குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, April 26, 2022

சிங்கப்பூரின் கதை

 

மூன்றாம் உலக நாடாக இருந்த ஒரு சிறு நிலம் முதலாம் உலக நாடாகிய கதை.

தென்கிழக்கு ஆசியாவில் ஒரு தீவு நகர-மாநிலம் உயிர்வாழ வேண்டுமானால் சாதாரணமாக இருக்க முடியாது என்று நான் முடிவு செய்தேன். அண்டை நாடுகளை விட சிறப்பாகவும் மலிவாகவும் விஷயங்களைச் செய்யக்கூடிய இறுக்கமான, முரட்டுத்தனமான மற்றும் இணக்கமான மனிதர்களாக மாறுவதற்கு நாங்கள் அசாதாரண முயற்சிகளை எடுக்க வேண்டியிருந்தது, ஏனென்றால் எமது அண்டை நாடுகள் எங்களைத் தவிர்த்துவிட்டு, பிராந்தியத்தின் வர்த்தகத்திற்கான நுழைவு மற்றும் இடைத்தரகர் என்ற எங்கள் பங்கை வழக்கற்றுப் போகச் செய்ய விரும்பினர்.  நாங்கள் வித்தியாசமாக இருக்க வேண்டியிருந்தது.

எமது மக்களின் நம்பிக்கையும் மனவுறுதியும்தான் எம்முடைய பெரிய சொத்து! இது எங்களிடம் இருந்த மதிப்புமிக்க சொத்து, நமது மக்கள் உழைப்பாளிகள். சிக்கனம், கற்க ஆவலுடையவர்கள். பல இனங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், ஒரு நியாயமான மற்றும் சமமான கொள்கை அவர்களை நிம்மதியாக ஒன்றாக வாழ வைக்கும் என்று நான் நம்பினேன், சிங்கப்பூரின் பன்மொழி, பல்கலாச்சார, பலமத சமூகத்தை ஒன்றிணைத்து, உலகச் சந்தைகளில் போட்டியிடும் அளவுக்கு கரடுமுரடான மற்றும் ஆற்றல்மிக்கதாக மாற்றுவது மிகவும் முக்கியமானது.

லீ குவான்

මෙම ගැටලු සහ පවතින සීමිත විකල්ප ගැන කල්පනා කිරීමෙන් පසුව, අග්නිදිග ආසියාවේ දූපත් නගර රාජ්යයක් පැවැත්මට නම් එය සාමාන් දෙයක් විය නොහැකි බව මම නිගමනය කළෙමි. අපගේ අසල්වැසියන්ට වඩා හොඳ සහ ලාභදායී දේවල් කළ හැකි තදින් බැඳී ඇති, රළු සහ අනුවර්තනය විය හැකි මිනිසුන් බවට පත්වීමට අපට අසාමාන් උත්සාහයක් දැරීමට සිදු විය, මන්ද ඔවුන්ට අපව මඟහැර කලාපයේ වෙළඳාම සඳහා ප්රවේශය සහ අතරමැදියා ලෙස අපගේ භූමිකාව යල්පැනීමට අවශ් වූ බැවිනි. අපට වෙනස් විය යුතුව තිබුණි.

අපේ ලොකුම සම්පත වූයේ ජනතාවගේ විශ්වාසය හා විශ්වාසයයි. අපට තිබූ අනෙක් වටිනා සම්පත වූයේ අපගේ මිනිසුන් වෙහෙස මහන්සි වී වැඩ කිරීමයි.

සකසුරුවම්, ඉගෙනීමට ආශාවෙන්. ජාතීන් කීපයකට බෙදී සිටියද, විශේෂයෙන්ම විරැකියාව වැනි දුෂ්කරතා ප්රධාන වශයෙන් සුළුතර කණ්ඩායම් විසින් ගෙන නොයන්නේ නම්, විරැකියාව වැනි දුෂ්කරතා සමානව බෙදී යන්නේ නම්, සාධාරණ හා ඒකාකාර ප්රතිපත්තියක් ඔවුන්ට සාමකාමීව එකට ජීවත් වීමට ඉඩ සලසයි. සිංගප්පූරුවේ බහුභාෂා, බහු සංස්කෘතික, බහුආගමික සමාජය එක්සත්ව තබා ගැනීම සහ එය ලෝක වෙලඳපොලවල තරඟ කිරීමට තරම් රළු සහ ගතික බවට පත් කිරීම තීරණාත්මක විය.

********************************************************

THE SINGAPORE STORY:

Lee Kuan Yew

SINGAPORE AND THE ASIAN ECONOMIC BOOM

HarperCollinsPublishers


-

Sunday, April 24, 2022

Secret of Mahalakshmi Upasana

 

Harmony and Beauty of the mind and soul,

Harmony and Beauty of the thought and feelings,

Harmony and Beauty in every outward act and movement, Harmony and Beauty of the life and surroundings.

This is the demand of Mahalakshmi

Sri Aurobindo

Friday, April 22, 2022

தலைப்பு இல்லை

 

எனது தந்தையும், குருவும் ஒரே மனப்பாங்குடையவர்கள் என்பது நான் பெற்ற வரம்! தன்னை விட தன் மகன் எல்லாவற்றிலும் உயர்வானவனாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனது தந்தை எப்போதும் சொல்லிக்கொண்டிருப்பது!

அதுவே எனது குருவின் அபிப்பிராயமும்! அவர்களது வழி வந்த எமது அபிப்பிராயமும் பண்பும் கூட!

அவர்கள் வழி எனது பிள்ளைகளும், மாணவர்களும் என்னை விட உயரம் தொட உரமாக நான் இருக்க வேண்டும் என்பது எனது சங்கல்பமும் கூட.

இதுவே மனிதகுலம் மென்மேலும் சிறக்க ஒவ்வொருவரும் கொண்டிருக்க வேண்டிய மனப்பண்பும் கூட..

************************

“மாணவன் தன்னை விட தாழ்ந்த நிலையில் இருக்க வேண்டும் என்று குரு ஒருபோதும் வலியுறுத்தக்கூடாது என்பது எனது அபிப்பிராயம்.

மாணவன் தன்னை விட முன்னேற வேண்டும் என்று குரு எப்போதும் விரும்ப வேண்டும். அப்போதுதான் அறிவு விரிவடையும். என் மாணவன் எனக்கு தெரிந்ததை விட குறைவாக தெரிந்திருக்க வேண்டும், அவருடைய மாணவன் அவர் அறிந்ததை விட குறைவாக அறிந்திருக்க வேண்டும் என்று நான் சொன்னால், அது பூஜ்ஜியத்திற்கு செல்கிறது. எனவே, நான் அறிந்ததை விட என் மாணவன் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால், அது மலரும். உங்கள் மகன் உங்களை தோற்கடிக்கும்படி நீங்கள் அவனைத் தயாராக்க வேண்டும் என்று ஒரு சமஸ்கிருத பழமொழி உள்ளது. டார்சனின் மகன் டார்சனை விட சக்திவாய்ந்தவனாக இருக்க வேண்டும்.

- ஸ்ரீ அம்ருதானந்தநாத சரஸ்வதி

(Dr. N. Prahaladha Sastry - Nuclear Scientist)

Wednesday, April 20, 2022

தலைப்பு இல்லை

 

Symbol of Ida and Pingala Nadi in human (astral - Sookshma) body; it also symbolizes that living beings who practice Yoga sadhana and the dharma need have no fear to drown in the ocean of suffering, and can freely migrate (chose their rebirth) like fish in the water.

Sunday, April 17, 2022

உணவுப் பதுக்கலும் பஞ்சமும்

 

பட்டினி, பஞ்சம், உணவுப்பற்றாக்குறை பற்றி சரியாகப் புரிந்துகொள்ள அமர்தியா சென் {நோபல் பரிசு பெற்ற இந்திய பொருளியல் நிபுணர்} எழுதிய " Poverty and Famines: An Essay on Entitlement and Deprivation" என்ற இந்த நூலைப்படிக்க வேண்டும். ஆறு தொடக்கம் பத்தாம் அத்தியாயம் வரை பல்வேறு உலகப் பஞ்சங்களின் அடிப்படைகளை ஆராய்கிறார்.

இதில் ஆறாவது அத்தியாயம் பிரித்தானிய இந்தியாவில் ஏற்பட்ட வங்காளப் பஞ்சம் (1942 தொடங்கி 1948 வரை) எப்படி நாடு முழுவதும் தாக்கியது என்பது பற்றி விபரித்திருக்கிறார். இதன் போது இலங்கையும் பிரித்தானிய இந்தியாவின் ஒருபாகம்தான்.

இதன் சுருக்கம் : இது விவசாய உற்பத்திக் குறைவினால் ஏற்பட்ட பஞ்சம் இல்லை; அரசியல் பொருளாதார நெருக்கடியால் இடைத்தரகர்களான வியாபாரிகள் பொருட்களை பதுக்கி கள்ளச்சந்தை உருவாக்கி பணமுடையவர்கள் மாத்திரம் உண்ண முடியும் என்ற நிலையை உருவாக்க, அரசாங்கம் அதை கண்டும் காணாமல் இருந்துகொள்ள 30 இலட்சம் மக்கள் மாண்டனர். இப்படி இறந்தவர்கள் எல்லோரும் கூலித்தொழிலாளிகள்! பணமுடையவர்கள் எவருக்கும் உணவுப் பற்றாக்குறை ஏற்படவில்லை.

ஆகவே பஞ்சம் உருவாகியது வியாபாரிகளின் பதுக்கலாலேயே அன்றி விவசாய உற்பத்தி குறைந்ததால் அல்ல.

இதனால் இந்த நூலாசிரியர் ஒரு முன்மொழிவை வைக்கிறார்; உற்பத்தியாளனுக்கும், நுகர்வோனுக்கும் இடையில் அதிக இடைத்தரகர்கள் இருக்கும் போது இந்தப் பதுக்கல் தீவிரமடைகிறது.

இதனால்தான் உணவுச் சந்தை என்பது உற்பத்தியாளனிடம் நேராக வாங்கும் ஒரு பொறிமுறையாக இருக்க வேண்டும்.

தற்போது இலங்கையில் பால்மா, எரிவாயு, எரிபொருட்களில் இப்படியான கள்ளச்சந்தை உருவாகியுள்ளது அவதானிக்கக்கூடிய ஒன்று!

உணவுச் சந்தையில் கள்ளச் சந்தை உருவாகினால் ஏழை, எளியவர்கள் வருமானமற்றவர்கள் ஆபத்தினையும் பஞ்சத்தினையும் நோக்கிச் செல்வார்கள்.

இலங்கை உணவுத் தன்னிறைவு அடைவது எப்படி?

 

சுதேச உணவுப்பழக்கத்தை ஊக்குவிப்போம்

********************************************

இந்தத் தொடரின் நோக்கம் நாடு உணவில் தற்சார்பு - தன்னிறைவு உடையதாக இருக்க வேண்டும் என்றால் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யாமல் தன்னால் உற்பத்தி செய்யப்படுவதை, உண்ணும் பழக்கத்தை மக்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

இலங்கை சோறும் கறியும் உண்ணும் மக்களைக் கொண்டது என்று வாய்ப்பேச்சில் சொன்னாலும் கணிசமான மக்கள் இரண்டாம் உலக மகாயுத்தத்தில் வெள்ளைக்காரன் உணவுப் பஞ்சத்திற்கு கொண்டு வந்த கோதுமைக்கு அடிமையாகியவர்கள். இப்படி பஞ்சத்திற்கு பசி தீர்க்க வந்த கோதுமை படிப்படியாக அடிமையாக்கி இலங்கையின் பொருளாதாரத்தை உறிஞ்சும் அரக்கனாகி நிற்கிறான்.

எமது அரிசிக் கஞ்சியும், ஒடியல் கூழினையும் தாழ்வான உணவாக கருதிக்கொண்டு பனிஸும், பர்கரும் உயர்ந்த உணவு என்று எண்ணும் மடையர்கள் நாம்!

மானிய உரத்தில் விளைந்த அரிசியும் இனி விலை அதிகரித்து செல்வம் உள்ளவர்கள் உண்ணும் உணவாக மாறப்போகிறது. ஆகவே உள்ளூரில் எந்த உள்ளீடும் இல்லாமல் கிடைக்கும் உணவுப் பொருட்களை எப்படி உணவாக்கலாம் என்ற அறிவு அவசியம்.

அந்த வகையில் இந்த வார அறிமுகம் இராச வள்ளிக் கிழங்கு.

எங்கும் வளரக்கூடியது. உரம், பீடைகொல்லிகள் எதுவும் பாவிக்கத்தேவையில்லை.

