சித்த வித்யா பாடங்கள் 13 (அ): எண்ண‌ங்க‌ளின் இய‌க்க‌விய‌ல் - எண்ணங்களின் அடிப்படை

சதாரண மனம் உருவாக்கும் எண்ணம் ஒளியைவிட வேகம் குறைந்தது, பலமான மனம் உருவாக்கும் எண்ணங்கள் ஒளீயை விட வேகமானது. இதனாலேயே ஒளியினை தியானிப்பது யோகத்தின் தியானங்களில் உள்ள ஒரு அமிசமாகும். ஒளியினை தியானிக்கும் மனம் ஒளியளவு வேகமுடையதாக பரிவுற்று எண்ணங்க்களை உருவாக்க கூடியது. இது மந்திர சக்தியுடன் கலக்கும் போது அதைவிட பலமடங்கு சக்தியுடையதாகிறது. 

உருவாக்கப்படும் எண்ணங்கள் யாவும் ஆகாயத்தில் பதியப்படுகிறது, எந்த எண்ணமும் அழிவதில்லை, அதன் வலிமைக்கு ஏற்றவாறு செயல் நிலைக்கு வருகிறது. அதனை வலிமைப்படுத்தும் செயல் மனித உடலில் உள்ள மனிதர்களால் தீர்மானிக்கப்படுகிறது, எப்படியெனில் அதனை மீண்டும் மீண்டும் சிந்தித்து அதற்கு உரமூட்டுவதால் நடைபெறும். உதாரணமாக 2012 இல் உலகம் அழியும் என எண்ணுபவர்களும் உள்ளனர், இல்லையென்பவர்களும் உள்ளனர், இவற்றில் எந்த எண்ணத்திற்கு வலிமை கூடுகிறதே அது நடைபெறும், இதுவே எமது நாளாந்த வாழ்விலிருந்து பிரபஞ்ச இயக்கம் வரைக்கு உள்ள அடிப்படையாகும். 

ஒவ்வொரு எண்ணமும் குறித்த வலிமையும், அதிர்வும் உடையது. பரிமாற்றக்கூடியது. 

ஒவ்வொரு மனிதனுக்குமுரிய எண்ண உலகம் அவனுக்கே உரியது, அதன்படியே அவன் தனது எண்ணங்களை உருவாக்குகிறான். 

ஒவ்வொரு எண்ணங்களை உருவாக்கும் போதும் மூளை தனது நரம்பு சக்தியினை விரயமாக்குகிறது, அந்த விகிதத்திற்கேற்ப அவனுடைய ஆரோக்கியம் தீர்மானிக்கப்படுகிறது, அதிகமாக சிந்திப்பதனால் உருவாகும் இழப்பினை ஈடு செய்யும் வகையில் உணவும் ஓய்வும் இல்லாதபோது மனம் பாதிக்கப்ப்டுகிறது. 

உலகில் அனைவரும் உருவாக்கு எண்ணங்க்களும் ஒன்றுடன் ஒன்று தக்கமுற்று ஒரு சிக்கலான வலையினை உருவாக்குகிறது, அனேகமாக நாம் எண்ணும் எண்ணங்க்களில் 80% அதிகமானவை எம்மால் சுயமாக உருவாக்கப்படாதவை, எங்கோ உருவாக்கப்பட்டு எமது மனதால் ஈர்க்கப்பட்டு எண்ணப்படுபவை, இவை தீயதாக இருக்கும் போது பாதிப்பும், நல்லதாக இருக்கும் போது நன்மையும் ஏற்படும். 

சுருக்கமாக எண்ணத்தின் இயக்கவியலை விளங்கிக்கொள்ளவேண்டுமானால் ரேடியோ அல்லது அலைபேசி வலையமைப்புதான் (மொபைல் நெட்வேர்க்தான்) உதாரணம். 
 • தவல் அட்டை (சிம் கார்ட்) - ஒருவர் தன்னுள்கொண்டிருக்கும் இயல்பு (நல்லது, கெட்டது, தெய்வீகம் போன்ற அகக் காரணிகள், எந்த எண்ணங்க்களையும் உண்மையில் வெளியில் இருந்து சிம் கார்ட் வாங்குவது போல் நாம் தான் வாங்கி செருகிக்கொள்கிறோம்)
 • போன் (அலைபேசி) - உடல்
 • அலை பெருக்கி கோபுரங்கள் - மூளை, எண்ணங்களை ஆகாயத்தில் பரப்புவது
 • கட்டுப்பாட்டு நிலையம் - ஆகாய மனம் எனும் பிரபஞ்ச மனம்

அடுத்த பதிவில் எண்ணத்தின் இயக்கவியல் பற்றி பார்ப்போம்.

Comments

 1. சிறந்த பதிவு

  ReplyDelete
 2. நல்ல பதிவு ! வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 3. எண்ணங்களின் இயக்கவியலை போனுடன் ஒப்பிட்டது அற்புதம்.. இந்த எண்ணங்களின் இன்னொரு வினோதமான பழக்கம் என்னவென்றால் அவை ஒன்று கூடும்போது மிகவும் பலம் பொருந்திய இன்னொரு எண்ணமாக வடிவெடுத்து வீரியமாகப் பாயும்.. அதுதான் சக மனிதர்களிடம் விரைவான மாற்றங்களாகவும் சமூக பழக்கவழக்கங்களாகவும் சுற்று சூழல் விளைவுகளாகவும் வெளிப்படுகிறது.

  பகிர்வுக்கு மிக்க நன்றி..

  http://anubhudhi.blogspot.in/

  ReplyDelete
 4. உருவாக்கப்படும் எண்ணங்கள் யாவும் ஆகாயத்தில் பதியப்படுகிறது, எந்த எண்ணமும் அழிவதில்லை, அதன் வலிமைக்கு ஏற்றவாறு செயல் நிலைக்கு வருகிறது. அதனை வலிமைப்படுத்தும் செயல் மனித உடலில் உள்ள மனிதர்களால் தீர்மானிக்கப்படுகிறது, எப்படியெனில் அதனை மீண்டும் மீண்டும் சிந்தித்து அதற்கு உரமூட்டுவதால் நடைபெறும்

  சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு