குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, February 27, 2012

ஆன்மீகமும் மதங்களும்


இன்றையகாலகட்டத்தில் மதங்கள் என்பன ஆன்மீகத்துடன் கலக்கபட்டு பெரும் குழப்பத்தில் மக்களை ஆழ்த்தி வைத்திருக்கின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை.இந்த சிறுபதிவில் மதம், ஆன்மீகம் என்பவற்றுக்கிடையிலான வேற்றுமைகள் எவை என்பது பற்றிப் பார்ப்போம். மதம் அல்லது சமயம் என்படுவது இரு கூறுகள் உடையதாகவே காணப்படுகிறது. 
  • ஒன்று உண்மையான ஆன்மீகம் 
  • மற்றது சமயம் என்ற பொதுக்கட்டமைப்பு. 

உண்மையான ஆன்மீகம் என்பது மனிதனை தான் யார் என்பதனை அறிந்து தனக்கு மேலுள்ள ஒரு சக்தியுடன் ஒன்ற செய்யும் தனிமனித செயற்பாடு. இந்த செயற்பாடுகளுக்குள் அடங்கும் விடயங்கள் மெதுவாக குழுமக்கட்டமைப்பிற்குள் வரும் போது சமயம் தோற்றமாகிறது. எப்படியென்றால் ஒருவன் தான் அனுபவித்த இன்பத்தினை, உணர்வினை பகிரங்க படுத்த முனையும் போது அது அவரை சூழ உள்ள பலரிற்கு வியாக்கியானப்படுத்தப்படுகிறது. பின்னர் அதனை ஒழுங்காக நடைமுறைப்படுத்த ஒரு அங்கீகரிக்கப்பட்ட குழு உருவாகிறது, அவர்களே அதற்கு அதிகாரமுடையவர்களாகின்றனர், பின்னர் அவர் மட்டுமே அதிகாரம் உடையவர்களாகின்றனர், இது ஒரு அதிகார அலகாக, அரசியல் அலகாக தோற்றம் பெறுகிறது. இந்த மாயையில் சமூகம் சிக்கி உண்மை ஆன்மீகத்தினை சமூகம் மறக்கின்றது. 

இதுவே எந்தவொரு மதத்தினதும், ஆசிரமங்களதும், மடங்களது வரலாறாக இருக்கிறது, கிருஸ்தவம், இஸ்லாம், இந்து மதம் உட்பட எல்லாம் இப்படி கலப்படமடைந்த சரக்காகவே இருக்கிறது. உண்மையான வழிமுறை அதை உணர்ந்து உரைத்த முதல் மனிதனுடன் அற்றுப்போகிறது, யேசுவுடன், நபிகளுடன், கிருஷ்ணருடன், ரிஷிகளுடன், சித்தர்களுடன் அவை அற்றுப்போகின்றன. 

அதுபோல் ஆன்ம உயர்விற்கு தனிமனித சாதனை மட்டுமே சிறந்த வழி, மற்றைய எந்த கூட்டமும், ஆசிரமும் ஒரு வகை களியாட்டமாகவே அமையும் (அதுவும் மன மகிழ்ச்சியிற்கு தேவையான ஒன்றுதானே!), அது தவிர ஆன்ம விழிப்பிற்கு உதவாது. 

Sunday, February 26, 2012

சித்த வித்யா பாடங்கள் 13 (அ): எண்ண‌ங்க‌ளின் இய‌க்க‌விய‌ல் - எண்ணங்களின் அடிப்படை

சதாரண மனம் உருவாக்கும் எண்ணம் ஒளியைவிட வேகம் குறைந்தது, பலமான மனம் உருவாக்கும் எண்ணங்கள் ஒளீயை விட வேகமானது. இதனாலேயே ஒளியினை தியானிப்பது யோகத்தின் தியானங்களில் உள்ள ஒரு அமிசமாகும். ஒளியினை தியானிக்கும் மனம் ஒளியளவு வேகமுடையதாக பரிவுற்று எண்ணங்க்களை உருவாக்க கூடியது. இது மந்திர சக்தியுடன் கலக்கும் போது அதைவிட பலமடங்கு சக்தியுடையதாகிறது. 

உருவாக்கப்படும் எண்ணங்கள் யாவும் ஆகாயத்தில் பதியப்படுகிறது, எந்த எண்ணமும் அழிவதில்லை, அதன் வலிமைக்கு ஏற்றவாறு செயல் நிலைக்கு வருகிறது. அதனை வலிமைப்படுத்தும் செயல் மனித உடலில் உள்ள மனிதர்களால் தீர்மானிக்கப்படுகிறது, எப்படியெனில் அதனை மீண்டும் மீண்டும் சிந்தித்து அதற்கு உரமூட்டுவதால் நடைபெறும். உதாரணமாக 2012 இல் உலகம் அழியும் என எண்ணுபவர்களும் உள்ளனர், இல்லையென்பவர்களும் உள்ளனர், இவற்றில் எந்த எண்ணத்திற்கு வலிமை கூடுகிறதே அது நடைபெறும், இதுவே எமது நாளாந்த வாழ்விலிருந்து பிரபஞ்ச இயக்கம் வரைக்கு உள்ள அடிப்படையாகும். 

ஒவ்வொரு எண்ணமும் குறித்த வலிமையும், அதிர்வும் உடையது. பரிமாற்றக்கூடியது. 

ஒவ்வொரு மனிதனுக்குமுரிய எண்ண உலகம் அவனுக்கே உரியது, அதன்படியே அவன் தனது எண்ணங்களை உருவாக்குகிறான். 

ஒவ்வொரு எண்ணங்களை உருவாக்கும் போதும் மூளை தனது நரம்பு சக்தியினை விரயமாக்குகிறது, அந்த விகிதத்திற்கேற்ப அவனுடைய ஆரோக்கியம் தீர்மானிக்கப்படுகிறது, அதிகமாக சிந்திப்பதனால் உருவாகும் இழப்பினை ஈடு செய்யும் வகையில் உணவும் ஓய்வும் இல்லாதபோது மனம் பாதிக்கப்ப்டுகிறது. 

உலகில் அனைவரும் உருவாக்கு எண்ணங்க்களும் ஒன்றுடன் ஒன்று தக்கமுற்று ஒரு சிக்கலான வலையினை உருவாக்குகிறது, அனேகமாக நாம் எண்ணும் எண்ணங்க்களில் 80% அதிகமானவை எம்மால் சுயமாக உருவாக்கப்படாதவை, எங்கோ உருவாக்கப்பட்டு எமது மனதால் ஈர்க்கப்பட்டு எண்ணப்படுபவை, இவை தீயதாக இருக்கும் போது பாதிப்பும், நல்லதாக இருக்கும் போது நன்மையும் ஏற்படும். 

சுருக்கமாக எண்ணத்தின் இயக்கவியலை விளங்கிக்கொள்ளவேண்டுமானால் ரேடியோ அல்லது அலைபேசி வலையமைப்புதான் (மொபைல் நெட்வேர்க்தான்) உதாரணம். 
  • தவல் அட்டை (சிம் கார்ட்) - ஒருவர் தன்னுள்கொண்டிருக்கும் இயல்பு (நல்லது, கெட்டது, தெய்வீகம் போன்ற அகக் காரணிகள், எந்த எண்ணங்க்களையும் உண்மையில் வெளியில் இருந்து சிம் கார்ட் வாங்குவது போல் நாம் தான் வாங்கி செருகிக்கொள்கிறோம்)
  • போன் (அலைபேசி) - உடல்
  • அலை பெருக்கி கோபுரங்கள் - மூளை, எண்ணங்களை ஆகாயத்தில் பரப்புவது
  • கட்டுப்பாட்டு நிலையம் - ஆகாய மனம் எனும் பிரபஞ்ச மனம்

அடுத்த பதிவில் எண்ணத்தின் இயக்கவியல் பற்றி பார்ப்போம்.

Saturday, February 25, 2012

யோக சாதனையின் நோக்கம், தெளிவு, பாதை


இந்த கட்டுரையில் யோக சாதனையின் நோக்கம், தெளிவு, பாதை என்பது பற்றி நாம் எமது சாதனையிலும், அனுபவத்திலும், தெளிவிலும் கண்டவாறு விளக்குவதே நோக்கம். இந்த கட்டுரையின் முடிவில் நீங்கள் யோகம் ஏன் பயிலவேண்டும்? ஏப்படி பயிலவேண்டும்? அதற்கு நீங்கள் அறிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படை அறிவு என்ன என்பது பற்றி ஒரு தெளிவும் புரிந்துணர்வும் ஏற்படும் என்று நம்புகிறோம்.

இன்று யோக சாதனை என்றாலோ, யோகா பழகுகிறேன் என்றாலோ ஆசனம் செய்வதையே பெரும்பாலும் குறிக்கிறார்கள், ஒரு சிலர் பிராணாயாம பயிற்சியினையும் சேர்த்து யோகா எனப் பொருள் கொள்கிறார்கள். அதாவது ஆசனம் செய்வதில் தொடங்கி, பிராணாயாம பயிற்சியுடன் குண்டலினி தியானம் வரைக்கும் செய்து வருகிறர்கள், இந்த நோக்கம் தான் என்ன? ஏன் இவற்றை செய்ய வேண்டும்? இப்படி செய்வதுதான் யோகமா?

பலரும் நினைப்பதனைப்போல் ஆசனம், பிராணாயமம் தொடங்கித்தான் யோக சாதனை செய்வதானால் இராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி போன்றோர் அவ்வாறு செய்யவில்லையே?

பலர் யோக சாதனை செய்யத்தொடங்கி ஒரு சில படிகளுடன் மேலே செல்லாது காலம் பூராகவும் ஆசனப்பயிற்சியினையும் , பிராணாயாமத்தினையும் செய்தவண்ணம் சிறந்த உடல் ஆரோக்கியத்தினை பெற்றிருப்பர், அடுத்த படி என்னவென்று தெரியாமல் இருப்பர்.

இந்த கட்டுரை இப்படி தனிப்பட உடல் ஆரோக்கியத்தினை மட்டும் கருத்தில் கொண்டு ஆசனம் பிராணாயாமம் செய்பவர்களுக்கு எழுதப்படவில்லை, அதையும் தாண்டி யோகப்பாதையில் செல்ல விரும்புபவர்களுக்காகவே எழுதுகிறோம் என்பதனை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

எப்போதும் ஒருகாரியத்தினை செய்வதற்கு முன் கீழ்வரும் மூன்று கேள்விகளை கேட்டபின்பே செய்யத்தொடங்க வேண்டும் என்பது எமது வாழ்க்கையில் பொதுவாக கொள்ளப்படவேண்டிய விதி!
  1.  இதை நான் ஏன்  செய்கிறேன்?
  2.   இதன் விளைவுகள் என்ன?
  3.  இதில் நான் வெற்றியடைவேனா?  

இந்தக்கேள்விகளுக்கு திருப்தியான பதில் கிடைத்த பின்பே எந்தக்காரியத்தினையும் செய்யவேண்டும், அதுபோல யோக சாதனை செய்ய விரும்புபவர்களும் இந்த கேள்விகளை தமது யோக சாதனை எதற்காக செய்கிறோம் என்பதனை இக்கேள்விகளை கேட்டு அதற்குரிய திருப்தியான பதிலினை அடைந்த பின்னரே அவற்றினை செய்ய தொடங்க வேண்டும்.

இதை நான் ஏன் செய்கிறேன்? என்பதற்கான பதில் பலவகையில் இருக்கலாம், இது நீங்கள் எந்த நோக்கத்திற்காக யோகம் பயில்கிறீர்கள் என்பதனை தெளிவு படுத்தும், அந்த நோக்கங்களை கீழ்வருமாறு பாகுபடுத்தலாம்;
  1. சாதாரண உலக வாழ்க்கையில் நலமாக வாழ்வதற்குரிய அடிப்படையினை பெறுவதற்கு: "நண்பன் கூறினார்" "இவற்றை பழகினால் உடலாரோக்கியம் வரும், மன ஒருமை அதிகரிக்கும்" "வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கலாம்" என்பன காரணமாக இருக்கலாம், இவையே பெரும்பாலான காரணங்கள், இன்றைய உலகில் நாளாந்த வாழ்க்கை உடலிற்கும் மனதிற்கும் சுமை மிகுந்ததாகி விட்டது அதற்கு ஒரு நிவாரணியாக "யோகா" பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் யோகம் பழகுபவர்களே பெரும்பாலானவர்கள்
  2. அற்புத சித்திகளை பெறுவதற்கு: அடுத்தவகையினர் அற்புத, அதீத சக்திகளை விரும்பி யோகம் பயிலவந்திருப்பவர்கள், அவர்களை பொறுத்தவகையில் யோகம் பயில்வதால் அற்புத சித்திகள் அடையலாம் என்பது நோக்கமாக இருக்கும்
  3. இறைவனை அடைவதற்கு: இவர்கள் இறைவனை அடைவதற்குரிய வழிமுறையாக யோகத்தினை தேர்ந்தெடுத்தவர்கள்,


சரி இந்த மூன்று வகையினரிலும் யார் சரியான நோக்கம் உடையவர்கள்? அனைவரும் சரியான நோக்கம் உடையவர்களே, அவரவர் இருக்கும் நிலைக்கு ஏற்றவாறு அனைவரும் சரியானவர்களே!

அப்படியானால் யோகம் பயில்வதன் இறுதி நோக்கம்தான் என்ன? இதனைக் கூறுவதற்கு முன்னர் யோக சாதனையினை தொடங்குவதற்கான முன்னேற்பாடு என்ன என்பது பற்றி பார்ப்போம்; இது மூன்று படிமுறைகள் உடையது;
  1.  முதலில் நாம் யார் என்பதனை அறிதல் வேண்டும், இதனை ஒருவரியில் கூறுவதானால் "தன்னையறிதல்", அதாவது நாம் யார் என்பதனை பகுத்து அறிய   வேண்டும்,
  2. பின்னர் நாம் யார் என்று அறிந்த எமது பகுதிகளை சுத்தம் செய்யவேண்டும்.
  3. எமக்கு மேலிருக்கும், எம்மைவிட வலுவான சக்தியான தலைவனை அறியவேண்டும்.
இந்த முன்று படிமுறைகளையும் உள்ளடக்கியதே முழுமையான யோக சாதனை, எந்த யோக சாதனை இந்த மூன்றையும் உள்ளடக்கியிருக்கிறதோ அதுவே முழுமையான யோகப்பயிற்சியாகும். இப்படியான பயிற்சியில் நாம் மேலே கூறிய பொதுவான யோகம் பழகுவதற்கான நோக்கங்கள் அனைத்தும் அடங்க்கிவிடும்.

இனி இந்த மூன்று படிமுறைகளது உள்ளடங்கங்களைப்பற்றியும் சுருக்கமாக பார்ப்போம்;

தன்னையறிதல்:
பொதுவாக நாம் யார் என எம்மையே கேட்டால் என்ன பதில் வரும்; எமது பெயரை சொல்வோம்; அல்லது இன்னாருடைய மகன்/மகள் என்போம், எமது பதவி பட்டங்களை சொல்வோம், ஆனால் அவையெல்லாம் பௌதீகம் சார்ந்தவை, எமது பேச்சிலேயே நாமும் அவையும் வேறு என்பதனை அறிந்திருக்கிறோம், எனது பெயர் சந்திரன் என்றால் நான் வேறு, எனக்கு இட்ட பெயர் சந்திரன் என்றுதானே கூறுகிறோம்? எனது என்ற வார்த்தையினை பிரயோகிக்கும் போதே நான் வேறு, அதுவேறு என்பதுதானே பொருளாகிறது. அப்படியானால் நாம் யார் என்பதற்கு எமது சித்தர்களும், முனிவர்களும் யோகிகளும் என்ன பதில் கூறுகின்றனர்? நான் என்பது ஆன்மா! அப்படியானால் எனக்கு உடல் இருக்கிறது, எண்ணுவதற்கு மனம் இருக்கிறது, காரியங்களை செய்வதற்குரிய ஆற்றலான பிராணன் இருக்கிறது, எதையும் பகுத்தறியும் புத்தி இருக்கிறது இவையெல்லாம் என்ன என்ற கேள்வி எழுகிறதல்லவா? ஆம் இதற்கான பதில் அவை ஆன்மாவினை சூழவுள்ள கவசங்கள். இவற்றையே யோக மொழியில் பஞ்ச கோசங்கள் என்போம். நான் ஆகிய ஆன்மா பஞ்சகோசங்க்களால் சூழப்பட்டுள்ளது. ஆக தன்னையறிவதற்கு என்ன செய்யவேண்டும்? எனவே யோகசாதனையில் சித்தியுற எண்ணுபவர்கள் அனைவரும் பஞ்சகோசங்கள் பற்றியும், அவற்றின் அமைப்பு செயல்முறை பற்றியும் தெளிவாக அறிந்திருத்தல் அவசியமாகும்.

பஞ்ச கோசங்கள் எவை?
  • அன்னமய கோசம்: எமது ஸ்தூல உடலும் மற்றைய உடல்களின் இணைப்பும் சேர்ந்த பகுதி, இதனை வசப்படுத்தும் சுத்தி செய்யும் முறைதான் ஆசனப்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, உபவாசம் எனபன,
  • பிராணமயகோசம்: இதுவே அனைத்தையும் இணைக்கும் உயிர் சக்தி, இது மூச்சின் மூலம் பிரதானமாக கட்டுப்படுத்தப்படுகிறது,  பிராணன் என்பது மூச்சு அல்ல, உடல், மனம், புத்தியாலும் கட்டுப்படுத்தக் கூடியது.
  • மனோமயகோசம்: எண்ணங்களையும், மனம், சித்தம் என்பவற்றை ஆக்குவது,
  • விஞ்ஞானமய கோசம்: புத்தி அதாவது பொருட்களை, எண்ணங்களை பகுத்தறிவது, மற்றைய கோசங்களை கட்டுப்படுத்தும் வலிமை உடையது. 
  • ஆனந்தமயகோசம்: ஆன்மாவினை சூழவுள்ள உறை, இந்த கோசத்தில்தான் மனிதனுடைய ஆத்ம சக்தி உறைந்துள்ளது, இந்த ஆத்ம சக்தியே புத்தியின் மூலம் செலுத்தபட்டு மனதினூடாக எண்ணமாகி பின்னர் பௌதீக நிலையில் செயல் நிலைக்கு வரும். இது அனைவருக்கும் பொதுவான செயல்முறை, அந்தந்த கோசங்களின் வலிமையிலும் சுத்தியிலுமே அவர்களின் வேற்றுமை தங்கியுள்ளது.

அதாவது எந்தவிதமான செயல்முறைக்கும் ஆத்மசக்தியின் தூண்டுதல் இருக்கவேண்டும், இது எப்படி செயற்படுகிறது எனப்பார்ப்போம், பொதுவாக மக்கள் எந்த செயல் முறையினையும் உடலினூடாகவும் பிராணனினூடகவுமே செய்கின்றனர், இது எமது ஆற்றலில் மிககுறைந்த அளவினை பயன்படுத்தும் செயல்முறை, உதாரணமாக உடலால் உழைக்கும் வர்க்கத்தினர் இதனை மட்டுமே பயன்படுத்துகின்றனர், பின்னர் ஆற்றல் வலுப்படும் போது உடல் உழைப்பினைகுறைத்து மனதாலும் புத்தியாலும் உழைக்கப்பழகுகின்றனர், ஆத்மசக்தி விழிப்படைந்து வலிமையடைந்தவர்கள் தமது இச்சாசக்தியினாலேயே தமது காரியத்தினை சாதிக்கவல்லவராகின்றனர். இதனை சாதிப்பது எப்படி என்பதனையே யோகம் போதிக்கும்,

பஞ்ச கோசங்களை சுத்தி செய்தலும் வலிமைப்படுத்தலும்:
பஞ்ச கோசங்களே எமது அமைப்பு என்பதும் அவை ஆன்மாவாகிய எம்மை சூழ்ந்த கவசங்கள் என்பதனையும் தற்போது புரிந்திருப்பீர்கள் என எண்ணுகிறேண், அனைத்து செயல்களுக்கு ஆனந்தமயகோசத்தின் அசைவு சலனம் அவசியம் என்பதனைப் பார்த்தோம், அதேவேளை அந்த அளவும் மற்றைய கோசங்களின் வலிமையும் அனைவருக்கும் ஒரேயளவில் இருப்பதில்லை, அவரவர் வாழ்க்கைமுறை, சூழல், பிறப்பு என்பவற்றிற்கேற்றவாறு வேறுபடும். ஆதலால் அவற்றை சுத்தி செய்தல் வேண்டும், இந்தபடியினை பதஞ்சலி மகரிஷி அட்டாங்கயோகத்தின் முதல் ஐந்து படிகளான இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம் என்பவற்றில் விளக்கியுள்ளார், இதில் பிராணாயாமம் சுத்திமுறையிலும் வரும், வலிமைப்படுத்தும் பகுதியிலும் வரும், ஆரம்ப நிலை பிராணாயாமங்களான நாடி சுத்தி போன்றவை சுத்தி முறைகள் கும்பக பிராணாயாமங்கள் வலிமைப்படுத்தும் செயல் முறைகள். இனி பதஞ்சலி மகரிஷியின் அட்டாங்க யோகமுறையில் எந்த படிமுறைகள் பஞ்சகோச சுத்தியுடன் தொடர்புடையது, எவை பஞ்சகோச வலிமைப்படுத்தும் செயன்முறையுடன் தொடர்புடையவை என்பதைப்பற்றி கீழ்வரும் அட்டவணையில் பார்ப்போம்;

அட்டாங்க யோக படிமுறை
சுத்தி

வலிமைப்படுத்தல்
இயமம்
மனோமய கோச சுத்தி 
விஞ்ஞானமய கோச வலிமைப்படுதல்
நியமம்
விஞ்ஞானமய கோச சுத்தி
மனோமய கோச வலிமைப்படுதல்
ஆசனம்

பிராணமய கோச சுத்தி (நாடிகள், சக்கரங்களை சுத்தி செய்யும்)
அன்னமய கோச சுத்தி
பிராணாயாம

அன்னமயகோச சுத்தி, பிராணமயகோச சுத்தி,
அன்னமய, பிராணமயகோச வலிமை
பிரத்தியாகாரம்
மனோமய கோச சுத்தி,
விஞ்ஞானமய கோச வலிமை
தாரணை
விஞ்ஞானமயகோச சுத்தி,
மனோமயகோச வலிமை
தியானம்
ஆனந்தமயகோச சுத்தி,
விஞ்ஞானமய கோச வலைமை
சமாதி

இது அனைத்து கோசங்களும் சுத்தியாகி, வலிமை அடைந்த நிலை, பரிபூரணமாக ஆனந்தமய கோச நிலை விழிப்புற்ற நிலை


