இந்த வாரம் பகவான் ஸ்ரீ அரவிந்தரின் பிறந்த தினம்!
அவரது இறுதிக் கவிதைகளில் ஒன்று Golden light எனப்படும் பொன்மய ஒளியைப் பற்றியது! இதை அகத்திய மகரிஷி தனது சௌமியசாகரத்தில் உடலில் இறைசக்தி ஜோதியாக எப்படி, எங்கே இருக்கிறது என்பது பற்றியும் அது எப்படி உடல் முழுவதும் பரவுகிறது என்பது பற்றித் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். உடலை, மனதை பொன்மய பேரொளியால் நிரப்பி மகாகாரண சரீரம் ஆக்கி செயல் கொள்ளும் நிலை அறிந்தவர்கள் தமிழ் சித்தர்கள்!
இதை யோகமாக பகுத்து ஆராய்ந்து தெளிவாக ஸாவித்ரி காவியமாக உலகமக்கள் அனைவரும் அறிந்து கொள்வதற்கு ஆங்கிலத்தில் ஸ்ரீ அரவிந்தர் எழுதி வைத்துள்ளார்! இதை தானும் சாதித்து மனித குலம் முழுவதற்கு கிடைத்தால் மனித குலம் தெய்வ குணத்தாலும் பண்பாலும் மாறும் என்று முயற்சித்தார். அதில் வெற்றியும் பெற்றார்!
இந்தப் பொன்னிற ஒளி உடலில், மனதில் பிரதிபலித்தால் அவனது ஆன்ம பரிணாமம் உயரும் என்பதே சித்தர்களில் யோகம்!
இந்தக் கவிதையை 8-8-1938 திகதி எழுதி மீண்டும் 22-3-1944 திருத்தியதாக பதிப்புக் குறிப்பு சொல்கிறது.
இந்தக் கவிதையை தமிழில் என். வி. பாலு என்பவர் ஸ்ரீ அரவிந்தரின் அக்னிப் பறவை எனும் நூலில் மொழிபெயர்ப்புத் தொகுப்பாக வெளியிட்டுள்ளார்கள்.
பொன்மய ஒளி
********************
பொன்மயமாக உள்ள உன் ஒளி எந்தன் மூளை
தன்னுள்ளே கீழிறங்கித் தகவுடன் புகுந்ததாலே
அரையிருள் அறைகளாக இருந்திரும் என்மனந்தான்
நிறை சுடர் கதிவவன் தான் நீள்கரத் தீண்டலாலே
ஒளிமிக உற்றதே போல் உயர் அறிவான சித்தின்
தளமாக ஒளிரும் வண்ணம் தந்திடும் விடைதான் என்றும்
அமைதியாய் விளக்கிக் கூறும் ஆன்றதோர் ஞானம் பெற்றே
குமைதலில்லாத வண்ணம் குறைகள் தீர்த்திருக்குமன்றே
என்னுடைய குரல் வளைக்குள் எங்கணும் இறங்கிற்றன்றே
உன்னுடைய பொன்மயத்தோர் உயர் ஒளிவறியதே யான
என்சொலும் தேவப் பண்ணாய் இலங்கிடும் என்னென்பேன் நான்!
என்சொலே தெய்வ மாதுவைக் குடித்திட்ட தாலெ நானே
பாடிடும் பாடல் எல்லாம் பரமனின் புகழ் பரப்பும் நாடிடும் நன்றி கீதம் ஆகவே ஒலித்திருக்கும்.
எந்தன் இதயந்தன்னில் இறங்கிய உன்பொன் ஒளியே
உந்தன் நித்தியத்தால் உற்றதோர் தாக்கத்தாலே
வாழ்வதே அமரத் தன்மை வாய்ந்ததாய் ஆயிற்றன்றே!
தாழ்விலாது என்றும் நானே தகுதிறன் பெற்றிப் பாரில்
நீயுந்தான் அகலாது என்றும் நித்தியமாக நிற்பது ஆயதோர் ஆலயம்மாய் அஃதுரு மாறிற்றன்றே
அதனுடை உணர்வுகள் தாம் அழுத்தமாய் உன்னைச் சுட்டும்
விதமாக வேறொன்றைத்தான் வியக்காமல் இருக்குமன்றே!
எந்தனின் பாதந் தன்னில் பொன்மயமாயிருக்கும் உந்தனின் ஒளியிறந்த அக்கணம் எந்தன் பூமி
நத்தி நீ விளையாடத்தான் நன் கமை களமாய் நீதான் நித்திய கொலுவீற்றிருக்கும் இருக்கையாய் ஆயிற்றன்றே!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.