குரு நாதர் ஆசியுடன்
குரு நாதர் ஆசியுடன்.............
இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!
இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!
ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ
ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ
ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ
ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !
ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ
ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!
ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ
இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!
மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here
2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்
நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.
அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே
உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!
ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே
இங்கே
Thursday, December 29, 2022
கல்வி முன்னேற்றத்திற்கான செயல் ஆராய்ச்சி Action Research for Educational Improvement
Wednesday, December 28, 2022
வைராக்கியம் என்பது என்ன?
மனதால், உடலால் அனுபவிக்கக் கூடிய அனைத்து போகங்களையும், அவை சித்தத்தில் ஏற்படுத்தும் இன்ப உணர்ச்சிகளை காக்கையின் மலம் போன்று கருதத் தக்க மனப் பண்பினைப் பெறுதல்.
இறந்த பின்னர் சொர்க்கம் கிடைக்கும், கடவுளைக் காணலாம் அதனால் பல நன்மைகளைப் பெறலாம், இப்படி இச்சைகளை வைத்துக் கொண்டிருக்கும் மனம் வைராக்கியம் அற்றது. குறிப்பாக ஒரு பலனை நிர்ணயித்துவிட்டு அது கிடைத்தே தீர வேண்டும் என்ற அவாவினை ஏற்படுத்தி விட்டு அதற்கு ஏற்றால் போல் காரியம் ஆற்றுவது மலம் - அசுத்தமுடைய சித்தமாக யோகத்தில் கொள்ளப்படும்.
ஒரு செயலை எடுத்தால் அந்தச் செயலை எப்படி முடிப்பது, அதன் பலன் எனக்கு தனிப்பட இன்பம் தருமா துன்பம் தருமா என்று சிந்தித்து அதன் மேல் பற்றுவைக்காத மனநிலை.
எந்த இச்சையும் இல்லாமலிருப்பதற்கு பெயர் வைராக்கியம்;
இந்த வைராக்கியத்தை பதஞ்சலி இரண்டு வகையாக (வைராக்கியம், பரவைராக்கியம்) என்று பிரித்தாலும் இவை நான்கு வகை;
1) யதமானம்
2) வியதிரேகி
3) ஏகேந்திரியம்
4) வசீகாரம்
சிலருக்கு மந்தமான வைராக்கியம் இருக்கும்; புலன்கள், ஆசைகள், பற்றுக்கள் எல்லாம் தன்னை கீழே இழுக்கின்றது என்பது நன்றாகத் தெரியும்; சிறிது முயற்சி செய்தும் பார்ப்பார்கள்; ஆனால் காலம் வரட்டும் செய்து முடிப்போம் என்று இருக்கும் வைராக்கியம் யதமான வைராக்கியம்.
வியதிரேகி - குரு, வைராக்கியமுடையவர்களது சேர்க்கையைக் கண்டவுடன் உருவாகும் வைராக்கியம்; தன்னிடமுள்ள துர்குணங்களை நீக்கி நற்குணங்களை உருவாக்கிக் கொள்வதில் உண்டாகும் உற்சாக வியதிரேகி வைராக்கியம். இவர்கள் சத்சங்கம், குரு உடனிருந்தால் வைராக்கிய சீலர்கள்; இல்லையென்றால் தன்னிலை தளர்ந்து விடுவார்கள்.
இந்திரியங்களை முழுவதும் அடக்கி தனது கட்டுப்பாட்டில் இயக்கும் வல்லமை உள்ளவனுக்கு ஏகேந்திரிய வைராக்கியமுடையவன் என்று பெயர்.
மனம் எதைக் கண்டு குதிக்காமல், தாழாமல் சமத்துவ தன்மையை அடைந்ததாவரும் வைராக்கியத்திற்கு வசீகர வைராக்கியம் என்று பெயர்.
சமூகப்பணி
Tuesday, December 27, 2022
Occult Chemistry by Annie Besant
இந்த நூல் ஒரு சுவாரசியமான நூல்; மேற்கத்தேய அறிவியல் பகுத்த இரசாயனப் பதார்த்தங்களை கீழைத்தேய யோகத்தின் ஸமாதி அனுபவத்திற்கூடாக பிரம்ம ஞான சபையின் அன்னிபெசண்ட், லீட்பீட்டர் ஆகிய இருவரும் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.
