விமர்சன சிந்தனையின் விளக்கம்
இன்று காலை ஒரு மாணவன் தனது தொழில் வாழ்க்கையில் தான் அடிக்கடி சரியாக முடிவுகள் எடுக்க முடியவில்லை, இதற்கு என்ன செய்யலாம் என்றார்?
அதற்கு நான் எமது சிந்தனை முறையில் critical thinking (CT) வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்ல அடுத்த கேள்வி CT என்றால் என்ன?
அதற்குரிய விடை பலருக்கும் பிரயோசனமானது என்பதால் இங்கே பதிவு;
CT என்பதை தமிழில் இப்படிக் கூறலாம், எமக்கு முடிவெடுக்க வேண்டும் என்ற ஒரு சூழலில் இது சரியானதா, பிழையானதா என்பதை தீர்மானிக்க நாம் நியாயமாக எமக்குள் அந்த விடயத்தைப் பற்றி விமர்சிக்கும் மனப்பழக்கம்!
பொதுவாக ஒரு விடயத்தைச் சிந்திக்கும்போது நாம் ஏற்கனவே ஏற்படுத்திக்கொண்ட பழைய பழக்கவழக்கங்கள், நம்பிக்கைதான் சரியானது என்றே எமது சிந்தனை ஓடும்; அதிலிருந்து சற்று விலகி நாம் சிந்திக்கும் விடயத்துடன் தொடர்புடைய பல்வேறு காரணிகளையும் உள்வாங்கி அவை எப்படிப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை சிந்தித்து அறிய முயற்சிப்பதுதான் விமர்சன சிந்தனை அல்லது CT.
விமர்சன சிந்தனையின் நோக்கம் நான் இதைச் செய்யப்போகிறேன் அது சரியான விளைவினைத் தருவதாக இருக்குமா என்பது;
இதற்கு சாணக்கியர் மூன்று கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று சொல்லுவார்?
1) நான் ஏன் இந்தக்காரியத்தைச் செய்ய நினைக்கிறேன்?
2) இதைச் செய்து முடித்த பின்னர் இதன் விளைவுகள் என்ன?
3) இந்த விளைவுகளை என்னால் தாங்கிக்கொள்ள முடியுமா?
இந்த மூன்று கேள்விகளுக்கான பதிலும் உறுதியானதாகவும், தெளிவானதாகவும் மாத்திரம் இருந்தால் மட்டுமே அந்தக்காரியத்தைச் செய்ய வேண்டும். அப்படியாக இல்லாவிட்டால் அவற்றைச் செய்யாமல் தவிர்க்க வேண்டும் என்கிறார். இந்த மூன்று கேள்விக்கும் திருப்தியான பதில் இருந்தால் அந்தச் செயலில் எமக்கு பூரணமான சுய பொறுப்பு இருக்கிறது என்றும் மன உறுதியோடு செயலை செய்து முடிப்போம் என்றும் அர்த்தம்!
இந்த மூன்று கேள்விக்கும் சரியாக பதில் தெரியவில்லை என்றால் அந்தச் செயல் குழம்பி நாம் புலம்பப் போகிறோம் என்று அர்த்தம்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.