குரு நாதர் ஆசியுடன்
குரு நாதர் ஆசியுடன்.............
இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!
இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!
ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ
ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ
ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ
ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !
ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ
ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!
ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ
இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!
மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here
2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்
நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.
அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே
உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!
ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே
இங்கே
Friday, March 31, 2023
வசந்த நவராத்ரி பூர்த்தி
Thursday, March 30, 2023
நவராத்ரி லகு அனுஷ்டானம்
எமது ஆழ்மனதினூடாக உயர் தெய்வீக மனதினைத் தொடர்பு கொண்டு intutive decisions பெற தொடுகுறி சாத்திரம், டரோட் போன்றவை நல்ல சாதனம்.
கடந்த பத்து நாளும் செய்த ஆன்ம உழைப்பிற்கு பலன் என்ன என்று கேட்ட கேள்விக்கு பதில் இப்படி வந்தது, திருப்தியாக இருக்கிறது.
மேற்குறித்த உலக அட்டை என்பது ஒரு பெரிய காலச் சுழற்சியை நிறைவு செய்வதைக் குறிக்கிறது. நீங்கள் ஒரு மிகப் பெரிய வடிவத்தின் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள். இது உங்களுக்கு வெளியே உருவாகும் வரிசைப்படுத்தல். தெய்வீகத் திட்டத்தில் உங்கள் இடத்தைத் தெளிவுபடுத்தும் மிக முக்கியமான தருணத்தில் நீங்கள் வாழ்கிறீர்கள். நீங்கள் விஷயங்களின் உண்மையான தன்மையைப் பற்றிய நுண்ணறிவைப் பெறுவீர்கள் மற்றும் உங்கள் வாழ்க்கையில் உங்கள் நோக்கத்தை அறிவீர்கள்.
The World card represents the completion of a larger cycle of time. You are one part of a much larger pattern, an ordering that originates outside yourself. You happen to be living through a very important juncture that will make clear your place in the divine plan. You will gain insight into the true nature of things and know your purpose in life.
இந்த நவராத்ரி லகு அனுஷ்டானம் உலகத்தின் நன்மைக்கானது! அனைவரும் உலகம் சரியான ஒழுங்கில் பயணிக்க நாளை சாதனைப் பூர்த்தியில் பிரார்த்திக்கவும்.
காயத்ரி சாதனையின் உயர் நிலைகள்
மனிதகுலம் செழிக்கச் செய்யக்கூடிய உபாசனை என்ன? இதற்கு ஒரு பிரமாணம் கூறப்படுகிறது;
அனைத்து அறிவுகளின் பிரகாசம் காயத்ரி
இந்த பிரகாசம் 24 தூண்களில் (அக்ஷரங்களில்) பிரகாசிக்கிறது.
இந்தப் பிரகாசத்தைத் தாங்கும் சந்ததிகள் வளரும்!
இதுவே சாம வேதத்தின் இன்னிசை
இதுவே காயத்ரி! குழந்தைகளை தங்கள் தாயை அம்மா என்று அழைக்கிறார்கள்! விளையாடுகிறார்கள்! ஆனால் முக்கியமான ஏதாவது பிரச்சனை வந்தவுடன் அம்மாவிடம் முழுமையாக சரணடைந்து விடும். அம்மா தனது வேலைகள் அனைத்தையும் விட்டுவிட்டு குழந்தைக்கு உதவுகிறார்.
மேற்குறித்த விளக்கத்தைச் செயலில் கொண்டுவருவதுதுதான் காயத்ரி அனுஷ்டான ஸாதனா. அனுஷ்டானத்தால் மகாகாரண சரீரத்தில் இருக்கும் அந்த ஸவிதாவின் புத்தியைத் தூண்டும் பேரோளி சாதகரிடம் அபரிமிதமாக ஈர்க்கப்பட்டு சாதகனுடைய துன்பங்கள் நிவர்த்திக்கப்படுகிறது.
காயத்ரி உயர் சாதனைகள்:
அன்பின் மாணவர்களே, நீங்கள் காயத்ரியின் உயர் சாதனையின் முதல் படியான லகு அனுஷ்டானத்தினைப் பூர்த்தி செய்துள்ளீர்கள்.
லகு அனுஷ்டானம் என்பது நவராத்ரி காலத்தில் 09 நாட்களில் தினசரி 27 மாலைகள் வீதம் ஜெபம் செய்தல். இதற்கு முந்திய நிலையாக 10 மாலை, 05 மாலை சாதனை செய்பவர்கள் அடுத்த நவராத்ரி 27 மாலைகள் செய்து பூர்த்தி செய்ய வேண்டும் என்று சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும்.
காயத்ரி அனுஷ்டான சாதனை குடும்ப சண்டைகள், மன அமைதியின்மை மற்றும் உள் உணர்ச்சிகளில் இருந்து விடுபட உதவும். அதன் தாக்கத்தால் மனதில் உடல் மாற்றம் ஏற்படுகிறது. கஷ்டங்களைச் சமாளிக்கும் வலிமையும் புத்திசாலித்தனமும் கூட வரும். திறமையையும், நல்லது கெட்டதை அறியும் பகுத்தறிவையும், தொலைநோக்கு பார்வையையும், அறிவு வளர்ச்சியையும், சிரமங்களை சமாளிக்கும் வழியையும் தரும் 'ராமபாணம்' போல உபாசனா செயல்படுகிறது.
இந்த உயர்சாதனையின் அடுத்த நிலைகள் வருமாறு:
- மத்திம அனுஷ்டானம்: 45 நாட்களில் ஒரு லக்ஷ ஜெபம் பூர்த்தி செய்தல்.
- காயத்ரி பஞ்ச லக்ஷ சாதனா: ஒரு வருடத்தில் 05 லக்ஷம் பூர்த்தி செய்தல்
- சஹஸ்ர காயத்ரி குரு சாதானா: தினசரி 10 மாலைகள் வீதம் குருவுடன் ஒத்திசைந்து ஒரு வருட சாதனை.
- பூரண அனுஷ்டானம்: 24 லக்ஷம் ஜெபம் பூர்த்தி செய்தல்.
- சந்திராயண காயத்ரி சாதனை : நோய்கள் நீங்க,உடல் மன சுத்தி பெற.
- நவக்கிரக காயத்ரி சாதனைகள்
பெண்களுக்கான சிறப்பு சாதனை:-
முதல் நிலை 01 இலட்ச ஜெபம் பூர்த்தி செய்ய வேண்டும்.
1) கன்னிப் பெண்களுக்கான நற்திருமண வாழ்க்கை
2) திருமணமான தம்பதியினருக்கான நற்தாம்பத்தியத்திற்கான சாதனை
3) நற்குழந்தைகள் பெற காயத்ரி சாதனை
4) கர்ப்ப ரக்ஷை கர்ப சேதன சாதனை
5) குழந்தைகளின் நோய் தடுப்புக்கு, புத்தி வளர்ச்சி சாதனை
இந்தச் சாதனைகளைப் பயில குரு நாதர் ஸ்ரீ ஸக்தி சுமனனுடன் நேரில் கலந்துரையாடுங்கள்.
வாட்ஸப் +94776271292
Sri Gayatri Sahasra Nama Sadhana
Sri Gayatri Sahasra Nama Sadhana
Gayatri Sadhakas from all over the world performed Sri Gayatri Lagu Anushtanam and Gayatri Sahasra Nama Sadhana under the guidance of Guru Nadar Sri Sakthi Sumanan for ten days in this spring Navratri.
Gayatri's subtle powers are infinite; Innumerable; Sahasra Nama Stotram is the mantra hymn that sums up this innumerable energy and conveys it to the human mind.
The word sahasra is used in the sense of infinite. A thousand in essence. But elsewhere the word thousand is used to refer to an infinite number. Lord's prayer is 'Sahasrasirsha'. In this prayer, God is said to be 'Sahasrabaha, Sahasrapada, Sahasranetra'. Here the meaning of Sahasrat is infinite.
Sahasra Naam is the mantras chanted by a Rishi to attain human beings within a thousand states experienced through his penance of limitless potencies.
Through Guruparamparai we have got two Sahasra names describing the infinite powers of Goddess Gayatri.
1) Akarathi Kshakaranta Sahasra Namavali in Devibhagavata - It was consecrated by Brahma. this sadhana will expand the VinjGnanamaya Kosha.
2) Tadkara Sahasra Naam in Rudyamala Tantra – This is a tantra sadhana given by Bhairava Rishi.
On this Navratri the Akarathi Kshakaranta Sahasra Nama Sadhana was taught by Sri Sakti Sumanan with visualisaton techniques.
Sri Narayana Rishi tells Sri Naratha Rishi in Devi Bhagavat that the result of this Sahasra Nama achievement is as follows.
- Destroy all sins and can also give all great wealth
- O Narada, these are a thousand names of Goddess Gayatri.
- Bestows virtue destroys all sins, and bestows great wealth. 156
- Thus a thousand names of Gayatri can remove all doshas. On Ashtami, this mantra should be chanted along with a Guru. 157
- This should be said to a good devotee and a good disciple. It should not be said out of affection to miscreants or relatives. 159
- It is secret and secret; The highest great achievement.
- By accomplishing this sadhana the common man becomes qualified to do higher things.
- A pauper who performs this Gayatri Sahasra Nama feat becomes eligible for wealth.
- For those who seek salvation, it fulfills their desires, and for those who seek lust, it fulfills their desires.
- He who is sick is cured of his disease,
- He who is bound as a slave is freed from slavery. 162
- Whatever sins he commits, he is freed from those sins once and for all by doing this Sahasra Nama feat; This means that one cannot reap the benefits of this achievement after committing the same sin again 163॥
- Lotus-born, this is the pure secret I have told you. There is no doubt that this Sahasra Nama feat when performed with absolute sincerity unites the Sadhakas with the truth of Brahmasayujyam. 165
- All students who have learned this rare feat should perform the daily Guru Agathiya Gayatri feat.
Many more sadhana secrets are gradually taught to qualified students.
ஸ்ரீ காயத்ரி சஹஸ்ர நாம சாதனை
ஸ்ரீ காயத்ரி சஹஸ்ர நாம சாதனை
இந்த வசந்த நவராத்ரியில் பத்து நாட்கள் குரு நாதர் ஸ்ரீ ஸக்தி சுமனனனின் வழிகாட்டலில் உலகெங்குமுள்ள காயத்ரி சாதகர்கள் ஸ்ரீ காயத்ரி லகு அனுஷ்டானமும், காயத்ரி சஹஸ்ர நாம சாதனையும் செய்தனர்.
காயத்ரியின் சூக்ஷ்ம ஆற்றல்கள் அனந்தமானவை; எண்ணில் அடங்காதவை; இந்த எண்ணிலடங்காத ஆற்றலைத் தொகுத்து மனித மனதிற்கு உணர்த்தும் தோத்திரமே சஹஸ்ர நாம ஸ்தோத்திரம்.
சஹஸ்ர என்ற சொல் எல்லையற்றது என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. சாராம்சத்தில் ஆயிரம். ஆனால் மற்ற இடங்களில் எண்ணிலடங்காத எண்ணைக் குறிக்க ஆயிரம் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இறைவனின் பிரார்த்தனை 'சஹஸ்ரசிர்ஷா'. இந்த பிரார்த்தனையில், கடவுள் 'சஹஸ்ரபாஹா, சஹஸ்ரபாதா, சஹஸ்ரநேத்ரா' என்று கூறப்படுகிறது. இங்கே அந்த ஸஹஸ்ரத்தின் அர்த்தம் எல்லையற்றது என்பதாகும்.
சஹஸ்ர நாமம் என்பது ஒர் ரிஷி எல்லையற்ற ஆற்றல்களை தனது தபஸினூடாக அனுபவித்த நிலைகளை ஆயிரம் எண்ணிக்கைக்குள் மனிதர்களுக்கு அனுவம் கிடைக்க திருஷ்டித்த மந்திரங்கள்.
காயத்ரி தேவியின் அனந்த சக்திகளை விபரிக்கும் இரண்டு சஹஸ்ர நாமங்கள் எமக்கு குருபரம்பரையினூடாக கிடைத்த்திருக்கிறது.
1) தேவிபாகவதத்தில் இருக்கும் அகராதி க்ஷகராந்த சஹஸ்ர நாமாவளி - இது பிரம்மாவினால் திருஷ்டிக்கப்பட்டது. விஞ் ஞானமய கோஷ விருத்திக்கானது.
2) ருத்யாமள தந்திரத்தில் இருக்கும் தத்கார சஹஸ்ர நாமம் - இது பைரவ ரிஷியால் தரப்பட்ட தந்திர சாதனைக்குரியது.
இந்த நவராத்ரியில் அகராதி க்ஷகராந்த சஹஸ்ர நாம சாதனை ஸ்ரீ ஸக்தி சுமனன் அவர்களால் கற்பிக்கப்பட்டது.
இந்த சஹஸ்ர நாம சாதனையின் பலனை தேவிபாகவத்தில் ஸ்ரீ நாராயண ரிஷி ஸ்ரீ நாரத ரிஷியிற்கு கீழ்வ்ருமாறு கூறுகிறார்.
ஸர்வ பாப நிவர்த்தி ஸர்வ ஸம்பத்துக்களையும் தரக்கூடியது
ஓ நாரதா, இது காயத்ரி தேவியின் ஆயிரம் பெயர்கள்.
புண்ணியத்தை அருளும், எல்லா பாவங்களையும் அழித்து, பெரும் செல்வத்தை அளிக்கும். 156॥
இதனால் காயத்ரியின் ஆயிரம் நாமங்கள் அனைத்து தோஷங்களையும் நீக்கக்கூடியது. அஷ்டமியில் இந்த மந்திரத்தை சித்திபெற்ற குருவுடன் சேர்ந்து சொல்ல வேண்டும். 157॥
இதை ஒரு நல்ல பக்தனுக்கும், நல்ல சீடனுக்கும் சொல்ல வேண்டும். அதை வழிகேடு தேடுபவர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ பாசமிகுதியால் சொல்லக்கூடாது. 159॥
இது இரகசியத்திலும் இரகசியமானது; மிக உயர்ந்த பெரிய சாதனை.
இந்த சாதனையைப் பூர்த்தி செய்வதன் மூலம் சாதாரண மனிதன் உயர்ந்த விடயங்களைச் செய்வதற்குரிய தகுதியைப் பெறுகிறான்.
இந்த காயத்ரி சஹஸ்ர நாம சாதனையைச் செய்யும் ஒரு ஏழை செல்வத்தைப் பெறத் தகுதியுடையவனாகிறான்.
முக்தியை நாடுபவர்களுக்கு முக்தியையும், காமத்தை நாடுபவர்களுக்கு அவர்கள் இச்சைகளையும் நிறைவேற்றுகிறது.
நோயுற்றவன் நோயிலிருந்து விடுபடுகிறான்,
அடிமையாக கட்டுப்பட்டவன் அடிமைத்தனத்திலிருந்து விடுபடுகிறான். 162॥
எத்தகைய பாபங்களைச் செய்தாலும் இந்த சஹஸ்ர நாம சாதனையைச் செய்வதால் அந்தப் பாவங்களிலிருந்து ஒருமுறை விடுவிக்கப்படுகிறான்; இதன் அர்த்தம் மீண்டும் அதே பாவத்தைச் செய்துவிட்டு இந்த சாதனையால் பலனைப் பெற முடியாது என்பதாம் 163॥
தாமரையில் பிறந்தவனே, நான் உனக்குச் சொன்ன தூய ரகசியம் இதுதான். இந்த சஹஸ்ர நாம சாதனை முழுமையான உண்மையுடன் செய்யும் போது சாதகர்களை பிரம்மசாயுஜ்யம் என்ற சத்தியத்துடன் ஒன்றிணைக்கும் என்பதில் சந்தேகமில்லை. 165॥
இந்த அரிய சாதனையை கற்றுக்கொண்ட அனைத்து மாணவர்களும் தினசரி குரு அகத்திய காயத்ரி சாதனையினை செய்ய வேண்டும்.
இன்னும் பல சாதனா இரகசியங்கள் படிப்படியாக தகுதியுள்ள மாணவர்களுக்கு கற்பிக்கப்படும்.
Wednesday, March 29, 2023
பலி வைஸ்வா - காயத்ரி சாதகர்களுக்குரிய மிக எளிய அக்னி ஹோத்ரம்
பலிவைஸ்வதேவா மற்றும் பிரணாக்னிஹோத்ரா
நமது உடல் பஞ்ச பூதாத்மிக உடல் என்று நமது வேத சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. வெளியுலகில் தெரியும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய உறுப்புகளால் ஆன உடல் என்பதால் இது பஞ்சபௌதிக உடல் என்று அழைக்கப்படுகிறது. இந்த உடல் பிறப்பு மற்றும் இறப்பு உடையது. மற்றும் தெய்வீக சக்திகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. நாம் சுவாசிக்கும் காற்றும் (ஏழு நிலைகளுடன் கூடிய பிராணாயாமம்) மற்றும் ஸ்வாஹா என்ற மந்திரத்தின் ஒலியுடன் நாம் உண்ணும் உணவும் பகவத் சக்தி அல்லது தெய்வ உணர்வாக மாறி, உபாசனை, சாதனா மற்றும் வழிபாட்டிற்கு சாதகமான சூழலை வழங்குகிறது.
நாம் மந்திரமாக உண்ணும் உணவின் மூலம், சாதாரண உடலை யக்ஞ உடலாக மாற்ற முடியும். இந்த நம்பிக்கையில் தான் நம் முன்னோர்கள் உள்ளனர் நம்மிடம் இருக்கும் பல விதிகளில் உணவுக் கட்டுப்பாடு மிக முக்கியமானது. சாத்வீக உணவு உண்பதால் சத்வ குணங்கள் வளரும். சத்வ குணத்தால், நாம் உண்ணும் உணவு நம்மை சரியான பாதையில், அதாவது சத்தியத்தின் பாதையில் நடக்கத் தயார்படுத்துகிறது. தெய்வீக சக்திகளின் அருள் விரைவில் நல்லொழுக்கத்தை அடையும். இந்த புனிதமான உணவைப் பெறுவதற்கு, நம் விரல் மூட்டுகளால் உருவாக்கப்பட்ட முத்திரைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவே இந்த முத்திரைகள் மூலம் நாம் பெறும் உணவு அந்தந்த தெய்வங்கள். ஏற்றுக்கொண்டு எங்களுக்கு பூரண ஆரோக்கியத்தை வழங்குங்கள்.
உணவு விதிகளில் முதன்மையானது பூசுத்தி - உண்பதற்கு ஏற்ற இடத்தைத் தேர்ந்தெடுத்து, காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் சிறிது தண்ணீரை தரையில் தெளித்தால், பூமியின் வளிமண்டலத்தில் உள்ள சில தீய சக்திகள் அழிந்து, தகுந்த சூழல் உருவாகும். நல்ல உணவைப் பெற வேண்டும்.
இரண்டாவதாக தேகசுத்தி - கால்களையும் கைகளையும் சுத்தம் செய்து, குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்து ஏழு முறை வணங்கினால், உணவு விரைவில் ஜீரணமாகும். சாப்பிடுவதற்கு முன், விஸ்வேஸ்வரருடன் ஸ்ரீ காசி அன்னபூர்ணேஸ்வரியை தியானியுங்கள். நாம் நமது வலது பக்கத்தில் சுத்தமான தண்ணீரை வைத்திருக்க வேண்டும். இது கடிகார திசை என்று அழைக்கப்படுகிறது. வலது கையில் சிறிது தண்ணீரை எடுத்து காயத்ரி மந்திரத்தை உச்சரித்து, நாம் உண்ணும் அனைத்து உணவுப் பொருட்களிலும் மந்திர நீரை தெளிக்க வேண்டும். இதனால், பொருட்களில் உள்ள கண்ணுக்கு தெரியாத அசுத்தங்கள் அகற்றப்படும். அதன் பின்னர் பலிவைஸ்வா பின்வரும் முறையில் முன்வைக்கப்பட வேண்டும்.
பாலிவைஸ்வதேவாவின் முக்கியத்துவம்
இது யக்ஞக் கிரியைகளில் முக்கியத்துவமுடையது. இது பூஜ்ய குருதேவர் பண்டிட் ராம் சர்மாச்சார்யாவினால் வெளிப்படுத்தப்பட்டது, இந்த எளிய நடைமுறை முடிவற்ற பலனைத் தரும். இந்த முறை முற்காலத்தில் சாத்வீக உணவு உண்பவர்களின் வீடுகளில் சமையல்காரர் ஊறவைத்த அரிசியில் சிறிது எடுத்து ஓம் கிருஷ்ணா அக்ஷயமஸ்து என்று சொல்லி எரியும் நெருப்பில் வைப்பார். அதனால் அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் போதிய உணவுடன் வாழ்ந்து வந்தனர்.இன்று அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். சில வீடுகளில் இந்த முறை இன்றும் தொடர்கிறது.
வைஸ்வதேவதைக்கு பலி செய்யாமல் உண்பவன் காலசூத்திர நரகத்தில் விழுவான் என்று தேவி பாகவதத்தின் 11வது ஸ்கந்தத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இன்றைய தலைமுறைக்காகவும், வருங்கால சந்ததியினர் வளமாக வாழ்வதற்காகவும் நம் யக்ஞம் எனும் தியாக மனப்பாங்கில் இருந்து தொடங்குவோம். பாலிவைஷ்வத்தில் உள்ள பஞ்ச ஆஹுதிகள் பஞ்ச மகாயக்ஞங்கள் என்று பரம பூஜ்ய குருதேவரால் விவரிக்கப்படுகிறது. இங்கு மஹா அன்ன ஒலியுடன் முக்கியத்துவம் வெளிப்படுகிறது. ஆனால் குருதேவ் ஏன் இவ்வளவு சிறிய விடயத்தை ஒரு பெரிய தியாகம் என்று கூறினார்?
இந்த பஞ்ச மகா யக்ஞத்தில் விவரிக்கப்பட்டுள்ள பிரம்மா, தேவர், ரிஷி, நர, பூத யக்ஞங்களுக்கு யாகம் செய்வதில், கண்ணுக்குத் தெரியாத நபர்களாகக் கருதக்கூடாது என்பது பொருள். அந்த வார்த்தைகளால் சுட்டிக்காட்டப்பட்ட தெய்வீக உள்ளுணர்வையும் நல்ல எண்ணங்களையும் ஒருவர் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அர்த்தம். இந்தப் பண்புகளை வளர்க்க போதுமான வளங்களைத் தன்னுடைய வாழ்க்கையில் ஒதுக்கிக்கொள்ள வேண்டும் வேண்டும்.
1. பிரம்ம யக்ஞம் - பிரம்ம யக்ஞமாக பிரம்ம ஞானம் மற்றும் சுய-உணர்தல் நோக்கி ஈர்க்கப்படுதல். இந்த யாகம் கடவுளுக்கும் ஜீவாவுக்கும் இடையிலான பரஸ்பர அதான பிராதனங்களின் செயல்முறையைக் குறிக்கிறது.
2. தேவ யக்ஞம் - தேவ யக்ஞத்தின் நோக்கம் விலங்குகளின் உள்ளுணர்விலிருந்து மனித உள்ளுணர்வுக்கு முன்னேறுவது. குணம், கர்மம் மற்றும் இயற்கையை தெய்வத்திற்கு ஏற்ப வடிவமைக்க வேண்டும். முடிந்தவரை கற்பையும் பெருந்தன்மையையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.
3. ரிஷி யக்ஞம் - ரிஷி யக்ஞம் என்றால் பின்தங்கியவர்களுக்கு இரக்கமுள்ள இதயத்துடன் உதவுவது. கருணையை வளர்க்க வேண்டும். கடந்த கால ஞானிகள் மற்றும் பெரியவர்களின் கொள்கைகளை நாம் நம் வாழ்வில் பின்பற்ற வேண்டும்.
4. நர யக்ஞம் - மனித மாண்புக்கு ஏற்ப சூழல் மற்றும் சமூக அமைப்பை உருவாக்குதல். மனித மாண்பைக் காப்பாற்றுவதும், சமுதாய விதிகளை ஆளும் நரனிலிருந்து நாராயணனாக பரிணமிப்பதும், மனிதன் உலகளாவிய மனிதனாக வளர வேண்டும் என்பதும் இதன் நோக்கமாகும்.
5. பூத யக்ஞம் - நமது ஆன்மிகம் மற்ற மனிதர்களுடன் மட்டுமின்றி பிற உயிர்களிடத்திலும் உள்ளது. தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வளர்ச்சிக்கும் முயற்சிகள் தேவை.
பலிவைஸ்வாவில் இந்த ஐந்து ஆகுதிகள் தரும் போது நாம் இந்த ஐந்து நிலைகளையும் முன்னேற நாம் தொடர்ந்து செயற்பட செயற்படுவோம் என்று உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இனி பலிவைஸ்வா யக்ஞம் செய்யும் முறை:
சிறிது சமைத்த சாதத்தை எடுத்து நெய்விட்டு ஐந்து உருண்டைகளாக (பாக்களவு) எடுத்துக்கொண்டு இதற்கு என எடுக்கப்பட்ட புதிய மண்சட்டியில் கற்பூரம், நெருப்பை மூட்டி இந்த அன்ன உருண்டைகளுக்கு நெய்யினை ஊற்றி கீழ்வரும் மந்திராகுதிகளாக இட வேண்டும்.
ஒவ்வொரு மந்திராகுதிக்கு பின்னரும் அதற்குரிய இலக்கினை (சிவப்பு நிறத்தில் தரப்பட்டுள்ளதை) மனதில் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
ஓம் பூர்புவஹ ஸ்வஹ தத் ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோக நஹ ப்ரசோதயாத் ஸ்வாஹா - இதம் ப்ரம்ஹனே இதன்ன மம
பிரம்ம ஞானம், ஆன்மாவை உணர்தல் ஆகியவற்றில் எப்போதும் முயற் சி எடுத்து சாதனை செய்வேன்.
ஓம் பூர்புவஹ ஸ்வஹ தத் ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோக நஹ ப்ரசோதயாத் ஸ்வாஹா - இதம் தேவேப்யஹ இதன்ன மம
நான் எனது தீய குணங்களை வென்று தெய்வகுணத்தை வளர்த்துக்கொள்ள உறுதிகொள்கிறேன்.
ஓம் பூர்புவஹ ஸ்வஹ தத் ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோக நஹ ப்ரசோதயாத் ஸ்வாஹா - இதம் ரிஷிப்யஹ இதன்ன மம
நான் எனது முன்னோர்கள், ரிஷிகள் கைக்கொண்ட பாரம்பரியம், ஞானம் இவற்றைப் பின்பற்றுவதுடன் வளர்ப்பதற்கான முயற்சியையும் சிரமேற்கொள்வேன்.
ஓம் பூர்புவஹ ஸ்வஹ தத் ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோக நஹ ப்ரசோதயாத் ஸ்வாஹா - இதம் நரேப்யஹ இதன்ன மம
நான் வாழும் இந்த சமுதாயம் நர நிலையிலிருந்து நாராயண நிலைக்கு முன்னேற என்னால் இயன்ற முயற்சிகளை உத்வேகத்துடன் எடுத்துச் செல்வேன்.
ஓம் பூர்புவஹ ஸ்வஹ தத் ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோக நஹ ப்ரசோதயாத் ஸ்வாஹா - இதம் பூதேப்யஹ இதன்ன மம
மனிதர்கள் உயிர்கள் தாண்டி இந்த பஞ்ச பூத இயற்கை தனது செயலைச் சிறப்புறச் செய்ய என்னால் இயன்ற ஒத்திசைவான வாழ்க்கையை நான் வாழ்வேன்
தீயை அணைக்கவும். பிறகு, வலது உள்ளங்கையில் சிறிது தண்ணீரை எடுத்து, 'ஓம் சாந்திஹி சாந்திஹி சாந்திஹி' என்று உச்சரித்து பாத்திரத்தைச் சுற்றி வட்டமாக ஊற்றவும். மீதமுள்ள நெய் சேர்த்த அன்னக்கலவையை அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் பிரசாதம் அல்லது புனித உணவாக விநியோகிக்க வேண்டும்.
இந்த ஐந்து ஆகுதிகளும் ஐந்து 'மஹாயக்யா' அல்லது 'பெரிய தியாக சடங்கு'க்கு சமமானவை.
Tuesday, March 28, 2023
வாழ்க்கை
ஊனென்ற மடபதிக்கு உறுதியான
உண்மையுள்ள அக்கினியும் வாயுவும் கூடித்
தோனென்ற சீவாத்மா பரமாத்துவாய்
சென்றிருந்து ஆதாரமானார் பாரே
நேரப்பா அக்கினிதான் சீவாத்மாவாய்
என்று அகத்திய சௌமியசாகரம் அக்கினியைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
ஆயுர்வேதம் அக்னி உடலில் பலவிதமான விதமான தொழில்களைச் செய்வதாகக் குறிப்பிடுகிறது;
உருமாற்றம்
செரிமானம், அகத்துறிஞ்சுதல், ஒருங்கிணைப்பு
செரிமான நொதிகளின் உருவாக்கம்
அனைத்து வளர்சிதை மாற்ற நடவடிக்கைகள்
வலிமை மற்றும் உயிர்ச்சக்தி
திசுக்களின் ஊட்டச்சத்து
ஓஜஸ், தேஜஸ் மற்றும் பிராணன் உற்பத்தி
தோல் நிறம், நிறம், பொலிவு மற்றும் பொலிவு
உடல் வெப்பநிலையை பராமரித்தல்
மன தெளிவு
நுண்ணறிவு
புலனுணர்வு (குறிப்பாக பார்த்தல்)
கலங்களுக்கிடையிலான தொடர்பு
வாழ்க்கையின் மீது எச்சரிக்கை, பாசம் மற்றும் உற்சாகம்
தைரியம் மற்றும் நம்பிக்கை
மகிழ்ச்சி, சிரிப்பு, திருப்தி
பகுத்தறிவு, காரணப் படுத்தல் மற்றும் தர்க்கம்
பொறுமை, ஸ்திரத்தன்மை மற்றும் நீண்ட ஆயுள்
ஒருவனில் அக்கினி சமமாக சரியாக இருந்தால் கீழ்வரும் அறிகுறிகள் காணப்படும்.
இயல்பான பசி
சுத்தமான நாக்கு
சுவையின் சரியான மதிப்பீடு
நல்ல செரிமானம், சீரான வளர்சிதை மாற்றம்
எந்தவொரு உணவையும் எந்த பிரச்சனையும் ஜீரணிக்க முடியும் தன்மை
தினசரி சீரான முறையில் மலங்கழிதல்
குமட்டல் முழுமையாக இல்லாமை
சரியான நிர்பீடன நிலை
நிலையான ஆரோக்கியம்
நிலையான எடை
சாதாரண இரத்த அழுத்தம்
நல்ல நோய் எதிர்ப்பு சக்தி
ஆழ்ந்த உறக்கம்
அதிக ஆற்றல், வலுவான பிராணன்
ஓஜஸ், தேஜஸ், பிராணன் ஆகியவற்றின் உபரி
அமைதியான மனம்
தெளிவான கருத்து
தைரியம், தெளிவு மற்றும் புத்திசாலித்தனம்
மகிழ்ச்சி, நம்பிக்கை மற்றும் உற்சாகம்
வாழ்க்கை காதல்
Friday, March 24, 2023
இயற்கையும் மனிதனும் ஒத்திசைவும்
Thursday, March 23, 2023
மனிதனும் பிரபஞ்ச தொடர்பும்
ஸ்ரீ இரவீந்திரநாத் தாகூரின் வாழ்க்கையை உணர்ந்தறியும் சாதனா - நூல் அறிமுகம்
தனிச்சொத்து எனும் பேராசை
Tuesday, March 21, 2023
திருமண வாழ்க்கை
ஆன்மா
“In love, the sense of
difference is obliterated and the human soul fulfills its purpose in
perfection, transcending the limits of itself and reaching across the threshold
of the infinite. Therefore love is the highest bliss that man can attain, for
through it alone he truly knows that he is more than himself and that he is at
one with the All.”
– Rabindranath Tagore,
in his book Sadhana
அன்பு ஒருவருக்கொருவர்
வேறுபடும் உணர்வினை இல்லாதாக்கி மனித ஆன்மாவின் உண்மையான நோக்கத்தினை
நிறைவேற்றுகிறது. ஆன்மா அதன் எல்லைகளைத் தாண்டி எல்லையற்ற வாசலை அடைகிறது. ஆகவே,
அன்பு என்பது மனிதன் அடையக்கூடிய மிக உயர்ந்த பேரின்பம். ஏனென்றால் அதன் மூலம்
மட்டுமே அவன் தன்னை விட மேலானவன் என்பதையும், அவன் எல்லாவற்றிலும் ஒன்றாக
இருப்பதையும் உண்மையில் அறிவான்.
இரவீந்திர நாத் தாகூர்
தனது சாதனா என்ற நூலில்
Monday, March 20, 2023
யோகி
Sunday, March 19, 2023
இறைமாட்சி
திருக்குறள்
திருவள்ளுவர் என்பது ஸ்தூலமான கல்லால் செய்த சிலை அல்ல! அது ஒரு சிந்தனை முறை! அந்தச் சிந்தனை முறைக்கு அவரவர் வேண்டிய வகையில் வடிவம் கொடுக்கலாம்! எது சரி எது பிழை என்பதற்கு வரைவிலக்கணம் இல்லை! வடிவத்தைப் பார்க்கும் போது எமக்குள் சிந்தனை முறை உருவாக வேண்டும்!
நான் மூலோபாயத்தில் பணிபுரிந்த போது இறைமாட்சி அதிகாரம் எனக்கு உதவி புரிந்ததை எழுதியுள்ளேன்! பல ஆண்டுகளுக்கு முந்தைய எழுத்து!
காரைக்கவி கந்தையா பத்மானந்தன் அவர்கள் வாராவாரம் முகாமைத்துவ அடிப்படையில் எழுதி வருகிறார்.
இறைமாட்சி – Good governance!
இங்கு எனது முயற்சி, திருக்குறளை நவீன தொழில், வியாபார நிர்வாகத்தில் எப்படி பயன்படுத்தலாம் என்ற பார்வையில் வாசகர்களுக்கு கூறுதல். அரசியல் என்பதை நிர்வாகம் – Administration எனக்கொண்டால், இறைமாட்சி – Good governence என்றவாறு கொள்ளலாம். ஆக இந்த உரையில் பண்டைய அரசு என்ற கோட்பாட்டை கம்பனி நிர்வாகம் என்ற அடிப்படையில் எடுத்துக்கொண்டு இங்கு உரையாடப்படுகிறது.
குறள் 381:
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.
Translation:
An army, people, wealth, a minister, friends, fort: six things-
Who owns them all, a lion lives amid the kings.
