நான் சிறுவயது முதல் எனக்கு பிடிக்காத எதையும் செய்ததில்லை! செய்யும் செயலை சிரத்தையுடன் செய்திருக்கிறேன்! பாடங்களை படிக்க அதிக நேரம் செலவழிக்காமல் பாடசாலை - பல்கலைக்கழகக் காலங்களில் பெரும்பகுதியை எனது யோக சாதனைக்கும், குருவுடன் வாழ்வதற்கும் செலவிட்டிருக்கிறேன்! இதனால் எனது உறவினர்களால் வாழ்க்கையில் தோற்றுவிடுவேன் என்று பயமுறுத்தப்பட்டிருக்கிறேன்; இப்படியான பயமுறுத்தலுக்கு எனக்குள் என்றும் பணிந்ததில்லை, அத்தகையவர்களுக்கு என்றும் சவால் விட்டதும் இல்லை! எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், அங்கீகாரம் வேண்டும் என்ற மனமும் இல்லாமல் செயல் புரியும் மனதுடன் எனக்குப் பிடித்ததை செய்திருக்கிறேன். எனது வாழ்வில் எதையும் இழந்ததில்லை! இதன் சூத்திரம் என்னவென்று எனது குருநாதர் கூறியதை தமிழ்ப்படுத்தியிருக்கிறேன்.
________________________________________
எல்லோரும் சுதந்திரமாக இருப்பதற்கு, எல்லையற்ற இன்பத்தினை, செல்வத்தை அடைவதற்கு ஆசைப்படுகிறார்கள். ஆனால் அந்த வாய்ப்பு வரும்போது அவற்றை அவர்கள் தழுவிக்கொள்வதில்லை. அவர்களுடைய பழைய ஞாபகங்கள், சமுக அங்கீகாரம், மற்றவர்கள் எம்மை மறுத்துவிடுவார்களோ என்ற பயம் அவர்களை ஊனர்களாக்குகிறது.
அவர்கள் தங்களுடைய சிந்தனை முறையினாலேயே கைகளும் கால்களும் செயற்படமுடியாமல் கட்டப்பட்டிருக்கிறார்கள். சுயாதீனமான எண்ணத்தையும், சுதந்திரத்தையும் எழவிடாமல் புதைக்கிறார்கள். அவர்கள் தம்மை நிபந்தனையற்ற அன்பினையும் ஆனந்தினையும் தமக்குள் அனுமதிப்பதில்லை. பழையமாதிரி மீண்டும் வாழ்க்கையை துன்பத்தில் செல்வதையே தொடர்கிறார்கள்.
தேவிபுரம் ஸ்ரீ அம்ருதானந்த நாதர்.
(Dr. N. Prahaladha Sastri - former scientist, TIFR)
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.