விநாயகர் சதுர்த்திக்கு ஸ்ரீ சாகம்பரா பிள்ளையார்! வந்து சேர்ந்தார் எமது தோட்டத்திற்கு!
குரு நாதர் ஆசியுடன்
குரு நாதர் ஆசியுடன்.............
இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!
இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!
ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ
ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ
ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ
ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !
ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ
ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!
ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ
இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!
மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here
2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்
நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.
அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே
உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!
ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே
இங்கே
Friday, August 30, 2019
தலைப்பு இல்லை
வாதுக்குறி வைத்தியரே சொல்லக்கேளீர்
வாகாக்கண் மூன்று தலைகள் நான்கு
நீதமுடன் முகங்களைந்து கைகளாறு
நிலை சரீரங்களெட்டு கால்கள் பத்து
வீதமிதன் பயனறிந்தார் வியாதி தீர்ப்பார்
விதமறியார் மானிடரைப் பழியே செய்வார்
செதமாஞ்ச் செய்மருந்து பலித்திடாது
செத்தபின்பு தீ நரகிற் சேருவாரே
(அகத்தியர் வைத்திய சாரம் - பாடல் எண்:05)
இந்தப் பாடலில் பொருள் என்னவென்றால் நோய்கள் எப்படி கிளைவிடும் என்பதைக் கேளும் வைத்தியரே, வாது என்றால் மரத்தின் கிளை என்று பொருள். வாதுக்குறி என்றால் எப்படி நோய் கிளைவிடும் வைத்தியரே என்பதே வாதுக்குறி வைத்தியரே சொல்லக்கேளீர் என்ற வார்த்தையின் பொருள்!
அடுத்து நோயினை ஒரு உடல் என்று உருவகித்தால் அதனுடைய அங்கங்கள் எவை என்பது பற்றிய விளக்கம்!
கண்கள் காண்பதற்கு உரியது! ஒரு உடலில் இருக்கும் நோயினைக் கண்டுகொள்ள மூன்று கண்களைப் பற்றி தெளிவாக வைத்தியன் அறிந்திருக்க வேண்டும்!
எல்லாப் பிரச்சனைகளும் சேரும் இடம் தலை, நோய்கள் சேரும் தலைகள் நான்காகும்.
அகத்தின் அழகு முகத்திற் தெரியும், அது போல் நோயின் நிலைகள் தெரியும் முகங்கள் ஐந்தாகும்.
நாம் எதைச் செய்வதற்கும் கைகள் தேவை, அது போல் நோய் செயற்படும் கைகள் ஆறு, இதைப் பற்றி வைத்தியர் அறிய வேண்டும்.
நோய் சரீரத்தில் நிலை கொண்டு வெளிப்படும் இடம் எட்டு! இந்த எட்டு நிலைகளையும் பரிசோதிக்க வேண்டும்.
நோய் ஸ்திரம் கொள்ள இருக்கும் கால்கள் பத்து! இதையும் அறிய வேண்டும்.
இப்படி நோயின் கண்கள், தலைகள், முகங்கள், கைகள், நிலைகள், கால்கள் ஆகிய ஆறு அங்களையும் அறிந்து வைத்தியம் செய்தால் மட்டுமே வைத்தியம் பலிக்கும்!
இன்று பலரும் மூலிகை வைத்தியம், இயற்கை வைத்தியம் என்று தாவரத்தை மாத்திரம் நம்பி செயற்படும் என்று பரிந்துரை செய்கிறார்கள்.
ஆனால் சித்த மருத்துவம் ஒரு முழுமையான நோயைப் பற்றிய systemic analysis இனைக் கூறுகிறது.
இதற்கு அடுத்த பாடலில் இந்த ஆறு அங்கங்களும் எவை என்பது பற்றி விளக்கமாகக் கூறுகிறார்.
