிகமான மக்கள் ஒருவர் நாட்டின் நிர்வாகத்தினை செய்வதற்கு தகுதியானவர் என்று நினைக்கிறார்கள், அவர் தெரிவு செய்யப்படுகிறார் என்பதே இதன் அர்த்தம். அடுத்த ஐந்து வருடங்களுக்கு அவர் தன்னைத் தெரிவு செய்யாதவர்கள் ஏன் தன்னைத் தெரிவு செய்யவில்லை என்ற காரணத்தைப் புரிந்து கொண்டு அனைத்து மக்களுக்குமாக செயலாற்றி நாட்டினை அபிவிருத்தி செய்ய வேண்டும். இதைச் சிறப்பாகச் செய்தால் அடுத்த ஐந்து வருடங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்புக் கிடைக்கும். 
ஆகவே தேர்தலில் எவராவது வெற்றி பெற்றுவிட்டதாக கூச்சலிட்டால் அவர்கள் மக்களுக்குரிய தலைவர்களில்லை என்பதே அர்த்தம்! 
ஆகவே அறிவும் பண்பும் முதிர்ச்சியும் உள்ள சமூமாக நல்ல மனித குலத்தினை கட்டியெழுப்பப் பாடுபடுவோம்!

Saturday, November 16, 2019

தலைப்பு இல்லை

இன்றைய நாள் அடுத்து ஐந்து வருடங்களுக்கு நாட்டின் நிர்வாகம் எந்தத் திசையில் செல்லப் போகிறது என்பதைத் தீர்மானிக்கப் போகிறது! அந்த ஐந்து வருட நிர்வாகம் எத்தனை வருடம் நாடு பின்னோக்கிச் செல்லப் போகிறது என்பதையும் தீர்மானிக்கும்! 

ஒருவரின் தெரிவு தனிப்பட எந்த மாற்றத்தையும் தராது! ஆனால் பலரின் தெரிவு ஒன்றாக இருக்கும் போது விளைவு பலமானதாக இருக்கும்! தனிமரம் தோப்பாகாது! ஆனால் பலமரங்கள் சேர்ந்து தோப்பாகும்! 

ஆகவே எமது தனிப்பட்ட தெரிவு ஒட்டுமொத்த தெரிவிற்கு பங்களித்தாலும் மொத்த சமூகத்தின் பெரும்பான்மை விருப்பத் தெரிவே எமது நாட்டின் தலைமைத்துவத்தை, எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகிறது. 

நடக்கப்போவதை அனுமானிக்க இயலாது! இது நடந்துவிடுமோ அது நடந்துவிடுமோ என்று பயப்படவும் முடியாது, எமது தேர்விற்கு நாமே பொறுப்பாளிகள்! எம்மால் செய்யக் கூடியது எமது விருப்பத் தேர்வினை சரியாகத் தெரிவிப்பது மாத்திரமே! 

ஆகவே எமது சமூகக் கடமையைச் செய்வோம்! பலனை வரும் ஐந்து வருடங்களுக்கு அனுபவிப்போம்!    


Friday, November 15, 2019

பழங்காலமும் நிகழ்காலமும்

எல்லாவித பழைய ஞாபகங்களும் அனுபவத்திற்காவும், அனுபவத்தினால் வரும் அறிவும், அறிவு சேர்ந்து வரும் ஞானத்திற்காகவுமேயன்றி மனதில் எழுந்தமானமாக விருத்தியாகி எமது ஏகாக்கிரத்தையும் (Concentration) நிகழ்கால வாழ்க்கையையும் குழப்பக் கூடாது. 

மனித மனம் எப்போதும் பழையதைச் சிந்தித்து அதில் போலிப் பெருமை கொள்ளவோ, அல்லது முன்னர் நிகழ்ந்த துன்பம் தனக்கு மீண்டும் நிகழ்ந்து விடும் என்று அஞ்சவோ செய்யும். 

ஏதாவது தவறு எமது வாழ்வில் நடந்து விடும் போது அதை எண்ணி மீண்டும் அந்தத் தவறு நடந்துவிடும் என்று மீண்டும் மீண்டும் எண்ணும் போது நாம் அந்த எண்ணங்களுக்கு உயிர்கொடுக்கிறோம். 

எண்ணமும் உயிர்சக்தியான பிராணனும் இரட்டைகள், எதை நாம் எண்ணுகிறோமோ அதற்கு நாம் உயிர்கொடுக்கிறோம். 

பழையவற்றை எண்ணும் போது அவற்றிற்கு எப்போதும் உயிர்கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். நாம் பழைய வாழ்க்கையை நினைத்துத் துன்பப்படும் போது மீண்டும் அந்தத் துன்பகரமான வாழ்க்கைக்கு உயிர் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம் என்பதே அர்த்தம். 

பழைய நினைவுகள் எமது உணர்ச்சிகளைத் தாக்காமல் சாட்சி பாவமாக பார்க்கும் மனதினை பயிற்சியால் பெறவேண்டும். 

ஆகவே பழைய எண்ணங்களுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்காமல் நிகழ்காலத்தில் செய்ய வேண்டிய காரியங்களுக்கு சரியான கவனத்தை செலுத்த எமது வாழ்வு சிறக்கும்.


Wednesday, November 13, 2019

குரு தெய்வமா?


இப்போது ஆன்மீகத்தில் இருக்கும் பெரிய அறியாமை தமது குருவை உலகத்திற்கு குருவாகவும், அனைவருக்கும் கடவுளாகவும் பிரகடனப்படுத்தி தமது குருவையும் அவமதித்து, சித்தர்கள், ரிஷிகளின் பாரம்பரியத்தையும் அவமதிக்கும் செயலைச் செய்வது.

குரு என்பவர் ஒவ்வொருவருக்கும் உரிய தனிப்பட்ட தெய்வம் - Personalized God! எவரிடம் எமது மனம் அடங்கி, அகவிழிப்பு ஏற்படுகிறதோ அவரை நாம் குருவாக ஏற்கலாம்.

எமக்கு ஏற்படும் இந்த அனுபவம் மற்றவர்கள் எல்லோருக்கும் ஏற்படமுடியாது. ஆகவே குரு என்பவர் Marketing effort இன் மூலம் குருவாக முடியாது. எமது அக அனுபவத்தின் மூலமே குருவை நாம் அறிய முடியும்.

இப்படி எமக்கு அகவிழிப்பு அனுபவம் வாய்த்தால் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று மற்றவர்களுக்குப் பகிர்ந்துகொள்ளலாம். ஆனால் மற்றவர்களுக்கு எமது குரு மூலம் அகவிழிப்பு ஏற்படுமா என்பதை உறுதி செய்ய முடியாது. சூரியன் ஒளியை எங்கும் பரப்பினாலும் மண்ணிற்கு கீழ் இருக்கும் மண்புழுவிற்கு சூரியன் ஒவ்வாதது போல் குரு ஞானியாக இருந்தாலும் அறியாமையில் மூழ்கி இருக்கும் ஒருவனுக்கு ஞானியால் பலன் எதுவும் கிடைப்பதில்லை.

இன்று பலருக்கு தமது வியாபாரப் பிரச்சனை, உடல் நோய், மன அழுத்தம், வீட்டுப்பிரச்சனை, கடன் பிரச்சனைகளைத் தீர்த்துவைப்பவரே குரு என்ற பிம்பம் ஏற்பட்டுவிட்டதால் பலருக்கு இந்தப்பிரச்சனைகளைத் தீர்க்கும் ஆற்றல் உள்ளவர்களே குருவாகிப் போய்விட்டார்கள்.

அகவிழிப்பு வேண்டும் சாதகன் தனது குரு தனக்கு மட்டுமே உரித்தான இஷ்ட தெய்வம் என்ற உண்மை உணர்ந்து தனது சாதனையைத் தொடரவேண்டுமே அன்றி குருவின் புகழ் பரப்புகீறேன் என்று குருவைப் பற்றிய தேவையற்ற வதந்திகளை, அற்புத ஆற்றல் உள்ளவர் போன்ற நம்பிகைகளை மற்றவர்களுக்கு விதைக்கக் கூடாது. இது சாதகனின் ஆன்ம முன்னேற்றத்தையும், மற்றவரகளது மனதில் குழப்பத்தையும் ஏற்படுத்தும்.

