தமிழில் ஏன் எழுத்துக்கள் உயிர், மெய், உயிர் மெய் என்று பிரிக்கப்பட்டிருக்கிறது?


எழுத்து என்பது சொல்லுக்கு முதற்காரணமாகிய ஒலியாகும். இந்த ஒலி எழுப்ப படுவதற்கு காற்றின் அசைவு அவசியமாகும். இது ஒலியின் பரு (ஸ்தூல) அமிசம். 

ஒலியின் நுண்ணிய (சூக்ஷ்ம) அமிசம் காற்றாகிய பரியில் ஏறி உடலிற்குள் பயணிக்கும் உயிராகிய பிராணனுடன் தொடர்புடையது. இதனையே சித்தர்கள் பரி என்றும் வாசி என்றும் கூறினார்கள். இதன் செய்கையினையே தொல்காப்பியர் கீழ்வருமாறு கூறுகிறார்;
உந்தி முதலா முந்து வளி தோன்றி, 
தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ, 
பல்லும் இதழும் நாவும் மூக்கும் 
அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான் 
உறுப்புஉற்று அமைய நெறிப்பட நாடி, 
எல்லா எழுத்தும் சொல்லுங் காலை 
பிறப்பின் ஆக்கம் வேறுவேறு இயல 
திறப்படத் தெரியும் காட்சி யான 
(
தொல்காப்பியம் .எழுத்து.83)


இதனை உரை செய்த தற்காலத்து தமிழ் அறிஞர்கள் (??) வளி உந்தி வரை போகாது, நுரையீரல் வரைதான் போகும், தொல்காப்பியருக்கு அந்த விஷயம் தெரியாது என்று பொருள் பட எழுதுகிறார்கள். பரிதாபம் என்ன வென்றால் முன்னோர்கள் பருப்பொருளுக்கு ஆதியான சூட்சுமத்தினை பற்றி ஆழமாக அறிதலையே உண்மை அறிவு என்று கொண்டார்கள், இதனை இவர்கள் அறிகிலர்!

உயிரெழுத்துக்கள் உச்சரிக்கப்படும்போது காற்றும் உயிரும் தடங்கலின்றி உடலினுள் அசைந்து உயிரினை வளர்க்கும். அதனால் அவை உயிரெழுத்துக்கள் எனப்பட்டது.

மெய்யெழுத்துக்கள் உச்சரிக்கப்படும் பொது காற்றும் உயிரும் தடைப்பட்டு உடலில் சேரும். ஆக வெளியில் இருந்து வரும் உயிராகிய பிராணனை உடலாகிய மெய் இல் சேர்ப்பதால் மெய்யெழுத்துக்கள்.

இப்படி எழுத்துக்களை உச்சரிக்கும் அளவினை கொண்டு உடலினுள் செல்லும் உயிராகிய பிராணனை வளர்க்கும் முறைகளுகாகவே எழுத்திலக்கணமும், எழுத்தின் துணைகொண்டு உருவாகும் செய்யுள்,  உயிரை உடலில் நிறுத்தும் இலக்கணமான  யாப்பிலக்கணமாகவும் உருவாக்கப்பட்டது.  

ஆக யாப்பிற்கமைய எழுதப்பட்ட பாடல்கள் உயிரினை வளர்க்கும் வல்லமை உடையவை. அதனால்தான் காலம் கடந்தும் பல தமிழ் நூல்கள் இன்றும் இருக்கின்றன.

உயிரான பிராணன் உடலில் இருந்தால் மனதில் கவலை நீங்கி மகிழ்ச்சியும், வாழ்வில் சிறப்பும் உண்டாகும் என்று அறிந்த முன்னோர்கள் அவற்றினை மக்கள் பெறவேண்டும் என்பதற்காக இறை நம்பிக்கையினை ஏற்படுத்தி அவற்றிற்கு துதியாக தேவாரம், திருவாசகம், அந்தாதி என்றவாறு இயற்றி வைத்தனர்.

இந்த உண்மையினை நேருக்கு நேராக சித்தர் பாடல்களும், யோக சாத்திரமும் விளக்கும். யோக சாத்திரம் கூறும் பிராணாயாமம் தேவாரம், திருவாசகம் மேலும் யாப்பு பிறழாமல் இயற்றப்படும் செய்யுள்களும் உயிராகிய பிராணனை ஒலியால் சமப்படுத்தி மனதிற்கும் உடலிற்கும் இன்பம் தரும்.


இந்த அடிப்படை சமஸ்க்ருதத்திற்கும் பொருந்தும், மந்திரங்களும் இந்த அடிப்படையில் உள்ளவையே! 

Comments

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு