குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, August 13, 2012

யோக சாதனையாளர்களுக்கு வழிகாட்டும் அரிய நூற்கள் - 02


கண்ணைய யோகியார் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாது சாதாரண மனிதன் போல் எந்த பகட்டும் இல்லாமல் தன்னை தேடி வரும் மாணவர்களுக்கு மாத்திரம் தமது கைப்பட பாடங்களாக யோக வித்தை, சித்த வித்தை, மந்திர தந்திர நுட்பங்களை எழுதிக் கொடுத்து நேரடி செய்முறை விளக்கங்களும் கொடுத்து கற்பித்து வந்தார். இப்படிக் கற்றவர்களில் இலங்கை காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகள் முதன்மையானவர், கிட்டத்தட்ட 44 வருடங்கள் இலங்கையில் இருந்து கொண்டு சென்னைக்கு வருடத்திற்கு இரண்டு மூன்று தடவைகள் சென்று அவரிடம் அனைத்து வித்தைகளும் கற்றுக்கொண்டவர். அவர் தான் குருவிடம் கற்ற வித்தைகளை அனைவரும் பயன் படும்படி சிறு சிறு புத்தகங்களாக வெளியிட்டு வந்துள்ளார். இந்த புத்தகங்கள் இலங்கை நுவரெலியாவில் காயத்ரி பீடத்தில் விற்பனைக்கு உள்ளன. அவை பற்றிய சிறிய அறிமுக விபரங்க்கள் வருமாறு;

எளிய முறை யோகப்பயிற்சி: யோக சாதனை இன்று பலராலும் பயிற்றுவிக்கப்படுகிறது, அவை எல்லோராலும் செய்யக்கூடிய அளவிற்கு எளிமையாக இருப்பதில்லை, உதாரணமாக பிரணாயாமம், ஆசனம், தாரணை, தியானம், சமாதி என்பன அனிவராலும் விளங்கிகொள்ள முடிவதில்லை. இப்படியான உயர்ந்த விடயங்களை எளிய வடிவில் அந்த சாதனையினால் கிடைக்க கூடிய பயன் அனைத்தையும் தரவல்ல பயிற்சிகள் இதில் கூறப்பட்டுள்ளன. இதில் கூறப்பட்டுள்ள விடயங்க்கள் 1) யோக சாதனை, 2) ஜெப சாதனை 3) பிராண சக்தி 4) மந்திர பீஜங்கள் 5) தீர்க்க சுவாசம் 6) நோயற்ற வாழ்வு 7) மனக்கட்டுப்பாடு 8) சும்மா இருக்க வழி 9) தாரணையின் பயன் 10) மானச சாதனைகள் 11) காரியம் கைகூட வழி 12) கருத்துபதிவு 13) இரகசிய அனுபவங்கள் 14) மன அலை சிகிச்சை 15) மனச்சிருஷ்டி 16) யோக ஷேமம் 17) உருவ பாவனா தியானம் 18) அரூப தியானம் 19) சமாதி நிலை 20) எளிய பயிற்சிகள். 

இந்த நூலைக்கற்று அதன் பயிற்சி செய்தால் யோகத்தின் அத்தனை படி நிலைகளினை பற்றிய அடிப்படை புரிந்துணர்வும், அதன் அனுபவமும் கிட்டும் என்பதற்கு உறுதி கூறுகிறோம். அதன் பின் நீங்கள் யோகப்பாதையில் விரைவாக முன்னேறுவதற்கான அடிப்படை அறிவினை இந்த நூல் தரும் என்பதில் எதுவித ஐயமுமில்லை. 

இன்னும் மொத்தமாக 40 மேற்பட்ட நூற்கள் இருக்கின்றன. அவற்றில் சிலது பற்றிய விபரங்களையும் இங்கு தந்துள்ளோம்,

நூற்களில் தலைப்புகள் வருமாறு; 

காயத்ரி குப்த விஞ்ஞானம்: காயத்ரி சாதனையில் ரிஷிகளால் மறைக்கப்பட்ட அரிய இரகசியங்கள், சாதனை முறைகள் அடங்க்கிய நூல்,

ஏகாக்கிர விஞ்ஞானம்: மனச் சக்தியினை ஏகாக்கிரப் படுத்தி என்னென்ன காரிய சாதகங்கள், சித்திகள் பெறலாம் என விளக்கும் பயிற்சி நூல். 

தியானம் என்றால் என்ன?: தியானம் பற்றிய விளக்கமும் எளிய தியானங்களும்

அருவமும் உருவமும்: கோயில் வழிபாட்டின் விஞ்ஞான தத்துவ விளக்கம்.

யாக விஞ்ஞானம்: அனைவரும் தமது வீட்டிலேயே சிறியளவில் யாக வளர்க்க கூடிய செய்முறை விளக்கங்கள், யாகங்களில் ஒவ்வொரு காரியங்க்களுக்கு பயன்படுத்தப்படும் மூலிகைகள், மந்திரங்கள், அவற்றிற்கான விளக்கங்கள் அடங்கிய நூல். 

காயத்ரி ஸ்ம்ருதி: காயத்ரி மந்திரத்தின் ஒவ்வொரு அட்சரத்தின் அதிர்வும் மனிதனில் விழிப்பிக்கும் தெய்வசக்திகள் எவை என்பது பற்றி விளக்கும் நூல். 

இவற்றை கற்க வேண்டும் என ஆர்வம் உள்ளவர்கள் கீழ்வரும் தொடர்பிலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்'

திரு. ச. சந்திரமோகன்
அறங்காவலர், காயத்ரி பீடம் சர்வதேச நம்பிக்கை நிதியம்
82, லேடி மக்கலம்ஸ் ட்ரைவ், நுவரெலியா, இலங்கை,
கைபேசி: (0091) 07773249554
தொலைபேசி: (0091) 522222609
மின்னஞ்சல்: srigayathripeetam@gmail.com 

Saturday, August 11, 2012

சூஷ்ம பார்வையில் ஆக்ஞா சக்கரத்தின் செயல் முறை (சூட்சும பார்வை பகுதி 05)



சென்ற பதிவில் தெய்வ ஜோதி வடிவாக காணப்படும் சகஸ்ரார சக்கரம் பற்றிப் பார்த்தோம். இந்த சக்கரமே சக்தியின் மூலம். இந்த பதிவில் இந்த சக்கரத்தின் ஒளி பரவுவதன் மூலம் சூட்சும பார்வையினை மனிதனிற்கு வழங்கும் சக்கரமான ஆக்ஞா சக்கரம் பற்றி பார்ப்போம். சகஸ்ரார ஒளி ஒவ்வொரு சக்கரங்களில் பாயும் போதும் அந்த சக்கரத்திற்குரிய சூஷ்ம சக்திகளை பெறுவோம் என்பதே இதன் அடிப்படை. அந்த வகையில் ஆக்ஞா சக்கரம் சூஷ்ம பார்வையினைத் தரக்கூடியது. 

இது மனிதனின் இரு புருவங்களுக்கு நடுவே நெற்றியில் இருக்கிறது. மனிதனது மன எண்ணங்களின் வேகங்களுக்கு உத்வேகங்களுக்கு ஆதாரமாக உள்ளது இந்த சக்கரமே. ஒருவன் ஆழ்ந்து சிந்திக்கும்போது புருவமத்தி சுருங்கி மடிவதனை அவதானிக்கலாம். ஒருவன் மனதினை ஏகாக்கிரப்படுத்தும் போது இந்த சக்கரம் செயல்படவேண்டும். அதன் மறுதலையாக இந்த சக்கரத்தினை செயற்படுத்தினால் மனம் ஏகாக்கிரமடையும். ஒருவன் தனது கண்களை உட்புறமாக திருப்பு புருவத்தினை நோக்கு செலுத்தி ஒரு விடயத்தினை சிந்திக்கும் போது ஆழமாக சிந்திக்கலாம். இதனை நீங்கள் உங்கள் அனுபத்திலேயே உணரலாம். ஆழ்ந்து சிந்திப்பவர்களுக்கு நெற்றிப்பொட்டில் சிறிது நம நமப்பு உணர்ச்சி தோன்றும். இந்த சக்கரத்தின் மீது ஒருவர் கவனிப்பதன் மூலம் ஒருவர் தனது மனதின் மீது பரிபூரண கட்டுப்பாட்டினை அடையலாம். 

யோக சாதனையிலும் யோக நூற்களிலும் புருவ மத்தியில் பார்வையினை செலுத்தி தியான, ஏகாக்கிர சாதனைகள் செய்யும் படி கூறப்படுவதன் காரணம் இதுதான். 

கண்களை உள்முகப்படுத்தி (அதாவது கண்ணை மூடி, விழிகளை )ஆக்ஞா சக்கரத்தின் பால் செலுத்தி நெற்றிக்குள் இருக்கும் இருட்டை கவனிக்கத்தொடங்கினால் சற்று நேரத்தில் இருள் நீங்கி ஒளி தோன்றத்தொடங்கும். மேலும் சற்று நேரம் அவதானிக்க படிப்படியாக காட்சிகள் தோன்றத்தொடங்கும். எங்கிருந்து இந்த ஒளி வருகிறது. சகஸ்ரார சக்கரத்திலுள்ள ஒளி மனதினை ஆக்ஞா சக்கரத்தில் ஒருமுகப்படுத்தும் போது வருகிறது. இந்த நிலையினால் சகஸ்ரார சக்கரத்திற்கும் ஆக்ஞா சக்கரத்திற்கும் தோடர்பு ஏற்பட்டு ஆக்ஞா சக்கரம் செயற்படத்தொடங்குகிறது. இந்த மன ஏகாக்கிரம் கூட கூட இந்த ஜோதி ஆக்ஞா சக்கரத்தினூடாக எமது இச்சா சக்தி கொண்டு வெளிப்படுத்தினால் எம்மைச் சுற்றியுள்ள சூஷ்ம உலகம் அந்த ஒளிப்பிரவாகத்தில் தோன்றத் தொடங்கும். இதன் பின் எமது இச்சா சக்தி மூலம் எந்த சூஷ்ம விடயங்களை காணவேண்டும் என சங்கல்பிக்கின்றோமோ அந்த விடயம் நேரடியாக நடப்பது போல் காட்சிகளாக தோன்றும்.  

இதுவே சூஷ்ம திருஷ்டி எப்படி செயற்படுறது என்பதற்கு விளக்கமாகும், வாசகர்கள் புரிந்து கொள்வதற்காக இதன் சுருக்கத்தினை கீழே தந்துள்ளோம். 

மனிதனின் சூஷ்ம உடலில் உள்ள சக்கரங்களை விழிப்பித்து சூஷ்ம சக்திகளை அடைலாம்.

இந்த சூஷ்ம் சக்திகளுக்கு ஆதாரம் சகஸ்ரார சக்கரத்தில் உள்ள தெய்வ ஒளியில் உள்ளது.  அந்த தெய்வ ஒளியினை குறித்த சக்கரத்தில் எமது இச்சா சக்தி மூலம் பரவச் செய்தால் சூஷ்ம புலனறிவுகளையும் சக்திகளையும் பெறலாம்.

அந்த அடிப்படையில் சூஷ்ம பார்வையிற்கு ஆக்ஞா சக்கரத்தினை செயற்படுத்துவதன் மூலம் சாதிக்கலாம். 

இந்த பதிவின் இறுதியில் வாசிக்கும் அன்பர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள் இந்த குறிப்புகள் யோகசாதனையின் வழி சாதனை புரிபவர்களுக்கானது. சக்கரங்கள், சூஷ்ம உடல், சூஷ்ம உலகம் பற்றி நன்கு கற்றறிந்து அனுபவமுடைய குருவின் வழி அனுமதி பெற்றே இதனை செய்தல் வேண்டும். இந்த பதிவு தகவலுக்கு மட்டுமே. முயற்சித்து பலனடைய வேண்டுபவர்கள் தக்க குருவை அடைந்து முயற்சிகவும். நாம் இருக்கும் சூழல், வாழ்க்கை முறைக்கு அமைய இந்த ஆற்றல் ஆன்ம வாழ்க்கைக்கும், உலக வாழ்க்கையும் இடையூறானதாக கூட அமையலாம். 

ஸத்குரு பாதம் போற்றி!

சூட்சும பார்வை (பகுதி 04)- சில யோக இரகசியங்கள் - சகஸ்ரார சக்கரத்தின் செயல் முறை




மனிதன் சூட்சுமத் தன்மைகளை அறியும் ஆற்றல் உள்ளவன் என்பது பற்றி கடந்த பதிவுகளில் பார்த்தோம். இந்த பதிவில் மனிதனது சூட்சும தன்மை எப்படி செயற்படுகிறது என்று பார்ப்போம். பொதுவாக யோகம், சித்தர்கள் பற்றி அறிந்தவர்களுக்கு மனிதனில் ஆறு ஆதாரங்கள், குண்டலினி என்பன இருப்பது பற்றி அறிந்திருப்பார்கள். இது பற்றி விரிவாக நாம் இந்த பதிவில் கூறப்போவதில்லை, அது இதன் நோக்கத்திற்கு அமைவானது இல்லை. சூட்சும பார்வையுடன் நேரடியாக தொடர்புடைய சக்கரம் சகஸ்ராரமும் ஆக்ஞா சக்கரமும் ஆகும். 

இதுபற்றிய ஒரு யோக இரகசியத்தினை குருவருளால் கூறுவோம். 

இதில் சகஸ்ரார சக்கரம் என்பது உடலில் தலை உச்சியிற்கு மேல் பரவியுள்ள சூஷ்ம உடலில் காணப்படும் சக்கரமாகும். இதுவே மனிதனில் ஆன்ம ஒளியினை பிரகாசிக்க செய்யும் சக்கரமாகும். பொதுவாக கீழ் சக்கரங்கள் செயற்படும் வாழ்க்கை வாழ்பவர்களுக்கு சகஸ்ராரத்தின் ஒளி குறைந்த அளவிலும், ஒழுக்கம், தெய்வ உபாசனை செய்பவர்களுக்கு அதிகளவிலும் காணப்படும். தன்னை அறிந்து இறைவனை அறிந்தவர்களுக்கு இது வெளிப்படையாகவே தெரியும். இதனை குறிக்கவே சித்தியடைந்த மகான் களின் தலையின் பின்னால் ஒளிவடிவம் குறிக்கப்படுகிறது. இந்த மனிதனின் எண்ணங்களுக்கு தக்க வலிமையானதாக இருக்கம். தெய்வ உபாசனை செய்பவர்களுக்கு தெய்வ சக்தியுடையதாக இருக்கும். ஒருவன் தனது இச்சா சக்தியினை பிரயோகிக்கும் போது அந்த இடத்தை நோக்கி பாயும் தன்மையுடையது இந்த ஒளி. மனதினை ஏகாக்கிரப்படுத்தி ஒரு இடத்தில் பாய்ச்சினால் சலனிக்காமல் வலிமையுடையதாகும். தியான சாதனையின் போது இந்த ஒளி அசையாத சுடர் போல் சகஸ்ரார சக்கரத்தில் ஒன்றி மன இயக்கத்தினை கட்டுப்படுத்தும். இந்த ஒளி பிராண சக்தியுடன் கலந்து மற்றைய சக்கரங்களினூடாக பௌதீக உடலில் பாயும் போது உடல் சரிவர வேலை செய்கிறது.  அதேபோல் இந்த ஒளியினை எமது சூஷ்ம உடலினை தாக்கி விழிப்படையவைத்தால் சூஷ்ம உலகங்களை காணலாம். இதை எப்படி செய்வது?

