குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, June 21, 2013

யோகசாதனைக் குறிப்புகள் - மனதின் ஆறு சக்திகள்


பொதுவாக எமது யோக தாந்திரீக  மரபில் மூன்று வகையான சக்தி இருப்பதாக குறிப்பிடப்படுகிறது, அதாவது இச்சா சக்தி (ஆன்ம பலம் அல்லது எடுத்த கரியத்தை எண்ணியவாறு முடிக்கும் ஆற்றல்) கிரியா சக்தி (செயல்புரியும் ஆற்றல்), ஞானாசக்தி (அறிவு சக்தி) என்பதே அவை மூன்றும்.   

இந்த மூன்று சக்திகளும் எங்கோ பரலோகத்தில் இருப்பதாக எண்ணி குழம்ப வேண்டாம், மனிதன் கடவுளின் சிறிய மாதிரி, ஆகவே பிரபஞ்ச மகா சக்தி மனிதனிலும் உண்டு, இதனையே சித்தர்கள் அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உண்டு என்றார்கள். மனிதனில் உள்ளது என்றால் எங்கு உள்ளது? மனதில்தான் இந்த சக்திகள் உள்ளது. இறைவன் தனது பிரபஞ்ச மனதில் உள்ள இந்த சக்திகள் மூலம் பிரபஞ்சத்தில் காரியங்கள் நடத்துவது போல இறைவனின் சிறிய மாதிரியுருவான மனிதன் தனது மனது கொண்டு இந்த சக்திகளை பாவிக்க முடியும், அறிந்தோ அறியாமலோ இவற்றை நாம் அன்றாடம் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம். யோக சாதனை தாந்திரீகம் என்பன சாதாரண நிலையில் சிறப்பாக எப்படி பயன்படுத்துவது என்பதற்கும் மேல் சென்று அதீத சக்தியினை பெறும் முறைகளை கூறுகின்றன. இங்கு மனித மனதின் ஆறுசக்திகளும் பற்றி சுருக்கமாக பார்ப்போம். 

மனதிற்கு ஆசைகள் உதிக்கும் இந்த ஆசைகளை உருவாக்கும் ஆற்றல் இச்சா சக்தி எனப்படும், உருவாக்கிய ஆசைகளை அடைவதற்குரிய செயலில் ஈடுபடத்தூண்டும் செயலூக்கம் கிரியா சக்தி. இந்த செயலினை எப்படி செய்வது என்று திட்டம் போட்டு அடையும் விதமும் முறைகளும் ஞானா சக்தி, இந்த அடிப்படை சக்திகள் மூல சக்தியான பராசக்தியின் அமிசமாக மனிதனில் மனதின் ஒரு கூறாக இருக்கின்றன. 

இது தவிர மனதின் சக்திகளை ஆறுவிதமாக கீழ்வருமாறு பகுக்கலாம்;
  • வேதனா சக்தி – பிரித்துணரும் திறன்
  • ஸ்மரண சக்தி – ஞாபக சக்தி
  • பாவனா சக்தி – ஆக்கபூர்வகற்பனை (இது வெறுமனே எண்ணங்களை எழுந்த மானமாக கற்பனை செய்வதை குறிப்பதன்று, உணர்வுபூர்வமாக ஒரு ஒழுங்குமுறையில் கற்பனை செய்வதைகுறிக்கும், இப்படியான பாவனை பிரபஞ்சத்தில் கட்டாயம் நடந்தே தீரும் என்பது சித்த வித்தையில் அடிப்படை விதி)
  • மனுஷ்ய சக்தி - தீர்மானிக்கும் சக்தி, ஒரு விடயத்தினை நல்லதா கெட்டதா என தீர்மானிக்கும் சக்தி.
  • இச்சா சக்தி அல்லது சங்கல்ப சக்தி – ஆன்ம பலம் அல்லது சங்கல்பிக்கும் எண்ணத்தினை நிறைவேற்றும் ஆற்றல். 
  • தாரணா சக்தி – ஒரு விடயத்தினை ஏகாக்கிரமாக மனதில் நிறுத்தி சிந்திக்கும் திறன்.

Sunday, June 16, 2013

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 28: நாமங்கள் 70

கிரிசக்ர –ரதாரூட-தண்ட-நாதா-புரஸ்க்ருதாயை (70)
கிரிச்சக்கரமென்னும் தேரில் வீற்றிருக்கும் தண்ட நாதா (வராஹி) வால் வழிகாட்டப்படுபவள்



கிரிசக்ரம் என்பது தண்ட நாதா எனப்படும் வாராஹியின் தேர் ஆகும். இந்த தேவி மிகுந்த சக்திவாய்ந்தவளாகும், இவளைப்பற்றி ஏற்கனவே நாமம் 11இல் விபரிக்கப்பட்டுள்ளது. கிரி என்பது வராஹத்தினை குறிக்கும். வராஹம் என்பது காட்டுபன்றியினைக் குறிக்கும். தேவியின் முகம் வராஹ முகம். தேவியின் தேரும் காட்டுப்பன்றி வடிவுடையது. கையில் தண்டத்தினை கொண்டிருப்பதால் தண்ட நாதா எனப்படுகிறாள். கிரி என்பதற்கு ஒளிக்கற்றைகள் என்றும் ஒரு பொருள் உண்டு, இங்கு ஒளிக்கற்றை என்பது படைப்பின் ஒளியினைக்குறிக்கும். இது படைப்பின் ஆரம்பத்தில் வெளிப்பட்ட ஒளியினைக் குறிக்கும். இது பற்றி புனித பைபிளிலும் கீழ்வருமாறு கூறப்பட்டுள்ளது (Genesis.I.3)  “ கடவுள் கூறினார் அங்கே ஒளியிருந்தது, ஒளி வெளிப்பட்டது என்று. சக்ர என்பது படைத்தல், காத்தல், அழித்தல் என்ற சுழற்சியினை குறிக்கும். யோகியானவன் இந்த கிரிசக்ரத்தின் மேலே அமர்ந்திருக்கிறான் என்பதன் பொருள் அவன் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற செய்முறையினூடாக செல்கின்றான் என்பதே. ஆனால் அவன் இறப்பு பற்றிய பயம் அற்றவனாக இருக்கின்றான். எப்படி ஒருவன் இறப்பு பற்றிய பயம் அற்றவனாக இருக்க முடியும்? இறப்பு என்பது ஸ்தூல உடலின் அழிவு மட்டுமே! ஆன்மா அழிவற்றது. யோகியானவன் தனது ஸ்தூல உடலின் அழிவு பற்றி வருந்துவதில்லை. ஏன் வருந்துவதில்லை?இதற்கு சிவ சூத்திரத்தில் சிவனே பதிலளித்திருக்கிறார்; யோகியானவன் தனது ஆன்மா தவிர்ந்து வெளியிலிருந்து வரும் இன்பதுன்பங்களினால் மாற்றமடைவதில்லை. அவன் தனது அந்தக்கரணங்களுடன் (மனம்,புத்தி, சித்தம், அஹங்காரம்) தொடர்பு படும்போது மட்டுமே உடல் சாந்த துன்பங்களுடன் தன்னை தொடர்பு படுத்திக்கொள்கிறான். யோகியானவனிற்கு ஸ்தூல உடல் சார்ந்த இன்ப துன்பங்கள் முதன்மையானதல்ல. அவன் உடலினூடான தொடர்புகள் அனைத்திலும் விடுபட்டு முழுமையாக பிரம்மத்துடன் இணைந்திருக்கிறான். இந்த நிலை அவனுக்கு சாத்தியமாகின்றது ஏனெனில் அவன் தன்னுடைய உணர்வினை பிரம்ம உணர்வுடன் ஒன்றாக இணைத்திருக்கின்றான். இதுவே எல்லா நூற்களிலும் இணைவு, சிவசக்தி ஐக்கியம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. வாராஹி தேவி எமது ஆக்ஞா சக்கரத்தில் வசிக்கிறாள். இந்த நாமம் எமது உடலின் செய்கைகளுடன் ஆன்மாவுடன் தொடர்பு படுத்தாமல் ஞானம் பெறுதல் பற்றிய முக்கியத்துவத்தினை கூறுகின்றது. உடலானது கர்மாவின் தாக்கத்தால் பாதிப்புற்றாலும் ஆன்மா தூய்மையாகவும், தன்னுணர்வு பிரம்ம உணர்வுடன் கலந்து முக்தியினை நோக்கி இட்டுச்செல்லும். முக்தி என்பது பிறப்பு இறப்பு அற்ற நிலையாகும்.


68, 69, 70வது நாமங்கள் லலிதாம்பிகை, மந்திரிணி, வாராஹி ஆகிய மூவரதும் தேரினைப்பற்றி கூறுகின்றன. மந்திரிணியும் வாராஹியும் லலிதாம்பிகையிற்கு அடுத்த உயர் நிலையில் உள்ள சக்திகளாகும். இந்த இருசக்திகளையும் உபாசித்து இவர்கள் அருள் இல்லாமல் லலிதையினை நெருங்கவோ அருள்பெறவோ முடியாது. மந்திரிணி லலிதையின் சாம்ராஜ்யத்தில் பிரதம மந்திரி அனைத்து நிர்வாகப்பொறுப்பும் மந்திரிணியின் கீழேயே உள்ளது. இது மந்திரிணி ந்யஸ்த ராஜ்யஸ்துரே என்ற 768 நாமாவினால் உறுதிசெய்யப்படுகிறது. வாரஹி தேவியின் படைத்தலைவி. வாராஹி எல்லவித துர்சக்திகளையும் விரட்டும் ஆற்றல் உள்ளவள். வாராஹி ஆஷாட (ஆடி) மாதத்தின் 18வது நாள் மிகவும் விஷேஷமாக வழிபடப்படுபவள். இந்த வழிபாடு திருமணதடையுடையவர்களுக்கு திருமண பாக்கியத்தினை அளிக்கும். இந்த மூன்று தேர்களும் ஒன்றுடன் ஒன்று மிக நெருக்கமானது. முன்னரே விபரிக்கப்பட்டது போல் இங்கு தேர் என உருவகிக்கப்படுவது எமது மனமும் அதன் பரிணாமமுமே. 

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...