முடிவுரை:
இறுதியாக இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட கேள்வியான் யோகம் பழகுவதற்கான உண்மையான நோக்கம் எதுவெனக்கூறி முடிக்கலாம் என எண்ணுகிறோம். யோகம் என்பது எம்மை நாம் அறிந்து, எமது பலகீனங்களை அகற்றி சுத்தி செய்து வலிமைப்படுத்தி ஆதியாகிய பராசக்தியுடன் ஒன்ற செய்வதான செயல்முறையே ஆகும். அதனை முழுமையாக புரிந்துகொள்வதற்கு அதன் பகுதிகள் அனைத்தையும் அறிதல் வேண்டும், அவற்றை பற்றிய அறிமுகமாகவே அனைவருக்கும் பரீட்சையமான அட்டாங்க யோக பகுதிகளுடன் ஒப்பிட்டு விளங்கப்படுத்தி இக்கட்டுரையினை முன்வைக்கிறோம். இதனை சாதிக்கும் மற்றைய வழி சக்தி உபாசனை அதுபற்றியும் சுருக்கமாக கூறி நிறைவு செய்கிறோம், அதாவது அட்டாங்க யோகம் உடல், பிராணன், மனம், புத்தியினூடாக ஆன்ம சக்தியினை வலுப்படுத்தி ஆன்மாவினை அறிந்து சக்தியுடன் ஒன்றும் முறையினை விபரிக்கும்.

இதன் எதிர் திசையான முறைதான் சக்தி உபாசனை, அவற்றுள் குறிப்பானவை ஸ்ரீ காயத்ரி உபாசனையும் ஸ்ரீ வித்யா உபாசனையுமாகும். இந்த சாதனையில் ஆத்ம சக்தியின் மூலம் பராசக்தியின் சக்தியினை ஈர்த்து பஞ்சகோசங்களை சுத்தி செய்து, வலிமைப்படுத்தும் முறைகள் உள்ளன. 

Sunday, February 12, 2012

சித்த வித்யா பாடங்கள் 12:மனித காந்த சக்தியினை பிரயோகித்து பயன் பெறும் முறைகள்

சென்ற பதிவுகளில் மனித காந்த சக்தி பற்றிய விளக்கங்களும் அவற்றை வளர்ச்சியுற செய்யும் முறைகள் பற்றியும் கூறியிருந்தோம். இந்த பதிவில் அதனை நாளாந்த வாழ்க்கையில் எப்படி இவை பயன்படுத்த படுகிறது என்பதானியா பார்போம்.

மனித காந்த சக்தி மனிதனது உடலை சூழ முட்டை வடிவில் காணப்படுகிறது. இதனையே ஆரா (Aura) என்பார்கள். இந்த காந்த சக்தி உடலில் இருந்து அதிகம் வெளியாகும் பாகங்கள் கண்கள், கைகள், கால்கள் ஆகும். இதை அடிப்படையாக வைத்தே கண்திருஷ்டி, நட்பிற்கு கை குலுக்குதல், தீமை செய்ய காலடி மண் எடுத்தல் என்பன வழக்காகின. 

இதே அடிப்படையில் பிராண மன ஏகாக்கிர தன்மை பெற்றவர்கள் பழம், நீர், விபூதி போன்றவற்றில் தமக்கு தேவையான காந்த சக்தியினை பதிப்பித்து பயன்படுத்தி வரலாம். 

கண்திருஷ்டி கழித்தல் என்பது எம்மை சூழ உள்ள தீய காந்த சக்தியினை அகற்றும் செயல் முறைதான்.

இதனை செய்வதற்கு மனம் எகாகிரம் அடைந்த நிலையும் பிராண சக்தியும் அவசியம். 

இவற்றை மேலும் விரிவாக அறிந்துகொள்ள கேள்வி பதில் மூலம் தொடரலாம் என எண்ணி இந்த கட்டுரையினை முடிக்கிறோம். 

சத்குரு பாதம் போற்றி! 

Friday, February 03, 2012

சித்த வித்யா பாடங்கள்: 11 மனித காந்தசக்தியினை வளர்ச்சியுறச் செய்யும் பயிற்சிகள்

சென்ற பாடத்தில மனித கந்த சக்தியினை வளர்ச்சியுற செய்யும் அடிப்படைகளை விளக்கினோம், அதனை படித்த சில நண்பர்கள் அவற்றை தெளிவான பயிற்சி முறையுடன் விளக்கினால் நன்றாக இருக்கும் என கூறியிருந்தனர். அவர்களது விருப்பபடி அந்த முறைகளை தொகுத்து தந்துள்ளோம்.

மனித காந்தம் மனம் பிராணன் என்ற இரு பகுதிகளை உடையது. மனம் காந்தத்தின் தன்மையினை (Quality) தீர்மானிக்கும், பிராணன் அதன்  வலிமையினை (Strength) தீர்மானிக்கும். 

இதன் அடிப்படையில் கீழே கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கும், கடவுளை சாராமல் தமது காந்த சக்தியினை வளர்த்துக்கொள்ளவும் ஆன பயிற்சிகளை தருகிறோம்.

முதலாவது பிராணா சக்தியினை வளர்ப்பதற்கான பயிற்சி ;

அடிப்படை 

முதுகுத்தண்டு நேராக இருக்குமாறு நிமிர்ந்து உட்கார்ந்து கொள்ளுங்கள், முடியுமானால் பத்மாசனம், சித்தாசனம், சுகாசனத்தில் அமர்ந்து கொள்ளவும்.  இயலாதவர்கள் நேராக நின்று கொண்டும் செய்யலாம். 

கைகளை பக்க வாட்டில் தளர்ச்சியாக பக்கவாட்டில் தொங்க விட்டு மெதுவாக மூச்சினை முழுவதும் வெளியேற்றி விட்டு பின் மூச்சினை உள்ளிழுக்கும் பொது கைகளை மேலுயர்த்தி நன்றாக மூச்சினை எடுத்து பின்னர் மூச்சினை வெளிவிடும் பொது கைகளை பக்கவாட்டில் விடவும். இப்படி ஆரம்பத்தில் மூன்று தடவைகளும் பின்னர் 5  தடவைகளும் செய்து வரவும். 

இப்படி செய்யும் போது மூச்சிழுக்கும் போது நல்ல காந்த சக்தி உங்களுக்குள் வந்து நிரம்புவதாகவும் வெளியேறும் போது உங்கள் உடலில் மனதில் உள்ள தீயவை வெளியேறுவதாக பாவிக்கவும்.

இதனால் உங்கள் காந்த சக்தி அதிகரிக்கும்.

நடு நிலை 

சூரிய நமஸ்காரம் பிராண சக்தியினை அதிகரிக்க செய்யும் ஒரு அரிய செயல்முறையாகும், இதனை தெரிந்த வர்கள் மேற்கூறிய பாவனையுடன் ஒவ்வொரு அசைவின் உடனும் செய்துவருவதால் அதிகரிக்கலாம. 


உயர் நிலை பயிற்சி  

கும்பக பிரணாயமமே அதிகளவு காந்த சக்தியினை பெறுவதற்கான வழி, ஆனால் நேர்முகமாய் பயில் வேண்டியது. 

கடவுள் நம்பிக்கை உள்ள நபர்களிற்கான பயிற்சி 
  1. உங்கள் இஷ்ட தெய்வத்தினை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்,
  2. அத்தெய்வதிற்குரிய சிறிய மந்திரமொன்ரை எடுத்துக்கொள்ளுங்கள் (ஓம் "நமசிவாய, நாராயணய, சரவணபவாய, துர்கையை" நமஹா என்றவாறு அல்லது காயத்ரி மந்திரம், இஸ்லாமிய நண்பர்கள் "பிஸ்மிள்ளஹி  ர்ரகுமநிர்ரஹீம் என ஜெபிக்கலாம் )
  3. பின்னர் குறித்த நேரத்தில் மனதில் உங்களது இஷ்ட தெய்வத்தினை பாவித்த வண்ணம் மந்திரத்தினை உங்களது மூச்சினை மெதுவாக உள்ளிழுக்கும் போது உங்களது இஷ்ட தெய்வத்தினது அருள் காந்த சக்தி சென்று உடல் மனதில் கலப்பதாக பாவித்து வரவும்.
  4. ஓரிரு மாத கால பயிற்சியில் நிச்சயமாய் உங்கள் காந்த சக்தி வளர்ந்திருப்பதை அனுபவமாக உணரலாம்.  
இவற்றை எப்படி பிரயோகிப்பது என்பது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

சத்குரு பாதம் போற்றி!

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...