முதலில் மனதின் இயக்கத்தில் செலவழியும் இந்த சகஸ்ரார ஒளியினை தியான சாதனையினால் ஒடுங்கச் செய்ய வேண்டும். பின் ஒடுங்கிய ஒளியினை இச்சா சக்தியினால் மன உடலிலும், பிராண உடலிலும் செலுத்த அந்தந்த கவசங்க்களுக்கு ஏற்ப சூட்சும பார்வை ஏற்படும். மனதின் உணர்வு இந்த சகஸ்ரார சக்கர ஒளியில்தான் உள்ளது. இந்த ஒளி பௌதீக கவசங்களை தாக்கும் போது பௌதீக உணர்வினை பெறுவது போல் சூட்சும கவசங்களை தாக்கும் போது சூட்சும உணர்வுகளை பெறலாம் என்பதே இதன் அடிப்படை. பௌதீகத்தில் தெய்வ சக்தி உறையும் இடம் சகஸ்ராரமாகும். 

அடுத்த பதிவில் சூட்சும பார்வையுடன் தொடர்புடைய ஆக்ஞா சக்கரத்தின் செயல்முறை பற்றி பார்ப்போம். 

Saturday, August 04, 2012

யோக சாதனையாளர்களுக்கு வழிகாட்டும் அரிய நூற்கள் - 01


எமது பதிவுகளைப்படிக்கும் பலர் ஆர்வத்துடன் யோக, மன, சித்த ரகசியங்களை பதிவிடும்படியும் மேலதிக விபரங்களைதரும்படியும் மின்னஞ்சல் அனுப்பிய வண்ணம் உள்ளனர். அவர்கள் அனைவரது ஆவலையும் தாகத்தினையும் தீர்க்கும் வண்ணம் எம்மால் எழுதுவதற்கு காலதேவனும், எமது நாளந்த கடமைகளும் அனுமதிப்பதில்லை. இந்தபதிவுகளில் வரும் விடயங்கள் அனைத்தும் எமது தேடலிலும் குருநாதரிடம் பயின்றவற்றையும் சுருக்கு இந்த துறையில் ஆர்வம் உடைய அனைவருக்கும் பயன்படவேண்டும் என்ற எண்ணத்தில் பதிவிடப்படுகிறது. ஆர்வம் உடையவர்களுக்கு சரியான பாதை தெளிவு எமது பதிவுகளால் கிடைக்குமானால் குருஅருள் எனக்கொள்க!

எமது நேரக்குறைவு காரணமாக மிகச்சொற்பமான அளவே எம்மால் இதற்காக அர்ப்பணிக்க முடிகிறது என்பதில் மனவருத்தமே! யோக வித்தையில், சித்த வித்தையில் ஆர்வம் உடையவர்களுக்கு பயன்படக் கூடிய அரிய நூல்கள் சிலவற்றை அறிமுகப்படுத்தலாம் என எண்ணியுள்ளேன்.

அந்த வரிசையில் முதலாவது நூல் 

மானச யோகம்

ஆசிரியர்: டாக்டர். பண்டிட். ஜீ. கண்ணைய யோகி.


ஆசிரியர் பற்றிய அறிமுகம்

கண்ணைய யோகியார் ஐந்தாவது வயதிலேயே அகஸ்திய மகரிஷியால் ஆட்கொள்ளப்பட்டு பொதிகை, நீலகிரிப்பகுதிகளில் உள்ள சூஷ்ம சித்தாஸ்ரமத்தில் ஆன்ம, யோக, ஞான, மானச, சித்த பயிற்சிகள், மந்திர, யந்திர, சாஸ்திரங்கள், மூலிகை மர்மர், சித்த வைத்தியம், இரசவாதங்கள் என்பன பயிற்று வித்து தனது கர்ம பலனை அனுபவித்து தீர்த்து வரும்படி குரு உத்தரவிட்டதன் பெயரில் தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமல் சாதாரண பாமரன் போல் சென்னை அம்பத்தூர் பகுதியில் வாழ்ந்து வந்தவர், அவர் எக்காரணம் கொண்டும் தந்து ஆற்றலை, சித்திகளை தனது பெயரிற்கோ, புகழிற்காகவோ வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. அகஸ்திய மகரிஷியின் உத்தரவின் பெயரில் புலிப்பாணிச் சித்தரிடமும் வித்தை பயின்றவர். குரு நாதரின் ஆணையில் தனது கர்மவினையினை அனுபவித்து வந்த அதே வேளை உண்மையான சித்தர் வழி சாதனை புரிபவர்களுக்காக இக்கால மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் சித்தர்களின் கலைகளை சிறு சிறு பாடங்களாக தமது கைப்பட எழுதி தம்மை அண்டி வந்த மாணவர்களுக்கு கற்பித்து வந்தார். அவரது மாணவர்கள் மிகச்சிலரே! அதைக்கொண்டே உண்மை யோகியின் இலட்சணம் அறியலாம்! இன்று ஒரு சில புத்தகங்களை படித்து விட்டு தங்களை யோகி எனக் கூறிக்கொள்பவர்கள் இருக்கையில் தமது மாணவர்களுக்காக மிக எளிய முறையில் எழுதி அவற்றை பயிற்சி செய்ய வைத்து இடையில் வரும் சந்தேகங்களை தீர்த்து அவர்களையும் உன்னத இறை நிலைக்கு அடைய வைக்கும் உண்மை குருவாக திகழ்ந்தவர்கள். "நூறாண்டு காலம் வாழ வழி" என மாணவர்களுக்கு கற்பித்த வாரே 108 ஆண்டுகள் பூவுலகில் வாழ்ந்து காட்டியவர். கற்பிக்கும் அனைத்து வித்தைகளையும் ஆதாரப்பூர்வமாக விஞ்ஞான விளக்கங்களுடன் கற்பித்தவர். 

மேலும் கண்ணைய யோகியார் பற்றி வேறு பதிவுகளில் பார்ப்போம். 

கண்ணைய யோகியாரின் மாணவர்களில் முதன்மையானவரும் குரு பணிக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் எமது குரு நாதர் காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகள், காயத்ரி சித்தர் இலங்கையில் சாதாரண தொழிலாளி ஒருவரின் மகனாக பிறந்து, குருவருளால் அகஸ்தியமகரிஷியின் தொடர்பு பெற்று அவர் வழிகாட்டலில் கண்ணைய யோகியரிடம் சென்று கிட்டத்தட்ட 44 வருடங்கள் குரு சேவை செய்து கண்ணைய யோகியாரின் பரிபூரண ஞான அருள் பெற்றவர். கண்ணைய யோகியாரிடம் பெற்ற காயத்ரி குப்த விஞ்ஞான சாதனை பயிற்சி மூலம் அருள் நிலை அடைந்தவர். 

மற்றவர் தமிழ் நாடு இரயில் திணைக்களத்தின் உயர் பதவி வகித்து, தந்து இல்வாழ்க்கையினையையே யோக வாழ்க்கை ஆக்கி கண்ணைய யோகியாரிடம் இராஜ யோக பயிற்சி (அக்காலத்தில் ஜனக மஹாராஜா வாழ்ந்த நிலையே உண்மையான இராஜ யோகம்) என்னும் உயர் பயிற்சி பெற்ற அருட் திரு. இராஜமோகன் அவர்கள். இராஜ மோகன் ஐயா அவர்கள் தமது பணி ஓய்வின் பின் தமது குரு நாதர் தமக்கு கற்பித்த ஞானத்தினை ஆர்வமுள்ள மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார்கள். அத்துடன் குரு நாதர் கையெழுத்துப்பிரதிகளாக கற்பித்த வித்தைகளை புத்தகங்களாக வெளியிட்டு வருகிறார்கள். அத்தகைய ஒரு பாடமே மானச யோகம் எனும் இந்த நூலாகும். 

மானச யோகம் ஏன் வெளியிடப்பட்டது?

