குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, November 29, 2016

குரு தத்துவம்


குரு என்பவரை மனிதராக கருதினால் மனம் எல்லைக்கு உட்பட்டு குறுகி விடும், எது ஆனந்தத்தை தருகிறதோ, எது ஆனந்தத்திற்கு காரணமாக இருக்கிறது, எது தெளிவை தருகிறதோ, எது ஞானத்தின் ஸ்வரூபமாக இருக்கிறதோ, எது உண்மை அறிவை தருகிறதோ! எது யோகத்தில் நிலைக்க வைக்கிறதோ, எது வாழ்க்கை பிணிக்கு வைத்தியமாக அமைகிறதோ, எது ஸ்ரீ என்ற மங்களத்தை வாழ்க்கையில் தருகிறதோ அந்த தத்துவமே குரு தத்துவம்!

Monday, November 28, 2016

குரு உபதேசமும் யோக பயிற்சியும்


பலர் தாம் தியானம் செய்ய வேண்டும், இறை சாதனை செய்ய வேண்டும் என்று ஆர்வமுடன் வருகிறார்கள். இவர்களில் பலர் வியாதிக்கு மருந்து என்று வைத்தியரிடம் வந்தால் வைத்தியர் முத்தோஷமும் உனக்கு பிரகோபம் அடைந்திருக்கிறது, தினசரி திரிபலா சூர்ணம் எடுத்துக்கொள் என்று எழுதிக்கொடுத்து அனுப்பினால்;
  • ஒருவர் தினமும் வைத்தியர் எழுதிக்கொடுத்த திரிபலா என்ற வார்த்தையை திருப்பி திருப்பி கூறிக்கொண்டிருந்தார்,
  • மற்றோருவர் திரிபலாவில் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் எவ்வளவு அளவில் இருக்கிறது, அது பற்றி நவீன விஞ்ஞானம் என்ன சொல்கிறது என்று ஆராய்ந்து கொண்டு இருந்தார்.
  • மூன்றாமவர் வைத்தியர் கூறியபடி மருந்தை வாங்கி அருந்தினார்.
  • எவருக்கு வியாதி தீரும் என்பது சொல்லத் தேவையில்லை!
முதல் இரண்டு நிலைதான் இன்று யோகம் பயில்பவர்களுக்கு! குரு சொல்லித்தருவதை பயிற்சிப்பதை தவிர மற்ற இரண்டு விடயத்தையும் செவ்வனே செய்கிறார்கள்!

பயிற்சி மட்டுமே அனுபவத்தை தரும்!

Friday, November 11, 2016

எளிய யோகப்பயிற்சி பாடங்கள் - ஒலிப்பதிவு

பாடம் -01: அஜபா ஜெப சாதனை 

இந்த பாடத்தொகுப்பில் யோக சாதனையின் ஆரம்ப நிலையும், பிராணனை மனதினூடாக வசப்படுத்தும் "மூச்சினை கவனித்தல்" பயிற்சி விளக்கப் பட்டுள்ளது. பிரணாயாமம் தொடக்கம் எந்த விதமான யோக சாதனை செய்பவர்களுக்கும் உபயோகமான சாதனை குறிப்பு. 


இந்த பாடத்தொகுப்பில் ஓம் - ஹ்ரீம் ஆகிய மகா மந்திரங்களை மனதின் துணைகொண்டு பிராண சக்தியில் எப்படி கலப்பது என்ற பயிற்சி கூறப்பட்டுள்ளது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...