இது உழுத்தம் மாவுடன் சீனி, உப்புச் சேர்த்து களியாக, கூழாக மிகச்சிறந்த காலை உணவு. பச்சையாக உண்டால் சுணைக்கும் என்று ஊர்வழக்கில் கூறப்பட்டாலும் இதன் அடிப்படை இதில் இருக்கும் Saponin என்ற இரசாயனம் காரணமாகும். இது அவிப்பதன் மூலம் உணவாக உட்கொள்ள முடியும். அவிக்காமல் உணவாக முடியாது.

இதன் மருத்துவ குணங்களாக கீழ்வருவன அறியப்பட்டுள்ளது.

1. இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்

2. இரத்தக் கட்டிகள் உருவாவதை தடுக்கும்.

3. உடலைக் குளிர்ச்சியாக்கும்

4. இரத்த ஓட்டத்தை சீராக்கும்

5. மூல நோயினை தணிக்கும்

6. சமிபாட்டினை இலகுவாக்கும்.

7. வயிற்றிலுள்ள பற்றீரியாக்களை சமநிலைப்படுத்தும்

8 உயர் போசனையுடையது

9. உடலை வலிமைப்படுத்தும்.

விவசாயிகள் இதை மேலதிக முயற்சி இன்றி ஊடுபயிராக வரப்புகளில் வளர்க்கலாம்.

உணவு ஆர்வலர்கள்/ஆய்வாளர்கள் இதை சுவையான களியாக, கூழாக எப்படி சமூகத்தில் விரும்பப்படும் உணவாக மாற்ற முடியும் என்று ஆராய்ந்து சந்தைப்படுத்தலாம்.

#myfarmermyfood

#இலங்கையில்_பாரம்பரியஉணவு

#இராசவள்ளி

#வேளாண்_சார்ந்த_தொழில்கள்

#கஞ்சி_கூழ்

Thursday, April 14, 2022

இலங்கையின் வங்குரோத்தும் விவசாயத்துறை வங்குரோத்தும்

 

குறிப்பு: இந்தக்கட்டுரையின் நோக்கம் விவசாயத்துறையின் பிரச்சனைகளை தெளிவாக பொருளியல் அடிப்படையில் சிந்திப்பதற்கான மனநிலையை உருவாக்குதல்; ஆகவே இந்த நோக்கத்தைப் புரிந்துகொண்டு நீங்கள் விவசாயத்துறை சார்ந்த உயர் பதவிகளில் இருப்பவராக இருந்தால் கூறவரும் மையக்கருத்தை சரியாக உள்வாங்கி உங்கள் வாதங்களை முன்வைப்பது வரவேற்கப்படுகிறது.

****************************************

இலங்கை வங்குரோத்து அடைந்துவிட்டதாக பல பொருளியல் நிபுணர்கள் உறுதிப்படுத்தத் தொடங்கியுள்ளர்கள். அதுபோல் இந்த நிலையால் உணவு உற்பத்தியும் சீர்கெட்டு உணவுப் பஞ்சம் வரும் என்பதாக உலக உணவு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த இரண்டு நிலையும் ஏற்படுவதற்கான காரணங்களை நுணுக்கமாக ஆராய்ந்தால் அதற்கு காரணம் – “அபி தமை ஹொந்தட்ட கரே - நாங்கள் தான் சிறப்பானவர்கள்” என்ற அறியாமையே காரணம். இந்த மமதை வந்தவுடன் யதார்த்த சூழலைப் புரியும் தன்மையை நாம் இழந்து விடுவோம்!

அடிப்படைப் பொருளாதார அறிவு இல்லாமல் நீண்டகாலப் போரை முடிவுக்கு கொண்டுவந்ததால் தம்மால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என்ற மமதையுடன் தமக்கு ஒவ்வாத வேலையைச் செய்து மாட்டிக்கொண்டிருக்கிறது அரசாங்கம்.

விவசாய நாடு என்று வாயில் சொல்லிக்கொண்டு விவசாயத்திற்குரிய எந்தத் திட்டமும் பொருளியல் அடிப்படையில் வகுக்கப்படவில்லை. உல்லாசப்பயணத்துறைதான் எமது வருமானத்திற்கான பெரும் பகுதி என்று மூலோபாயம் வகுத்துவிட்டு கட்டாயம் வருமானம் வந்தே தீரும் என்று நம்பிக்கொண்டு உலகம் எல்லாம் கடன் வாங்கிக்கொண்டு உழைக்காமல் இலவு காத்த கிளியாக காத்திருக்க கோவிட், உக்ரைன் ரஷ்யா என்ற சுனாமி வந்து இலங்கையின் பொருளாதாரத்தைக் காலி செய்துவிட்டது.

சேமிப்பு இல்லை, அதீத கடன், உற்பத்தி இல்லை ஆகவே வங்குரோத்து!

EMI இல் உல்லாச வாழ்க்கை வாழ்ந்த IT கம்பனியில் வேலை பார்த்தவனுக்கு You are fired என்று காலையில் வேலைக்கு போகும்போது சொன்னால் என்ன நிலைமையோ அந்த நிலைமைதான் இலங்கை அரசாங்கத்திற்கு!

இதே மாதிரியைத்தான் விவசாயத்துறையும் பயன்படுத்துகிறது! அரசன் எவ்வழியோ துறைகளும் அவ்வழி!

மூன்று மாதங்களில் பணக்காரன் ஆகுங்கள் சுய முன்னேற்ற நூல்கள் உசுப்பேத்துவது போல்,

அல்லது சீனாக்காரன் இலங்கை அரசாங்கத்தை உசுப்பேத்தி கடன உடன வாங்கி துறைமுகம் கட்டுங்கள் கப்பல் வரும், விமான நிலையத்தை கட்டுங்கள் வருமானம் முப்பதே நாட்களில் பிய்த்துக்கொண்டு வரும் என்று உசுப்பேத்தி கடன் கொடுப்பதைப் போல்,

அப்பாவி விவசாயிகளை உசுப்பேத்தி விவசாய ஆலோசனை என்ற பெயரில் உரம் போடுங்கள் விளைச்சல் அமோகமாக வரும், பீடைகொல்லி பாவியுங்கள் விவசாயம் அமோகமாக வரும் என்று நம்பிக்கை ஊட்டி செலவழிக்க வைப்பார்கள். இதை எங்களுடைய ஆய்வுகளின் மூலம் நிரூபித்திருக்கிறோம் என்று அப்பாவி விவசாயியிற்கு புரியாத அறிவியல் விஷயங்கள் சிலதைக் கூறிக் குழப்பி சரி சேர் சொல்லுகிறார் செய்வோம் என்று விவசாயியும் செய்யத்தொடங்குவார்.

இலங்கை அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளும் "சேர் சொல்கிறார், செய்ய வேண்டும்" என்று விளைவுகளைச் சிந்திக்காமல் சொன்னபடி செய்யும் சுப்பர்களால் ஆனது என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டும்.

சொல்லப்படும் ஆலோசனைகளினால் வரக்கூடிய பொருளாதார சுமை விவசாயியை எப்படித் தாக்கும் என்பது பற்றி கிஞ்சித்தும் சிந்தனை இல்லை!

இந்த அறிவுரை எல்லாம் கேட்டு உசுப்பேறிய விவசாயி உற்பத்திச் செலவை பல மடங்காக்கியிருப்பார்; விளைச்சல் அமோகமாக வந்துவிட்டது' விவசாய ஆலோசகருக்கு பெரிய மகிழ்ச்சி! தான் சாதித்துவிட்டேன் என்று அறிக்கை எழுதி விடுவார்; அமோகமாக வந்த விளைச்சலுக்கு விவசாயியிற்கு கிடைத்த நிகர இலாபம் எவ்வளவு என்பது பற்றி எந்த பேச்சும் இல்லை!

இலாபம் இல்லை என்றவுடன் அவர்கள் தாம் ஏமாற்றமடைகிறோம் என்ற விரக்திக்குள் சென்று அடுத்தமுறை இவர்கள் சொல்லுவதைக் கேட்க மறுக்கும் போது உடனே இலகுவாக இவர்கள் விவசாயிகள் ஒத்துழைக்க மறுக்கிறார்கள் என்று கூறத்தொடங்குகிறார்கள்.

பிரச்சனையின் அடிப்படை விவசாயத்தொழில் நுட்பங்களின் பயன்பாடு உற்பத்திச் செலவைக் கூட்டுவதாகவும், கூடிய செலவை ஈடுகட்டும்படி சந்தை வாய்ப்பில்லாமலும் இருக்கிறது என்ற யதார்த்த சிந்தனையுடன் விவசாயத்திணைக்களம் விவசாயிகளை வழி நடாத்துகிறதா என்பதே!

பொருளாதார அடிப்படையில் ஒருவன் மீண்டும் மீண்டும் ஒரு தொழிலில் வங்குரோத்து அடையாமல் இருக்க வேண்டும் என்றால் முதலில் அவன் தனது உற்பத்தியின் மூலம் நிகர இலாபத்தினை அதிகரித்து அதை தனது சேமிப்பிற்கு கொண்டு செல்ல வேண்டும். எதிர்பாராத நட்டத்திலிருந்து மீள இந்த சேமிப்புக்களே உதவும்! ஆனால் தற்போதைய விவசாய முறை எந்த விவசாயியும் நிகர வருமானம் பெறும் வகையில் இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இதற்கு தகுந்த சிந்தனை முறை தேவை! எமது பட்டம், பதவி, அதிகார ஆணவங்களை விட்டுவிட்டு அடிப்படைப் பிரச்சனையைச் சிந்திக்கும் எளிமையான மனம் தேவை! பொறுப்பில் இருப்பது பெருமைக்கு அல்ல! மற்றவர்களுக்கு உதவுவதற்காக என்ற உணர்வு இருக்க வேண்டும்!

Wednesday, April 13, 2022

விவசாயமும் பொருளியலும்

 

பொருளியல் என்பது ஒவ்வொரு தனிநபரும், அரசாங்கமும், நிறுவனமும் தமது முடிவுகளுக்கான அடிப்படையை ஆராய்வதற்கான ஆய்வு முறையாகும்.

ஒருவன் பீட்ஸா இன்று சாப்பிடலாமா என்ற கேள்வி மனதில் எழும்போது சாப்பிடலாம் என்று உறுதிப்படுத்துவதும், மாதக் கடைசியில் சம்பளம் வந்தபிறகு சாப்பிடலாம் என்று அந்த முடிவைத் தள்ளிப் போடுவதும் அவனது பொருளாதாரம் முடிவு செய்கிறது.

தனது பொருளாதாரத்தை ஆராய்ந்து முடிவுகளை எடுத்த பின்னர் அந்த முடிவு அவனது மற்றைய தேர்வுகளை மட்டுப்படுத்துகிறது. உதாரணமாக பீட்ஸா ஆசையினால் உந்தப்பட்டு வாங்கி உண்டால் தனது கல்விக்குத் தேவையான புத்தகம் வாங்க பணம் இல்லாமல் போகலாம்.

ஆகவே ஒருவன் தனது தேர்வுகளை செய்வதற்கு தன்னிடமிருக்கும் பொருளாதாரத்தின் அடிப்படையை நன்கு கணிக்கக்கூடியவனாக இருக்க வேண்டும்.

இன்று விவசாயம் வீழ்ச்சியடைவதற்கு காரணம் பொருளியல் தெரியாத விவசாய ஆலோசகர்கள் விவசாயத்தை மேம்படுத்துகிறேன் என்று தனியே பயிர்களையும், பயிர்களை வளர்க்கும் முறைகளையும் தெரிந்துகொண்டு தம்மை விவசாய ஆலோசகர்களாக எண்ணிக்கொண்டிருக்கும் விவசாய வழிகாட்டிகளால் ஆகும்.

ஒருவன் விவசாயம் செய்யப்போகிறேன் என்று முடிவு எடுத்து தனது சேமிப்பினை முதலிடுகிறான் என்றால் அவன் முதலீடு கூட இல்லாமல் போகக்கூடிய, எதிர் நோக்கப்போகும் அபாயங்கள் இவை

1) பீடைத்தாக்கம்

2) காலநிலை மாற்றத்தினால் அதீத மழைவீழ்ச்சி அல்லது வரட்சி

3) உரத்திற்கான செலவுகள் அதிகரிப்பு

4) பீடைகொல்லிகளுக்கான செலவு அதிகரிப்பு

இவை எல்லாம் தாண்டி உற்பத்தியை உருவாக்கினால் தனக்கு ஏற்பட்ட செலவுகளையே பெற முடியாத படி ஒருவர் வந்து அடிவிலைக்கு வாங்கிச் சென்று கொழுத்த விலைக்கு இலாபத்தைத் தேடும் இடைத்தரகர்.

நேரடியாக விற்கலாம் என்றால் பல இலட்சம் ரூபாய் காரில் வந்து இறங்கி, பீட்ஸாவும், பர்கரும் பேரம் பேசாமல் வாயைப் பொத்தி உண்ணும் பெருந்தகைகள் ரோட்டில் தனது அன்றாட உணவிற்கு விற்பனை செய்யும் ஏழை விவசாயி ஏதோ தங்களை ஏமாற்றி மாடி வீடு கட்டிவிடுவதை ஜாக்கரதையாக தவிர்த்த பெருமையுடன் பேரம் பேசி விலை குறைத்து வாங்கிவரும் பற்றாக்குறை மனமுடைய ஜென்மங்கள்!

விவசாயப் பொருளாதாரம் சரியாக வேண்டும் என்றால் விவசாய உற்பத்திக்குள் அனாவசியமாக திணிக்கப்படும் உள்ளீட்டுச் செலவுகள் நீக்கப்பட வேண்டும். இடைத்தரகர்கள் விவசாயியினை சுரண்டுவது தவிர்க்கப்பட வேண்டும்; வாங்கும் மக்கள் தம்முடைய பகட்டுச் செலவிற்கு கணக்குப் பார்க்காமல் மயங்கி செலவழிப்பவர்கள் தகுந்த விலையைக் கொடுத்து விவசாயியை ஊக்கப்படுத்த வேண்டும்.

இப்படிப் பொருளாதார சிந்தனை செய்யாமல் விவசாய ஆலோசனை செய்கிறோம் என்று படித்ததை வாந்தி எடுக்கும் விவசாய போதனாசிரியர்களை வைத்துக்கொண்டு உருப்படியாக விவசாய பொருளாதாரத்தை உருவாக்குவோம் என்பதும், இது ஒரு விவசாய நாடு என்பதும் ஒரு கற்பனா வாதமே!

Tuesday, April 12, 2022

புரட்சி என்பது என்ன?

 

ஒரு தொகுதி இருப்பதை விட ஒரு உன்னத நிலைக்குச் செல்வதற்கான ஒன்றுபட்ட சமூக அழுத்தம். ஏற்கனவே இருக்கும் அரசியல், பொருளாதாரம், சமூக, கலாச்சாரக் கூறுகளினால் அதிருப்தியுற்ற சமூகம் அதைவிட மேன்மையான ஒரு கட்டமைப்பை உடனடியாகப் பெற செய்யபடும் அதிரடி நிகழ்வாக புரட்சி வரையறுக்கப்படுகிறது.

இது அரசியல் தலைமையை, அதிகாரத்தை நோக்கிச் செய்யப்பட்டாலும் பொருளாதார, சமூக, கலாச்சார பெறுமானங்கள் மிக முக்கியமான பங்கினை வகுக்கிறது.

புரட்சிகளுடைய கோட்பாட்டுகளை புராதன ஐரோப்பிய தத்துவவியளார்கள் இப்படி வரையறுக்கிறார்கள்;

பிளாட்டோ கூறுகிறார் ஒரு சமூகம் தனது பெறுமானம் சார்ந்த நம்பிக்கைகளை சரியாக பின்பற்றுமாக இருந்தால் புரட்சியைத் தடுக்கலாம் என்று!

அரிஸ்டாட்டில் ஒரு கலாச்சாரத்தில், சமூகத்தில் அடிப்படை value system பலவீனமாக இருந்தால் அந்தச் சமூகம் புரட்சிக்குள் செல்லும் என வரையறுத்தார்.

ஹெகல் கட்சிகள் சீர்திருத்தங்களை தூண்டுவதற்கும் செயல்படுத்துவதற்கும் அவசியமான ஊக்கிகளாகக் கருதினார். இந்த அடிப்படையில் மார்க்ஸ் சமூக வர்க்கங்களுக்கிடையிலான போராட்டங்களை சமூகத்திலுள்ள பொருளாதாரத்தை கட்டுப்படுத்துவதற்குரிய் அதிகாரப் போராட்டமாக பார்த்தார்.

அதிகாரத்தைப் பற்றிய பழைய சித்தாந்தர்கள் ethics and moral சார்ந்தவை!

ஆனால் Machiavelli சித்தாந்த அதிகாரத்தில் ethics and moral இவற்றிற்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை! அதிகாரத்தை தக்கவைத்து உறுதியான அரசைப் பேணுவது மாத்திரமே Machiavelli அரசியல் சித்தாந்தம்!

higher ethical foundation இல்லாத Machiavelli சித்தாந்த அதிகாரத்தை நோக்கி செய்யப்படும் புரட்சிகளின் விளைவுகள் கணிக்கப்பட முடியாதவை!

ஔவைப் பாட்டி புரட்சி ஏற்படாமல் இருக்க வழி சொல்லியிருக்கிறார்!

