இன்று கிருஷ்ண ஜெயந்தி - ராதையை வழிபட்டால் கிருஷ்ணன் அருள் முழுமையாகக் கிடைக்குமாம்.
கிருஷ்ணன் வழிபடுவதால் அவள் ராதையானாள் என்கிறது ராதிகோபநிஷத்.
ஸ்ரீ ராதை ஈரேழு பதினான்கு உலகங்களிலும் பிரக்ருதிக்கு மேம்பட்ட ஸக்தியின் ஸ்வரூபம்.
ஸ்ரீ ராதையின் மதன மோகன மோகினி லீலை ராதை என்ன சித்தியைத் தருவாள் என்பதைச் சொல்லும்!
மன்மதனுடைய தொழில் பிரக்ருதிமயமான புலனின்பங்களின் இச்சையைத் தூண்டுதல். மும்மூர்த்திகளும் மகரிஷிகளும் ஸ்ரீ கிருஷ்ணனை காமுகனாக்க மன்மதனைப் பணித்தனர். இந்த நோக்கத்துடன் மன்மதன் கிருஷ்ணனை நெருங்கினான். இதை அறிந்த கிருஷ்ணன் இன்று இரவு இராச லீலை நடனம் இருக்கிறது; அங்கு வந்து உனது ஆற்றலைக் காட்டி என்னில் காம எண்ணத்தை விழிப்பித்தால் நான் உனது அடிமையாகிறேன் என்றான் கிருஷ்ணன். மன்மதன் 16000 பெண்களுக்கு மத்தியில் கிருஷ்ணனை வீழ்த்துவது இலகு என்று எண்ணிக்கொண்டான்.
எந்தத் துன்பம் வந்தாலும் தன் இதயத்தில் இருந்து அன்பைப் பொழியும் ஸ்ரீ ராதையை ஸ்ரீ கிருஷ்ணன் தியானித்தான். அன்னை தோன்ற, ராதையே உனது ஹ்லாதினி சக்தியால் ஒருவன் பூரண சத்துவ குணம் நிறைந்து புலன்கள் அடங்கிய ஜிதேந்திரியனாகவும், காம எண்ணம் அற்ற காமரஹிதனாகவும் மாறுகிறான். மன்மதனிடம் இந்த சவாலில் வெற்றிபெற உதவி செய்வாயாக என்று பணிந்தான்.
மஹாராஸ லீலை தொடங்கியது; மன்மதன் தனது அம்புகளை எய்து அங்கிருந்த ஒவ்வொருவரிலும் பிரக்ருதிமயமான உடலின் காம சக்தியைத் தூண்டினான்! இதை ஸ்ரீ ராதையின் ஹ்லாதினி ஸக்தி உயர்ந்த மகாபாவம் எனும் உடல் கடந்த ஸமாதி நிலைக்குச் செலுத்தி அனைவரையும் பேரின்ப நிலைக்குக் கொண்டு சென்றாள்.
ஸ்ரீ ராதை ஒவ்வொரு சாதகரிலும் தனது ஹ்லாதினி சக்தி மூலம் சத்துவகுணத்தை நிறைத்து தியான ஸமாதி நிலைகளைத் துரிதமாகத் தரும் அன்னையின் ஆற்றல்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.