குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, December 09, 2017

எனது இளமைக்கால சாதனா நாட்கள்


காயத்ரி மந்திர புரச்சரண ஹோமம்


குரு சேவையில்


ஸ்ரீ வித்யா பூர்ணதீக்ஷா குருநாதருடன்



Tuesday, November 14, 2017

மனஉத்வேகங்களும் கருத்தாடல்களும் – ஒரு பெருங்குழப்ப கோட்பாட்டு புரிதல்


ஒரு பெருங்குழப்ப கோட்பாட்டாளனாய், யோக தத்துவ அடிப்படியில் மனதை விளங்கி கொள்ள முயல்பவனாய் இந்த சம்பவங்களை எப்படி பார்க்கலாம் என்ற ஒரு புரிதல்!

பல சமயங்களில் கருத்தாடல்கள் கருத்தாடல்களாக அன்றி தனிமனித தாக்குதல்களாக உருப்பெறுகிறது. தொகுதியின் சமநிலையினை குழப்புகிறது. தொகுதி குழம்பும் போது அது சரியான திசையா, பிழையான திசையா என்று நிர்ணயிக்க முடியாத நிலையினை நோக்கி நகர்ந்து ஆரோக்கியத்தையும் தரலாம், அழிவையும் தரலாம்! இது ஒரு சக்கர வியூக நிலை!

மகாபாரதத்தில் சிறுவன் அபிமன்யு சக்கர வியூகத்தில் சிக்கி மாண்டான் என்ற கதை படித்திருப்போம். கதை எதுவாக இருந்தாலும் அதில் உள்ள நீதியினை அறிவதற்காகவே கதை.
இங்கு சக்கரவியூகம் என்பது அலை அலையாக உத்வேகங்களால் மனதில் எழும் எண்ணங்களில் மனிதன் சிக்கி மூழ்கும் நிலை! ஒரு மனிதன் பொதுவாக ஒரு விடயத்தில் இச்சை கொண்டு தனது மனதை ஈடுபடுத்தி எண்ணங்களை உருவாக்கி ஒரு கட்டத்தில் எல்லை மீறி சென்று அந்த எண்ணங்களே அவனுக்கு எமனாகிவிடும் நிலை!

இன்பத்துக்காக சாராயம் குடிப்போம் என்று அடிமையாகி ஈரல் கெட்டு செத்தவன்!

போராடுவோம் என்று புறப்பட்டவன் ஒரு கட்டத்திற்கு மேல் போராட்டம் என்பது தீர்வுக்காக என்பதனை மறந்து போராடி இறக்கும் நிலை!

பலரும் தம்மை நிலை நிறுத்துவதற்காக செய்யும் ஒவ்வொரு செயலும் கடைசியில் சக்கரவியூகமாக சூழ்கிறது!
இப்படி அநேகமாக எல்லோருமே எதோ ஒருவிதத்தில் சக்கரவியூகத்தில் மாட்டிகொண்டுதான் இருக்கிறோம்.
இனி விடயத்திற்கு வருவோம், ஒரு விடயம் மீதான கருத்து என்பது மற்றவர்களுக்கு கூறப்படுபவரால் தனது விடயம் சார்ந்த மனகுழப்பமற்ற தெளிவான புரிதலை ஏற்படுத்த முயல்வது. கருத்தை கூறப்பட்டவர் நிலையில் இருந்து கேட்காவிட்டால் புரிதல் என்பது எப்போதும் தவறாகவே இருக்கும். பெரும்பாலும் நாம் கருத்துக்களை கேட்கும்போதும், வாசிக்கும்போதும் எமது கருத்து என்ற ஒரு புள்ளியில் எம்மை அசையாமல் நிறுத்தி விட்டே கேட்க தொடங்குகிறோம். ஆனால் மற்றவர் கருத்து என்பது எமது கருத்துடன் ஒன்றாத ஒரு ஒன்றாகவே எப்போதும் இருக்கும்.

ஒரு பெண் தனக்கு பேஸ்புக்கில் நடந்த உரையாடலை தனது மனவெளிப்பாட்டுடன் பதிய அதன் விளைவு எதிர்கருத்துக்கள், தூஷணைகள், காரசாரமான செல்ல தொகுதி குழப்பத்தை நோக்கி நகர்ந்தது. இங்கு நடந்த சம்பவத்தில் தனது கருத்து என்று கூறும் பகுதி பலரை பலவாறாக சிந்திக்க வைத்தது. ஆக புரிதல் என்பது ஒவ்வொருவரது மனம், அனுபவம் சார்ந்தது. ஒருவனுக்கு ஆரோக்கியம் தரும் இனிப்பு மற்றவனுக்கு நோயினை கூட்டும் காரணியாக அமையும் என்ற உண்மையும், கருத்தினை கூறவருபவர் என்ன கூறவருகிறார் என்பதனை மனஉத்வேகங்கள் இன்றி புரிந்து கொள்ள கூடிய சமநிலையிலுமே ஒரு விடயம் பிரச்சனையா இல்லையா என்பது இருக்கிறது. எப்போதும் எங்குமே பொதுமைப்படுத்தப்பட்ட கருத்தாக எதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. கடவுள் தவிர்ந்த பிரபஞ்ச உண்மை என்று எதுவும் இல்லை, எல்லாம் அது சார்ந்த தொகுதி உண்மைகள்தான், (there is no absolute truth rather than God, all are system related conditional truths), ஆக ஒருவர் கூறும் கருத்துக்களை அவரது தொகுதி சார்ந்த உண்மைகளாக கொள்ளப்பட வேண்டுமே அன்றி பொதுமைப்படுத்த படுத்தப்பட்ட ஒன்றாக எடுத்துகொண்டு விவாதிக்க முயன்றால் அது ஆரோக்கியமான கருத்தாடலாக அமையாது என்பதையும், கருத்தாடல் பல திசைகளை நோக்கி பயணிக்க தொடங்கும் என்பதனையும் இந்த சம்பவம் வெளிப்படுத்தியது. இது கருத்தினை பெறுபவர் மனம் எத்தகைய உணர்ச்சியுடன் அணுகுகிறது என்பதையும், மற்றவர் என்ன கூறவருகிறார் என்பதனையும் புரிந்து கொள்வதை தடுக்கிறது.

இதன் இரண்டாவது பகுதி கருத்தினை கூறவருபவர் தனது கருத்தின் மூலம் மற்றவர் மனதில் புரிதலையா, குழப்பத்தையா ஏற்படுத்துகிறார் என்பது பற்றிய தெளிவு. எப்போதும் கருத்தாடல்கள் என்பது தொகுதியின் ஒத்திசைவிற்காகவா (to lead to harmony), அல்லது குழப்புவதற்கானதா (to lead to Chaos) என்ற நோக்கம் சார்ந்தது, நான் பெற்ற அனுபவத்தை சமூகத்தின் நன்மை கருதி, ஒத்திசைவிற்காக பயன்படுத்தும் போது அது பலர் மத்தியில் புரிதல்களை மேம்படுத்தும், அவ்வாறின்றி உணர்ச்சி வசப்பட்டு கூறப்படும்போது நல்ல கருத்தாக இருந்தாலும் கருத்தினை விட்டு அவர்களது உணர்ச்சி வெளிபாடே மிகுந்து நிற்கும். இப்படியான உணர்ச்சி வெளிப்பாடு மற்றவர் மனதில் அதேபோன்ற உணர்ச்சியினையும் ஏற்படுத்தலாம், அல்லாமல் எதிர்ப்பு உணர்ச்சியினையும் ஏற்படுத்தலாம். இந்த தாக்க சங்கிலியின் விளைவை கருத்து கூறுபவரால் எல்லா வேளைகளிலும் கட்டுப்படுத்த முடியாது. இதனை கிணறு வெட்ட பூதம் கிளம்பியது என்றோ பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாக கொள்ளலாம். கருத்து கூறவருபவரின் நோக்கம் அறிவுசார் புரிதலின் வெளிப்பாடா, மனம் சார் உணர்ச்சியின் வெளிப்பாடா என்பது மிக முக்கியம்.
அறிவுசார் புரிதலின் வெளிப்பாடு குழப்பத்தை
ஏற்படுத்துவதில்லை,