அகத்தியர் சௌமிய சாகரத்தில் கண்குவித்து மனக் கண்ணால் கண்டு பகுத்து பஞ்ச பூதங்களின் இயல்பினை சித்தி செய்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்.
பதஞ்சலி ஒரு பொருளை எடுத்து அதன் மேல் ஏகாக்கிரம், தாரணை பழகி மனதை தியான நிலைக்கு கொண்டு போய் ஸமாதி அனுபவத்தினைப் பெற்றால் அந்தப் பொருட்களின் ஸ்தூல, சூக்ஷ்ம அறிவினைப் பெறலாம் எனக் கூறுகிறது. இதை ஸவிதர்க்க ஸமாதி என்கிறார்.
இந்த நூலிலுள்ள கருத்துக்கள் மேற்குறித்த முறையில் பெறப்பட்டவையே; அதை ஆசிரியர்கள் clairvoyance என்று குறிப்பிடுகிறார்கள்.
சித்த மருத்துவத்தில் கடும் நஞ்சுகளும் இரசாயனங்களும் மருந்துகளாகப் பாவிக்கப்படுவதன் அடிப்படை இதுதான். அதன் சூக்ஷ்ம பாகத்தினை எப்படி நோய் தீர்க்கும் அம்ருதமக பாவிப்பது என்பது; சித்த மருத்துவத்தில் மருந்துகளை அணுத் தன்மை அதிகரிக்க புடம் போடுவோம். இதைப் பற்றி நானே இரசாயனவியல் விஞ்ஞானியுமான எனது நண்பனுடன் உரையாடியிருக்கிறேன்.
இந்த நூல் நூற்றி இருபது வருடங்களுக்கு முந்தைய அடிப்படை இரசாயனவியல் மூலக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டது.
Occultism ஆர்வமுள்ளவர்கள் வாசிக்கலாம்!
தலைப்பு இல்லை
The great secret of true success, of true happiness, is this: the man or woman who asks for no return, the perfectly unselfish person, is the most successful.”
~ Swami Vivekananda
உண்மையான வெற்றியின், உண்மையான மகிழ்ச்சியின் பெரிய ரகசியம் இது தான்: தனது செயலுக்கு திரும்ப எதையும் எதிர்பார்க்காத, கேட்காத, முற்றிலும் தன்னலமற்ற நபரே மிகவும் வெற்றிகரமானவர்.
~ சுவாமி விவேகானந்தர்
Monday, December 26, 2022
சமூகத்திற்கான தபஸும் கர்ம யோகமும்
தலைப்பு இல்லை
Sunday, December 25, 2022
தலைப்பு இல்லை
Saturday, December 24, 2022
தலைப்பு இல்லை
சித்தர்களின் யோக முறையை ஒரு படிமுறையாக எப்படிப் புரிந்து கொள்வது என்ற ஒரு மாணவரின் கேள்விக்கு சிறு விளக்கம்
யோகத்திற்கு மூன்று கருவிகள் அவசியம் மனம், உடல், பிராணன்; இந்த மூன்றில் இரண்டு கருவிகளை சித்தி செய்து கொள்வது (mastery) அவசியம்; இதன் அர்த்தம் மூன்றாவது கருவி அவசியம் அல்ல என்பதல்ல! சாதனை முறைகளில் கட்டாயம் இரண்டு கருவிகள் பிரதானமாக இருக்கும்; மூன்றாவது சற்று குறைவாக உபயோகப்படுத்த வேண்டி இருக்கும்.
இந்த அடிப்படையில் சித்தர்களின் யோகத்தை சித்தி நோக்கத்தின் அடிப்படையிலும், இலக்கு அடிப்படையிலும் கீழ்வருமாறு பகுக்கலாம்;
ஹடயோகம் - உடலையும், பிராணனையும் பிரதானமாகக் கொண்டது; பிராணனை வீணாக்காமல் உயர் உணர்வு நிலை அடைவதை இலக்காகக் கொண்டது.
மந்திர யோகம் - மனதையும் பிராணனையும், பிரபஞ்ச நாத சக்தியையும் அடிப்படியாகக் கொண்டது; மனதை உயர்த்துவதன் மூலம் உயர் உணர்வு நிலை அடைவதை இலக்காகக் கொண்டது.
லய அல்லது வாசி யோகம் - மந்திரமாகிய பிரபஞ்ச நாத சக்தியையும், பிராணனையும் அடிப்படையாகக் கொண்டு உள்ளிருக்கும் குண்டலினியை விழிப்பிப்பதை அடிப்படையாகக் கொண்டது.
சாங்கிய இராஜ யோகம் ஆன்ம தத்துவங்கள் 24 இனை சித்திசெய்வதை நோக்கமாகக் கொண்டது.
தாரக இராஜயோகம் மனதை தாரணைக்கு யோக்கியப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டது.
அமனஸ்க இராஜயோகம் மனதினை ஸாமதி அனுபவத்தில் கரைப்பதை இலட்சியமாகக் கொண்டது.
சிவயோகம் இலட்சியம் என்பது சிவத்தை தவிர வேறு எதுவுமில்லை என்ற பரவைராக்கியத்தை நோக்கமாகக் கொண்டது.
இப்படி யோகத்தில் எவ்வளவோ படிமுறைகள், நுணுக்கங்கள் இருக்கின்றது.
Thursday, December 22, 2022
தலைப்பு இல்லை
தற்போதைய கல்வி முறையில் இருக்கும் பெரிய வழு மாணவர்களை கற்கத் தூண்டாமல் ஒரு சில ஆசிரியர்களை கடவுளர்கள் போல் பிம்பம் அமைத்து அந்த ஆசிரியரிடம் படித்தால் பரீட்சை சித்தியாகும் என்று பிள்ளைகளை அலைக் கழித்து இறுதியில் ஊன்றி, கவனித்துப் படித்திருந்தால் சிறப்பு பெறுபேறு பெற வேண்டிய பிள்ளையை சாதாரணமான சித்தி ஆக்கும் செயலைச் செய்வதாகும்.
மெய்யான கல்வியின் முதலாவது அடிப்படைக் கொள்கை, எதையும் கற்பிக்க முடியாது என்பதேயாகும்.
ஆசிரியர், பாடங்களை எடுத்துச் சொல்லும் அறிவுரையாளரோ, வேலை வாங்கும் மேலாளரோ அல்லர், அவர் உதவியளித்து வழிநடத்துபவர் ஆவார்.
கருத்துக்களைச் சுட்டிக் காட்டுவதே அவருடைய பணியாகும், அவற்றை வலியச் சுமத்துவதன்று. உண்மையில் ஆசிரியர் மாணவனின் மனத்துக்குப் பயிற்சியளிப்பதில்லை, மாணவன் தன் அறிவுச் சாதனங்களை எவ்வாறு செம்மைப்படுத்திக் கொள்ளலாம் என்பதை அவனுக்குக் காட்டி, அதில் அவனுக்கு ஆதரவளித்து ஊக்கமூட்டுகிறார்.
அவர் மாணவனுக்கு அறிவைக் கொடுப்பதில்லை, அவன் எவ்வாறு தன் முயற்சியால் அறிவை எய்தக் கூடும் என்பதை அவனுக்குக் காண்பிக்கிறார்.
ஆசிரியர் உள்ளிருக்கும் அறிவை வெளிக் கொணர்வதில்லை; அறிவு எங்கே புதையுண்டு கிடக்கிறது என்பதையும், அதை எவ்வாறு மேற்பரப்பிற்கு அடிக்கடி எழுந்து வருமாறு பழக்கப்படுத்தலாம் என்பதையும் அவர் அவனுக்குக் காண்பிக்கிறார்.
என்கிறார் ஸ்ரீ அரவிந்தர்
ஆகவே பாடசாலைகள், வகுப்பறைகள், ஆசிரியர்கள் மாணவர்கள் தமக்குள் இருக்கும் ஆற்றலை வெளிக் கொண்டு வரக்கூடிய களங்களை அமைப்பவையாக இருக்க வேண்டும்.
சிவ ஞான போத சூத்திரம் – 01
சிவஞான போதம்
Tuesday, December 20, 2022
தலைப்பு இல்லை
Monday, December 19, 2022
தலைப்பு இல்லை
தலைப்பு இல்லை
Friday, December 16, 2022
தலைப்பு இல்லை
Thursday, December 15, 2022
இல்லற யோகம்
Tuesday, December 13, 2022
விஸ்வ மித்ர சிந்தனை
தலைப்பு இல்லை
Like and symbol இனை நன்றி நவிலல் ஆக ஏற்றுக் கொள்ளவும்.
