அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நூல் பற்றி வாசகர்கள்


நூலைப்படித்த அன்பர்கள்  சிலரது கருத்துக்கள்! 
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx 
இந்த புத்தகத்தை வாங்குவதற்கு காரணம் என்ன என்றும், எப்படி வாங்கினேன் என்றும் பல முறை வியந்திருக்கிறேன். ஏனென்றால், எனது தற்பொழுதைய பொருளாதார சிக்கலுக்கிடையில், இது என் முயற்சி/சுயநினைவின்றி நடந்தது. இதற்கு அந்த அகத்தியர்க்கும், கடும் உழைப்பிற்கு பின் புத்தகமயமாக்கிய உங்களுக்கும் எனது நன்றிகள்.


புத்தகத்தை முழுமையாக படித்து முடிக்கவில்லை. குரு மந்திரமும், "முதல் தகுதி" என்ற முதல் ஞானத்தை மட்டுமே மனனம் செய்துள்ளேன். அதற்குள் ஏற்பட்ட அனுபவங்களில் எதை சொல்ல எதை சொல்லாமல் மனதிலேயே வைத்து அனுபவிக்க என்று தெரியவில்லை.அகத்தியர் இன்னும் எனக்கு ஒரு சத்குருவை காண்பிக்கவில்லை (அல்லது நான் அடையாளம் காணவில்லை). ஆனால், முதல் படி நிலையாக, அகத்தியரின் தொடர்பு கிடைத்துவிட்டது என்றே நினைக்கிறேன். ஏனென்றால், கடந்த சில நாட்களாக, பல எளிய (பரி)சோதனைகள். "முதல் தகுதி" எனக்கு உண்மையிலேயே இருக்கிறதா என்பதாக சோதனைகள் நடந்துகொண்டிருகின்றன.திருக்குறள் 1330 பாடல்கள் கொண்டது. ஆனால், முப்பதே பாடல்களில் அனைத்து கருத்துக்களையும் அடக்கிய நூல் இது. இதனை பின்பற்றும் சாதகனுக்கு என்ன குறை இருக்கும்? இந்த 30 பாடல்களில் இல்லாத கருத்துக்கள் என்ன? இந்த 30 பாடல்களில் இல்லாத தீர்வுகளா? சித்தர்கள் என்றாலே வைத்தியர்கள் என்ற கொள்கை கொண்ட என்னை போன்றவர்களுக்கு ஒரு சவுக்கடி.அதேபோல், இந்த புத்தகத்தை நீங்கள் எழுதியாத ஏற்றுக்கொள்ள முடியவில்லை. (கடும்) உழைப்பு மட்டுமே உங்களுடைது. உங்களை ஒரு கருவியாக அகத்தியர் உபயோகபடுத்தியுள்ளார். இதை எழுதியது அந்த அகத்தியரே என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.அகத்தியரே எழுதி, அதற்கு அகத்தியரே விளக்க உரையும் கொடுத்துள்ள ஒரு பொக்கிஷம் இந்த புத்தகம். இதனை எவ்வாறு விமர்சனம் செய்வது?


போத்தி காளிமுத்து 

*********************************************************************************************************


ஐயா,
தாங்கள் எழுதிய ஸ்ரீ அகத்தியர் யோக ஞான திறவுகோல் புத்தகம் கிடைக்கப் பெற்று தினம் ஒரு பாடம் வீதம் படித்து வருகிறேன்.
அடியேன், கடந்த 16 வருடமாக தேடிய தேடலுக்கு தமது நூலில் விளக்கமும் வழி முறையும் கிடைத்து உள்ளது.
ஆனால், ஸ்ரீ அகத்தியர் பாடலில் மகிழ்ந்து கொண்டு துள்ளி விடாதே என்ற அறிவுரையை உணர்ந்து அடக்கம் காண்கிறேன்.
அதை கண்டு எனது மனம் மட்டற்ற மகிழ்ச்சியை கொண்டு உள்ளது. சாதாரணமாக பார்த்தால் தெளிவாகத்தானே பாடல்கள் உள்ளன எனத் தெரிகிறது. ஆனால் அப்பப்பா..!!!!
இந்த நூல் மூலம் அடியேனது இலட்சியத்தை அடைவேன் என்ற உறுதியை அடைந்து உள்ளேன் ஐயா.
எத்தனை பூட்டுகள் அதற்கான திறவுகோல்கள்..... எழுதியவரின் பூரண அருள் இல்லாமல் இவற்றை திறக்கவே முடியாது.. மிக்க மகிழ்ச்சி ஐயா....
அதற்கான மெய்ஞான குரு ஸ்ரீ அகத்தியரின் அருளாசியும் தங்களின் வழி காட்டுதலும் பூரணமாக கிடைக்கும் என நம்புகிறேன்.


சண்முகசுந்தரம் - மைசூர்

*************************************************************


அன்பு வணக்கம்,


நேற்றை ராஜயோகி ராஜமோகன் அய்யாவின் அணிந்துரை முதற்கொண்டு தங்களின்
அகத்தியர் யோக ஞானத் திறவுகோலை (புத்தகத்தை) படிக்க தொடங்கினேன்.இது வரை தங்களைப் பற்றியும், எத்தனை அதிக உயரிய அறிவும் அனுபவமும்
ஞானமும் பெற்றிருப்பினும் இயல்பான மேலும் கற்றுக்கொண்டே இருக்கும்
தங்களின் தன்மையையும் புரிந்து கொள்ள ஆரம்பித்ததில் எனக்கான பாடம்
தொடங்கியது!!ஒவ்வொரு பாடல் விளக்கத்திற்கும் (பாடத்திற்கும்) முன் தங்கள் மாணவர்களை
குறித்து அழைக்கும் போது, எங்களை அந்த பாடத்திற்கு எத்தகைய தன்மையும்
விடயமும் புரிந்தவர்களாய் இருக்க வேண்டும் என்ற அவசியத்தை தெரிவிப்பது
சிறப்பு :)
 பாட இறுதியில் கேள்வி முறை அடுத்த பாடத்திற்கு தயார் செய்வதாய் (தெளிவு
பெற-சித்ததில் பதிய) ஏதுவாய் உள்ளது!இது வரை யாம் மூன்று பாடல் படித்துள்ளோம் குருவே. 


ஜெயசீலன்  மாதேஸ்வரன் , வேலூர்  

Comments

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு