மனம் - மந்திரம் - வாயு - வாசி பற்றி அகத்தியர்மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மை யாமே


இன்று யோக சாதனை பயிலும் பலர் மூச்சை பிரணாயாமத்தால் பிராணனை கட்டுப்படுத்தி ஆற்றலை பெறுவது சித்தி என்று மயங்கி முயற்சிக்கின்றனர். எனினும் பிராணனை கையாள்வது என்பது வாகனத்தின் எரிபொருளாகிய fuel இனை கையாள்வது போன்றது. இவற்றை எல்லாம் அறிவதற்கு ஆன்மாவின் பிரதிநிதியாகிய மனம் சரியாக இருக்க வேண்டும். மனம் ஆன்மாவினை சார்ந்து இயங்கினால் அது ஞானம், புறப்பொருளை சார்ந்து இயங்கினால் அஞ்ஞானம்!

இனி பாடலிற்கு வருவோம்!

மந்திரம் என்பது ஒருவனது ஆத்ம சக்தியை ஒருங்கிணைத்து மனதிற்கும் பிராணனுக்கு ஆற்றல் தரும் கருவி. மனம் செம்மையாக இருந்தால் மனதில் ஆத்ம சக்தி பிரவாகிக்கும். ஆகவே மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க தேவியில்லை!

மனம் செம்மை இல்லை என்றால் பிராணனி ஸ்தூல மாகிய வாயு சலனிக்கும் வாயு சலனித்தால் பிராணன் சலனிக்கும், மனதின் எண்ணங்கள் கீழானால் பிராணனின் அதிர்வு குறையும், பிராணனின் அதிர்வு குறைந்தால் ஆன்ம பரிணாமம் குறையும், இப்படி குறையும் ஆன்ம பரிணாமத்தை தடுக்க வாயுவை உயர்த்தி பிரணாயமம் செய்ய வேண்டும். மனதை செம்மையாக தெரிய வேண்டும். ஆக மனது செம்மையாக இருந்தால் வாயுவை உயர்த்த தேவையில்லை.

பிராணனின் ஒழுகாகி பிரபஞ்ச சக்தியை குறித்த அதிர்வலையில் உடலில் ஏற்க தெரிந்தால் அந்த நிலை வாசி, அப்படி பிரபஞ்ச சக்தியை ஈர்த்து உடலில் ஆறாதார சக்கரங்களில் வாசியை நிறுத்தினால் ஆன்ம பரிணாமம் உயரும். இப்படியான உயர்வை தடுப்பதும் மனதே, இந்த மனது செம்மையாக இருந்தால் வாசியை நிறுத்தி கஷ்டப்பட தேவையில்லை.

மனது செம்மையாக இருந்தால் அந்த மனதில் உதிக்கும் எதுவும் மந்திரம் போன்று ஆன்ம சக்தியை விழிப்பிக்கும் தன்மை உடையதாக இருக்கும்.

ஆக சாதனையின் நோக்கம் ஞானம், அதனை பெறுவதற்கு மனது செம்மை அற்று இருப்பது ஒரு தடை! அதுவே மூல காரணமும் கூட! ஆக மனதினை செம்மைப்படுத்துவதே சிறந்த யோக சாதனையும் கூட!

Comments

  1. ம.சுந்தர் GS138 ஐயா பாடம் பெற்றுக்கொண்டேன்.

    ReplyDelete

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு