குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, September 30, 2022

லக்ஷ்மித்துவம்

நாம் காமம் எனும் சக்தியால் இயக்கப்படுகிறோம். இந்த சக்தியின் இயல்பு சுயநலம். ஒன்றின் மீது தீராத இச்சை கொள்பவன் அதனைத் தனதாக்க முயல்வான். இப்படிச் செய்யும்போது அது நிலைத்திருக்க முடியாமல் போய்விடும். 

காமத்துடன் உறவைத் தொடங்குபவர்கள் ஒருவரை ஒருவர் அடிமைப்படுத்தி உறவை மதிப்பில்லாமல் ஆக்கி விடுகிறார்கள். இது காதலாக மாறினால் இல்லறம் செழித்து குடும்பம், பிள்ளைகள் என இன்பம் நிலைக்க ஆரம்பிக்கும். 

தான் கற்று பெரிய அறிஞனாக வர வேண்டும் என்று சுயநலமாக பட்டங்கள், பதவிகளை நாடுபவர்களால் ஒழுங்கான கல்விச் சமூகத்தை உருவாக்க முடியாது; நான் பெற்றது போதும், அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்று பணியாற்ற அந்தப் பணி நிலைத்து நிற்க ஆரம்பிக்கும். 

இப்படி காமத்தை காதலாகவும், சுயநலத்தைப் பொது நலமாகவும் மாற்றும் ஆற்றலை லக்ஷ்மி என்கிறோம். இந்த லக்ஷ்மித்துவம் வாய்த்தால் மாத்திரமே எதுவும் நிலைத்து நிற்க ஆரம்பிக்கும்! 

அன்னையைப் பற்றி எனது குருநாதர் கூறிய கருத்து வருமாறு;

காமம் - இச்சை எனும் ஆற்றல் உங்களை இந்த உலகத்திலிருந்து பிரித்து தனிமைப்படுத்தும் சிந்தனையை உருவாக்கும். இந்த காமம் அன்பாக மாற்றப்பட்டால் இந்த உலகம் நிலைத்திருக்கும். இதையே ஸ்திதி - காத்தல் என்கிறோம். பிரபஞ்சத்தின் பராமரிப்பு இப்படியே நிகழ்கிறது. இதை நிகழ்த்துவிக்கும் சக்தியை மகாலக்ஷ்மி என்கிறோம். 

ஸ்ரீ அம்ருதாந்தந்த நாத சரஸ்வதி

(Dr. N. Prahaladha Sastri - former nuclear scientist)


Tuesday, September 27, 2022

அகத்திய மகரிஷியின் பஞ்ச காவியங்கள்

எங்கும் இலங்கொளி அகத்திய

எங்கும் அகத்தியம் பரவ

உணர்வில் ஒளியாய் வந்து 

ஸோமா பஞ்ச காவிய நிகண்டு காண்பாய்

இலட்சணமும், வாதமும், ஞானமும், மந்திரமும்

துலக்கமாய் பூரணமாக ஐம்பெருங் 

காவியமாகச் சொன்னோம்

குருவருளும் திருவருளும் நிறைப்பித்து 

யோகமுடன் தமிழும் பயிற்றுவித்தோம் உன்னை

அருளுடனே ஏகாக்கிர சித்தம் கொண்டு 

பொருள் காண்பாய் ஐங்காவியங்களுக்கு

உலகத்தார் விளங்க செந்தமிழ்ச் 

சித்த வித்தை உலகெங்கும் பரவ 

உன் செயல் விதையாகும் 

விதை வளர்ந்து விருட்சமாக பட்சிகள் தேடிவரும்

பராபரை உள்ளிருந்து அகவொளியால் உணர்த்துவிப்பாள்

என்றார் துவிதிதை நவராத்ரியில்!

ஸ்ரீ ஸக்தி சுமனன்

27-Oct-2022


தலைப்பு இல்லை

தேவி,

சரண்புகுந்தவர்களின் துன்பத்தைத் துடைப்பவளே!

ஜெகன் மாதா - உலகின் தாயே!

விச்வேஸ்வரி - உலகின் தலைவியே!

விச்வம் த்வமீச்வரி - உலகைக் காக்கும் தேவி!

சராசரஸ்ய - அசையும் அடையாப் பொருள் அனைத்தையும் ஆள்பவள்

ஆதார பூதா - நிலைத்து நிற்பதற்கு ஆதாரமான பிருதிவி வடிவானவள்

ஆபஸ்வரூபா - அப்பு தத்துவ வடிவாக இருந்து திருப்தியை ஏற்படுத்துபவளே!

உன்னை நான் வணங்குகிறேன்!

