குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, July 29, 2011

ஏகலைவன் கதையின் சூட்சுமம்


ஏகலைவன் என்பவன் வேடர் இனத்தைச் சேர்ந்தவன். வித்தையில் ஆர்வமுள்ள இவன் துரோணரிடம் வந்து தன்னைச் சீடனாக ஏற்று மன்னர்களுரிய சகல வித்தைகளையும் கற்றுத் தர வேண்டுகிறான். ""க்ஷத்தியர்களுக்குரிய வித்தையை வேடனான உனக்கு கற்றுத் தரமாட்டேன், என மறுத்து விட்டார் துரோணர். வேடனுக்கு தேவை விலங்குகளை வேட்டையாடும் அம்பெய்யும் கலை தான். மற்றவை எதற்கு என்பது துரோணரின் வாதம். ஏகலைவனுக்கு மிக்க வருத்தம். ஆனாலும், முயற்சியுடையவன் எதிலும் வெற்றி பெற்றே தீருவான். தன்னை துரோணர் ஜாதி துவேஷம் காட்டி ஒதுக்கி விட்டாரே என அவன் அவர் மீது கோபப்படவில்லை.

மரங்களுக்கு தீ வைக்கவில்லை. அவரது ஜாதிக்காரர்களை அடித்து உதைக்க வேண்டும் என்று எண்ணவில்லை. அவன் துரோணரைப் போலவே ஒரு மெழுகு சிலை செய்தான். அந்த சிலையை உயிருள்ள துரோணராகக் கருதி, அவரைத் தன் மானசீக குருவாக ஏற்று, துரோணர் அவரது சீடர்களுக்கு கற்றுக் கொடுக்கும் அத்தனை வித்தையையும் கற்றுத் தேறி விட்டான். பல ஆண்டுகள் கடந்தன. ஏகலைவனை மறந்தே போய் விட்டார். துரோணரின் முகமும் இவனுக்கு மறந்து விட்டது. ஒருநாள் நாய் ஒன்று வாயைத் திறக்க முடியாமல் அங்கே வந்து நின்றது. அதன் வாயில் அம்புத்தையல் போடப்பட்டிருந்தது. இதைப் பார்த்த அர்ஜூனன் ஆச்சரியப்பட்டு, ""குருவே! தாங்கள் இப்படி ஒரு அற்புத வித்தையை கற்றுத்தரவே இல்லையே. இது நேர்த்தியான ஒன்றாக உள்ளதே, என்றான்.

துரோணருக்கும் ஆச்சரியம். தனக்கு மட்டுமே தெரிந்த இந்தக்கலையை தெரிந்து கொண்டவன் யார்? என்ற ஆச்சரியத்துடன் நாயின் பின்னால் சென்றார். அங்கே ஏகலைவன் பயிற்சி செய்து கொண்டிருந்தான். "" நீ யார்? இந்த அற்புதமான கலைகளையெல்லாம் உனக்கு சொல்லித் தந்தது யார்?  என்றார். அவன் மெழுகு பொம்மையைச் சுட்டிக்காட்டினான். தன் இளவயது உருவத்தை அப்படியே வடித்திருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்ட அவர், ""நான் தான் இந்த துரோணர், என்றதும். அவன் காலில் விழுந்தான்.

தாங்கள் எனக்கு அனுமதி மறுத்ததால், தங்களை மானசீக குருவாக ஏற்று நானாகவே படித்தேன், என்றான். இவனிடம் இக்கலை இருந்தால் சரிப்பட்டு வராது எனக் கருதினார் துரோணர். ""மாணவனே! அப்படியானால் நீ குரு காணிக்கை தர வேண்டாமா? என்றார். அவன் என்ன வேண்டும் என்றான். ""உன் கட்டை விரலைக் கொடு என்றார். மாணவன் மறுக்கவில்லை. கட்டைவிரலை வெட்டிக் கொடுத்து விட்டான். துரோணர் இப்படிச் செய்ததைத் தான் தவறென சிலர் வாதிடுவர். வில்வித்தை பயின்ற இவன் ஒரு நாயையே இந்தப் பாடு படுத்துகிறான் என்றால், மனிதர்களை இந்த விதை கொண்டு என்னபாடு படுத்துவான். அதனால் தான் கட்டை விரலை வாங்கி விட்டார் துரோணாச்சாரியார். ( நன்றி: தினமலர்)