இவ்வளவு பேர் அன்பு வைத்து வாழ்த்துச் சொல்ல என்ன காரணம் என்று திகைத்துப் போயிருக்கிறேன்!
நன்றிகள்!
என்று அன்புடன்
பாரதியாரின் யோக சித்தி
தலைப்பு இல்லை
Monday, December 12, 2022
தலைப்பு இல்லை
சுப்பிரமணிய பாரதியாரும் ஸ்ரீ அரவிந்தரும்
தலைப்பு இல்லை
எனக்கு பாரதியின் யோக சித்தி பற்றி நிறையக் கருத்து உண்டு! பாரதியைப் பற்றி உரையாடுபவர்கள் பலர் இதைக் கருத்தில் எடுப்பதில்லை!
எல்லோருக்கும் கவிஞன், சுதந்திரப் போராட்ட வீரன், அறிஞன்! நான் புரிந்த வகையில் ஸ்ரீ அரவிந்தருடன் பூரண யோகம் முயற்சித்த யோகி!
பாரதியின் யோக வாழ்க்கையை எல்லோரும் சகோதரி நிவேதிதையுடன் தொடர்புபடுத்திக் கூறினாலும் செம்மையுற்றது ஸ்ரீ அரவிந்தரால்! ஸ்ரீ அரவிந்தர் எவருக்கும் தன்னை குருவென்று பிரகடனப்படுத்தியவர் அல்லர்! தன்னை ஒரு சக யோக சாதகனாகவே எப்போதும் நடத்தியவர்! பாரதியார் ஸ்ரீ அரவிந்தரின் உற்ற நண்பராகவும், அதேவேளை அவரது யோக சாதனைக்குரிய உத்வேகத்தையும் பெற்றார்!
ஸ்ரீ அரவிந்தரை பாண்டிச்சேரியில் வரவேற்கும் பணியை பாரதியார் செய்தார்; அது போல் ஸ்ரீ அரவிந்தர் பாரதியாரிடமிருந்து தமிழ் பாசுரங்கள், இலக்கியங்களும் கற்றுக் கொண்டார்.
ஸ்ரீ அரவிந்தர் திருவுருவமாற்றம் எனும் பூரண யோகம் செய்தார். இந்த யோகத்தினைச் செய்யும் போது சித்த விருத்திகளைக் கட்டுப்படுத்தி இருக்கா விட்டால் உடல் நோயுற்று அழியும் அபாயம் நிறைந்தது. இது பற்றி ஸ்ரீ அரவிந்தர் ஸாவித்ரி காவியத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த யோகத்திற்காக 12 வருடங்கள் மௌனம் காத்திருக்கிறார். ஸ்ரீ அகத்தியர் அந்தரங்க தீக்ஷா விதியில் இத்தகைய உயர் யோகத்தினைச் செய்யும் போது உடலில் உருவாகும் பயங்கர நோய்களையும் அதிலிருந்து உடலைப் பாதுகாப்பதற்குரிய கற்பங்களையும் கூறுகிறார். சுவாமி விவேகானந்தரும் உயர் யோகத்தின் ஆற்றல் காரணமாக உடல் கெட்டு ஒளி சரீரம் ஏற்க வேண்டிய நிலை வந்தது! இதை அவரே பதிவுசெய்திருக்கிறார்.
இந்த வகையில் பாரதியின் உடல் அவரது ஆன்ம வளர்ச்சியைத் தாங்காது சிதைந்தது என்பதே சரி! அதற்கு அவர் இளமைக் காலத்திலிருந்து சில பழக்கங்களும், கட்டுக்கடங்காது சித்த விருத்திகளை உருவாக்கி கவிதை பாடும் ஆற்றலால் வீணாகிய உயிர் ஆற்றலும் காரணமாக இருந்திருக்கலாம்!
‘எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா,
யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டிலே’
என்ற வரிகள் கவித்துவத்திற்கான வரிகள் மாத்திரமல்ல! பாரதியாரின் யோக சாதனையின் உறுதியையும் கூறுகிறது.