தேவி மஹாத்மியம் - அத்தியாயம் 11 - தேவி ஸ்துதி


Sunday, September 25, 2022

தலைப்பு இல்லை

நவராத்திரி ஆரம்பம்!

ஸக்தியை உபாசிப்போம்! 

தேவி, நீ பகவதி! 

முக்திக்கு வித்தானதும் நினைத்ததற்கும் அரிதான மகாவிரதம் நீ!

பரவித்தை எதுவோ அதுவும் நீ!

இந்திரியங்களை அடக்கியவர்களாலும்,

தத்துவத்தின் ஸாரம் புரிந்தவர்களாலும்,

மன மாசற்றவர்களாலும், 

பரவைராக்கியம் உடையவர்களாலும் 

உணரப்படுபவள் நீ!

சாத்திரங்கள் அனைத்தின் ஸாரத்தை உணரும் புத்தி வடிவினள் நீ!

உன் கடைக்கண் பார்வை பெற்றவன் ஜன சமூகத்தில் சன்மானம் பெறுகிறான்! எல்லாச் செல்வங்களும் அவனிற்கு வந்து சேர்கிறது. 

உனதருளால் நல்வாழ்க்கை எய்தியவன் மிகுந்த ஆதரவுடன் தினசரி தர்ம காரியம் இடைவிடாது செய்கிறான்!

ஸ்ரீ தேவிமஹாத்மியம்


Saturday, September 24, 2022

தலைப்பு இல்லை

இன்றைய காலைப்பொழுது பாக்கியம் தேசியக்கல்லூரி பிள்ளைகளுக்கு ஆங்கில அறிவு, தகவல் தொழில்நுட்ப அறிவு, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்புகள் பற்றிய அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினோம். 

மாத்தளையின் கல்வி முன்னேற்றத்தில் மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale உடன் தோளுக்குத் தோள் நின்று செயற்படும் நண்பர் திரு. Jayaprakash Sithambaram அவர்கள் சகல ஏற்பாடுகளையும் செய்திருந்தார். 

இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம் பல்வேறு பட்டப்படிப்புகள், சிறு கற்கை நெறிகள், பட்ட மேற்படிப்புகளை தற்போது மாத்தளை கல்வி நிலையத்திலேயே வழங்குகிறது. அதன் இயக்குனர் எனது ஆய்வுப் பேராசிரியரின் இன்னுமொரு மாணவர் என்பது மகிழ்ச்சியான செய்தி. மாத்தளையில் வசிக்கும் மாணவர்கள் அதிக செலவு செய்து தனியார் பல்கலைக்கழகத்திற்குச் சென்று பெற்றோருக்கு செலவு வைக்காமல் இலகுவாக அரச பல்கலைக்கழகத்தில் பயில அரிய வாய்ப்பு! 

மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale ஒவ்வொரு வருடமும் குறைந்தது 20 பேருக்காவது இதில் கற்பதற்குரிய செலவை புலமைப்பரிசில் மூலம் வழங்குவதற்கு நிதி சேகரிப்பை நடாத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கு எமது சமூகத்திடமிருந்து பாரிய ஒத்துழைப்புக் கிடைக்கும் என நம்புகிறோம். 

பாக்கியம் தேசியக் கல்லூரியின் அதிபர் திருமதி சந்திரசேகரம்பிள்ளை அவர்கள் இந்த நிகழ்விற்கு முழுமையான ஒத்துழைப்பும் தந்திருந்தார்! 

ஒன்றியத்தின் இயக்குனர்களில் ஒருவராகிய Sathasivam Luxsmi Kanth நிகழ்வை ஒருங்கிணைத்தார். மேலும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் ஆர்வத்துடன் பங்குபற்றினார்கள். 

சாதாரணதரப் பரீட்சையின் பின்னர் கிடைக்கும் விடுமுறையினை வீணாக்காமல் ஆங்கில அறிவையும், தகவல் தொழில்நுட்ப அறிவையும் வளர்க்க இந்தக் கற்கைகள் உதவி செய்யும். 

மாத்தளையில் இருக்கும் அனைத்து தமிழ் பாடசாலைகளிலும் இந்த நிகழ்வினை நடாத்த முடியும். அதற்கு அதிபர்கள் ஒத்துழைப்புத் தரவேண்டும்! இந்த நிகழ்வை நடாத்த விரும்பும் அதிபர்கள் எமது ஆலோசகர் திரு Jayaprakash Sithambaram அவர்களைத் தொடர்புகொள்ளுங்கள். உங்கள் பாடசாலையில் இந்தக் கற்கைகளைக் கற்க தகுதியுள்ள, ஆனால் வசதியற்ற மாணவர்கள் இருந்தால் அவர்களுக்கு கற்கைக்குரிய நிதி உதவிகளை மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale செய்யும்.