சரி இந்தக்கதையில் பல விடயங்களை நாம் பார்க்கலாம், நாம் ஏகலைவன் துரோணருக்கு மாத்திரம் தெரிந்த இரகசியத்தினை அறிந்து கொண்டான்? என்பதனை ஆராய்வோம். இதற்கு மனித மனத்தின் செயற்பாடு பற்றி சிறிது தெரிதல் வேண்டும். மனம் என்பது ஒருவித சக்தி அலைக்கழிவாக செயற்படுகிறது,  மனிதன் தன் மனதில் நினைக்கும் எதுவும் அழிவதில்லை, அவையனைத்தும் இந்த ஆகாய மண்டலத்தில் எண்ண அலைகளாக அலைக்கழிந்தவண்ணமே இருக்கும். இவற்றை  சரியான வழியில் ஒருங்கிசைக்கத்தெரிந்தவர்கள் அவற்றை அறிந்து கொள்ளலாம். இந்த அடிப்படைத்தத்துவத்தில் தான் குறி சொல்பவர், மந்திரவாதி, டெலிபதி என்ற அனைத்தும் செயற்படுகிறது. ஆக ஆகாயத்தில் அலைக்கழியும் எண்ண அலைகளை கவரத்தெரிந்தவர்கள் பலவிடயங்களை அறிந்து கொள்ளலாம். 

ஆக ஏகலைவன் என்ன செய்தான்; துரோணரது ஊருவை மனதில் எண்ணி அவரது மனதினை ஆகய மனதூடாக தொடர்பு கொண்டான், அதன் பயனாக துரோணரின் வித்தைகள் அனைத்தையும் அறிந்துகொண்டான். ஆனால் குருவின் மனப்பூர்வ ஆசியிலாது பெற்ற வித்தை அவனுக்கு பயன்படாமல் போய்விட்டது. எனினும் சித்தர்களை, ரிஷிகளை வழிபடவிரும்புவபர்கள் இந்த முறையினை பயன்படுத்தலாம். ஆயினும் பரிபூர்ண குருபக்தியுடன் அட்டாங்க யோகத்தில் நான்காவது படியாகிய "பிரத்தியாகாரம்" - மனதினையும் புலன்களினையும் கட்டுப்படுத்திய பின் இம் முறையினை பிரயோகித்து பார்ப்பது ஏகலைவனுக்கு ஏற்பட்ட கதி ஏற்படாமல் இருப்பதற்கு உதவும். 

இதில் விளக்கப்பட்டதை சிந்திதறிந்து கொள்வதன் மூலம் மேலும் பலவிடயங்களை அறிந்து கொள்ளலாம். 



2 comments:

  1. பிரத்யாகாரம் பற்றி சிறப்பான பகிர்வு,

    ReplyDelete
  2. வணக்கம் சுமனன் ஐயா,
    தங்களின் பதிவுகளுக்கு நான் புதுவரவு. என்னுடைய ஐயம் மனித நெறி நிச்சயமாக சாதீய அடிப்படையில் அமைக்கப்பட்டது அல்ல. அப்படி இருக்க குருவானவர் அதன் அடிப்படையில்
    ஏகலைவனை ஒதுக்க முடியாது. இருப்பினும் சீடனுக்கு உரிய விழுமியமே இங்கே விதைகப்பட்டுள்ளது உங்களின் பதிவின் பிரகாரம் அவனது பண்பு தெளிவாக உணர்த்தபட்டுள்ளது. அவனுடைய மானசீக குருவுக்குரிய மரியாதையை செலுத்திவிட்டான்.குருவின் பங்கு இங்கு சுட்டியாக மட்டுமே காட்டபட்டு இருக்கலாம்.
    இது என்னுடைய தாழ்மையான கருத்து. நன்றி.

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...