பாரதியின் ஒளியான்மா வேண்டியதன் படி வரைந்த குறிப்பு இது!
ஸ்ரீ ஸக்தி சுமனன்
11-12-2022
Saturday, December 10, 2022
தலைப்பு இல்லை
மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale முறையான ஒரு கல்வியல் ஆய்வினை முன்னெடுக்கிறது. மாத்தளை மாவட்டத்தில் வசிக்கும் பெருந்தோட்ட, இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் கல்வி முன்னேற்றம் எந்தளவில் இருக்கிறது என்பதை க. பொ. த இந்த வருட (2021) பெறுபேறு அடிப்படையில் எப்படி வரைபு படுத்துவது என்பது இதன் நோக்கம். இதன் விரிவான அறிக்கைகள் உத்தியோக பூர்வமாக இவற்றுடன் தொடர்புடைய அதிபர், திணைக்களம், ஆசிரியர்களுடன் விரிவுரையாளர் Dr. Nishānthan Ganeshan தலைமையில் உரையாடப்படும். இந்தப் பதிவின் நோக்கம் சமூக விழிப்புணர்வாகும்.
மாத்தளை கல்வி வலயத்தில் மொத்தமாக 83 பாடசாலைகள் இருக்கிறது. இவற்றில் 59 சிங்கள மொழி மூல பாடசாலைகள்; தமிழ் மொழி மூல பாடசாலைகள் மொத்தம் 24; தமிழ் மொழி மூலப் பாடசாலைகளை நாம் மலையகத் தமிழர்களின் கல்வி முன்னேற்றத்தினை அடிப்படையாகக் கொண்டு பாகுபடுத்தினால்
முஸ்லீம் பாடசாலைகள் - 10
தமிழ் (இந்து/கத்தோலிக்க/கிருஸ்தவ) பாடசாலைகள் - 14
அதாவது மலையக/பெருந்தோட்ட தமிழ் சமூகத்திற்கான பாடசாலைகளின் எண்ணிக்கை 14 ஆகும்,
இந்த 83 பாடசாலைகளிலிருந்தும் க.பொ. த சாதாரண தரத்திற்கு தோற்றிய மொத்த மாணவர்கள் 3918 ஆகும். இவற்றில்
சிங்கள மொழி மூல மாணவர்கள் 2796.
தமிழ் மாணவர்கள் - 539
முஸ்லீம் மாணவர்கள் - 583
இவற்றில் மொத்தமாக சித்தி அடைந்த மாணவர்கள்
சிங்கள மொழி மூல மாணவர்கள் 2198.
தமிழ் மாணவர்கள் - 278
முஸ்லீம் மாணவர்கள் - 391
சதவீதப்பிரகாரம் ஒப்பிட்டால்,
பரீட்சைக்குத் தோற்றிய மொத்த சிங்கள மாணவர்களில் 79% ஆன மாணவர்கள் உயர்தரம் செல்வதற்கு தகுதியுடையவர்கள் ஆகியிருக்கிறார்கள்.
பரீட்சைக்குத் தோற்றிய மொத்த முஸ்லீம் மாணவர்களில் 67% ஆன மாணவர்கள் உயர்தரம் செல்வதற்கு தகுதியுடையவர்கள் ஆகியிருக்கிறார்கள்.
பரீட்சைக்குத் தோற்றிய மொத்த தமிழ் மாணவர்களில் 52% ஆன மாணவர்கள் மாத்திரமே உயர்தரம் செல்வதற்கு தகுதியுடையவர்கள் ஆகியிருக்கிறார்கள்.
மாத்தளை தமிழ் சமூகம், பெருந்தோட்ட மலையகச் சமூகம் இந்தப் புள்ளி விபரவியலை நன்கு உள் வாங்கிக் கொள்ள வேண்டும்.
"எமது சமூகத்தில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடிப்படைக் கல்வித் தகுதி அற்றவர்களாகிக் கொண்டிருக்கிறார்கள்"
சித்தி விகிதத்தை அதிகரிக்க மாத்தளையில் இருக்கும் சைவ, இந்து அமைப்புக்கள், பாடசாலை பழைய மாணவர் சங்கங்கள், தன்னார்வ அமைப்புகள் எப்படி பாடசாலைகளுக்கு உதவலாம்?