Friday, September 23, 2022

தலைப்பு இல்லை

புத்தகக்கிடங்கிலிருந்து…. 

மகாராணியார் இறப்பு இங்கிலாந்து வரலாற்றை தூசு தட்டிப் பார்க்க ஆர்வம் தந்திருக்கிறது.

1000 ஆண்டுகள் அரச வம்சம் அதிகாரத்தை தக்க வைக்கும் இரகசியம் என்ன?


Monday, September 19, 2022

தலைப்பு இல்லை

ஒரே யோகத்தைப் பற்றி எழுதாமல் சற்று போகத்தைப் பற்றியும் எழுதுவோமே! வாழ்வின் நோக்கம் இன்பத்தினைப் பெறுதல்; இன்பத்தினைப் புலன்களால் பெற்றால் போகம்; புலனடங்கி மனம் உணர்வில் அடங்கிப் பெற்றால் யோகம். 

எப்போதும் மனம் புலன்களூடாக போகத்தின் வழி நிற்பதால் மனதை உணர்வில் உடனடியாக அடக்குதல் கஷ்டம். ஆகவே போகத்தை புலன்கள்வழி நாடும் மனம் எப்படிக் குழப்பமுறுகிறது என்று ஒருவன் அறிந்தால் மாத்திரமே அவன் அந்தப்பிரச்சனையிலிருந்து வெளிவரலாம். 

ஒரு பெண்ணை முதன் முதலில் பார்த்து மயக்கமடைந்து, புத்தி குழம்பும் ஒரு ஆணின் மனநிலை எத்தகைய படி நிலைக்கூடாகச் செல்லும் என்பதை திருவள்ளுவர் தகையணங்குறுத்தல் என்ற அதிகாரத்தில் தந்திருக்கிறார். 

இந்தப்பகுதி களவியல் என்று கூறப்படுவதன் காரணம் ஒருவனும் ஒருத்தியும் தமக்குள்ளே மட்டும் கொள்ளும் ஒழுக்கம் என்பதால். ஆகவே இதில் கூறப்படும் உணர்வுகள் எல்லாம் உறவு கொள்ளும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் மாத்திரம் இருக்க வேண்டியவை; அப்படியில்லாமல் வெளிப்படுத்தப்பட்டால் மற்றவர்களால் ஏளனப்படுத்தப்படும். 

களவியலை ஒழுங்காகக் கற்றுக்கொள்வதால் ஒருவன் தனது காதலில் வரும் மனச்சிக்கல்களை இயல்பாகப் புரிந்துகொண்டு தீர்த்துக்கொள்ளலாம். 

முதல் குறள்; 

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை

மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.

ஒரு ஆண் தனக்குரிய பெண் என்று ஒருத்தியைக் காணும்போது அவள் அணங்கு - தேவலோகத்தில் இருக்கும் பேரழகியான அப்ஸரஸ் - என்றோ? அழகிய வண்ண மயிலோ என்று சந்தேகப்பட்டு தடுமாறி பிறகு இல்லை இல்லை இவள் கனமான குண்டலம் அணிந்த மானிடப்பெண் என்று தடுமாறி ஒருகணம் தனது நெஞ்சு குழம்பி நிற்பான்! 

இது மனக்கலக்கத்தின் முதற்படி! 

தனது மனதிற்குப் பிடித்த பெண்ணைக் கண்டு இந்தக் கலக்கம் ஏற்படாத ஆண் எவரும் உண்டோ?


Saturday, September 17, 2022

தலைப்பு இல்லை

அம்மாவும் நானும் ஒரு செல்பி  

எனது குருநாதர் என்னைக் கூப்பிட்டுச் சொன்னார்; தந்தையின் ஆசி பெற்றாயிற்று, அம்மா மனக்கலக்கம் இன்றி ஆசீர்வதித்தால் மாத்திரம் தான் உனக்கு யோக சாதனையும் முன்னேற்றமும் என்றார்! சாமி நீங்களே அதைப் பெற்றுத்தாருங்கள் என்றேன்! அம்மாவை அழைத்து வரச் சொன்னார்; என்னை மாணவனாகவும், சாதனை செய்யவும் குருமண்டலம் தேர்ந்தெடுத்திருக்கிறது; அவனது யோக சாதனையில் எந்தத் தடங்கலும், மனக்குழப்பமும் உங்களுக்கு ஏற்பட வேண்டாம்; நீங்கள் விரும்பியபடி உயர் கல்வி கற்பான், தொழில் புரிவான், திருமணம் செய்வான், உங்களுக்கும் குடும்பத்திற்கும் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வான்; அதற்கு நான் உறுதி கூறுகிறேன் என்றார். அம்மா மனமகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார்; அவரது ஒட்டுமொத்த குடும்பமும் அவநம்பிக்கை ஏற்படுத்தியது! சாமியாராகி, பிச்சை எடுக்க வேண்டி வரும் என்று பயமுறுத்தினார்கள். எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவன் சரியான வழியில் செல்வான் என்று அம்மா நம்பினார். 

