குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, December 31, 2023

காலபைரவ தியானம் – 30

 

காலபைரவர் வழிபாட்டில் உடுக்கை, முரசு பாவித்து பெருத்த ஒலி எழுப்புவது மரபு காசியில் நடு நிசிப் பூஜையில் அடிக்கப்படும் இரண்டு உடுக்கைகளும் அந்த இடத்தில் வேறெந்த எண்ணமும் இல்லாத சூனிய நிலையை உருவாக்கும் வல்லமையுடையது. இந்தப்பாடல் காலபைரவ வழிபாட்டின் சிறப்புத் தன்மைகளைக் கூறுகிறது. காலபைரவரின் பார்வை காமனின் வீரியத்தை எரிக்கக் கூடியது. இந்தப்பாடல் காம தகனம், எவருக்கும் அஞ்சாத துணிவு, பூத பிசாசுகள் போன்ற சூக்ஷ்ம சக்திகளால் தாக்கப்படாத நிலையை ஒரு பைரவ உபாசகன் பெறுவான் என்று சொல்லப்படுகிறது.

வெடிக்கும் பரவை முரசதிர் காமனை வீறழியப்

பொடிக்குங்கனல் விழிப் புண்ணியனே புவியோர்கணேஞ்சள்

துடிக்கும் பொல்லாத பிசாசுகள் தன்னைத் துரத்திவெட்டி

அடிக்குந் தண்டாயுதனே காழி யாபத்துத் தாரணனே

வெடிக்கும் கடலின் ஓசை போன்ற முரசு அதிர,

காமனின் வீரியத்தை அழித்து காம தகனம் செய்யக்கூடிய பார்வையை உடைய புண்ணியனே,

இந்தப்புவியில் எவருக்கும் அஞ்சாத மனவலிமையைத் தருபவரே!

மானிடருக்கு துன்பம் ஏற்படுத்தும் துடிக்கின்ற பிசாசுகளை துரத்தி வெட்டி அடித்து ஓட்டும்

சீர்காழிப் பதியில் உறையும் ஆபத்து தாரண பைரவரே

உம்மை நான் தியானிக்கிறேன்!

{ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள் அருளிச் செய்த ஆபதுத்தாரண மாலை பாடல் 16}

இன்றைய காசிகாபுராதி நாத காலபைரவரின் மங்கள அலங்காரம் அனைவரது தரிசனத்திற்காகவும்!


 


 

Saturday, December 30, 2023

காலபைரவ தியானம் - 29

 

இந்த தியானம் நாம் அறியாமையால் நிலையற்ற விடயங்களில் மனமகிழ்ந்து மாத்திரம் இருந்திவிடாமல் பைரவரின் பாதங்களில் பக்தி வைத்து தமிழறிவு கிட்ட வேண்டப்படுகிறது.

மாடும் தண்தாமம் அணிந்திடும் மைந்தரும் மாதர்களும்

வீடும் தண் தாமம் என மகிழாமல் உன் மென்மலர்த்தாள்

பாடும் தண்டாத்தமிழ் ஈந்தருள் பூத பிசாசுகளைச்

சாடும் தண்டாயுதனே காழியாபதுத் தாரணனே.

பொன்னால ஆன மாலையும்,

குளிர்ந்த மலர்மாலையும் அணிந்த பைரவப்பெருமானே!

பிள்ளைகளும், மனைவியும், வீடும் தான் குளிச்சியான பரமபதம் என்று அறியாமையில் மகிழ்ந்து விடாமல்

உன் மென்மலர் போன்ற பாதங்களை பாட வழு இல்லாத தமிழ் அறிவினைத் தந்தருள்வாய்!

பூதங்களும் பிசாசுகளையும் விரட்டியோட்டும் தண்டாயுதனே

சீர்காழிப் பதி உறையும் ஆபத்துத்தாரண பைரவரே

உம்மை நான் தியானிக்கிறேன்!

{ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள் அருளிச் செய்த ஆபதுத்தாரண மாலை பாடல் 15}

இன்றைய காசிகாபுராதி நாத காலபைரவரின் மங்கள அலங்காரம் அனைவரது தரிசனத்திற்காகவும்!


வரியும் இலங்கை மக்கள் சோம்பேறிச் சிந்தனையும்


அரசாங்கம் எல்லோரும் வரிகட்டச் சொன்னவுடன் ஒவ்வொருவரும் எதோ சொத்தைப் பிடுங்கிறான் என்றவகையில் பெரிய பட்டம் பெற்ற புத்திஜீவிகள், அரச ஊழியர்கள் அனைவரும் சிந்தித்து நாட்டில் பதட்டப்படுவதைப் பார்க்கும் போது உழைக்கச் சோம்பேறிகள் மிகுந்த இந்த நாட்டில் பொருளாதாரம் எப்படி வளரும்?