சித்தி விகிதம் குறைவதற்கான அடிப்படைக் காரணங்கள் என்ன என்பது பற்றிய action research உம் அவற்றிற்கான தீர்வினை எப்படி அடைவது என்ற திட்டங்கள் இவற்றை கலந்தாலோசிக்கலாம்.
இந்த ஆய்வு முற்றிலும் எமது சமூகத்தின் கல்வியில் நிலவரத்தை தெளிவுபடுத்துவதற்கான சமூக அக்கறைப் பதிவுகளாகும்.
கல்வி முன்னேற்றம் தொடர்பான திட்டங்களை மாத்தளையில் முன்னெடுக்க மாத்தளைப் பட்டதாரிகள் ஒன்றியத்தின் செயலாளர் கலாநிதி நிசாந்தனை அணுகலாம்.
சிறந்த புரிதலைப் பெறுவதற்கு தரவுகளைப் பகுக்கும் போது பயன்படுத்தப்பட்ட அனுமானங்கள்:
1) முஸ்லீம் பாடசாலைகள் என்பதன் அர்த்தம் அங்கு பெரும்பான்மையான மாணவர்களும், பாடசாலை நிர்வாகமும் இஸ்லாமிய மத முன்னுரிமை தரும் பாடசாலைகளாகும். அங்கு சிறு விகிதமான இந்து தமிழ் பிள்ளைகள் பயில்கிறார்கள்.
2) தமிழ் பாடசாலை எனும்போது அங்கு பெரும்பாலும் மலையகத் தமிழர்களும் மிகச் சிறியளவில் இஸ்லாமிய மாணவர்களும் இருப்பார்கள்.
3) சிங்களப்பாடசாலைகள் எனும்போது அங்கு மிகச்சிறிய அளவில் மலையகத் தமிழர்களும், இஸ்லாமியரும் கற்கிறார்கள்.
4) தமிழ் பாடசாலைகளில் கற்கும் அனைவரும் மலையக இந்திய வம்சாவளித் தமிழர்கள் இல்லை; வட கிழக்கினைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்களும் இதற்குள் அடங்குவார்கள்.
5) தமிழர்கள் எனும் போது கிருஸ்தவ, இந்துக்கள் தம்மைப் பிரித்துக்காட்டுவதில்லை என்பதும் இங்கு நாம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
6) சமூகமாக கூட்டிணைந்து வளங்களைப் பெறுவதற்கு மிக அவசியமானது என்பதால் மேற்குறித்த பகுப்புகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக இஸ்லாமியர்கள் தமது சமூகம் என்ற உத்வேகத்துடன் கல்வி வளர்ச்சிக்கு தம்மால் இயன்ற உதவியை நன்கு செய்கிறார்கள் என்பது மிகச்சிறப்பான விடயம்.
7) மேற்குறித்த சிங்களம், தமிழ், முஸ்லீம் என்ற சொற்பதங்கள் 100% பகுப்பாய்விற்கானதும் சமூகமாக கல்வியில் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளோம் என்பதை ஆராய்வதற்கான பகுப்பு என்பதையும், கல்வியில் விளிம்பு நிலையில் இருக்கும் மலையக தமிழ் சமூகத்தை உத்வேகப்படுத்தி தலைமைத்துவங்களை உருவாக்குவதற்குமான ஒரு கருவியாகவே புலமை அடிப்படையில் முன்வைத்துள்ளார்கள்; ஆய்வாளர்கள் எந்தவித இன, மதப் பாகுபாட்டினை தனிப்பட ஏற்றுக் கொள்வதில்லை என்பதையும், தமது ஆய்வுகளில் புலமைத்துவ அறத்தையும் முழுமையாகப் பின்பற்றுகிறார்கள் என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறார்கள்.
பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்
பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள் எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால் சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...
-
போகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு வாசிப்பு ஓம் போக நாதர் பாதம் போற்றி இது போகர் ஏழாயிரத்தினை வாசித்து யோக தாந...
-
இதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...
-
குருநாதர் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் தனது ஸௌபாக்யா மந்திர சாதனா ஒலி நாடாவில் மூன்று ஆசீர்வாத மந்திரங்களை கூறியுள்ளார். இந்த மூன்று மந்திரங்க...