சிங்கம் காட்டின் அரசன் என்பது உவமை, நாடு என்றும், அதற்கு ஒரு அரசு – நிர்வாகம் இருக்க வேண்டும் என்று கருதுபவன், சிறந்த அரசாக இருக்க ஆறு பண்புகள் அரசனுக்கு இருக்க வேண்டும் என்று கூறுகிறார். அவையாவன: படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் ஆகியவை ஆறும் உள்ள அரசன் சிங்கம் போன்ற அரசன் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.
இந்த அறிவுரையை எப்படி ஒரு வியாபார ஸ்தலத்தை நிர்வாகிப்பதற்கு பயன்படுத்த முடியும். அரசன் – பிரதம நிறைவேற்று அதிகாரி (Cheif Excutive Officer), குடி – அவர்கள் சேவையை பெறும் வாடிக்கையாளர்கள் (Customer), கூழ் – வளங்கள் (resource), அமைச்சு – நிர்வாக இயக்குனர்களும் அவர்கள் துறைகளும் (Directors & Departments), நட்பு – வியாபர உறவு (business relations), அரண் – பாதுகாப்பு (Securtity) தற்காலத்தில் financial security, information security, assets security என விரியும்.
ஆக ஒரு வியாபார ஸ்தலத்தின் நிறைவேற்று அதிகாரி அரசன், அவனது நிர்வாகம் வெற்றிகரமாக ஆண் சிங்கம் போன்று இருக்க வேண்டுமென்றால் வாடிக்கையாளர்கள், தனது கம்பனிக்கான வளங்கள், சிறந்த இயக்குனர்கள், சிறந்த வியாபார உறவு, வளங்கள், தகவல்கள், சொத்துக்களுக்கான பாதுகாப்பு என்ற ஆறு காரணிகளையும் சிறப்பாக வைத்திருக்க வேண்டும்.
இந்த ஆறும் ஒரு வியாபார நிர்வாகி கவனிக்க வேண்டிய ஆறு புறக்காரணிகள். இவற்றை எப்படி சிறப்பாக பாவிப்பது என்ற அறிவு இருந்தால் மட்டுமே ஒருவன் சிறந்த நிர்வாகியாக வர முடியும்.
ஆன்மீகம்
உள்ளிருக்கும் ஆன்ம ஒளியில் எமது பண்புகள், நடத்தை, செயல்களை மேம்படுத்துவதே உண்மையான ஆன்மீகம்!
“Today people mistakenly believe that spirituality consists of chanting mantras, performing rituals, or bribing the idols in temples with offerings of food or gold. People never put the effort to transform their thoughts, character, and attitude in the light of the indwelling Spirit, which is what constitutes genuine spirituality.”
– Shriram Sharma Acharya
“ஆன்மிகம் என்பது மந்திரங்களை உச்சரிப்பது, சடங்குகள் செய்வது அல்லது கோயில்களில் உள்ள சிலைகளுக்கு உணவு அல்லது தங்கத்தை லஞ்சமாக கொடுப்பது என்று இன்று மக்கள் தவறாக நம்புகிறார்கள்.
மக்கள் தங்களுடைய எண்ணங்கள், குணாதிசயங்கள் மற்றும் மனோபாவங்களை உள்ளிருக்கும் ஒளிமயமான ஆன்மாவின் உதவியுடன் மாற்றுவதற்கு ஒரு போதும் முயற்சி எடுப்பதில்லை, அதுவே உண்மையான ஆன்மீகத்தை உருவாக்குகிறது.
– ஸ்ரீராம் சர்மா ஆச்சார்யா
நாம் ஆன்மீகம் என்று செய்யும் செயல்கள் குறித்த விளைவினைத் தருகிறதா என்பதை எப்போதும் நாம் கவனிக்க வேண்டும்!
சிவகீதை
சிவகீதை வகுப்பு - 03 - பிரதி பிரதோஷம் தோறும்
இன்று சிவகீதை இரண்டாவது அத்தியாயம் உரையாட இருக்கிறோம்.
இது வைராக்கிய யோக அத்தியாயம்
இராமரும் அகத்திய முனிவரும் உரையாடிய உரையாடலின் தொகுப்பு
இராமரின் விரக்தி நிலை?
விரக்தியிலிருந்து எப்படி வெளிவருவது?
உடல் மேல் நாம் கொள்ள வேண்டிய மனப்பாங்கு என்ன?
தோற்றம் அழிவு என்பதன் மெய்யியல் விளக்கம் என்ன?
மயேச்சுவரன் என்பதன் பொருள் என்ன?
அந்தக்கரணங்கள் என்றால் என்ன?
சரீரத்தின் இருவகைகள் என்ன?
ஆங்காரமும் அதனால் உண்டாகும் அறுவகைகளும் எவை?
துக்கம் என்பது எதனால் எமக்கு ஏற்படுகிறது?
செயற்படத் தொடங்கிய பிராப்த கர்ம வினை எவ்வளவு விவேகமிருந்தாலும், யோகியாக இருந்தாலும் ஏன் தடுக்க முடியாது?
இப்படி பல அரிய கேள்விகளுக்கு அகத்திய மகரிஷி சொல்லும் பதில்கள் என்ன என்று உரையாட இருக்கிறோம்..
ஆர்வமுள்ளோர் இணையுங்கள் இன்றிரவு 09:00 மணிக்கு,
ri Sakthi Sumanan is inviting you to a scheduled Zoom meeting.
Topic: சிவ கீதை யோக விளக்கம் - பிரதி பிரதோஷதினம் இரவு 0900 IST
Time: This is a recurring meeting Meet anytime
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/87396816612...
Meeting ID: 873 9681 6612
Passcode: 012478
Saturday, March 18, 2023
நூல்
The art of clear thinking - கட்டாயம் நீங்கள் படிக்க வேண்டும் என்று ஒரு மாணவருக்குச் சொன்ன போது கிளிக்கியது!
என்ன சொல்கிறீர்கள்?
Thursday, March 16, 2023
ஆய்வுப் பணிகள்
இன்று பேராசிரியர் சுரேஷ் சுரேந்திரன் அவர்களின் அழைப்பை ஏற்று வவுனியாப் பல்கலைகழகத்தின் சர்வதேச ஆய்வு மையத்திற்கு விஜயம் செய்திருந்தேன். வவுனியாப் பல்கலைக்கழகத்தின் International Center for Research இனது இயக்குனராக தனது சேவையை தன்னார்வமாகச் செய்கிறார். அவர் இங்கிலாந்த்தின் Coventry University இனது பேராசிரியராகவும் பணிபுரிகிறார்.
இதற்குரிய
திட்டமாக என்னுடைய பங்களிப்பாக சுதேச மருத்துவத்துறையை எப்படி அறிவியல் ரீதியாக ஆராய்ந்து,
சமூகத்திற்கு நன்மை பயக்கும் வகையில் செயற்படுவது என்பது பற்றி நீண்ட கலந்துரையாட நடைபெற்றது.
இது எனது தன்னார்வ ஆய்வுகளின் ஒன்று. தமிழ் சித்த மருத்துவ நூல்களையும், யாழ்ப்பாண
இராசதானியின் மருத்துவ பெரு நூலான பரராசசேகரத்தையும் ஆராயும் ஒருவனாக எனது அனுபவத்தைப்
பகிர்ந்துக்கொண்டேன்.