காயத்ரி சாதனையும் புத்துணர்ச்சியும்

காயத்ரி சாதனை என்பது பிராண சாதனை. மூச்சை அடக்கி பிராணாயாமம் எதுவும் செய்யத்தேவையில்லை. சீரான நீண்டகால காயத்ரி சாதனையில் மனச் சலனம் அடங்குவதால் பிராண சேமிப்பு உண்டாகும். சரியான ஒழுக்கத்துடன், மன அடக்கத்துடன் காயத்ரி சாதனை செய்பவர்கள் உடலிலுள்ள நோய்கள் குறைந்து குணமாகும்.
ஆரோக்கியமானவர்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். பலர் காயத்ரி சாதனயால் வரும் புதுச்சக்தியை தம்மில் சேமிக்காமல் அதிகமான உடலுழைப்பு, பணம் சேர்த்தல் போன்றவற்றிற்கு செலவழித்து தமது சக்தியை இழந்து விடுவார்கள்.
கடன்வாங்கி வியாபரம் செய்த ஒருவன் காயத்ரி சாதனையால் தனது கடன் தீர்ந்தவுடன் தனது கர்மா தீர்ந்தது என்று ஞானத்துடன் அதற்குப் பிறகு கடனே வாங்கக்கூடாது என்று எண்ணம் கொண்டு தனக்கு அமைந்த வியாபாரத்தை சிறப்பாகச் செய்ய சிறந்து முன்னேறுவான். அப்படியில்லாமல் எம்மிடம்தானே காயத்ரி சாதனை இருக்கிறது, இன்னும் பல இலட்சம் கடன்வாங்கி வியாபாரத்தை விஸ்தரித்தால் சாதனை காப்பாற்றும் என்று பேராசைப் பட்டு செய்யப்போனால் பிரபஞ்ச ஞானசக்தி அவனுக்குத் துன்பத்தைக் கொடுத்து ஞானத்தை விழிப்பிக்கும். இந்தப்பாதை மிகக் கடினமானது. ஆகவே புத்தியுள்ள சாதகர்கள் தமது சாதனையில் வரும் சக்தியை அதிகமாக வீணாக்காமல் தம்மை பண்பிலும், குணமாற்றத்திலும் தெய்வ் உருப் பெற பயன்படுத்த வேண்டும்.
இதைப்போல் காயத்ரி சாதனை செய்யும் பிராண பலம் உள்ளவர்கள் இரவில் நித்திரை முழித்தாலும் அடுத்த நாள் உற்சாகமாக செயலாற்றும் வல்லமை இருக்கும். இப்படி இருப்பது ஒரு தற்காலிக நிலையே. ஸ்தூல உடல் இயற்கைக்கு கட்டுப்பட்டது. அது இரவில் ஓய்வெடுப்பதற்கும் படைக்கப்பட்டுள்ளது. ஒழுங்காகத் தூங்காமல் அதிக பிராணசக்தியால் உடலை களைப்படையச் செய்யாமல் வைத்திருந்தால் உடல் வலுவிழப்பது உணர்விற்குத் தெரியாமல் உடல் பாதிப்படைய ஆரம்பிக்கும்.
ஆகவே சாதகர்கள் தமது சாதனையால் அதிக பிராண சக்தி பெற்றாலும் அதை இயற்கைக்கு எதிரான வழியில் தவறாகப் பயன்படுத்தக்கூடாது.

