அஸ்வபதி எனும் தபஸ்வியின் மகளாக பராஸக்தி ஸாவித்ரி மனித உடல் தாங்க வருகிறாள்.
த்யுமசேனன் எனும் அந்தக அரசனின் மகனாகப் பிறக்கிறான் ஸத்யவான்.
தவமும் பிராணனும் புலன்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பெற்றவன் பராஸக்தியின் பரிபூரண கடாட்சம் பெறுகிறான்.
அவித்தையும், அஞ்ஞானமும் நிறைந்த த்யுமசேனனிற்கு அற்ப ஆயுளும், வலிமையுமற்ற ஸ்த்யவான் பிறக்கிறான்.
ஸத்யவானிடம் சத்திய ஒளி புதைந்திருக்கிறது; அற்ப ஆயுளாலும், அறியாமையாலும் வெளிப்பட முடியவில்லை!
இத்தகைய ஒருவன் மீது பராஸக்தியின் சொரூபம் ஸாவித்ரி அன்பைச் செலுத்துவதால் அவன் மரணத்திலிருந்து மீள்கிறான்.
ஸாவித்ரி காவியம் பராஸக்தியின் கருணை எப்படி ஒருவனில் செயற்படுகிறது என்பதன் குறியீட்டு விளக்கம். ஸ்ரீ அரவிந்தரின் தனிப்பட்ட யோக அனுபவத்தின் சாரம்!
யோக சாதகன் ஒருவன் ஸாவித்ரி படிக்கும்போது தானே த்யுமசேனன், தானே ஸத்யவான், தானே அஸ்வபதி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இது யோகத்தில், தான் எந்த நிலையில் இருக்கிறேன் என்பதை எமக்குக் காட்டும்!
ஸ்ரீ ஸக்தி சுமனன்
17-ஆகஸ்ட்-2022
மாத்தளை
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.