இன்று இந்திய சுதந்திர தினம். அத்துடன் இந்திய சுதந்திரப்போராட்டத்தை ஆரம்பித்த மூலவர்களில் ஒருவரான ஸ்ரீ அரவிந்தரின் பிறந்த நாளும் கூட.
தேசத்தை பராசக்தியின் ஆற்றலாக உருவகித்து அந்த ஆற்றல் மூலம் உலகிற்கு நன்மை தரும் தேசமாக இந்தியா மிளிரவேண்டும் என்பது ஸ்ரீ அரவிந்தரின் இலட்சியம்!
15th of August 1947 அன்று All India Radio, Tiruchirapalli இற்கு தந்த சுதந்திர தினச் செய்தியில் இப்படிக் கூறுகிறார்;
ஆகஸ்ட் 15ம் தேதி எனது பிறந்த நாள், அது இந்திய சுதந்திர தினத்தால் பரந்த முக்கியத்துவத்தை பெறுகிறது என்பது இயல்பாகவே எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தற்செயல் நிகழ்வை ஒரு தற்செயலான விபத்தாகக் கருதாமல், தெய்வீக சக்தியின் ஒப்புதல் மற்றும் முத்திரையாக நான் எடுத்துக்கொள்கிறேன், அந்த தெய்வ ஆற்றல் நான் வாழ்க்கையைத் தொடங்கிய பணியின் முழுப்பலனின் தொடக்கமாக என் காலடிகளை வழிநடத்துகிறது.
இந்தியா தனது ஆன்மீக ஆற்றலை உலகிற்கு ஏற்கனவே கொடுக்கத் தொடங்கிவிட்டது; அது ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய தேசங்களில் வளர்ந்து வருகிறது. இது இன்னும் வளரும். இன்னும் பலர் பாரதத்தாயினை நோக்கி வருவார்கள்; அவளிடம் கற்க மாத்திரமல்ல; அவளுடைய ஆன்மாவையும், அவள் தரும் ஆன்ம முன்னேற்றப் பயிற்சியையும் தேடி...
பலமான ஆன்ம சக்தியுள்ள பாரதமாதா வளமான தெற்காசியாவின் மூலம்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.