கிருஷ்ணனும் காயாக் கோட்பாடும்

காயாக் கோட்பாடு கூறுவது பூமியின் சமனிலை மாறுபடும் போது அது தன்னை எப்போதும் ஒரு சீர்திட நிலையில் வைத்துக் கொள்கிறது என்பது. 
சம நிலையை குலைக்கும் செயல்களை எதிர்மறை பின்னூட்டம் (Negative feedback) என்றும் சரிப்படுத்தும் செயலை நேர்மறை பின்னூட்டம் (Positive feedback) என்றும் குறிப்பிடுகிறார். 
இதனை இந்த கோட்பாட்டினைக் கூறிய விஞ்ஞானி கடந்த 4.5 பில்லியன் ஆண்டுகளில் ஏற்பட்ட வெப்பமாற்ற அளவின் மூலம் உய்த்தறிந்துள்ளார். 
இப்படி பூமி தனது எதிர்மறை பின்னூட்டங்களை சமப்படுத்தி பூமியை ஆரோக்கியமாக வைத்திருக்கும் செயலையே Gaia என்று குறிப்படுகிறார். 
Gaia defined as a complex entity involving the earth's biosphere, atmosphere, oceans, and soil; the totality constituting a feedback or cybernetic system which seeks an optimal physical and chemical condition of life on this planet.
இனி சுவாரசியம் என்னவென்றால் கிருஷ்ணன் பகவத் கீதையிலும் இப்படி ஒன்றினைப் பற்றிக் குறிப்பிடுகிறார். 
தர்மம் என்பது ஒழுங்கு, சம்ஸ்க்ருதத்தின் அதன் சரியான பொருள் அச்சில் சுழலுவதற்கு பிணைக்கும் அச்சாணி அல்லது செயல் என்று பொருள். அதாவது positive feedback என்று பொருள். அதர்மம் என்றால் ஒழுங்கைக் குலைக்கும் செயல் என்று பொருள். அதாவது negative feedback என்று பொருள். 
இனி கீதையில் கிருஷ்ணன் கூறுவதைப் பார்ப்போம். 
யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்
எப்பொழுதெல்லாம் எங்கெல்லாம் தர்மம் சீர்குலைவு ஏற்பட்டு அதர்மத்தின் ஆதிக்கம் ஏற்படுகிறதோ, அச்சமயத்தில் நான் சுயமாகத் தோன்றுகிறேன். Gaia will establish the homeostasis. 
பரித்ராணாய ஸாதூனாம் விநாஷாய ச துஷ்க்ருதாம்
தர்மசம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே
நல்லவற்றைக் காப்பாற்றவும், துஷ்டர்களை அழிக்கவும், தர்மத்தை நிலை நிறுத்தவும் நான் யுகம் தோறும் தோன்றுகிறேன். 
ஆக ஒழுங்கு கெடும் போது இயற்கை தன்னைத் தானே ஒழுங்குபடுத்தி சம நிலைப்படுத்த எப்போதும் ஏதாவது ஒரு வழிமுறையினை வைத்திருக்கிறது என்பதே இதன் அடிப்படை! 
ஆக இயற்கை தன் கடமையைச் செய்யும்!

தலைப்பு இல்லை

நாம் இரண்டு வகைப் பாகல் இயற்கை வேளாண்மை முறையில் பயிரிடுகிறோம். 

ஒன்று மாத்தளை பச்சை - கடும்பச்சையாக இருக்கும். 

மற்றது தின்னவேலி (திருநெல்வேலி மருவி தின்னவேலி ஆயிற்று) வெள்ளை - வெளிர் பச்சை நிறத்தில் இருக்கும். 

இரண்டுமே நம்ம ஊர் இனம் என்பதில் பெருமை     

எமது பாகற்காய் உண்டவர்கள் அதன் சுவை பற்றி உயர்வாகக் கூறுகிறார்கள். மகிழ்ச்சி!

பாகல் ஒரு மூலிகை. நவீன ஆய்வில் புற்று நோய் தடுப்பானாகவும் இனங்காணப்பட்டுள்ளது. 

பொதுவாக மரக்கறிகளை மருத்துவ குணமுடையது என்று கூறுவதாக இருந்தால் அது இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டிருக்க வேண்டும். 

கத்தரி ஈரலிற்கு நல்லது என்று சித்தர்கள் பதார்த்த குணவிளக்கத்தில் கூறியிருக்கிறார்கள். இதை அப்படியே எடுத்துக்கொள்ள முடியாது. தற்போது அடிக்கப்படும் பூச்சிகொல்லி ஈரலை முழுமையாக கெடுத்துவிடும். 

பிறகு கத்தரிக்காய் சாப்பிட்டதால் ஈரல் பழுதாகியது என்றும் சித்த மருத்துவத்தில் சொல்லப்படுவதெல்லாம் பொய் என்றும் பரப்புரை செய்யத் தொடங்கிவிடுவோம். 

சரியான முறையில் விளைவிக்கப்பட்டால் உணவே மருந்தாகும்!


Saturday, November 09, 2019

c

திருமணமான பின்னர் சென்னை செல்கிறேன், ஒரு சீட்டினைக் கொடுத்து அதிலுள்ள பொருட்களும், துணிமணிகளும் அங்கு சரவணா ஸ்டோர்ஸிலும், நல்ல இனிப்புக் கடையில் மைசூர்பாகும் வாங்கிக் கொண்டு வாருங்கள் என்று சொன்னாள் மனைவி! 