குருநாதர் எனது தாய்க்குக் கொடுத்த வாக்கு அனைத்தையும் காப்பாற்றும் வல்லமை எனக்கு வந்தது! அத்துடன் யோக சாதனையும் வளர்ந்தது!

எல்லாம் அப்படியே நடந்தது, நடக்கிறது! 

தாய்+தந்தை+ குரு = தெய்வம்


Friday, September 16, 2022

தலைப்பு இல்லை

யோகத்தில் நினைத்ததை அடையும் சித்தி ஒன்று உள்ளது! எனக்கு இந்த ஆற்றல் புத்தகங்களில் மாத்திரம் உள்ளது என நினைக்கிறேன்! ஏதாவது ஒரு புத்தகம் படிக்க வேண்டும் என்றால், அடுத்த சில நாட்களில் அது எங்கிருக்கிறது, அங்கிருந்து எப்படி என்னிடம் வந்து சேரவேண்டும் என்பது தெரிந்து விடும்! 

கடந்த எட்டாம் திகதி தம்பி கார்த்திக் தியாகராஜன் “யானைகளும் அரசர்களும்” நூல் பற்றி வாட்ஸப்பில் அறியத்தந்தார். இன்று கைகளில் கிடைத்தது. 

மானிடவியல் ஆய்வாளரான தாமஸ் ஆர். டிரவட்மன் பாரதத்தின் போர் யானைகள் பற்றி எழுதிய ஒரு அரிய படைப்பு! 

நான் எனது இளமானிப்பட்டத்தில் பேராசிரியர் சந்தியாப்பிள்ளையிடமும் கலாநிதி விஜயமோகனிடமும் யானைகள் பற்றி கற்றுக்கொண்டவன்; களவிஜயங்களிலும் ஆய்வுகளிலும் பங்குபற்றியவன். பேராசிரியர் சந்தியாப்பிள்ளை கஜா என்று ஒரு journal எடிட்டராக இருந்தார். அவருடன் கஜசாஸ்த்திரம் பற்றிய் ஆய்வுகளைச் செய்யலாம் என்றெல்லாம் உரையாடியிருக்கிறேன். 

இந்த நூல் யானைகளின் சமூக பரிமாணத்தைக் கூறுகிறது. யானைகளின் சமூகத்தேவை அற்றுபோனதால் பல நூற்றாண்டுகளாக இந்திய உபகண்டத்தின் மதிப்புமிக்க பேராற்றல் கொண்ட சமூக விலங்கான யானை இன்று தொல்லை தரும் விலங்காக மாறிவிட்டது என்பதை இந்த நூல் அருமையாக விளக்குகிறது. 

யானை சமூக இடைத்தொடர்பு பிரச்சனைகள் பற்றி சிந்திக்கும் சமூக சிந்தனையாளர்களுக்கு இந்த நூல் மிக அரிய தகவல்களைத் தருக்கிறது. 

குறிப்பாக கலாநிதி Kumaravelu Ganesan ஐயாவுடன் சேர்ந்து நாம் கட்டுமுறிப்பு கிராமத்தின் யானைத்தொல்லைகள் பற்றி உரையாடியிருந்தோம். கணேசன் ஐயா மேற்கத்தேய குடித்தொகை கட்டுப்பாட்டு முறைகளை இலங்கையில் ஏன் நடைமுறைப்படுத்த முடியாது என்ற கேள்வியை உறுதியாகக் கேட்பவர்; அதற்கு இந்த நூல் ஆசிரியர் மானிடவியல் ரீதியாக யானை எப்படி இந்திய உபகண்டத்தில் மனிதனுடன் உறவு கொண்டு வாழ்ந்து இராஜ சின்னமாக மனிதர்களின் மனதில் குடிகொண்டிருக்கிறது என்று இந்த மானிடவியலாளர் விளக்கியிருக்கிறார்.


Wednesday, September 14, 2022

தலைப்பு இல்லை

The platform to learn the Wisdom of Ancient Tamil Siddha Yogic Tradition; 

Visionary project of Sri Shakti Sumanan


போதிமாதவனின் துக்க நிவாரண உத்தி

பலர் ஞானிகளின் போதனையை மதமாக்குவதன் நோக்கம் பிறர் மனதை மயக்குவதற்கே. பாரத ஞானிகள் மெய்யியலை தரிசனமாகவே கண்டார்கள். அதாவது ஒருவன் மெய்யியலை அறிவதன் மூலம் பிரபஞ்சத்தின் பல நுண்மைகளைத் தரிசிக்க முடியும் என்பதே பாரத மெய்யியலின் அடிப்படை. 

புத்தர் தான் தரிசித்த தரிசனத்தை எவரும் கலப்படம் செய்ய முடியாமல் வைத்திருக்கும் ஒரு தெளிவைக் கொண்டிருந்தார். 

ஞானம் - தெளிவு பெறவேண்டும் என்றால் அந்த தெளிவிவினை அடைய முடியாமல் இருப்பதற்கான காரணங்கள் என்ன என்று அறிய வேண்டும். இப்படியான காரணங்கள் வெளியிலிருந்து வருவதைவிட நுண்மையாக உள்ளிருந்து வருவதே காரணமாக இருக்க முடியும். 

ஞானம் பெறுவதற்கு தடையாக இருப்பது மனிதன் எப்போதும், எல்லாவற்றிலும் துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருப்பது. ஆகவே,

1) பிரபஞ்சம் முழுவதும் ஒவ்வொரு உயிரும் துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறது என்ற உண்மையை எப்படி அனுபவமாக அறிவது? 

2) இந்த துக்கம் எங்கிருந்து ஆரம்பமாகிறது?

3) இந்த துக்கத்தின் விருத்திகளை எப்படி நிரோதம் செய்யலாம்?

4) இந்த துக்கங்களை நிரோதம் செய்வதற்கான படிமுறை பாதை எது? 

துக்கத்தை நிவர்த்தி செய்யும் பாதையை புத்தர் ஆரிய அஷ்டாங்க மார்க்கம் அல்லது மத்திம பாதை என்று பெயரிட்டார். அதாவது எட்டுப் படிகளைக் கொண்ட மார்க்கம் அல்லது நடுநிலைப் பாதை என்பது இதன் பொருள். 

இந்த எட்டுப் படிகளும்,

1) சரியான பார்வை - ஒரு பொருளை நாம் பார்க்கும்போது தேவையற்ற பழைய நினைவுகள், மற்றவர்கள் எழுப்பிய சந்தேகங்கள் எதுவும் இன்றி அந்தப் பொருள் இருக்கும் நிலையை விருத்திகள் இன்றிப் பார்க்கும் ஆற்றல். 

2) சரியான நோக்கம் - நாம் ஒரு செயலில் ஈடுபடும்போது எமது நோக்கம் உளத்தூய்மையுடன் எங்கும், எவருக்கும் துக்கத்தை விளைவிக்காத பக்குவத்துடன் அணுகுதல். 

3) சரியான பேச்சு - தேவைக்கு அதிகமாக மற்றவர்களுக்கோ, எமக்கோ க்லேசம் விளைவிக்கும் வகையில் பேசாமல், நன்மைக்கும், ஒற்றுமைக்குமாக எமது வாக்சக்தியைப் பயன்படுத்தல். 

4) சரியான செயல் - நாம் உடலால் செய்யும் செயல்கள் தேவையற்றவகையில் எமக்கு கர்மச் சுழல்களை ஏற்படுத்தி எம்மை துன்பத்தில் ஆழ்த்தாமல் செயல்களைச் செய்யும் பக்குவம்.

5) சரியான வாழ்க்கை முறை - நாம் பொருள்தேடுவதிலோ, வாழும் முறையிலோ எமக்கோ மற்றவர்களுக்கோ துன்பம் ஏற்படாத வகையில் எமது வாழ்க்கை முறை இருத்தல். 

6) சரியான முயற்சி: நாம் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறுமா? பெறாதா? என்று புத்தியால் ஆராய்ந்து செயற்படும் பண்பு. வெற்றி பெறாது என்று புத்திக்குத் தெரியும் விடயத்தில் தேவையற்று ஆற்றலைச் செலுத்தி தோல்வி அடைந்து அதனால் மனதை க்லேசத்திற்குள் கொண்டு செல்லக்கூடாது. 

7) சரியான விழிப்புணர்வு - செய்யும் செயல்கள் யாவும் இயந்திரத்தனமாகச் செய்யாமல் விழிப்புணர்வுடன் செய்வதால் எமது கர்மங்களுக்கு நாமே பொறுப்பாளி என்ற ஞானம் வாய்க்கிறது. வேறு யாரோ ஆகாயத்திலிருந்து கொண்டு எம்மை ஆட்டிப்படைக்கிறான் என்ற போலிப் பயம் அகன்று போகிறது. 