உதாரணமாக உலக சரித்திரத்தை ஆராய்ந்து மூலதனத்தை பகுத்து கோட்பாடு எழுதிய காரல்மார்க்ஸ் குழப்பவாதியில்லை, அவர் எழுதியது இதுதான் என்று உணர்ச்சியுடன் பரப்பபட்ட சித்தாத்தம் உலக சமநிலையினை குழப்பியது, தொகுதியை புதிய திசை நோக்கி திருப்பியது,

வாழ்க்கையின் உண்மை அன்பு என்று உணர்ந்த இயேசு உரைத்த உண்மைகள் குழப்பத்தை ஏற்படுத்தவில்லை, இதுதான் உண்மை என்று உரைக்கப்பட்ட மதம் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இப்படி அறிவால் உணர்தலும், புரிதலும் தெளிவைதரும், ஆனால் மனத்தால் இதுதான் உண்மை என்று நிறுவ முற்படும் விடயங்கள் உத்வேகத்தை எழுப்பி குழப்பத்தையே தரும்.

ஆகவே கருத்தாடலில் மனம் எனும் காரணி அறிவுடனா, உணர்ச்சிகளுடனா சேர்ந்துள்ளது என்பதை பொறுத்து தொகுதி சமநிலை அடையுமா, குழப்ப நிலை அடையுமா என்பது தங்கியுள்ளது

சக்கர வியூகமும் வாழ்க்கையும்


மகாபாரதத்தில் சிறுவன் அபிமன்யு சக்கர வியூகத்தில் சிக்கி மாண்டான் என்ற கதை படித்திருப்போம். கதை எதுவாக இருந்தாலும் அதில் உள்ள நீதியினை அறிவதற்காகவே கதை. 

இங்கு சக்கரவியூகம் என்பது அலை அலையாக மனதில் எழும் எண்ணங்களில் மனிதன் சிக்கி மூழ்கும் நிலை! ஒரு மனிதன் பொதுவாக ஒரு விடயத்தில் இச்சை கொண்டு தனது மனதை ஈடுபடுத்தி எண்ணங்களை உருவாக்கி ஒரு கட்டத்தில் எல்லை மீறி சென்று அந்த எண்ணங்களே அவனுக்கு எமனாகிவிடும் நிலை!

இன்பத்துக்காக சாராயம் குடிப்போம் என்று அடிமையாகி ஈரல் கெட்டு செத்தவன்!

போராடுவோம் என்று புறப்பட்டவன் ஒரு கட்டத்திற்கு மேல் போராட்டம் என்பது தீர்வுக்காக என்பதனை மறந்து போராடி இறக்கும் நிலை!

யோகம் பயில்கிறோம் என்று பல நூற்களை கற்று மனது குழம்பியது ஒருவித சக்கரவியூகத்தில் மாட்டிய நிலையே! 

பலரும் தம்மை நிலை நிறுத்துவதற்காக செய்யும் ஒவ்வொரு செயலும் கடைசியில் சக்கரவியூகமாக சூழ்கிறது!

இப்படி அநேகமாக எல்லோருமே எதோ ஒருவிதத்தில் சக்கரவியூகத்தில் மாட்டிகொண்டுதான் இருக்கிறோம்.

Monday, November 06, 2017

கற்றலில் கேள்வி

கற்றலில் கேள்வி என்பது உண்மையில் எமக்கு நாமே கேட்டு தெளிந்தபின்னர் நாம் புரிந்து தெளிந்த விஷயம் அனுபவமுடையவர்களுடன் ஒத்துப்போகிறதா இல்லையா என்பதற்காக அந்த துறை சார்ந்த வல்லுனர்களிடம் கேட்கப்படவேண்டும். அல்லாமல் எந்த முயற்சியும் செய்யாமல் கேட்கும் கேள்வியால் கற்பவருக்கோ, கேள்வி கேட்கப்பட்டவருக்கோ எந்தப்பலனும் அளிப்பதில்லை!

கற்பதற்கு மாணிக்க வாசகர் காட்டும் வழிமுறை


"சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார், செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்"

இந்த வரிகள் மாணவர்களுக்கு, தெய்வ சாதனை பழக விரும்புபவர்களுக்கு, முகாமையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டிய வரி!

ஒரு விஷயத்தை கேட்கும்போது படிக்கும்போது எமது ஆழ்மனமாகிய சித்தம் தான் அறிந்த விஷயங்களை ஆசிரியர் கூறும் விஷயமாக மயங்கி குழப்பிக்கொள்ளும்.