சென்னையிற்கு வந்த எமக்கோ கிரி ட்ரேடிங்கிலும், இக்கின் போதம்ஸிற்கு சென்றதுடன் 40 கிலோ லக்கேஜ் புத்தகங்கள் நிரம்பிவிட்டது. சீட்டும் மறந்துவிட்டது, மைசூர்பாகும் மறந்து விட்டது. 

இரண்டு பெட்டி நிறைய வீடு செல்ல, துணியும், மைசூர்பாகும் இருக்கும் என்று ஆர்வமுடன் பெட்டியைத் திறந்த மனைவிக்கோ பெட்டி நிறையப் புத்தகங்கள்! 

நானோ பாரதியார் செல்லம்மாவிற்கு சொன்னதைப் போல அறிவுரை எல்லாம் சொல்லாமல் புத்திசாலித்தனமாக சென்னையில் மைசூர்பாகு இல்லை மைசூரில் தான் இருக்காம் என்று சமாளிக்க இன்று வரை ஒவ்வொரு முறை சென்னை செல்லும் போதும் சென்னையில் மைசூர்பாகு இல்லையா என்று சிலேடைப் பேச்சு சுவாரசியம்!    

ஒவ்வொரு முறையும் சென்னையிலிருந்து பெட்டி நிறைய புத்தங்கள் தான் வந்திறங்கிக் கொண்டு இருக்கிறது. 

கீழுள்ள சம்பவம் இதனிலும் சுவாரசியம்!


தலைப்பு இல்லை

எனது பல்கலைக்கழக சூழலியல் விஞ்ஞான பட்டப்படிப்பின் இறுதியாண்டு ஆய்வுத் திட்டம் சூழலியல் முகாமைத்துவம் தொடர்பானது. நகர சூழலியல் முகாமைத்துவத்தை (Urban Environmental Management) எப்படி காயா கோட்பாட்டின் (Gaia Theory) மூலம் புரிந்துக் கொள்ளலாம் என்று தொடங்கி பின்னர் அதற்குள் குழப்பக் கோட்பாட்டின் (Chaos Theory) மூலம் புரிந்து கொள்வது பற்றி ஆராய்ந்திருந்தேன். இளநிலைப் பட்டத்திற்கு அது தேவையில்லை என்றாலும் எனக்கு வாய்த்த எனது ஆய்வு மேற்பார்வையாளர் எனது அறிவுப் பசிக்கு எவ்வளவு அள்ள முடியுமோ அவ்வளவு அள்ளிக் கொள் என்ற அளவில் சுதந்திரம் தந்திருந்ததால் இது சாத்தியமாகியது. 
இந்த காயாக் கோட்பாடு பூமியை ஒரு ஒருங்கிணைந்த ஒரு உயிரினமாக பார்க்க வேண்டும் என்று அறிவியலுக்கு பரிந்துரை செய்திருந்தது. சுருக்கமாகச் சொல்லுவதானால் பூமியிலுள்ள உயிரங்கிகள் அனைத்துமாக ஒன்று சேர்ந்து சடப்பொருட்களை தமது வாழ்க்கையிற்கு ஏற்றவாறு சரிபடுத்தி சம நிலைப்படுத்துகிறது என்று இந்தக் கோட்பாடு முன்மொழியப்பட்டது. பரிணாமத்தில் சூழலும் உயிரங்கிகளும் ஒன்றையொன்று சார்ந்து வளர்ச்சியடைகிறது. உயிரங்கிகள் சூழலின் மீது செல்வாக்குச் செலுத்த அந்தச் சூழலில் உயிரங்கிகள் டார்வீனியன் பரிணாமக் கோட்பாட்டின் மூலம் இந்தப் புவி பரிணாமம் அடைந்தது என்பதே இந்தக் கோட்பாட்டின் அடிப்படை!
இந்தக் கோட்பாடும் சூழலியல் சார்ந்த பல பிரச்சனைகளை கேள்விக்குள்ளாக்குகிறது, வளி மாசடைதல், புவிவெப்பமடைதல் போன்றவை தற்போது கூறப்படும் கருத்துக்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்ற வாதத்தையும், கடந்த 4.5 மில்லியன் வருடங்களில் புவி தன்னைத் தானே சம நிலைப்படுத்தி உயிர் வாழ்க்கையைத் தக்கவைத்துக் கொள்கிறது என்பதையும் முன்வைக்கிறது. 
உயிர் வாழ்க்கை பற்றி விஞ்ஞானம் புரிந்துக் கொள்வதற்காக அடிப்படைகளை இந்தக் கோட்பாடு ஒன்று சேர்க்கிறது.

