குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, April 27, 2017

நேற்றைய (27/04/2017) சித்த வித்யா விஞ்ஞான வகுப்புகள் - இராஜயோக விளக்கம்


இன்று மாலை 08.00 - 09.00 வரை வழமைபோல் கொழும்பு - 04 ரிட்ஜ்வே ப்ளேஸில் அமைந்துள்ள அஷ்டாங்க யோக மந்திரில் சித்த வித்யா விஞ்ஞான வகுப்பு நடைபெற்றது.
தாய், தந்தை, குரு வணக்கம், சித்த வித்யா குருமண்டல வணக்கம், உடலில் ஆறு சக்கரங்களில் ஓம்கார ஜெபம் மற்று ஹ்ரீம்கார ஜெபம், சக்தி பஞ்சாட்சரம், காயத்ரி மந்திரம், ம்ருத்யுஜெய மந்திர ஜெபம் என்பவற்றுடன் வழமை போல் ஆரம்பமாகியது.
ஸ்ரீ ஸக்தி சுமனன் அவர்கள் இராஜ யோகத்தின் அறிமுகத்தை பற்றி கீழ்வரும் விடயங்களை விளக்கினார்.

Saturday, April 22, 2017

சித்த வித்யா விஞ்ஞான வகுப்புகள் - (19/01/2017)


(19/01/2017) மாலை 06.00 - 07.30 வரை வழமைபோல் கொழும்பு - 04 ரிட்ஜ்வே ப்ளேஸில் அமைந்துள்ள அஷ்டாங்க யோக மந்திரில் சித்த வித்யா விஞ்ஞான வகுப்பு நடைபெற்றது. 

தாய், தந்தை, குரு வணக்கம், சித்த வித்யா குருமண்டல வணக்கம், உடலில் ஆறு சக்கரங்களில் ஓம்கார ஜெபம் மற்று ஹ்ரீம்கார ஜெபம், சக்தி பஞ்சாட்சரம், காயத்ரி மந்திரம், ம்ருத்யுஜெய மந்திர ஜெபம் என்பவற்றுடன் வழமை போல் ஆரம்பமாகியது. 

ஸ்ரீ ஸக்தி சுமனன் அவர்கள் சங்கம் முறையான பதிவுபெற்ற அமைப்பாக விரைவில் இயங்க இருபதையும், சங்கத்தினால் கீழ்வரும் மூன்று பிரசுரங்கள் ஆர்வமுள்ள சாதகர்களுக்காக வெளியிடப்படும் என்பதையும் அறிவித்தார்.
1) சித்த வித்யா விஞ்ஞான‌ சங்கத்தின் ஆன்மீக கொள்கை விளக்கம்
2) குருசாதனா
3) காயத்ரி சாதனா

பின்னர் குண்டலினி யோகம் என்பது முறையான சாதனையால் ஏற்படும் அனுபவத்தை மனதின் துணை கோண்டு உணர்வால் அறிவதா அல்லது மனதினால் சக்கரங்களை கற்பனை செய்வதா என்ற விளக்கமும் இவற்றின் நன்மை தீமைகள் என்ன? என்பது பற்றியும் விளக்கம் கூறப்பட்டது.

மனிதன் எப்படி தொன்னூற்றாறு தத்துவங்களாக விரிவுபெற்றான் என்ற விளக்கமும், யோக சாதனை தியான சாதனை பற்றிய விளக்கமும் கூறப்பட்டது.

இறுதியாக இன்றைய காலத்தின் தமது உலகியல் பிரச்சனையை தீர்க்க கடவுளை தேடுவதில் பயன் இல்லை என்பது இறைவன் மனிதனிற்கு அளித்த சக்திவாய்ந்த கருவி மனம், அதன் மூலம் ஒருவன் தனக்கு வேண்டியதை பெற்றுக்கோண்டு இன்ப வாழ்க்கை வாழலாம் என்பதும் விளங்கப்படூத்தப்பட்டது.