வவுனியாப்
பல்கலைக்கழகம் அறிவியல், பாரம்பரிய அறிவு, ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்து சமூகத்திற்கு
பயனுள்ள வகையில் இவற்றை எப்படி பயன்படுத்தலாம் என்பது பற்றியும் தனது அறிவுத் தலைமைத்துவத்தை
வழங்கலாம் என்பது பற்றி உரையாடினோம்.
திட்ட
முகாமைத்துவ அலகின் இயக்குனர் மதிவதனி இந்த திட்டத்தை ஒருங்கிணைக்கிறார்.
எமது
Sri Shakthi Sumananan Institute (SRISTI ) இந்த மையத்துடன் இணைந்து ஆய்வுப் பணிகளில்
பங்காற்றவுள்ளது. SRISTI ஏற்கனவே தமிழ் மருத்துவ இலக்கிய ஆய்வு மையத்தினை ஆரம்பித்து
தனது ஆய்வுப்பணிகளைச் செய்து வருகிறது.
Wednesday, March 15, 2023
நான்
நான் ஒரு பேச்சாளன் அல்ல! எனினும் பேச்சாளனாக திறனாய்வு வழங்க அழைக்கப்பட்டுள்ளேன். விபரம் வருமாறு:
----------------------------------------
ஸ்ரீ ஸக்தி சுமனன் வரும் ஞாயிற்றுக்கிழமை வவுனியா பல்கலைக்கழகத்தின் கலாநிதி Jeyaseelan Gnanaseelan எழுதிய "போர்க்காலங்களில் வன்னி விவசாயிகள்" என்ற நூலிற்கு ஒரு திறனாய்வு வழங்குவார்.
ஸ்ரீ ஸக்தி சுமனன் ஒரு சூழலியல் விஞ்ஞான (Environmental Science) சிறப்பு இளமானி, முதுமாணிப் பட்டதாரி (B. Sc special & M. Sc); தனது தொழில் வாழ்க்கையை சூழலியல் விஞ்ஞான ஆய்வாளராகத் தொடங்கி, பின்னர் சூழலியல் ஆலோசகராக, சூழலியல் முகாமையாளராக பணியாற்றி பல்தேசிய விவசாய நிறுவனத்தில் மூலோபாயங்களுக்கான துணை இயக்குனராகப் பணியாற்றினார். பிறகு சூழலிற்கு பாதிப்பில்லாத விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்டு மல்லாவியில் பரிட்சார்த்தமாக இரண்டு வருடம் இயற்கை விவசாய ஆய்வுப் பண்ணை ஒன்றை அவருடைய நண்பருடன் சேர்ந்து உருவாக்கி ஆய்வுகள் செய்துள்ளார்.
இந்த நூலை இவர் ஆய்வுரை செய்யத் தூண்டிய விடயங்கள் இவர் விவசாயத்துறையில் கொண்டிருந்த அனுபவங்களே அடிப்படையாகும்.
மேற்குறித்த தகுதிகளுடன் இவர் இலங்கை ஆயுர்வேத வைத்திய சபையின் பதிவுபெற்ற பாரம்பரிய வைத்தியர், வவுனியா பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் தொழில் வழிகாட்டலுக்கான வருகை தரும் விரிவுரையாளர், சித்த மருத்துவ யோக ஞான சித்தர் இலக்கிய நூல் ஆராய்ச்சியாளர், யோக சாதனை கற்பிக்கும் குரு, பலருக்கு தொழில் வழிகாட்டி, ஆலோசகர், இதுவரை மூன்று நூல்கள் எழுதியுள்ளார், முக நூலில் ஆன்மீகம், மெய்யியல், விவசாயம், யோகம் பற்றிய கருத்துக்களை தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருப்பவர்.
இவரைப் பற்றிய முழுமையான profile ஐ இங்கே பார்வையிடவும்: https://www.linkedin.com/in/sri-shakthi-sumanan-86562914/
_____________________________
Topic: பைந்தமிழ்ச்சாரல் வழங்கும் நூல்களின் திறனாய்வு
Time: Mar 19, 2023 12:30 PM London
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/88427903689...
Meeting ID: 884 2790 3689
Passcode: 1965
வாழைப்பழமும் Dopamine உம்
காலையிலிருந்து நீண்டகாலம் தேங்கியிருந்த பல வேலைகளை ஒரே அமர்வில் முடித்தாயிற்று!
feeling -good,
ஒருவன் feeling good ஆக இருப்பதற்கு முகுளத்திலும் - medulla - அதரினல் சுரப்பியிலும் dopamine சுரக்க வேண்டும்.
இப்படி உட்கார்ந்து நீண்ட நேரம் தொடராக வேலை செய்தால் ஓய்வுக்கு எழும்பி நடக்கும் போது நன்றாகக் கனிந்த இரண்டு வாழைப்பழம் அப்படியே சாப்பிடுவது ஒரு பழக்கம்! இந்த வாழைப்பழங்கள் செவ்வாழையாகவோ, அல்லது Cavendish (வீட்டில் வளர்த்த பழமாக) இருந்தால் அது மிகவும் மகிழ்ச்சியைத் தூண்டுவதை அவதானித்திருக்கிறேன்.
இன்று dopamine பற்றிய ஆய்வுக்கட்டுரை ஒன்றைப் படிக்கும் போது {High Content of Dopamine, a Strong Antioxidant, in Cavendish Banana by Kazuki Kanazawa and Hiroyuki Sakakibarahttps: //pubs.acs.org/doi/10.1021/jf9909860} இந்தக்கட்டுரை இதற்கான விளக்கம் சொல்லப்பட்டிருந்தது.
இந்த cavendish ரக வாழையில் இந்த dopamine அதிகமாக இருக்கிறதாம்.
எப்படி இருப்பினும் இப்படி வெளியில் இருந்து செல்லும் Dophamine மூளையிற்கு சென்று விளைவை ஏற்படுத்தாது. உடலின் மற்றைய பகுதிகளுக்கு ஓய்வினையும், இரத்த ஓட்டத்தினையும் சீர்படுத்துவதில் உதவும்.
இது வாழைப்பழத்திற்கான பதிவல்ல! சித்தர் நூல்களிலும், தந்திர சாஸ்திரத்திலும் பரமானந்தத்தை அனுபவிக்க பல முறைகள் சொல்லப்பட்டிருக்கிறது. இவை எல்லாவற்றிற்குமுரிய bio chemical reasoning இற்கான வாசிப்பில் கிடைத்த உபரித் தகவல்!
ஸ்ரீ மஹா கணபதி சதுராவர்த்தி தர்ப்பண மகிமை
ஸ்ரீ ஸக்தி சுமனன் அவர்களிடம் சாதனை பயிலும் ஒரு மாணவரின் அனுபவம்
*************************************************************
தேவியை உபாசிக்கிறோம், இனி எதற்கு ஸ்ரீ கணபதி? என்ற எண்ணம் மெல்ல வளர்ந்து அகங்காரமாக மாறிக் கொண்டிருந்த காலம் அது! தேவியை கோவிலில் தரிசிக்கச் சென்றாலும் ஸ்ரீ கணபதியைக் கணக்கெடுக்காமல் செல்லுமளவிற்குச் சித்தப் பதிவாகி விட்டிருந்தது.
