உன் ஆன்மாவைத் திறக்க
உணர்வினை வளர்க்க
ஆங்கிலத்தில் புலமைபெற
ஸ்ரீ அரவிந்தரின் ஸாவித்ரி காவியம்
தினசரி இருபக்கம் படித்தல் நல்ல பயிற்சி
என்றார் ஸ்ரீ அன்னை!
இம்மூன்றும் அவசியம் என்று உணர்ந்து ஸாவித்ரியை கற்றான் ஸோமன்! கற்றவற்றைப் பகிர்ந்தான் அமுதத் தமிழில்!
ஸாவித்ரி 24000 அடி ஆங்கில காவியம்
ஆங்கிலத்திலிருக்கும் மிகப்பெரிய காவியம்
பேருணர்விற்கு வழி சொல்லும் காவியம்
புராணமும் குறியீடும் என்று பெயரிட்டார் ஸ்ரீ அரவிந்தர்
மகாபாரதத்தில் முன்னூறு பாடல் சத்தியவான் சாவித்ரி புராணக் கதை ஸ்ரீ அரவிந்தரின் ஆன்ம முன்னேற்றப் பாதையினை விளக்கும் குறீயீடு என்பதால் இதற்கு ஸ்ரீ அரவிந்தர் புராணமும் குறியீடும் என்று பெயரிட்டார்!
ஏன் இந்தக் கதையை ஸ்ரீ அரவிந்தர் தேர்ந்தெடுத்தார்?
மகாபாரதத்தில் மார்க்கண்டேயர் பாண்டவர்களுக்குச் சொல்லும் கதை இது!
மார்க்கண்டேயர் மரணத்தை வென்ற ரிஷி!
அவர் சொன்ன கதைக்குள் அமரத்துவம் குறியீட்டு மொழியில் இருந்ததை விரித்து தன் அனுபவமும் சேர்த்துச் சொன்னார் ஸ்ரீ அரவிந்தர்!
ஸாவித்ரி ஸத்தியவானை அறியா பாரதீயர்கள் இல்லை! ஆகவே அமரத்துவத்தின் யோக இரகசியங்களை அறிந்த கதையில் பிணைத்துக் கொடுத்தால் யோக இரகசியங்கள் முயற்சி இன்றி சித்தத்தில் பதியும் என்பதால் இந்த உத்தி!
பூரண யோகத்தின் சாரமெல்லாம் சத்தியவான் ஸாவித்ரியைக் குறியீடாக்கி புராணமும் குறியீட்டு மொழியுமாக ஸாவித்ரி காவியம் தந்தார் ஸ்ரீ அரவிந்தர்!
ஸ்ரீ அரவிந்தரின் அதி உன்னத வெளிப்பாடு ஸாவித்ரி என்றார் அன்னை!
ஸ்ரீ ஸக்தி சுமனன்
16-ஆகஸ்ட்-2022
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.