நான் சிறுவயதில் குடும்ப பொருளாதாரம் அளவாக இருக்கும் போது அம்மா சொல்லுவார் எள்ளென்றாலும் ஏழாக பகிர்ந்து உண்ண வேண்டும் என்று! அதற்கு எதிர்ப்பேச்சு மனதில் ஓடும்! அம்மாவிற்கு திருப்பி வாயடித்தால் அடிவிழும் என்பதால் நான் எனக்குள்ளே சொல்லிக்கொள்வேன் ஏழுபேருக்கு தேவையான அளவு கிடைக்கும் வகையில் நாம் உழைக்க வேண்டும் என்று!

நாம் ஒவ்வொருவரும் பொருளாதாரத்தை உருவாக்கும் சிந்தனையும் பணச்சுழற்சி ஏற்படுத்தும் சிறப்புத் திறனும் பெறவேண்டும்! அதிகமாக உழைத்து உபரியை மற்றவர்கள் வாழ்க்கையை மேம்படச் செய்யவேண்டும் என்று முயற்சிக்க வேண்டும்! இலங்கையைப் பொறுத்தவரையில் அதிகமாக உழைத்து வெளி நாட்டில் பதுக்க வேண்டும் என்பதே அரசியல்வியாதிகளுடைய சிந்தனை! படித்தவன் இந்த நாட்டில் ஒன்றும் செய்ய முடியாது; வெளி நாடுதான் தன்னுடைய படிப்பிற்கு சிறந்தது என்று சிந்தனை! எம் ஒருவருடைய சிந்தனையின் கூட்டு விளைவுதான் எமது நாடு என்ற தெளிவு இல்லை!

அண்மையில் ஐக்கிய இராச்சியத்தில் இருக்கும் தொழில் அதிபராகிய ஒரு நண்பனுடன் உரையாடும் போது நான் பல்தேசியக் கம்பனியில் வேலைச் செய்துவிட்டு இப்போது ஊருடன் எனது அலுவலகத்தை செயற்படுத்துகிறேன்; அதே தரத்துடன் எமது ஊர்ப் பிள்ளைகள் கொழும்புக்கு வேலைக்குப் போகாமல் இங்கு ஊரிலேயே நாம் அலுவலகம் அமைக்க சிந்திக்கிறேன்; உங்கள் முதலீடுகளை திட்டங்களை இங்கும் செயற்படுத்த நான் உதவுகிறேன், உங்கள் சிந்தனைக்கு என்று சொன்னேன்! எனினும் தகுதியான தொழில் நுட்ப மூளைகள் உடியய மனித வளம் தேவையான அளவு இருக்கிறதா? என்ற சந்தேகத்தைக் கேட்டார்! உண்மையில் அது மிகவும் சவாலான விடயம்தான்! ஆனால் இன்று இல்லாவிட்டாலும் இன்னும் சிலவருடங்களில் அந்தச் சூழ் நிலையை நாம் உருவாக்கப் பாடுபட வேண்டும்.

வரி என்பது செலவழிக்காமல் உபரியாக இருக்கும் பணத்தை அரசு எடுத்து மற்றவர்களுக்காகச் செலவழிக்கும் ஒரு வழி! உங்களிடம் அதிகமாகப் பணம் இருந்தால் அதை எங்காவது நீங்களே முதலிட்டு பலருக்கு தொழில் வாய்ப்பினை உருவாக்கலாம்! அப்போது அது செலவுக்கணக்காக வரும்! இப்படி உங்களுக்குச் செலவழிக்கத் தெரியவில்லை என்றால் அரசாங்கம் அதை நான் செலவழிக்கிறேன் என்று சொல்வதுதான் வரி!

ஆகவே வீண்பதட்டம் இல்லாமல் பொருளியலும், நிதியியலும் படிக்க ஆரம்பியுங்கள்; இந்த நாட்டில் பட்டதாரிகள் கடிவாளம் கட்டிய குதிரை மாதிரி தாம் பெற்ற பட்டத்தினைத் தாண்டி சிந்திக்கத் தெரியாத பொருளாதாரம், நிதியியல் தெரியாத மூடர்களாக காலையில் இருந்து மாலை வரை எங்காவது பக்குவமாக வேலை செய்துவிட்டு வீட்டில் வந்து நிம்மதியாகத் தூங்க வேண்டும் என்று நினைக்கும் சோம்பேறிக் கூட்டம் இருப்பதாலேயே இப்படி வீண் பயம் எல்லாம்!


 

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...