மருந்து சுத்தி குணம் நிகண்டு மூன்றாம்
வாத பித்தசிலேட்டும தொந்தந்தலைகள் நான் காம்
அருந்தும் அறுசுவையறிதல் கைகளாறாம்
அஷ்டவிதக்குறியறிதல் சரீரமெட்டாம்
இருந்த தச நாடி தசவாயுவிரண்டும்
இதமாகப் பார்த்திடில் கால்கள் பத்தாம்
பொருந்தியதோர் பிணட நிலை முகங்களைந்தாம்
பொதிகைமலை அகஸ்தியனார் புகன்றவாறே
(அகத்தியர் வைத்திய சாரம் - பாடல் எண்:05)
மருந்து, அதைச் சுத்தி செய்தபின்னர் அதன் குணம் (குண, வீரிய, விபாகம்), ஒரு மூலிகைக்கு பல பெயர் இருந்தால் அதன் விபரம் அறியக் கூடிய நிகண்டு! இந்த மூன்றுமே வைத்தியரின் கண்கள்!
நோய் என்பது முத்தோஷங்களின் சம நிலை! வாதம், பித்தம், சிலேத்துமம் இது மூன்றும் எப்படி உடலில் இயங்குகிறது, சம நிலை கெடுகிறது என்பது பற்றி வைத்தியன் தெளிவாக அறிந்து இந்த மூன்றும் ஒன்றுடன் ஒன்று கலந்து தொந்தித்தால் எப்படி செயல்புரியும் என்று அறிந்தால் நோயின் தலைகளைக் கண்டுபிடிக்கலாம்!
நோய் செயற்படுவதை உணவின் சுவை மாறுபாட்டால் அறியலாம், ஆகவே அறுசுவையும் நோயாளிக்கு எப்படி மாறிச் சுவைக்கிறது என்பதை அறிந்தாலும் நோயின் தோஷத்தின் குழப்பத்தை அறியலாம்.
நோய் சென்று நிற்கும் இடங்கள் எட்டு, அவை நாடி, ஸ்பரிசம், நா, நிறம், மொழி, விழி, மலம், மூத்திரம். இந்த எட்டின் நிலைகளைப் பரீட்சித்தால் நோயின் நிலை என்னவென்று அறியலாம்!
நோயோ, அன்னாதி உணவோ, மருந்தோ உடலிற்குள் நடக்கும் கால்கள் தசப்பிராணனும், அவை சஞ்சரிக்கும் தச நாடிகளும் இவற்றின் செயற்பாட்டினை அறிந்திருக்க வேண்டும்.
இவையெல்லாம் பொருந்தி பிண்டமாகிய ஞானேந்திரியம், கர்மேந்திரியம் என்ற ஐந்திலும் வெளிப்படுவது நோயின் உக்கிரத்தை (அழகைக்) காட்டும் முகங்கள் ஐந்தாம்!
இதுவே பொதிகைமலை அகஸ்தியனார் வைத்தியர்களுக்கு கூறிய அறிவுரை வைத்தியரே!
இவற்றைத் தெரியாமல் எவருக்காவது வைத்தியம் செய்கிறேன் என்று மூலிகைகளோ, மருந்துகளோ தருபவன் மானிடரிற்கு இன்னும் நோயைக் கூட்டும் பழியைச் செய்பவன்! செய்யும் மருந்தும் பலித்திடாது! செத்த பின்பு தீய நரகத்தில் சேர்வான்!
இந்தப் பாடல்கள் இரண்டையும் படித்துப் பொருள் காணவேண்டும்!
Thursday, August 29, 2019
தலைப்பு இல்லை
Wednesday, August 28, 2019
தலைப்பு இல்லை
New plots are ready for planting Natural Zero synthetic chemical use, Organic Vegitable cultivation
சூழலைப் பாதுகாப்போம் காடழிப்பைத்தடுப்போம்
Tuesday, August 27, 2019
தலைப்பு இல்லை
அம்பிகை வாஸுதேவமயி!
இந்த கிருஷ்ண ஜெயந்தி, அஷ்டமி முடிய, வாங்காமல் இருந்த பன்னிரெண்டு பாகவத புத்தகங்களும் இஸ்கான் சென்று வாங்கியாகிவிட்டது!
பிரபுபாதரின் உரை அனுபவப்பூர்வமானது, ஆழமானது!
பூரணமாக படித்து கிருஷ்ண தத்துவத்தை புரிந்து கொள்ள குருவருளை வேண்டிக் கொண்டு....
தலைப்பு இல்லை
தலைப்பு இல்லை
நேற்றைய புத்தக கொள்வனவு!