8) சரியான மன ஒருமைப்பாடு - மேலே உள்ள ஆறு படிகளையும் சரியாகக் கடைப்பிடித்தால் மனம் ஒருமைப்படும் தாரணை ஆற்றல் வாய்க்கிறது. இப்படி மனம் ஒருமைப்பட்டால் பிரபஞ்சத்தின் சூக்ஷ்மத் தன்மை வாய்ப்பதால் சாதகன் துன்பத்திற்கான சூக்ஷ்ம காரணங்களை தனது நுண்மையான மனதினூடாகவே சுய அனுபவமாக அறிந்து துன்பமற்ற இன்ப வாழ்க்கை பெறுகிறான். 

பதஞ்சலி இதே விஷயத்தை இயம, நியம, ஆசன, ப்ரணாயாம, பிரத்தியாகாரத்தால் மனம் தாரணைக்கு - ஒருமைப்பாட்டிற்கும் யோக்கியமாகிறது என்கிறார். 

புத்தரின் போதனை, உயர்ந்த வகை யோகத்தின் இன்னுமொரு வடிவம்.


Tuesday, September 13, 2022

தலைப்பு இல்லை

மலைகள் மேல் காதல்

உயர்ந்து நிற்பதால் 

உயர்வை நோக்கி நிற்பதால்

சிகரங்கள் சிந்தனையை உயர்த்தும்

ஒளியை முதலில் தரிசிக்க வைக்கும்


Wednesday, September 07, 2022

உயர்தரப் பெறுபேறுகளும் மாத்தளையின் தமிழ் சமூக கல்வி முன்னேற்றமும்.

ஒவ்வொரு பாடசாலை நிர்வாகமும்  உயர்தரப் பெறுபேறுகளை ஆராயும்போது சரியான புள்ளிவிபரவியல் முறையினைப் பயன்படுத்த வேண்டும். 

சில பாடசாலைகள் தாம் உயர்தரத்தில் அதிகப் பேரைச் சித்தியடைய வைக்கிறோம் என்பதில் பூரிப்படைவைதைக் காண்கிறோம். 

ஒரு மனிதன் திருப்தியடையக்கூடாத ஒரே விஷயம் அறிவும் கல்வியும்! ஆகவே நாம் உயர்தரம் சித்தியடைய வைக்கிறோம் என்பது பெருமையல்ல!

சித்தியடையும் உயர்தர மாணவர்கள் எத்தனை பேர் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகிறார்கள்? அப்படித் தெரிவாகும் எத்தனை பேர் பல்கலைக்கழகத்தின் கற்கையைத் தொடர்ந்து பட்டதாரியாகிறார்கள்? அப்படி பட்டதாரி ஆகியவர்களில் எத்தனை பேர் உயர்தொழிலில் இருக்கிறார்கள்? அத்தகைய உயர்தொழிலில் இருக்கும் பழைய மாணவர்களை பாடசாலையின் கல்வி அபிவிருத்திக்கு எப்படி பயன்படுத்துவது? இவை எல்லாம் பாடசாலை நிர்வாகங்கள் சிந்திக்க வேண்டிய அதிமுக்கிய விடயம்!

உயர்தரம் என்பது ஒரு போட்டிப் பரீட்சை; அந்தப்போட்டியில் நமது பாடசாலை எங்கிருக்கிறது என்பது பற்றி பார்க்கக்கூட விருப்பமில்லாமல் கதவுகளை மூடிக்கொண்டு நல்லதொரு கல்விச் சமூகத்தை உருவாக்க முடியாது. 

குறிப்பாக மலையகத்தில் தமிழ்ப் பாடசாலைகள் – சிங்களப் பாடசாலைகளுடன் ஒப்பிடும்போது எங்கிருக்கிறது? முஸ்லிம் பாடசாலைகளுடன் ஒப்பிடும்போது எங்கிருக்கிறது? இவையெல்லாம் ஆராயப்பட வேண்டும். 

கட்டிடங்களைக் கட்டி, வசதிகளை ஏற்படுத்தினாலும் உயர்தரத்தில் எவ்வளவு மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்கிறார்கள், அதன் மூலம் உயர் தொழிலைப் (higher professions) பெறுகிறார்கள் என்பதுதான் உண்மையான கல்வி வளர்ச்சி! 

கீழ்வரும் தரவினை தெளிவாக, அர்த்தமுள்ளதாக இப்படி ஒழுங்குபடுத்தலாம். 

ஒட்டுமொத்த மத்திய மாகாணத்தில் 14 தமிழ் பாடசாலைக் கல்வி வலயங்கள் இருக்கின்றன. 