இதனால் ஆசிரியர் கூறும் விஷயத்தை முழுமையாக புரியமுடியாமல் குழம்பும்.

ஆகவே மேலேகூறிய வரிகளில் மாணிக்க வாசகர் உறுதியாக சொல்லிய பாட்டின் பொருளை சரியாக ஆசிரியர் கூறியபடி புரிந்து சொல்லுவாருக்கே சிவபுரத்திற்கு வழி கிடைக்கும் என்று கூறுகிறார்.

ஆகவே கற்க நினைப்பவர் பெறவேண்டிய முதற்பண்பு வீணாக சித்த விருத்திகளை எழுப்பி தன்னை குழப்பாமல் கற்கும் விஷயத்தை கூறியவர் என்ன பொருளில் கூறினார் என்பதை புரிந்து உள்வாங்கல்!

இளமையில் கல்

இளமையில் கல்

Image may contain: 1 person, standing
ஔவைப்பிராட்டி கூறிவிட்டார் என்று சிறுவயது முதல் புத்தகத்தை படித்து, பரீட்சையை சித்தி செய்து, வேலையை தேடி விடுகிறோம்!

ஆனால் அந்த மூதாட்டி கூறியது வேறு பொருளில்! கல் என்றால் கல்லுதல், கல்லுதல் என்றால் தோண்டுதல் என்று பொருள்!

எதைத் தோண்ட வேண்டும்! மனதை! இளமையில் மனதை தோண்டி, உழுது, சரியான விதையை விதைத்தால் அதுவே கல்வி!

விதைத்தது தக்க பருவத்தில் பலன் தரும்!

கற்றலின் நிபுணத்துவத்திற்கான வழி

கற்றலில் நிபுணத்துவம்
இங்கு நாம் உரையாடும் சொற்கள், விஷயங்கள் பலரது மனதிற்கு பழக்கமற்றது, ஆகவே நிச்சயமாக குழப்ப நிலை ஏற்படும். 

இந்த நிலை ஆரம்ப காலத்தில் எனது குரு நாதரிடம் படிக்கும்போது எனக்கு ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பலரது மன நிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. 

ஒரு முறை எனது குரு நாதர் எனக்கு ஆதிசங்கரர் எழுதிய சாதனா பஞ்சகத்தின் உரையை தந்து இது உனது சித்தத்தில் பதிந்தால்தான் இதற்கு மேல் ஆன்மீக சாதனை என்று கூறிவிட்டார். 

இதற்கு என்ன வழி ஸ்வாமி ? (குரு நாதரை ஸ்வாமி என்றே அழைப்பது வழக்கம்) திரும்ப திரும்ப கருத்தூன்றி படிப்பதுதான் அப்பா என்று கூறிவிட்டார். 

அந்த நூலை குறைந்தது தினசரி ஐந்து தடவைப் படி ஒருவருடத்திற்கு மேல் படித்திருப்பேன். இன்றும் படித்துக்கொண்டுதான் இருக்கிறேன், 

கற்றலின் நிபுணத்துவத்திற்கான வழி;
முதல் முறை படிக்க எமது எண்ணம் ஆசிரியர் எண்ணமாக மயக்குவிக்கும், இருமுறை படிக்க எமது எண்ணமும் ஆசிரியர் எண்ணமும் படிக்க சிலது புரியும், சிலது வேறுபடுவது போன்று தோன்றும், மும்முறை படிக்க ஆசிரியர் கூறுவது சொல்லியபடி விளங்கும். இந்தப் பொறுமை இருந்தால் மட்டுமே கல்வியில் நிபுணத்துவம் தோன்றும்! மும்முறை படித்தும் விளங்கவில்லை என்றால் கல்விக்குரிய ஒழுக்கத்தில் மனம் இல்லை என்று அர்த்தம்! மனதை செம்மைப்படுத்த வழி தேடவேண்டும்.
இதை மனதில் கொண்டு இங்கு பகிரப்படும் விஷயங்களை அணுகுங்கள்அ

Sunday, November 05, 2017

அர்த்த சாஸ்திரம் – 005: அரசன்/தலமை நிர்வாகி அறியவேண்டிய வித்யா எவை ?