சேப்பியன்ஸ் – ஹோமோ டியஸ் என்ற இந்த இரண்டு புத்தகங்களும் தமிழில் நாகலட்சுமி சண்முகம் மொழிபெயர்த்துள்ளார்! ஆங்கில நூற்களை தமிழ்படுத்துவதில் அவரிற்குள்ள புலமைக்கு அவரே நிகர்!
மனித குலத்தின் வரலாற்றுக் கதை!
தொடக்கம் பிரபஞ்சம் இயக்கம், காலம் வெளி என்ற இயற்பியலில் தொடங்கி, பின்னர் அணுக்கள் மூலக் கூறுகள் என்ற வேதியலாகி, பின்னர் உயரினமாகி உயிரியலாகி, பின்பு உயிரினங்களது பரிணாமம் தான் வரலாறு ஆகிறது என்ற சுவாரசிய வரைவிலக்கணத்துடன் தொடங்குகிறது.
அறிவுப்புரட்சி
வேளாண்மைப் புரட்சி
அறிவியல் புரட்சி என்ற மூன்றும் மனித குலத்தினை எப்படி மாற்றியது என்பது பற்றி உரையாடுகிறது.
சேப்பியன்ஸ் மிகச் சுவாரசியமான புத்தகம் வாசிக்கத் தொடங்கி விட்டேன்!
ஹோமோ டியஸ் என்பது மனிதனுக்கு அடுத்த தெய்வ நிலையைக் குறிக்கிறது என்ற சுவாரசியத்துடன் புத்தகத்தின் பின் அட்டை கூறுகிறது. கட்டாயம் வாசிக்கப் போகிறேன்.
Sunday, August 25, 2019
தலைப்பு இல்லை
நன்றி Nishānthan Ganeshan!
நிகழ்ச்சி பார்க்காதவர்களுக்காக பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சி!
தலைப்பு இல்லை
நாளை காலை சக்தி தொலைக்காட்சியில் Good Morning Sri Lanka நிகழ்ச்சியில் அமேசன் காடுகளில் ஏற்பட்ட தீ, உலகில் ஏற்படுத்த இருக்கும் மாற்றங்கள் என்ன? என்ற தலைப்பில் உரையாட இருக்கிறேன்!
நேரமுள்ளவர்கள் பார்த்துவிட்டு கருத்துப் பதியுங்கள்!
Friday, August 23, 2019
தலைப்பு இல்லை
Today Harvest of our Naturally grown Brinjal, Ready to pack for Customers!
Will be delivered to Colombo tomorrow, If anybody needed please text me!
தலைப்பு இல்லை
கிருஷ்ணனின் வாழ்க்கை உலக வாழ்க்கையின் எல்லாப் பணிகளையும், செயல்களையும் உள்வாங்கிக் ண்டு எப்படி தெய்வீக ஆளுமையை அடைவது என்பதைச் சொல்லும்!
செயல் புரிந்துகொண்டு தெய்வ உணர்வில் இருக்கலாம் என்பதைச் சொல்லும்!
காமத்தை தெய்வீக அன்பாக மாற்றுவது எப்படி என்ற சேதி சொல்லும்!
கோபம், குரோதம் இல்லாமல் எப்படிப் போர் செய்வது என்று சொல்லும்!
பெரும் குழப்பத்திற்கு மத்தியில் அமைதியாக செயல் புரிவது எப்படி என்று சொல்லும்!
பசுவைக் கொண்டு மண்ணை வளப்படுத்தும் இயற்கை வேளாண்மையை மனித குலத்திற்கு தந்த அறிவியலாளன்!
கிருஷ்ணன் மனிதன் பூரண்மாவதற்குரிய பாதையைப் பூமியில் திறந்தவன்!
மனிதன் தெய்வத் தன்மை அடைவதற்குரிய உத்வேகம் கிருஷ்ணன்!
Sunday, August 18, 2019
இயற்கை வேளாண்மையின் அடிப்படைகள் - 01
Thursday, August 15, 2019
தலைப்பு இல்லை
தலைப்பு இல்லை
Wednesday, August 14, 2019
தலைப்பு இல்லை
நான் கருடன்
எனது எல்லையை எவரும் அடைய முடியாத உயரம் பறப்பவன்
என்னைவிட பலமானதிடமும் போரிட்டு வெல்லும் வல்லமை உள்ளவன்
பயமற்றவன்!
