அன்று பாரதமாதா தளை நீங்கிய நன்நாள்
பூரண யோகம் தந்த மகாயோகீஸ்வரர்
ஸ்ரீ அரவிந்தர் பூவுலகில் உதித்த நாள்!
அதிகாலையில் ஸோமனின் தியானத்தில்
தங்க நிற தேகத்தில் ஸ்ரீ அன்னையும்
ஸ்ரீ அரவிந்தரும் காட்சி தந்தனர்
உலகம் உய்ய உன் அகப்பயங்களை வீசி
பணிபுரி என்று ஆணையிட்டனர்!
கடன் உண்டு, குடும்பம் உண்டு என்று தாழ்மன கிலேசத்தால் புலம்பினன் ஸோமன்!
ஊர்த்துவம் ஏறி குருவருள் பெற்ற
உனக்கேன் கவலை என்றாள் அன்புடன் ஸ்ரீ அன்னை!
மனதை உயர்த்த உணர்வை உயர்த்து!
பாத்திரமாய் இருக்கப்பழகு
அருள் நிரம்பும் சக்திபெருகுமென்றாள்!
இட்ட கட்டளையைச் செய், செல்வம் சேருமென்றாள்!
இந்தப் பணியால் தங்க தேகம் உனக்கு வாய்க்குமென்றாள்!
அகத்தியரின் மணக்குள வேதபுரிக்கு வாவென்றனர்
தூல மலர் அன்னைக்கு அணிவிக்க விருப்பம்
என்று நினைக்க
உன் அகத்தில் இருக்கும் கமலங்களை
அர்ப்பணி என்றாள்!
அறுகோணம் இட்டு ஏழு பதுமங்களை
மலர்வித்தாள் அன்னை!
இவ்வுலகில் பலர்வழி காண உனக்கு
பொன்னுடல் வாய்த்து அன்னையின் ஆற்றல் என்றும்
உன்னில் இருந்து செயற்படும் என்று ஆசி அருளினாள்!
சாகம்பரி வித்தையை பரப்பு என்றாள்!
ஸாவித்ரியை காயத்ரியாக
அனைவருக்கும் அள்ளிக் கொடு என்றாள் அன்னை!
சிருஷ்டி சிருஷ்டிக்கப்பட்டது!
ஸ்ரீ ஸக்தி சுமனன்
15 -ஆகஸ்ட்-2022
மாத்தளை
Picture courtesy: Priti Ghosh
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.