Friday, November 08, 2019

தலைப்பு இல்லை

Indian Roller sitting on our Farm fence to do its duty
They feed mostly on ground insects. Nearly 50% of their prey are beetles and 25% made up by grasshoppers and crickets. So obviously they are our unpaid workers in our farm as a pest controllers

Thursday, November 07, 2019

வளி மாசடைதல் எனும் ஞானி

மனிதனின் தன்னைத் தாண்டி தான் செய்யும் செயல் மற்றவனையும் பாதிக்கும் என்பதை புரியவைக்கும் ஞானகுருவே வளிமாசடைதல். 
நீங்கள் அனுபவிக்கும் வளி மாசிற்கு நீங்களே காரணமாக இருக்க வேண்டியதில்லை என்பதே உண்மை! காரணம் எங்கோ இருக்கும் பலரின் கூட்டு விளைவாக இருக்கும். 
இதை trans-boundary effect என்பார்கள். மனிதன் பகுத்து வைத்த எனது நாடு, உனது நாடு என்ற வேற்றுமை இல்லாமல் எங்கும் எங்கு ஊடுருவும் வல்லமை உள்ளது நீரும், வளியும் ஆகாயமும். 
நேற்று இரவு கொழும்பில் வளிமாசடைந்துள்ளது, பாவப்பட்ட கொழும்புச் சனங்கள் என்று கூறி தூங்கி எழுந்தால் காலையில் கண்டியிலும், மாத்தளையிலும் புகை மண்டலம்! பனி என்று நினைத்தால் வழமையான குளிர் இல்லை. 
சரி என்று யாழ்ப்பாணத்திலிருக்கும் நண்பருக்கு அழைத்தால் யாழ்ப்பாணமும், வன்னியும் அதே நிலமை தானாம்!
ஆக இலங்கை முழுமைக்கும் வளிமாசடைதல் நிகழ்ந்துள்ளது. 
பஞ்ச பூதங்களில் நிலத்தை மட்டும்தான் மனிதன் மேலோட்டமாக தனக்கு என்று உரிமை கொண்டாட முடியும், மற்றவை எல்லாம் அசைந்து மனிதன் கட்டுப்பாடு இல்லாமல் ஓடுபவை. இவற்றைச் சீண்டும் போது அது தனது பங்கிற்கு நாம் தருவதை மீண்டும் பல பங்காக தந்துவிட்டுப் போகும். 
ஆக மனிதன் தன்னை இலங்கையன், இந்தியன், சீனன், அமெரிக்கன் என்று கற்பனை செய்து கொண்டாலும் இயற்கைக்கு அவனும் புழுவும், மண்ணும், பாம்பும் எல்லாம் ஒன்று தான்! அவன் செய்யும் செயல்களை சேர்த்து வட்டியும் முதலுமாக பெருக்கிக் கொடுக்கும்!

கொழும்பு வளி மாசும் டெல்லியும்

The problem is we don't know what the climate is doing, We though we knew 20 years ago. that led to some alarmist books - mine included - because it looked clear cut, but it hasn't happened.

- James Lovelock - 

Earth System Scientist

இன்று 06/11/2019 கொழும்பும் சுற்றுப்புறமும் வளி மாசடைதல் உயர்வாக காணப்பட்டுள்ளது. 

எல்லாவற்றிற்கும் காரணம் உடனடியாக டெல்லியும் மோடியும் என்ற தமிழ் நாட்டுப் பாணியில் இங்கும் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

இதனை அறிவித்த இலங்கை கட்டிடங்கள் திணைக்கள ஆய்வாளர் டெல்லி மாசு காரணமாக இருக்கலாம் என்று ஊகம் வெளியிட்டிருக்கிறார். இது வேடிக்கையான ஒரு கூற்று. 

டெல்லியில் இருந்து கொழும்பிற்கு வளி மாசு வருவதற்குரிய காற்றுப் பாதை எதுவுமில்லை. தற்போதைய காற்றுச் சுழற்சி அரபிக் கடலில் இருந்து வந்து இலங்கையைக் கடந்து வங்காள விரிகுடாவிற்குச் சென்று கொண்டு இருக்கிறது. படம் பார்த்துப் புரிக. 

அமெரிக்க தூதுவராலய கண்காணிப்பின் படி வளிமாசடைதல் சுட்டெண் (Air Quality Index - USA) பிரகாரம் 187 எண்ணை அதிகபட்சம் அடைந்து தற்போது குறைந்து வருகிறது. 

வளிமாசடைதல் சுட்டெண் என்பது ஐந்து காரணிகளை அளவீடு செய்து மதிப்பிடுவது. 

1) Ground-level ozone, 

2) Particulate matter, (PM 2.5 & PM 10)

3) Carbon monoxide, 

4) Sulfur dioxide, and 

5) Nitrogen dioxide

இவற்றுள் இலங்கையில் அதிகரித்துள்ளதாக காணப்படுவது PM - 2.5 எனப்படும் நுண் துணிக்கைகள். இதன் அர்த்தம் வளியில் காணப்படும் துணிக்கைகளின் அளவு 2.5 மைக்ரோ மீற்றருக்கு (μm) குறைவான அளவில் உள்ள துணிக்கைகள் அதிகரித்துள்ளன. 

இந்த துணிக்கைகளுக்குரிய மிக அதிக பங்களிப்பாளர்கள் மணல், கனிமத் துணிக்கைகள்!

இரண்டாவது பெரிய பங்களிப்பாளர் கடல் காற்றிலிருக்கும் உப்பு! இதிலிருந்து magnesium, sulfate, calcium, potassium போன்றவை இருக்கலாம். 

ஆக இலங்கையிற்கான சாத்தியம் கடல் உப்பிலிருந்து வந்திருக்கலாம். மழை காலம் கடலிலிருந்து வரும் நீர் உப்பினைக் கொண்டு வரும்.

இவ்வளவு காலமும் இல்லாத மாசு இப்போது ஏன் வர வேண்டும் என்ற கேள்விக்கு எனது அனுமானம் கடலிலிருந்து வரும் காற்றை மறித்து கொழும்பிற்குள் காற்றைச் சுற்றவிடும் வானுயர்ந்த கோபுரங்களும் கட்டிடங்களும் தான்! 

முன்னர் கடலிலிருந்து எழும் காற்று கொழும்பைத் தாண்டி அப்படியே மலை நாட்டில் வந்து தாக்கி தனது உப்பைக் கொட்டிக் கொண்டிருந்த காற்றை மறித்து கொழும்பிலே கொட்டும் காரியத்தை இனிமேல் இந்தக் கட்டிடங்கள் செய்யும்! 

கட்டிடம் கூடக் கூட இந்தப் பிரச்சனை கூடத்தான் போகிறது!


தலைப்பு இல்லை

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். தற்கொலைக்கான காரணம் பலவாறாக ஊகிக்கப்படுகிறது. 
என்னைப்பொறுத்த வரையில் நாம் உள்ளுணர்வு அற்ற சமூகமாகவும், மற்றவர்கள் உணர்வைப் புரிந்து கொள்ள முடியாத இறுக்க மனம் படைத்தவர்களாக்கும் கல்வி முறையும், சமூகக் கட்டமைப்பும் இருக்கிறது என்பது தான் காரணமாக இருக்கிறது. 
சிறுவயதிலிருந்து எதையாவது சாதிக்க வேண்டும் என்று மனதை நெருக்கும் பெற்றோர்களும், சமூகமும் எப்படிச் சாதிப்பது என்ற வழியைச் சொல்லிக் கொடுப்பதில்லை! அப்படிச் சாதிக்க முடியாவிட்டல் அதைப் படிப்பினையாக எடுப்பது எப்படி என்பதைச் சொல்லித் தருவதில்லை! 
மனம் என்ன? மனதிற்கும் உடலுக்கும் ஓய்வு தரவேண்டிய அவசியம் என்ன? பரீட்சையிலோ வாழ்க்கையிலோ சித்தியடையாவிட்டால் அதற்கு காரணம் என்ன என்று சிந்திக்கும் படி மனதைப் பழக்காமல் உணர்ச்சிவசப்படவும், கவலைப்படவும், பயப்படவும், எம்மை நாமே தாழ்வாக எண்ணவும் நாம் எம்மையும், குழந்தைகளையும் பழக்குகிறோம். 
கல்வி என்பதை வகுப்பறையும், பரீட்ச்சைத் தாள்களும், பெறுபேறுகளும் என்று கடிவாளம் கட்டிய குதிரைகளாக மாணவர்களை ஆக்கிவிட்டு படிக்க வரும் பல்கலைக்கழகத்தில் பகிடிவதை, விரிவுரையாளருக்கு வால் பிடித்தால் தான் நல்ல பெறுபேறு, அங்கும் யார் முதல் என்ற போட்டி இப்படித் தான் எமது பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. விரிவுரையாளரிடம் கேள்வி கேட்டால் அவரை அவமதிப்பு செய்துவிட்டதாக பழிவாங்கல் படலம் இப்படி எல்லாம் சமூக ஒழுக்கங்களைக் கற்பிக்கும் கூடங்களாகத் தான் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. 
மாணவனின் உளத்தை வளர்க்காத கல்வியால் என்ன பயன்?

Tuesday, November 05, 2019

தலைப்பு இல்லை

திருவள்ளுவர் யார் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு வாக்குவாதப்படுவது, வள்ளுவர் யாராக இருந்தால் அவர் கூறிய கருத்து எமது கருத்தாகாமல், வாழ்வாகாமல் அதனால் எந்தப் பயனும் இல்லை என்பதே உண்மை! 

எந்த ஒரு ஞான நூலிலும் அது எழுதப்பட்ட காலத்திற்குரிய சமூக வழக்கின் நியதியும், மனித குலத்தின் எந்தக் காலப் பகுதிக்கும் பொருந்தும் நியதிகளும் இருக்கும். எந்தக் காலத்திற்கும் பொருந்தும் அதிக நியதிகளைக் கொண்ட நூல் திருக்குறள்! அது மனித குலத்தின் முழுமைக்கும் வழிகாட்டும்! 

கடந்த நூற்றாண்டு மனோ பாவம் தான் தனது தகுதியை வளர்த்துக் கொள்ளாமல் தற்பெருமைக்காக பழம் பெருமை பேசுதல், திருவள்ளுவர் எம்மவர் என்று உரிமை கொண்டாடும் ஒவ்வொருவனும் திருவள்ளுவருக்கு இருக்கும் ஞானத்தில் ஒரு பங்காவது இருக்கிறதா என்பதை சுய பரீட்சை செய்வதும், திருக்குறள் எவ்வளவு ஆழமாகக் கற்றிருக்கிறோம், கற்றபடி எவ்வளவு நிற்கிறோம் என்பதை சுய ஆராய்ச்சி செய்வது நலம். 

திருவள்ளுவர் எந்த ஜாதியாக இருந்தாலென்ன? மதமாக இருந்தாலென்ன? வள்ளுவன் கூறிய வாழ்க்கை முறையில் வாழ்கிறோமா என்பதே கேள்வி!

திருவள்ளுவர் எம்மவர் என்ற பழம் பெருமை என்பது அந்த ஞானத்தை அடைவதற்குரிய உந்துதலை உருவாக்கவேயன்றி சமூகத்தைக் குழப்பும் விஷமாகக் கூடாது. திருவள்ளுவர் நம்மவர் என்றால் திருக்குறள் கூறும் வாழ்க்கை முறையை நாம் வாழவேண்டுமே அன்றி அதைச் சர்ச்சையாக்கக் கூடாது. 

அரசியலுக்கும், முட்டாள் உணர்ச்சிவசப்பட்ட சமூகத்தை உருவாக்கவும் நல்ல விவாதங்கள் இவை! 

#திருவள்ளுவர்


Sunday, November 03, 2019

தலைப்பு இல்லை

We grow little... path is long!
Need to work with Nature 
We corrected our major packaging to be eco friendly paper bags! Still need to improve..
Who ever supporting this initiative is a part of this journey..we thanks and gratitude to them    
Real meaning of Supporting is not only ideas & advice, but also being a customer to the business.
We pledge to provide healthy naturally grown vegitables whoever supporting our initiative...

Saturday, November 02, 2019

தலைப்பு இல்லை

Driving...

I like to Drive! Not only Car but also life...

Driving mean you are flowing..

Driving mean you are following the path & signal

Driving teach to obey the rules..

Driving show the curves and barriers of paths..

Driving reach destination...

Driving needs concentration...

Driving needs balance...

Driving needs awareness...

Driving shows you the new areas...

Driving will give you the satisfaction...

Life is driving...

Breath is driving..

Mind is driving...

Who is Driving the whole life is a riddle!


பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...