நான் கருடன்
இலக்கு எங்கிருந்தாலும் நோக்கும் ஆழப்பார்வை உள்ளவன்!
இலக்குவைத்தால் அதை அடையாமல் என் பயணம் முடியாதவன்!
உயரக்கூடு கட்டுவேன்! என் எதிரி நெருங்கமுன்னர் அறியும் தூரப்பார்வை உள்ளவன்!
அமர்ந்து ஓய்ந்தாலும் கழுத்தை ஆட்டி என்னைச் சூழ என்ன நடக்கிறது என்பதை அறியும் விழிப்புணர்வு உள்ளவன்
நான் கருடன்
இலட்சியமுள்ளவனிடன் தங்கும் மகாலக்ஷ்மி நாராயணனின் வாகனன்!
இலட்சியமுள்ளவனுக்கு ஆற்றல் தரும் பிராணனின் குறியீடு நான்!
விஷத்தை முறித்து அம்ருத கலசம் தாங்கும் அம்ருதீகரணன்!
தலைப்பு இல்லை
நான் கருடன்!
நான் அற்பர்களுடன் சகவாசம் வைத்துக் கொள்வதில்லை, எப்போதும் உயரப் பறக்கவே விரும்புகிறேன்
எனது விழிகள் அதிக தூரத்தை தெளிவாகப் பார்க்கும் ஆற்றல் உள்ளது!
நான் குப்பைகளை எக்காரணம் கொண்டும் உண்பதில்லை!
புயலை அதிகம் விரும்புபவன், புயலின் அதீத காற்றழுத்தத்தை எனக்குச் சாதகமாக்கி எனது சக்தியை செலவழிக்காமல் சிறகுகளை உயர்த்திப் பறக்கும் வல்லமை உள்ளவன்!
நான் உன்னை நம்புவதற்கு முன்னர் பரிசோதிப்பேன்!
எனது பிள்ளைகளை சிறுவயதிலேயே வாழ்வதற்கு தகுதியுள்ள பயிற்சி தருவேன்!
எனது சிறகுகள் விழுந்தால் அவை முளைக்கும்வரை, புதுச்சக்தி கிடைக்கும் வரை ஓய்வெடுப்பேன்!
நான் கருடன்!
Tuesday, August 13, 2019
தலைப்பு இல்லை
எமது தோட்டத்து மரக்கறிகளுக்குரிய Brand name ஆக "இயற்கையின் சுவை" என்ற பெயரை பதிவு செய்துள்ளோம். இந்த பெயரிற்குரிய குணத்தை கடந்த நான்கு வார உற்பத்தியில் பெற்றுக் கொண்ட அடிப்படையில் இயற்கை வேளாண்மையில் உற்பத்தி செய்யும் மரக்கறிகளுக்கு தனிச்சுவையும், மணமும் இருக்கும் என்பதை உறுதிபடுத்தியுள்ளோம்.
நாம் பெரிய அளவில் உற்பத்தி செய்ய ஆரம்பிக்கவில்லை என்பதுடன் இது ஒரு ஆய்வு முயற்சி என்பதால் மட்டுப்படுத்தப்பட்ட அளவு உற்பத்தியே எம்மிடம் உள்ளது.
தற்போது நாம் இரண்டு நகர்களுக்கு மாத்திரம் எம்மிடம் உள்ள சுவை மிகுந்த ஊதா கத்தரி வர்க்கம் தருகிறோம். கீழ்வரும் நகரில் வசிப்பவர்கள் எமது hotline இற்கு வாட்ஸப் செய்வதன் மூலம் மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
விநியோக நகர்:
யாழ்ப்பாணம்
கொழும்பில் - பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, தெஹிவளை மாத்திரம், free home delivery உண்டு.
Hotline: +94 76 732 7070
எமது "இயற்கையின் சுவை" மரக்கறிகள் உங்கள் ஆரோக்கிய வாழ்வின் ஆரம்பம்!
Monday, August 12, 2019
தலைப்பு இல்லை
இன்று எமது மலை நாட்டின் பெருந்தோட்ட கிராமம் ஒன்றிற்கு தம்பி நிசாந்தனுடன் மாலை நேர விஜயம்!