வரப்புயர நீருயரும்

நீருயர நெல் உயரும்

நெல்லுயரக் குடி உயரும்

குடி உயரக் கோல் உயரும்

கோல் உயரக் கோன் உயர்வான்

இந்தப்பாட்டு அந்தக்காலத்து விவசாயப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு சமூகத்தின் அடிமட்டம் பொருளாதாரத்தை உருவாக்க உட்கட்டமைப்பு (வரப்புயர நீருயரும்) சரியானால் உற்பத்தி பெருகும் (நெல் உயரும்), உற்பத்தி பெருகினால் ஒவ்வொரு குடிமகனும் வளமாகுவான்; இதனால் அரசு நடாத்தத் தேவையான வரி கிடைத்து அரசன் சிறப்படைவான் என்பது பெறப்படும்!

இலங்கை அரசங்கம் எங்கு பிழைவிட்டது என்பதை இந்தப்பாடலை வைத்துக்கொண்டு விளங்கலாம்!

இலங்கையில் உணவுப் பஞ்சம் வருமா?

 

இலங்கை மக்கள் தமக்கான உணவினை உற்பத்தி செய்வதை மறந்து எங்கிருந்தோ இறக்குமதி செய்து பீட்ஸாவும், ஓட்ஸ் கஞ்சியும், பர்கரும், கோதுமை மாவும் சாப்பிடும் சோம்பேறிகளாக இருந்தால் நிச்சயம் பஞ்சம் வரும்! இவற்றையெல்லாம் வாங்குவதற்கு எம்மிடம் டாலர் இல்லை!

உடல் ஆரோக்கியமாக வாழ்வதைத் தாண்டி ருசிமாத்திரம் தான் உணவு என்று சுவைக்கு அடிமையாகியிருந்தால் நிச்சயமாக கஷ்டப்படத்தான் போகிறார்கள்.

எம்மிடம் வளமான மண் இருக்கிறது! நீர் இருக்கிறது! எந்த உரமும் போடாமல் வளரும் உணவுப் பயிர்களும் இருக்கிறது!

இவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்ற அறிவு இல்லை! இது மட்டும் தான் உணவு என்ற மயக்கம் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலே உணவு உற்பத்தியில் எம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது என்ற பொறுப்பு உணர்ச்சி இல்லை! இவை எல்லாம் இல்லாதவை!

இருப்பதோ பதட்டமும் பயமும் மாத்திரம்!

ஒவ்வொரு வீட்டிலும், நிலம் இருப்பவர்கள், இருக்கும் இடம் எல்லாம் மரவள்ளி, வத்தாளைக் கிழங்கு, இராசவள்ளிக்கிழங்கு, முருங்கை, பலா, வாழை, ஈரப்பலா, கொவ்வை, கீரை என்று வளர்க்கத்தெரியுமாக இருந்தால்,

உரத்தை நம்பாமல் விளையும் அரிசி ரகங்களை கைவசம் வைத்திருந்தால், கௌப்பி, உழுந்து, குரக்கன் உணவுகள் உண்ணும் பழக்கம் இருந்தால்!

தென்னை ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால்!

உணவுக்கு எங்கே பஞ்சம் வரப்போகிறது!

இளைஞர்களே, கணனியும் தொழிலும் பணம் தரும்! உற்பத்தி இல்லை என்றால் எவ்வளவு பணம் இருந்தாலும் உணவு வராது.

பணம் உங்களிடம் அதிகமாக இருந்தால் கிராமப்புறங்களில் வாழும் உற்பத்தி செய்யும் விவசாயிகளை தத்தெடுங்கள்! விவசாயம் செய்யத்தெரிந்தவர்களை ஆதரியுங்கள்!

முதலீடு செய்கிறேன் என்று செருக்குடன் போய் குழம்பாதீர்கள்! உற்பத்தி செய்பவர் வாழ்க்கைக்குத் தேவையானதை தகுந்த பணம் கொடுத்து அவரது விவசாயம் விழுந்துவிடாமல் பாதுகாக்கும் பொறுப்புணர்ச்சியினை உருவாக்குங்கள்.

உற்பத்தியைப் பெருக்குங்கள்! உணவைத் தருவது இயற்கையும் இயற்கையுடன் பாடுபடும் விவசாயியும்!

சுப்பர் மார்கட்டோ, கடை முதலாளியோ இல்லை!

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...