த்யுமசேனன் - தியுமன் என்றால் ஒளிமிகுந்தவன் என்றும் சேனன் என்றால் சேனைகளை உடையவன் என்றும் அர்த்தம், ஸத்யவானின் தந்தை; கண்களை இழந்த அந்தகன் என்பதால் இராஜ்யத்தை விட்டு விரட்டப்பட்டவனாகிறான். காட்டில் இருளில் வாழ்கிறான்.
ஸ்ரீ அரவிந்தர் த்யுமசேனனை தெய்வீக மனதின் குறியீடாக்குகிறார். ஒளி மிகுந்த தெய்வீக மனம் புலன் வழி சென்று குருடாகியதால் தனது தெய்வத்தன்மையை இழக்கும் நிலையைக் குறிக்கும் குறியீடு.
உண்மையில் மனம் என்பது ஒரு தெய்வீகத் தன்மையுடைய ஒளியாற்றல் நிறைந்த ஒரு ஆற்றல்; ஆனால் அது உடலிற்குள் வந்து புலன்களில் கலக்கும் போது இந்த உடலை இழப்பதால் அடிக்கடி தனது தெய்வத்தன்மையை இழந்து குருட்டுத் தன்மையை அடைகிறது. மனம் என்பது அதன் உண்மை நிலையில் ஒளிமிகுந்த தெய்வத்தன்மை உடையது; ஆனால் புலன் வழி நடக்கும் போது குருடாகிறது.
இதுவே த்யுமசேனன் என்ற ஸத்தியவானின் தந்தை என்ற பாத்திரத்தின் குறியீட்டு விளக்கம்.
ஸத்யவானும், த்யுமசேனனும் ஒரு யோக ஸாதகனுடைய இரண்டு பிரச்சனைகள்.
ஸாதகன் தனது உடல் வலிமையற்று அற்ப ஆயுளைப் பெற்றிருப்பதால் யோகத்தில் சித்தி பெறமுடியாமல் போகும்! இது ஸத்தியவானின் நிலையால் ஸ்ரீ அரவிந்தர் விளக்குகிறார்.
இரண்டாவது சாதகனின் மனம் புலன்கள் வழி சென்று குருடாவதால் தனது தெய்வீக ஆற்றலை இழந்து பராஸக்தியை நேரடியாக அழைக்க முடியாத நிலை!
உடலும் பலமில்லை, மனமும் தனது தெய்வ நிலையை இழந்து விட்டது; எப்படி யோக சாதனை செய்வது என்றால் அதற்குரிய உதாரணம் அஸ்வபதி - இவர் புலன் களை அடக்கியவர், பிராணனாகிய குதிரையை வசப்படுத்தி ஆள்பவர்; நீண்ட தபஸினை செய்யக்கூடிய ஆற்றலைப் பெற்றவர்.
ஸ்ரீ அரவிந்தர் இந்த யோக காவியத்தில் சொல்லும் செய்தி அடிப்படையில் ஒரு யோக சாதகன் ஸத்யவான், த்யுமசேனன் போன்ற வலிமையற்ற நிலையில் இருக்கிறான். அவன் தனது தபஸினூடாக அஸ்வபதியாக மாறினால் மாத்திரமே பராஸக்தியைத் தரிசிக்க முடியும் என்பது! அவள் அஸ்வபதியின் - பிராணனூடாக - மகளாக வந்து உடலினது அற்ப ஆயுளை நீக்கி யோகம் புரியும் வல்லமையும். மனதை மீண்டும் தெய்வ நிலைக்கு உயர்த்தி ஒளியை நோக்கிச் செல்லும் வல்லமையும் தருவாள் என்று புரிய வைக்கிறார்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.