குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, December 02, 2018

ஆரோக்கிய வாழ்விற்கான இரகசியம்





ஓம் கிரியா பாபாஜி யோக ஆரண்யம் - 10 வது ஆண்டு விழா "ஆரண்ய பிரசாதம்" இதழில் எமது "ஆரோக்கிய வாழ்க்கைக்கான இரகசியம்" கட்டுரை.

**************************************************************** 

இன்றைய நவீன மக்களின் அடிப்படைப்பிரச்சனை என்னவென்று கேட்டால் உடல் மன ஆரோக்கிய குறைவே என்பதே முதல் விடை. இன்று எமக்கு நோய் இருக்கிறது என்று கூறுவது ஒரு அடிப்படை தகுதிபோல கருதப்படும் அளவிற்கு சமூகத்தில் நோய் ஒரு அந்தஸ்தாக வளர்ந்துள்ளது.

நல்ல உடல் ஆரோக்கியம், மற்றும் தெளிவான எதையும் புரிந்து கொள்ளும் மனம் ஆகிய இரண்டும் வாழ்வின் மிகச்சிறந்த ஆசீர்வாதங்கள்

உடல் நலம் மனதின் தெளிவிற்கு அடிப்படை. உடல் பாதிக்கப்பட்டால் மனம் குழப்பமடையும் என்பது அடிப்படை விதி. ஆரோக்கியமான உடலில்தான் உறுதியான மனம் உருவாகும். உடல் நலமற்று இருந்தால் அவனில் மனம், புத்தி போன்ற அந்தக்கரணங்கள் முழுமையாக வளர்ச்சி அடையாது.

இதுபோல் நன் நடத்தையும் தெளிவான மனமும் உடையவர்கள் நல்ல உடல் ஆரோக்கியம் உடையவர்களாகவும், வலிமையானவர்களாகவும், வியாதியற்றவர்களாகவும் இருப்பார்கள்

மனமும் உடலும் ஒன்றுடன் ஒன்று இரண்டறக்கலந்த இரட்டைகள். மனதின் ஆரோக்கியமே உடல் ஆரோக்கியமாக மிளிர்கிறது. உடலின் ஆரோக்கியமே மனதின் ஆரோக்கியமாக மிளிர்கிறது.  ஆக உடல் ஆரோக்கியம் விரும்பும் ஒருவன் தனது மனதையும் உடலையும் சம அளவு முக்கியத்துவம் கொடுத்து செம்மைப்படுத்த வேண்டும். இப்படி மனதையும் உடலையும் செம்மைப்படுத்தியவர்களுக்கே உயிர்வாழ்க்கைக்கு ஆதாரமான பிராணன் எனும் உயிர்சக்தி வசப்படும்

இன்று உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக்கொள்ளும் பலரிற்கு ஆரம்ப புள்ளியாக விளங்குவது மனதின் கட்டுப்பாடற்ற குழப்பமும் பேராசை நிலையுமே. நாம் எதற்காக தொழில் செய்கிறோம்? அதனால் பெறும் வருமானம் வாழ்க்கையை இன்பமாக வாழ்வதற்கா? அல்லது வாழ்வின் உண்மை நோக்கத்தை அறிந்து புரிந்தா வாழ்கிறோம் என்று சிந்திப்பது ஒருவன் ஆரோக்கியமாக இருப்பதற்கான முதல் வழி

ஆரோக்கியத்திற்கான சீர்கேடு உண்மையில் மனதில்தான் ஆரம்பமாகிறது. மனதினைக்கட்டுப்படுத்துவது புத்தி என்ற பாகம் என்று சித்தர்கள் கூறுகிறார்கள். ஒருவனுக்கு இந்த புத்தி என்ற பாகம் எவ்வளவு தெளிவாக இருக்கிறதோ அந்த அளவிற்கு மனமும் கட்டுப்பாட்டில் இருக்கும்

இந்த புத்தியை தெளிவாக்குவதற்கு ரிஷிகள் கண்டுபிடித்த அற்புத தொழில் நுட்பம்தான் ஸ்ரீ காயத்ரி மந்திரம். காயத்ரி மந்திரத்தின் சுருக்கமான அர்த்தம் "புத்தியை தூண்டும் அந்தப்பேரொளியை எம்மில் இருத்தி தியானிப்போமாக என்பதாகும். காயத்ரி மந்திரத்தை பொருளறிந்து தியானத்துடன் சாதனையாக செய்துவருபவர்களது புத்தி தெளிவுற்று மனம் ஒளிபெறும். இதனால் படிப்படியாக உடல் ஆரோக்கியம் பெறும்பெறுவார்கள். உடல் மன ஆரோக்கியத்தின் முதல் படி தினசரி காயத்ரி ஜெபம்.

இன்று பலரும் தமது உணவுப்பழக்கங்களை பெரும் வியாபார நிறுவனங்கள் ஏற்படுத்தும் விளம்பரங்களின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கிறார்கள். உடலின் ஆரோக்கியத்திற்காகவும் பசிக்காகவும் உணவு என்பதிலிருந்து விலகி நாவின் சுவையும், அந்தஸ்திற்காகவும் உணவு அருந்தும் காலத்தில் நாம் வாழ்கிறோம். பயிற்றம் கஞ்சி, பழைய சோற்று நீராகரம், குரக்கன் பிட்டு என்பவை ஏழ்மையின் அடையாளங்களாக சித்தரிக்கப்பட்டு, அறியாமையினால் உடல் ஆரோக்கியம் தரக்கூடிய மேற்கூறிய உணவுகளை தவிர்க்கிறோம்

இப்படி தவறான நம்பிக்கை, தாழ்ந்த எண்ணங்கள், சுவையுணர்விற்கான அதியாசை, உலகிற்கான ஆடம்பரமான வாழ்க்கை போன்ற முட்டாள்தனங்களால் ஆரோக்கிய சீர்கேடு உருவாகத்தொடங்குகிறது.

இதைத்தடுப்பதற்கு நாம் கீழ்வரும் பத்து பொன்மொழிகளை எமது குருமண்டலத்தின் ஆலோசனையாக தருகிறோம்.
1.     ஒருவன்/ஒருத்தி தமது காம இன்பத்தில் எப்போதும் மிதமாக கட்டுப்பாடாக இருத்தல் உடல் ஆரோக்கியத்தின் முதல் படி
2.     மனதில் மற்றவர்கள் மீது எழும் வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி, அசூயை, பொறாமை எதிர்ப்பாலார் மீது காம எண்ணம், கோபம், அவநம்பிக்கை, வன்மம் போன்ற எண்ணங்கள் மனதில் தோன்றும்போது விழிப்புணர்வுடன் அவதானித்து மனதில் அனுமதிக்ககூடாது. இவை எமது உண்மையான பண்புகள் அல்ல, இவையே எமது பிராணனை வீணாக்கி நோயை உண்டாக்குகிறது என்பதை ஆராய்ந்து உணரவேண்டும்
3.     குறித்த நேரத்தில் படுக்கைக்கு சென்று குறித்த நேரத்தில் தினசரி துயிலெழ வேண்டும்
4.     உடல், உடை, வீட்டுச்சூழலில் சுத்தம் பேணல்
5.     மிதமான உடல் உழைப்பு
6.     எப்போதும் மகிழ்ச்சியான மனமும், புன்னகையுடனும் இருக்கப் பழக வேண்டும்
7.     உடலை வெப்பம், குளிரைத்தாங்கக்கூடியவாறு பழக்க வேண்டும்
8.     மனம் எந்தவிதமான மோசமான புகை, குடி, தீய நட்பு, மோசமான புத்தங்கள் வாசித்தல் போன்ற அடிமைப்பழக்கங்களிலிருந்தும் உங்களை காப்பாற்றிக்கொள்ளுங்கள்
9.     எளிமையான திருப்தியான வாழ்க்கை நடாத்துங்கள். ஆசை எனும் நெருப்பில் பொசுங்கிவிடாதீர்கள்.
10. உங்கள் மன, உடல் அளவிலான முயற் சிகளை புத்திசாலித்தனமாக உபயோகியுங்கள். நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொண்ட பாதையில் தனியாக துணிவுடன் நடக்க தைரியத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்
இன்று பலரும் நோய்களை தீர்த்துக்கொள்ள யோகா செய்கிறோம், தியானம் செய்கிறோம் என்கிறார்கள். நோயின் அடிப்படை இந்த நவ நாகரீக வாழ்க்கையால் வந்த உணவும் பற்றியதும் வாழ்க்கை முறை பற்றியதுமான தவறான கொள்கைகளால், நம்பிக்கையால் வந்தவை

வாழ்க்கை முறை பற்றியும் உணவு பற்றியும் தவறான நம்பிக்கை எனும் குப்பையை உங்கள் மனதிலிருந்து அகற்றுவதன் மூலம் ஆரோக்கியத்தை பெறலாம். உணவு பற்றிய ஒப்புக்கொள்ளப்பட்ட பொன்னான விதிகள் பத்தினை இங்கே தருகிறோம்
1.     நாம் உண்பதற்காக வாழவில்லை, மாறாக வாழ்வதற்காக உண்கிறோம்
2.     ருசிக்காக ஆரோக்கியம் தராத உணவை எக்காரணம் கொண்டும் உண்ணாதீர்கள். ஒருவனுக்கு தேவையான ஊட்டச்சத்தை தரக்கூடிய உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்
3.     பசிக்காமல் ஒருபோதும் புசிக்காதீர்கள்.
4.     உணவு உண்ணும்போது அரைபகுதி உணவாலும், காற்பங்கு நீராலும், காற்பங்கு வாயுவாலும் நிரம்பியிருக்க வேண்டும். வயிறு முட்ட உண்ணுதல் என்பது ஆரோக்கிய கேட்டினை உண்டாக்கும்
5.     உணவில் அதிக மசலா, காரம், இனிப்பு போன்றவற்றால் பதப்படுத்திய உணவுகளை தவிருங்கள்.
6.     எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்ணுங்கள்.
7.     அதிக காய்கறிகளை சேர்த்துக்கொள்ளுங்கள்
8.     இரண்டு வேளை உணவு ஆரோக்கியமானது.
9.     காலை உணவு மோர், பால் கொண்ட மிதமான நீராகாரமாக இருக்கட்டும்
10. உணவு நன் கு மென்று உண்பதுடன், உண்ணும்போது மகிழ்ச்சியாகவும், சரியான தர்ம வழி வந்த உணவாகவும் இருத்தல் அவசியம்

ஒருவன் மேற்கூறிய ஆலோசனைகளை கடைப்பிடிப்பதன் மூலம் தனது உடல் மன ஆரோக்கியத்தை சிறப்பாக பேணுவான் என்பதில் எந்த ஐயமும் இல்லை


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...