 
ஆன்விக்ஷிகி, த்ரயீ, வார்த்தா, தண்ட நீதிஷ்சேதி வித்யா
த்ரயீ வார்த்தா தண்ட நீதிஷ்சேதி மாநவா;
த்ரயீ விசேஷோ ஹ்யாந்வீக்ஷி கீதி
வார்த்தா தண்ட நீதிஷ்சேதி பாரஸ் ப்ருத்யா:
ஸம்வரண மாத்ரம் ஹி த்ரயீ லோக யாத்ராவித இதி:
தண்ட நீதிரேகா வித்யேத் யௌஷ நஸா:
தஸ்யாம்ஹி ஸர்வ்வித்யாரம்பா: ப்ரதிபத்தா இதி:
சதுஸ்ர ஏவ வித்யா இதி கௌடில்ய:
தாபிர் தர்மார்தௌ யத் வித்யாத் வித்யா நாம் வித்யாத்வம்:

மூன்று வேதங்கள், பொருளாதாரம், அரசியல் ஆகிய மூன்றுமே சில அறிஞர்களால் அறிய வேண்டிய வித்தையாக ஏற்கப்பட்டுள்ளது ஆன்விக்ஷிகி வித்தையாக ஏற்கப்படவில்லை.

பொருளாதாரம், அரசியல் ஆகிய இரண்டும் மட்டுமே அறிய வேண்டிய வித்தையாக ப்ரஹஸ்பதி அர்த்த சாஸ்திரத்தை பின்பற்றுபவர்கள் கூறுவார்கள். ஏனென்றால் த்ரயீ என்ற வேதங்கள்
 
உலக விவகாரங்களுக்கு தேவையில்லை, அது ஆத்ம ஞானத்திற்கு மட்டுமே போதுமானது அவர்களைப் பொறுத்த வரையில் தம்மை நாத்திகர் என்று மற்றவர்கள் கூறக்கூடாது என்பதற்காக போர்த்திக்கொள்ளும் விஷயமே வேதங்கள், வேதங்கள் உலக வாழ்க்கைக்கு உதவாதவை என்ற பிளவு சிந்தனை உள்ளவர்கள்

தண்ட நீதி மட்டுமே வித்யா என்பது ஔஷநசர்கள் எனும் சுக்ர நீதியை பின்பற்றுபவர்கள் கூற்று. தண்ட நீதி என்ற நிர்வாக அமைப்பு சரி இல்லை என்றால் எதுவும் ஒழுங்காக இருக்காது என்பது அவர்கள் கருத்து

ஆனால் கௌடில்யரின் அபிப்பிராயம் ஆன்விக்ஷிகி, த்ரயீ, வார்த்தா, தண்ட நீதி ஆகிய நான்கும் வித்யாகளே! ஏனெனில் வாழ்வின் இலக்கு தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்ற நான்கு புருடார்த்தங்கள். இந்த நான்கையும் அடையும் வழியை கூறுபவை வித்யா! ஆகவே இந்த நான்கும் வித்தைகளே

இந்த சுலோகம் கௌடிலியரின் அறிவாற்றல் – ஆன்விக்ஷிகியின் ஆழத்தைக் காட்டுகிறது. இன்றைய காலத்தில் ஒருவர் தனது துறையில் முனைவர்/கலாநிதி பட்டம் பெற்றால் அந்த துறையில் கற்பிக்கும் அறிவாழம் உள்ளவர் என்ற தகுதி பெறுகிறார். ஏனெனில் தனது அறிவாழத்தால் அந்த துறையில் புதிய அறிவை உருவாகியதன் காராணமாகவே அவருக்கு PhD பட்டம் வழங்கப்படுகிறது. இந்த பட்ட்த்தை பெற அவர் தனக்கு முன்னர் அதே துறையில் இருந்த அறிஞர்களில் அபிப்பிராயங்களை தனது அபிப்பிராயத்துடன் ஆராய்ந்து, தனது ஆய்வுடன் பெற்ற தகவல்களை ஒப்பிட்டு தனது கருத்தை சொல்ல வேண்டும். 