மாத்தளை மாவட்டத்தில் உள்ள கலேவெல, நாவுல ஆகிய இரண்டும் முதல் இரண்டு இடத்தில் இருக்கிறது. மாத்தளை பிரதான நகர்ப்புற கல்வி வலயம் 11 வது இடத்தில் இருக்கிறது. 

பிரதான நகராகிய கண்டியும் மாத்தளையும் பின்தங்கியிருக்கிறது. 

பொதுவாக பிரதான நகரைவிட கிராமப்புற கல்விவலய பாடசாலைகள் பெறுபேறுகளில் நல்ல பெறுபேறுகளைக் காட்டுவதை அவதானிக்க வேண்டும். இந்தப் பாடசாலைப் பெற்றோரின் பொருளாதார மட்டம் நகர்ப்புற பெற்றோரின் பொருளாதார மட்டத்தை விட குறைவானதாகும். 

இந்த ஒப்பீடு குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும் தனித்தமிழ் வலய பெறுபேறு ஒப்பீடு! உண்மையில் பிரயோசனமில்லாதது; உண்மையான பந்தயத்தில் ஓடும் குதிரையாக ஒப்பிட வேண்டும் என்றால் நாம் சிங்கள - முஸ்லிம் பாடசாலைகளுடன் ஒப்பிட்டால் மிகவும் பின் தங்கியே இருக்கிறோம் என்பது தெரியும். 

இதனால் எதிர்காலத்தில் சமூகப்பிரச்சனையைத் தீர்த்துக்கொள்வதற்கு தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு வழக்கறிஞரோ, வைத்தியரோ, பொறியலாளரோ, கணக்காளரோ, பட்டதாரி ஆசிரியரோ சமூகத்தில் இருக்க மாட்டார்கள் என்பதை மாத்தளைச் சமூகம் விளங்கவேண்டும். 

பொறுப்புத் துறப்பு: கீழே படத்தில் உள்ள தரவு அட்டவணை சமூக வலைத்தளத்தில் பெறப்பட்டது; ஆகவே இது உத்தியோகப் பூர்வ தரவினூடான ஆய்வு அல்ல; இந்த ஆய்வு கல்வித்திணைக்களத்தின் பொறுப்பில் இருப்பவர்கள் செய்யவேண்டிய உத்தியோகபூர்வ பணி; அவர்களிடமிருந்து இப்படித் தெளிவான ஆய்வுகள் சமூகத்திற்கு வெளிவர வேண்டும். இந்தப்பதிவின் நோக்கம், எது சரியான இலக்கு? அதை அடைவதற்கான சரியான ஆய்வு முறை எது? என்பதற்கான பரிந்துரையைக் கூறுவதாகும்.


Tuesday, September 06, 2022

தலைப்பு இல்லை

புத்தகப் பிரியனான எனக்கு இன்று ஒரு அதிர்ச்சி செய்தி! இன்று நான் வழமையாகச் செல்லும் Buddhist Publication Society இற்குச் சென்ற போது நான் ஒரு வழமையான வாசகன் என்றபடியால் அதன் முகாமையாளர் "சேர், 2017 இல் வந்த stock புத்தகங்கள் அதே விலையில் கொடுக்கிறோம்; உங்களுடைய ஆர்வத்திற்குகந்த புத்தகங்கள் இருக்கிறது என நினைக்கிறேன், பாருங்கள்" என்று கூட்டிச் சென்று காட்டினார். இந்தப் புத்தகங்கள் இனி இலங்கையில் வாழ்க்கை முழுவதற்கும் எந்தவொரு சாமானியர்களும் புதிதாக ஏற்றப்பட்டுள்ள விலைக்கு வாங்க முடியாது என்று ஆதங்கத்துடன் கூறினார். 

ஸ்னோ லயன் என்ற உலகத் தரம் வாய்ந்த பௌத்த பதிப்பகத்தின் ஒரு அரிய நூல் "manual of Insight mediation" 

இந்த நூலின், உண்மையான சர்வதேச விலை = 49.95 USD

இலங்கையர்களுக்கான கழிவுடன் பழைய விலை 4680/=

புதியவிலை - 21890/=

வேறு என்ன பழைய விலையில் இருந்த அரிய புத்தகங்கள் எல்லாவற்றையும் அள்ளியாயிற்று! 

பலருக்கு வயிற்றுப் பசியில் இந்த விலையுயர்வு அனுபவம் இருந்தாலும் வீட்டில் அந்த விடயங்கள் எல்லாம் அம்மையாரின் பொறுப்பில் இருப்பதால் புத்தக விலை உயர்வுதான் நமக்கு shock கொடுத்திருக்கிறது!