இருவருமாக பெருந்தோட்டக் கிராமங்களில் விவசாயம் சார்ந்த தற்சார்ப்பு பொருளாதாரத்தை எப்படி உருவாக்கலாம் என்ற ஆய்வில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.
இதற்குரிய வழியாக இயற்கை விவசாயம் இருக்கும் என நம்புகிறோம். உழைப்பாளிகளை சிறந்த தற்சார்புள்ள விவசாயிகளாக ஆக்குவது இலகுவாக இருக்கும்.
இன்று நாம் சந்தித்த இளைஞன் A/L மூன்று பாடங்களும் சித்தியடைந்து விட்டு தானாகவே தொழில் செய்ய வேண்டும் என்று விவசாயம் செய்யத்தொடங்கி பீடை கொல்லியின் விலையாலும், உரத்தின் விலையாலும் விவசாயம் கையைச் சுட்டுக்கொள்ள, நட்டமடைந்து என்ன செய்வது என்று தெரியாமல் ஏதாவது கூலி வேலை செய்யலாமா என்று எண்ணிக்கொண்டு இருப்பதாகக் கூறினார். இயற்கை விவசாயம் பற்றி எடுத்துக்கூறியிருக்கிறோம்! எமது ஆய்வுப்பண்ணைக்கு வந்து பயிற்சி பெற்றுக்கொண்டு அதற்குரிய செலவுகளையும் நாமே ஏற்றுக்கொள்ளலாம் என்றும், செலவு குறைந்த இயற்கை விவசாயத்தைச் செய்ய ஆலோசனை கூறியிருக்கிறோம்.
Sunday, August 11, 2019
தலைப்பு இல்லை
இந்த வாரம் பகவான் ஸ்ரீ அரவிந்தரின் பிறந்த தினம்!
அவரது இறுதிக் கவிதைகளில் ஒன்று Golden light எனப்படும் பொன்மய ஒளியைப் பற்றியது! இதை அகத்திய மகரிஷி தனது சௌமியசாகரத்தில் உடலில் இறைசக்தி ஜோதியாக எப்படி, எங்கே இருக்கிறது என்பது பற்றியும் அது எப்படி உடல் முழுவதும் பரவுகிறது என்பது பற்றித் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். உடலை, மனதை பொன்மய பேரொளியால் நிரப்பி மகாகாரண சரீரம் ஆக்கி செயல் கொள்ளும் நிலை அறிந்தவர்கள் தமிழ் சித்தர்கள்!
இதை யோகமாக பகுத்து ஆராய்ந்து தெளிவாக ஸாவித்ரி காவியமாக உலகமக்கள் அனைவரும் அறிந்து கொள்வதற்கு ஆங்கிலத்தில் ஸ்ரீ அரவிந்தர் எழுதி வைத்துள்ளார்! இதை தானும் சாதித்து மனித குலம் முழுவதற்கு கிடைத்தால் மனித குலம் தெய்வ குணத்தாலும் பண்பாலும் மாறும் என்று முயற்சித்தார். அதில் வெற்றியும் பெற்றார்!
இந்தப் பொன்னிற ஒளி உடலில், மனதில் பிரதிபலித்தால் அவனது ஆன்ம பரிணாமம் உயரும் என்பதே சித்தர்களில் யோகம்!
இந்தக் கவிதையை 8-8-1938 திகதி எழுதி மீண்டும் 22-3-1944 திருத்தியதாக பதிப்புக் குறிப்பு சொல்கிறது.
இந்தக் கவிதையை தமிழில் என். வி. பாலு என்பவர் ஸ்ரீ அரவிந்தரின் அக்னிப் பறவை எனும் நூலில் மொழிபெயர்ப்புத் தொகுப்பாக வெளியிட்டுள்ளார்கள்.
பொன்மய ஒளி
********************
பொன்மயமாக உள்ள உன் ஒளி எந்தன் மூளை
தன்னுள்ளே கீழிறங்கித் தகவுடன் புகுந்ததாலே
அரையிருள் அறைகளாக இருந்திரும் என்மனந்தான்
நிறை சுடர் கதிவவன் தான் நீள்கரத் தீண்டலாலே
ஒளிமிக உற்றதே போல் உயர் அறிவான சித்தின்
தளமாக ஒளிரும் வண்ணம் தந்திடும் விடைதான் என்றும்
அமைதியாய் விளக்கிக் கூறும் ஆன்றதோர் ஞானம் பெற்றே
குமைதலில்லாத வண்ணம் குறைகள் தீர்த்திருக்குமன்றே
என்னுடைய குரல் வளைக்குள் எங்கணும் இறங்கிற்றன்றே
உன்னுடைய பொன்மயத்தோர் உயர் ஒளிவறியதே யான
என்சொலும் தேவப் பண்ணாய் இலங்கிடும் என்னென்பேன் நான்!
