மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale எப்போதும் எமது சமூகத்திலிருந்து பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்கள் தமது கல்வியைத் தொடர தேவையான உதவிகளைச் செய்ய கவனத்துடன் செயற்பட்டு வருகிறது.
இந்த அடிப்படையில் மாத்தளை பாக்கியம் தேசியக்கல்லூரியின் மாணவி ஒருவர் உயிரியல் தொழில்நுட்ப பட்டப்படிப்பிற்கு தெரிவாகி இருக்கிறார்; குடும்பச் சூழலால் கல்வியை விடும் நிலையில் இருந்த அவர் கற்பதற்கு அவருடைய பாடசாலை ஆசிரியர்களும், அதிபரும் சேர்ந்து செய்த உதவியால் இன்று பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார்.
தொழில்நுட்ப பாடங்களுக்கு கணனி இல்லாமல் கற்க முடியாது. இதை உணர்ந்து ஒன்றியத்தின் செயலாளர் Dr. Nishānthan Ganeshan தகவல் தொழில்நுட்ப பொறுப்பாளர் Ravi Shankar ஆகிய இருவரும் "ஐயம் இட்டு உண்" அறக்கட்டளையின் ஸ்தாபகரும், முன்னாள் ஈ-கல்வி தொண்டு நிறுவன தலைவருமான Muralee Muraledaran அண்ணா அவர்களின் நிதி உதவியுடன் மடிக்கணணி ஒன்றினை ஏற்பாடு செய்து அவரது கற்கைக்காக ஒன்றியத்தினூடாக வழங்கியுள்ளனர்.
இந்த மடிக்கணனி அவரது கற்கைக்கு கடனாக வழங்கப்படுகிறது என்பதையும், இந்தக் கடன் படித்து உயர்ந்த தொழிலிற்கு வந்தபின்னர் இதைப்போல் 10 பிள்ளைகளுக்கு நீங்கள் திருப்பி வழங்குவதன் மூலம் மீள் செலுத்த வேண்டும் என்று கூறினேன். உறுதியுடன் ஏற்றுக்கொண்டார். {இது ஒரு உத்வேகத்திற்கும், எதிர்காலச் சந்ததிமேல் பொறுப்புடன் நடந்துகொள்ளவும் சொல்லபட்ட வார்த்தை! அவர் அதை பக்குவமாக பாவித்துவிட்டு கல்வி முடிந்தவுடனோ, புதுக்கணனி வாங்கினாலோ இன்னொருவர் பாவிக்கும் வகையில் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பது மாத்திரமே அவர் மீது சுமத்தப்பட்ட உத்தியோகப்பூர்வ நிபந்தனை!}
இந்த நிகழ்வில் ஒன்றியத்தின் தலைமை ஆலோசகர் என்ற அடிப்படையில் பங்குபற்றினேன்! நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர், ஒன்றியத்தின் ஆலோசகர் Jayaprakash Sithambaram, அதிபர் அவர்களும் பங்குபற்றினர்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.