இத்தனைக்கும் நவராத்திரியில் முதன் முதலாக
நான் காயத்திரி அனுஷ்டானம் தொடங்க அமர்ந்த
பொழுதில் வீட்டின் படலையில் மணியடித்து
கடிதம் ஒன்றைத் தந்துவிட்டுப் போனான் தபால் காரன்."From Sai விக்னேஸ்வரா"
(company name) என்று தலைப்பிட்டு வந்த கடிதம் அது! அப்போதே தன் கருணையால் அரவணைத்தவர் ஸ்ரீ கணபதி! இதை விட அது உயர்வு, அதைவிட இன்னொன்று உயர்வு,
என்று அங்கலாய்க்கும் மனது மூலாதாரத்து நாயகனை,
முழு முதலை மறந்தே போனது.
காலங்கள் நகர, திருமணத்திற்காக பெண் பார்த்தல் எதுவும் சரிவரவே இல்லை. சாதனை தொடர்ந்தாலும்,
காயத்திரி அனுஷ்டானங்களை முடித்தாலும், வரம்பில்லாது
கிளைத்து வனமாகி வளரும் என் சித்த விருத்தியை வேரறுக்கும் வழியறியாமல் நாட்களும் ஓடி மறைந்தன.
ஆகஸ்ட் 15, 2017 ஆண்டு குரு சுமனன் அண்ணாவுடன் திடீர் பயணம்! கொழும்பிலிருந்து நேரடியாக விசாகப்பட்டினம் தேவிபுரத்திற்கு! அங்கு கிடைத்த உத்தரவின்படி குரு சுமனன் அண்ணாவின் வழிகாட்டலில் நெறிப்படுத்தப்பட்ட முறைதான்
ஸ்ரீ மஹா கணபதி தர்ப்பணம்.
தடைகள் யாவையும் உடைத்து எம்மை முன்னேற்றும் அற்புத வாகனம்!
மூலாதாரத்தைச்
சரி செய்யாமல்
மேலே முயன்று பயனில்லை! அறிவுறுத்தலின்படி தொடங்கியது ஒரு மண்டல ஸ்ரீ மஹா கணபதி தர்ப்பணம்.
எனது திருமண நாள்தான் ஒரு மண்டல தர்ப்பண இறுதி
நாள்!
அதற்குள்பெண் பார்த்து கதைத்து
முற்றாக, திருமணமும் முடிந்ததே விட்டது.
கணபதி தர்ப்பணத்தின் மகிமைதான் என்னே! அதிகாலையில் தர்ப்பணத்தை முடித்துவிட தடங்கலின்றி நிறைவெய்தியது எனது திருமணம்.
காலங்கள் ஓட குருவருளாலும் ஸ்ரீ காயத்திரி தேவியின் அருளாலும் முதற் குழந்தை ஸ்ரீ காயத்திரி ஜெயந்தி தினத்தில்
பிறந்தது. மனமும் ஸ்ரீ
கணபதியை மறந்தது.
விக்கினங்களை உருவாக்குபவரும் அவரே!
விக்கினங்களை
நீக்குபவரும் அவரே! இடைப்பட்ட காலத்தில் கனவில் ஸ்ரீ கணபதி தோன்றியதை குரு சுமனன் அண்ணாவிடம்
கூறியபோது அவர் ஸ்ரீ கணபதி தர்ப்பணத்தைத் தொடங்கச் சொல்லியும் அதை நான் செய்தேனில்லை.
குருவின் சொல் கேட்டு ஒழுகும் சாதகர்கள் பலருக்கு
துன்பமோ தடையோ அவர்கள் அறிய முன்னரே விலகிவிடுகிறது. என் மனமோ மரத்தில் பிணைக்கப்பட்ட கன்றுக் குட்டி போன்று கயிற்றின் நீளம் அறிய விலகி ஓடப் பார்க்கிறது. மூலாதாரத்தை விட்டு
விலகும் ஒவ்வொரு முறையும் பலத்த அடி விழத்தான்
செய்யும். தடம் மாறும் ஒவ்வொரு முறையும் குருவின் அதட்டல் ஒலிக்கும்.
கர்மவினை மீண்டும் கபடியாடத் தொடங்கியது! குருவை விட்டு விலகும் சிறு இடைவெளிக்குள்ளும் புகுந்து விட பல சக்திகள் காத்துக் கொண்டுதான்
இருக்கின்றன போலும்!
இரண்டாவது குழந்தைக்கான எதிர்பார்ப்பு மனைவிக்கு மூன்று மாதங்களைக் கடந்து ஒப்பேறி
விட்டிருந்தது. வைத்திய பரிசோதனையில் தொப்புள் கொடி கீழே உள்ளதென்றும் அது சத்திர சிகிச்சை செய்யும் இடத்திற்கு அப்பால் செல்ல வேண்டும் என்றும்,
இனி இறைவனின்
பொறுப்பு என்றும் வைத்தியர் கூற, உடனடியாக
குரு சுமனன் அண்ணாவுக்கு அழைப்பு எடுத்தேன். குரு மீண்டும்
ஸ்ரீ மஹா கணபதி தர்ப்பணத்தைத் தொடங்குமாறு பணித்தார்.
அண்மித்த சதுர்த்தியில் தர்ப்பணத்தை ஆரம்பிக்க, இரண்டு கிழமையுள் மீண்டும் வைத்திய பரிசோதனை
செய்தோம் "இப்போது ஏன் வந்தீர்கள் இன்னும் இரண்டு கிழமைக்கு பிறகு தானே எல்லாம் தெரியும்" என்று சினந்து வைத்தியர் ஸ்கான் செய்து பார்த்தபோது திகைத்து விட்டார்!
தொப்புள் கொடி
பாதிப்பு இல்லாத வகையில் அப்பால் சென்றிருந்தது. “இவ்வளவு பெரிய
Gap, இவ்வளவு பெரிய Gap” என்று மீண்டும்
மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார் வைத்தியர்.
ஸ்ரீ
மஹா கணபதி தர்ப்பணம் குருவருளால் ஒரு மண்டலத்தையும் தாண்டி அதிகாலையில் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
“எவரினது பாதுகைகளை நினைத்த மாத்திரத்தில் உள்ளம் அமைதியுறுகிறதோ அந்த ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம்! எவரினது தொடர்பு எல்லாத் தடைகளையும் நீக்க வல்லதோ அந்த ஸ்ரீ மஹா கணபதிக்கு
நமஸ்காரம்! யார் உத்தம சாதகர்களின் இதயக்கமலத்தில் வீற்றிருந்து அருள் புரிகிறாரோ, அந்த ஸ்ரீ தேவிக்கு நமஸ்காரம்!“
பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்
பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள் எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால் சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...
-
போகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு வாசிப்பு ஓம் போக நாதர் பாதம் போற்றி இது போகர் ஏழாயிரத்தினை வாசித்து யோக தாந...
-
இதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...
-
குருநாதர் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் தனது ஸௌபாக்யா மந்திர சாதனா ஒலி நாடாவில் மூன்று ஆசீர்வாத மந்திரங்களை கூறியுள்ளார். இந்த மூன்று மந்திரங்க...