என்சொலே தெய்வ மாதுவைக் குடித்திட்ட தாலெ நானே
பாடிடும் பாடல் எல்லாம் பரமனின் புகழ் பரப்பும் நாடிடும் நன்றி கீதம் ஆகவே ஒலித்திருக்கும்.
எந்தன் இதயந்தன்னில் இறங்கிய உன்பொன் ஒளியே
உந்தன் நித்தியத்தால் உற்றதோர் தாக்கத்தாலே
வாழ்வதே அமரத் தன்மை வாய்ந்ததாய் ஆயிற்றன்றே!
தாழ்விலாது என்றும் நானே தகுதிறன் பெற்றிப் பாரில்
நீயுந்தான் அகலாது என்றும் நித்தியமாக நிற்பது ஆயதோர் ஆலயம்மாய் அஃதுரு மாறிற்றன்றே
அதனுடை உணர்வுகள் தாம் அழுத்தமாய் உன்னைச் சுட்டும்
விதமாக வேறொன்றைத்தான் வியக்காமல் இருக்குமன்றே!
எந்தனின் பாதந் தன்னில் பொன்மயமாயிருக்கும் உந்தனின் ஒளியிறந்த அக்கணம் எந்தன் பூமி
நத்தி நீ விளையாடத்தான் நன் கமை களமாய் நீதான் நித்திய கொலுவீற்றிருக்கும் இருக்கையாய் ஆயிற்றன்றே!
Saturday, August 10, 2019
தலைப்பு இல்லை
நண்பர்களே,
எமக்கு அனேக நண்பர்கள் நிஜ உலகில் இருப்பதை விட அதிகமாக இந்த கணனி வலைப் பின்னல் உலகில் இருக்கிறார்கள். சிலரை சந்திக்கிறோம், சிலருடன் தொலைபேசியில் உரையாடுகிறோம். சிலருடன் messenger இல் உரையாடுகிறோம். சிலருடன் எந்த உரையாடலும் செய்யாமல் மௌனமாக நட்பு வட்டத்தில் மாத்திரம் இருக்கிறோம். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டிருக்கிறோமா என்பது தெரியாது, ஆகவே புரிதலுக்காக எம்மைப் பற்றிய உங்களுடைய அபிப்பிராயத்தை கீழே Comment ஆக பதிவிடுங்கள். மேலும் என்னிடம் கேட்க விரும்பும் ஒரு கேள்விக்கு நேர்மையான பதிலை தரவிரும்புகிறேன்.
இந்தப் பதிவை நீங்கள் பிரதி செய்து உங்கள் சுவற்றில் பதிவு செய்து கொண்டு அதற்கு கிடைக்கும் பதில்களின் மூலம் உங்களில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய மாற்றத்தினை மற்றவர்கள் பார்வையிலிருந்து அறிந்து கொள்ள முடியும். எவராவது குறைகளைச் சுட்டிக் காட்டுவதும் வரவேற்கப்படுகிறது. இது புரிதலை மேலும் அதிகரிக்கும்!
எம்மைப் பற்றிய உங்கள் புரிதல் அபிப்பிராயத்தையும், கேட்க விரும்பும் கேள்வியினையும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்.
copied and translated via Sai Ramji Thank you!