இந்த சுலோகம் அரசன் அறிய வேண்டிய வித்யாக்கள் எவை என்பது பற்றி அலசுகிறது. முதல் வரி கௌடில்யர் தனது கண்டுபிடிப்பினை வரையறை செய்கிறார். ஆன்விக்ஷ்கி, த்ரயீ, வார்த்தா, தண்ட நீதி இந்த நான்கும் வித்யா என வரையறுத்து, பின்னர் சில அறிஞர்கள் ஆன்விக்ஷிகி என்ற காரணத்தை கண்டுபிடிக்கும் அறிவின் நுண்ணாற்றலை வித்யாவாக ஏற்றுக்கோள்ளவில்லை எனக் கூறி, தனக்கு முன்னர் வழக்கில் இருந்த பிரகஸ்பதியின் நீதி நூலில் இப்படிச் சொல்லியுள்ளது, சுக்கிரனுடைய ஔச நச நீதியில் இப்படிச் சொல்லியுள்ளது ஆனால் கௌடில்யரின் அபிப்பிராயம் இந்த நான்குமே வித்யாக்கள் தான் என முடிக்கிறார். 

அர்த்த சாஸ்திரத்தில் தான் பிரயோகித்து வெற்றிகண்டு சந்திரகுப்த மௌரியன் மூலம் ஸ்தாபித்த மௌரியப்பேரசின்  வெற்றியின் அடிப்படையில் தனது அனுபவத்தை பகிர்கின்றார். மற்றைய எல்லா அறிஞர்களையும் விட அரசனிற்கு ஆன்விக்ஷிகி என்ற “காரணத்தை கண்டுபிடிக்கும் நுண்ணறிவு அவசியம்” என்ற அடிப்படையை அடுத்து வரும் ஸ்லோகங்களில் வரையறை செய்கிறார். 

இறுதி வரியில் தர்ம, அர்த்த, காம, மோக்ஷம் என்ற நான்குமே வாழ்வின் இலக்கு என்பதால் இந்த நான்கையும் அறியாத அரசன் மனித வாழ்க்கையை புரிந்து கொள்ள முடியாதவன், அவனால் மனிதர்களுக்கு தலைவனாக இருக்க முடியாதவன் என்பதை ஆழமாக உணர்ந்து இந்த சூத்திரத்தை வரையறை செய்கிறார். 

இன்று ஒவ்வொருவரும் வேலை செய்யும் நிறுவனத்தை ஒரு அரசு என்று எடுத்துக்கொண்டு நிறுவனத்தலைவர் அரசன் என்று ஒப்பிட்டால் இந்த நிலையை சரியாக விளங்கிக்கொள்ளலாம். நிறுவனத்தலைவரிற்கு அர்த்தம் என்ற பணத்தை சேர்ப்பது மட்டும் இலக்கு என்றால் அவரிற்கு கீழ் வேலை செய்யும் ஊழியர்களின் நிலை என்ன ஆகும். அவரது வாழ்க்கையும் என்னவாகும்? பணத்தை சேர்க்க ஊழியர்களை அதிக நேரம் உழைக்கச்சொல்லுவார், இதனால் ஊழியரின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம் நிம்மதி இழக்கலாம். அவரது குடும்ப வாழ்க்கையும் குழம்பிப்போய்விடும். தர்மம் தவறி செல்வம் சேர்க்க முயன்று தண்டனைக்கு உள்ளாகலாம். மோக்ஷத்தை பற்றிய சிந்தனை இல்லாத தலைவன் தான் என்ற அகங்காரத்திற்கு உள்ளாகி மற்றவர்களை ஆணவத்துடன் துன்புறுத்துவான். இதனால் நாடு/நிறுவனம் குழப்பத்திற்கு உள்ளாகும். ஆகவே ஒரு தலைவனாக மற்றையவர்களை வழி நடாத்த வேண்டுபவர்கள் தர்ம, அர்த்த, காம, மோக்ஷ (அறம், பொருள், இன்பம், வீடு) மாகிய நான்கிலும் சிறப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். இதையே இந்த சுலோகத்தில் குறிப்பிடுகிறார். வித்யா என்பது ஒரு விடயத்தை அறிந்து, புரிந்து, தெளிந்த அறிவு. இதை அரசன்/தலைமை நிர்வாகி பெற்றிருத்தல் அவசியம்.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...