Thursday, September 01, 2022

மாத்தளை தமிழ் பாடசாலை உயர்தர கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப கல்வி நிலை பற்றிய ஒரு ஆய்வு by FTGM - STEM Unit

மாத்தளையில் பிரதான தமிழ் பாடசாலைகளின் கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப பிரிவுகளில் பரீட்சைக்குத் தோற்றி பேறுபேறுகள் வெளிவந்த மாணவர்களுடன் இன்று ஒன்றியத்தின் தலைமை ஆலோசகர் என்ற வகையில் ஒரு கலந்துரையாடலை நிகழ்த்தினேன்.

இதன் பிரகாரம் மாணவர்கள் சிறந்த பெறுபேற்றினைப் பெறமுடியாமல் இருப்பதற்கான காரணங்களாக கீழ்வரும் காரணிகள் இருப்பது அடையாளம் காணப்பட்டிருக்கிறது;

1) பாடசாலைகளில் பாடத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை; பாடசாலை முழுமையாகக் கற்பிக்கும் என்று மாணவர்கள் உறுதியாக நம்பவில்லை.

2) அனைத்து மாணவர்களும் தமது பாடத்திட்டங்களைப் பூர்த்தி செய்ய டியுசன் ஆசிரியர்களையே நம்பியிருக்கிறார்கள்.

3) தாமாக படிக்கும் ஊக்கமுள்ள மாணவர்களுக்கு சில விடயங்கள் புரிய கஷ்டமாக இருக்கும்போது அதைத் தெளிவு செய்து உதவி செய்யக்கூடியவர்கள் (ஆசிரியர்கள், சிரேஷ்ட மாணவர்கள்) இல்லை. 

4) எல்லோரும் பாடத்திட்டத்தில் உள்ள விடயங்களை மீண்டும் மீண்டும் படிப்பதை மாத்திரம் படிக்கிறோம் என்று நினைத்து நேரத்தை வீணாக்கியிருக்கிறார்கள். எவரும் கோட்பாடுகளைப் புரிவதற்கோ, அதை வினாக்களுடன் தொடர்புபடுத்தி எழுதுவற்கோ பயிற்சிக்கவில்லை. பயிற்சி இல்லாததால் பரீட்சையில் குறித்த நேரத்திற்குள் விடை எழுதும் திறன் குறைவாக இருக்கிறார்கள். 

இந்த நான்கு காரணிகளில் முதல் இரண்டு காரணிகளும் கல்வித்திணைக்களம், பாடசாலை நிர்வாகங்கள் கவனிக்க வேண்டியவை. 

மற்றைய இரண்டு விடயங்களுக்கு மாத்தளைத் தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் தமது திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம். 

இதன் பிரகாரம் இரண்டாம் தடவை தோற்ற இருக்கும் ஆர்வமுள்ள சில மாணவர்களுக்கு நான் தொடர்ச்சியாக சில பயிற்சியை வழங்க ஆரம்பித்துள்ளேன். 

இந்தப் பயிற்சி நெறியில் பங்குபெறும் மாணவர்கள் கீழ்வரும் பயிற்சிகளைப் பெறுவார்கள்:

1) ஒவ்வொரு பாட அலகினையும் புரிந்துகொள்வதற்கான உத்திகள்.

2) கேள்விகளைப் பயிற்சி செய்து ஞாபகசக்தியை விருத்தி செய்யும் முறைகள்.

3) தினசரி கற்பதற்கான அட்டவணையை வினைத்திறனாக தயார்படுத்தும் முறைகள்

4) தான் ஒவ்வொரு அலகிலும் எப்படி முன்னேறுகிறேன் என்பதை சுய பரிசோதனை செய்யும் பயிற்சிகள்.

5) பரீட்சை எழுதுவதற்கு ஏற்ற வகையில் உடல் நலம், மன நலம் எப்படிப் பேணுவது


மகாகணபதி சதுராவர்த்தி தர்ப்பணம்

கணபதியை (சதுராவர்த்தி) தர்ப்பணத்துடன் வணங்க  ஆரம்பிக்கிறோம். மகாகணபதி மூலாதாரச் சக்கரத்தில் உறைகிறார், அந்தச் சக்கரம் பயம் என்ற உணர்ச்சியால் முதன்மையாக ஆளப்படுகிறது. பயத்தினைக் கரைப்பதால் இன்பம் கிடைக்கிறது. (சதுராவர்த்தி) தர்ப்பணத்தின் மூலம் எமது பயங்கள், சந்தேகங்கள், பாதுகாப்பின்மைகள், பற்றாக்குறைகள் அகற்றப்பட்டு இன்பமயமான வாழ்க்கை கிடைக்கிறது. 

ஸ்ரீ அம்ருதானந்த நாத சரஸ்வதி

தேவிபுரம்


பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...