யோகம், ஞானம், பக்தி, கர்மம், நாத்திகம், விஞ்ஞானம் மற்றும் எந்த கொள்கையாயினும், சமயம், வழிபாடு அரசியல் என்று இந்த உலகத்தில் நடைபெறும் அனைத்தும் மனதின் வழியாகவே செயற்படுகிறது. மனதின் வழியில்லாமல் மனிதனிற்கு இகவாழ்வுமில்லை பரவாழ்வுமில்லை. இன்ப துன்பங்கள் அனைத்திற்கும் காரணம் மனமே! மனதினை கட்டுப்படுத்தினால் எல்லாவற்றையும் சாதிக்கலாம். இதுவே அகத்திய மகரிஷியின் மூல உபதேசம். 

இதை எப்படி செயல்முறையில் செய்வது என்பதனைக் கூறுவதுதான் மானச யோகம். 

குரு நாதர் கீழ்வரும் தலைப்புகளில் மனதின் செயல் முறையினை மிக எளிய முறையில் நுண்மையாக விளக்கியுள்ளார். இந்த நூலினை கற்ற பின் (முழுமையாக புரிந்து கொள்ள பல முறை வாசிப்பு தேவை) ஒருவன் மனம் பற்றியும் அதன் செயல்முறை, அதனால் ஏற்படும் விளைவிகள் என்பவற்றை தெளிவாக அறிந்து கொள்ளலாம். 

பொருளடக்கம்
  1. வாழ்க்கையின் குறிக்கோள்
  2. வாழ்க்கையின் வேற்றுமைகள்
  3. மனமும் வாழ்க்கையும்
  4. மனதின் இலக்கணம்
  5. மனதின் இயக்கம்
  6. சங்கற்ப விகற்பங்கள்
  7. மனமும் உடலும்
  8. மனமும் கர்மாவும்
  9. மனமும் சித்தமும்
  10. மனமும் சோதிடமும்
  11. மனமும் கடவுளும்
  12. மனமும் ஒழுக்கமும்
  13. மனமும் சூழ் நிலைகளும்
  14. மனசிருஷ்டி விஞ்ஞானம்
  15. மன சக்தி
  16. மன அலையின் தத்தும்
  17. மனமும் தெய்வ ஞானமும்
  18. மானத தந்தி விஞ்ஞானம்
  19. சூஷ்ம திருஷ்டி விஞ்ஞானம்
  20. சூஷ்ம யாத்திரை
  21. சூஷ்ம தரிசனம்
  22. மனமும் பேய் பிசாசுகளும்
  23. மனமும் ஏகாக்கிரமும்
  24. மனமும் தியானமும்
  25. மனமும் அட்டமாசித்திகளும்
  26. மனமும் ஹிப்னாடிசமும்
  27. எளிய மனச் சாதனைகள்
  28. மனமும் முக்தியும் 
  29. முடிவுரை 

அனைத்து அத்தியாயங்களும் இரத்தின சுருக்கமாக விடயத்தினை தெளிவாக கூறி அதனை செயன் முறைப்படுத்தும் வழியினையும் கூறுகிறது. 

மனதினைப்பற்றி அறிந்து கொள்ளவிரும்புபவர்கள், யோக சாதனை செய்பவர்கள் எந்த மார்க்கத்தினை சேர்ந்தவர்களாயிருந்தாலும் இந்த நூலினை வாசித்தல் அவர்களது வாழ்வினை மாற்றும் என்பதற்கு நாம் உறுதி கூறிகிறோம். 

பெற விரும்புபவர்கள் கீழ்வரும் முகவரியில் தொடபு கொண்டு விபரங்களை பெறமுடியும்:
  • ஆத்ம ஞான யோகசபை, சென்னை : 044-26531166/09840987338/09383531166
  • ஆத்ம ஞான யோக சபை, கொழும்பு: 0094-75-7287151/0094-77-6271292

வெளி நாட்டு அன்பர்கள் மின்னஞ்சல் மூலம் விபரம் தெரிவிக்கலாம்.  

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...