Friday, August 09, 2019
Thursday, August 08, 2019
Wednesday, August 07, 2019
Tuesday, August 06, 2019
தலைப்பு இல்லை
ஆச்சரியம் ஆனால் உண்மை, இந்தியா பாக்கிஸ்தான் பிரிவின் போது மகா யோகி ஸ்ரீ அரவிந்தரிடம் இந்தியா மீண்டும் எப்போது ஒன்றிணையும்? (When do you expect India to be united?”) என்று அன்பர் ஒருவர் கேட்க, அதற்கு ஸ்ரீ அரவிந்தர் கொடுத்த பதில் “India will be reunited. I see it clearly.” { நூல் ஆதாரம்: Kittu Reddy, A Vision Of United India, Pp 167-68}
ஸ்ரீ அரவிந்தரின் கூற்றுப்படி பிரபஞ்சம் அனைத்தையும் ஒன்றிணைத்து ஒன்றிணையும் திசையை நோக்கி செலுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆகவே எவரும் தம்மை குறுகிய வட்டத்திற்குள் வைத்துக்கொண்டு குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓடமுடியாது! தமது சிறிய வட்டங்களிலிருந்து, அடையாளங்களிலிருந்து வெளிவந்து விரிந்து ஒன்றிணையும் போக்கினையே பிரபஞ்சம் கடைப்பிடிக்கத்தொடங்குகிறது. ஒன்றிணைக்கும் சக்தி பிரபஞ்சத்தில் வேகமாகச் செயற்படுகிறது. இதற்கு எதிரான பிரிவினைவாத சக்திகளின் ஆற்றல் குன்றுகிறது!
இதையே தற்போதைய உலக நடப்புகள் சுட்டிக் காட்டுகிறது! நேற்றைய இந்திய அரசியல் சம்பவம் இதற்கு ஒரு உதாரணம்!
இது தொடர்பான முழுமையான ஆங்கிலக் கட்டுரை முதல் Comment இல்..
தலைப்பு இல்லை
எல்லையற்ற பகராசூர அறிவுப் பசியால் தினம் தினம் குவியும் புத்தகங்கள்!
என்று இந்த போதையிலிருந்து வெளிவரப் போகிறேன் என்று தெரியவில்லை!
வாசிக்கத் தெரியாத இரண்டு வயதில் புத்தகக் கடைக்குள் கூட்டிச் சென்ற போது அம்மாவிற்கு 100/= செலவு வைத்த இந்த புத்தகம் வாங்கும் கெட்ட பழக்கம் இன்று மாதம் பல்லாயிரமாகத் தொடர்கிறது!
குறிப்பு: நான் புத்தகங்கள் எவருக்கும் இரவல் தருவதில்லை, ஆகவே என்னிடம் புத்தகம் பெறும் நோக்கில் எவரும் அணுக வேண்டாம்!
Sunday, August 04, 2019
சித்தர்களின் குணபாடமும் இயற்கை விவசாயமும்
Saturday, August 03, 2019
தலைப்பு இல்லை
இன்று ஆடி பதினெட்டு! கடந்த இரண்டு வாரங்களாக தடைபட்டிருந்த தேவிபுரம் கட்டுரை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது!
இன்றைய வீரகேசரியில் அணுப் பௌதீகவியல் விஞ்ஞானியான Dr. பிரஹலாத சாஸ்திரி எனப்படும் எனது குருநாதர் ஸ்ரீ அம்ருதானந்த நாதரின் உரைகளை தமிழில் மொழிபெயர்க்கும் பணி!
Friday, August 02, 2019
தலைப்பு இல்லை
Meet our Our Brand Ambassador Mr. Red Rabbit !
Here we are on test market!
who is all ears for your feedback!
இதோ எங்கள் தூதுவர் திருவாளர், சிவப்பு முயலண்ணா!
பொதியிடல் தொடர்பான உங்கள் கருத்துக்களுக்கு செவிமடுக்க பெரிய காதுகளுடன் காத்திருக்கிறார்!
தலைப்பு இல்லை
நேர்காணல் கீழே Nishānthan Ganeshan அவர்கள் தரவேற்றியுள்ளார்.
நன்றி தம்பி Nishānthan Ganeshan, இத்தனை வேலைப்பளுவிற்கு மத்தியிலும் இதை பதிவு செய்து பகிர்ந்தமைக்கு!
பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்
பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள் எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால் சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...
-
போகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு வாசிப்பு ஓம் போக நாதர் பாதம் போற்றி இது போகர் ஏழாயிரத்தினை வாசித்து யோக தாந...
-
இதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...
-
குருநாதர் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் தனது ஸௌபாக்யா மந்திர சாதனா ஒலி நாடாவில் மூன்று ஆசீர்வாத மந்திரங்களை கூறியுள்ளார். இந்த மூன்று மந்திரங்க...