சதுரங்கம் நவீன Game theory இல் Combinatorial game என்ற வகைப்பாட்டிற்குள் வருகிறது. இந்தவகை விளையாட்டின் நோக்கம் எதிராளியின் படை பலம் அல்லது வளங்கள் பற்றிய முழுமையான தகவலைத் தெரிந்துகொண்டு குறித்த தளத்திற்குள் ஆட்டத்தை ஆரம்பித்து படிப்படியாக எதிராளியின் பலத்தினை அழித்து எதிராளி இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையை ஏற்படுத்துவது.
இந்த விளையாட்டை விளையாட நான்கு விஷயங்கள் அவசியம்;
1) ஆட்டத் தளம் ( 8 x 8 )
2) ஆட்டத்திற்கான படைகள் - ரத கஜ துரக பதாதிகள் என்ற சதுரங்க சேனை
3) ஒவ்வொரு சேனையும் ஆட்டத்தை ஆரம்பிப்பவருக்கு மாற்றாக, அதேவேளை எனது படையை இழக்காமல் அவரது படையை இழக்க நான் என்ன ஆட்டத்தை நடத்த வேண்டும் என்ற கணிப்பு
4) இந்த ஆட்டத்தை வேகமாக குறித்த நேரத்திற்குள் முடிப்பது - ஏனென்றால் நீண்ட ஆட்டம் மனச் சோர்வினால் ஆட்ட விதிகளைப் பின்பற்ற முடியாமல் போகும்.
ஆட்டத்தளம், ஆட்டத்திற்கான படைகளின் நிலை இவற்றைப் பற்றிப் புரியாமல் மற்ற இரண்டையும் பூர்த்தி செய்ய முடியாது.
ஆகவே சதுரங்கத்தில் நான் எப்படி எனது படைகளை நகர்த்தி எதிராளியின் அரசனைக் கைப்பற்றப்போகிறேன் என்ற முழுமையான கணிப்புடன், எதிராளியின் நகர்வு எனது திட்டத்தை எப்படி பாதிக்கிறது என்பதைக் கணித்து அதற்கு அமைவாக எனது நகர்வை மாற்றி எதிரியை பலமிழக்கச் செய்யும் உத்தி தேவைப்படுகிறது.
ஆகவே எதிரியை பலமிழக்கச் செய்து, இதற்கு மேல் ஒன்றும் செய்வதற்கு இல்லை என்ற முடிவினை எட்டவைக்கும் ஆட்டங்கள் எல்லாம் Combinatorial game தான்.
அந்தக்காலத்தில் சதுரங்கம் ஆடுவது அரசர்களுக்கான விளையாட்டாக இருந்ததற்கு காரணம் அரசன் ஒருவன் தனது எதிரியை பலமிழக்கச் செய்யும் வகையில் சதுரங்க சேனையையும், தனது மன உறுதியையும் வைத்திருக்க வேண்டும் என்பதனால் எனத் துணியலாம்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.