இறுதியா பதினாறு பேறுகளை வழங்கும் தேவியில் ஆசீர்வாதப்பாடலுடன் வகுப்பு நிறைவுபெற்றது.

மீண்டும் அடுத்த புதன் கிழமை வகுப்பு தொடரும்.

Friday, April 14, 2017

புதுவருட ஆசிகள்

இன்று காலை எமது சித்த வித்யா விஞ்ஞான‌ சங்கம் வலைத்தளத்தில் (http://yogicpsychology-research.blogspot.in/
) பிரார்த்தனைக்காக, ஸ்ரீ காயத்ரி சாதனை, ஸ்ரீ வித்யா சாதனை பதிவுசெய்துகொண்ட அனைத்து அன்பர்களுக்காகவும் இன்று புதுவருடத்தை இட்டு நிகழ்த்தப்பட்ட சிறப்பு மஹாகணபதி சதுராவர்த்தி தர்ப்பணத்திலும், ஸ்ரீ காயத்ரி பூஜையிலும் பிரார்த்திக்கப்பட்டது. 
 
அனைத்து அன்பர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும் பொருள் நலம் பொறுமை ஈகை ஆயுள் ஆரோக்கியம் வீர்ம் அசைந்திடா பக்தி அன்பு தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாய் அம்மா என்று அன்னையை பிரார்த்தித்து,

எமது குருமண்டலத்தில் இணைந்து தமது யோக சாதனையை தொடரும் அன்பர்கள் சரியான பாதையில் பயணித்து சித்தி பெறவும், உடல் மனத்துன்பங்களுடையோர் அதிருலிருந்து மீண்டு போக பாக்கியங்கள் பெறவும் ஸ்ரீ குரு நாதர் அகத்தியர், விஸ்வாமித்திர மகரிஷி, வஷிஷ்ட மகரிஷி, பிரம்ம மகரிஷி, ஈஸ்வரப்பட்ட மகரிஷி, போக நாத மகரிஷி, ஸ்ரீ கோரக்க நாத சித்தர், மௌனகுரு சித்தர், ததிஷி மகரிஷி, ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர், ஸ்ரீ காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகள், ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித ஸ்ரீ அம்ருதானந்த நாதர், ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர நாதர் ஆகிய குருமண்டலத்திடம் பிரார்த்திக்கப்பட்டது.

அனைவருக்கும் இனிய ஹேவிளம்பி புதுவருட வாழ்த்துக்கள்!

Monday, April 10, 2017

சித்த வித்யா விஞ்ஞான‌ சங்கம்

எனது ஆத்ம யோக ஞான‌ எழுத்து வாசகர்கள் அனைவரும் இந்த Facebook account இ்ன் நட்பில் இணையும் படி எதிர்பார்க்கப்படுகின்றனர். 

எதிர்வரும் வைகாசிப் பௌர்ணமி தினத்திலிருந்து சித்த வித்யா விஞ்ஞான சங்கம் என்ற பதிவு பெற்ற அமைப்பாக எமது அறிவுப் பகிர்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டு வரவிருக்கின்றது. 

இந்த சங்கத்தின் நோக்கம் "ஞான தர்ம தானம்"

சித்தர்களின் ரிஷிகளின் ஆத்ம யோக ஞான மருத்துவ விஷயங்களை இக்கால மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிய தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிப்படுத்துதல்.

வைகாசிப் பௌர்ணமி தினத்தில் இருந்து அங்கத்தவராகும் முறை, விரிவான திட்ட விளக்கம் என்பவை வெளியிடப்படும்.

சித்த வித்யா விஞ்ஞான‌ சங்கம்
ஆன்மீக கொள்கை விளக்கம்

எமது சித்த வித்யா விஞ்ஞான‌ சங்கத்தின் ஆன்மீக கொள்கை விளக்கம் வெகுவிரைவில் வெளியிடப்படவுள்ளது.

இந்த கொள்கை விளக்கங்கள் சங்கத்தில் மாணவர்களாக கற்கையில் இணைந்து ஆத்ம யோக ஞான தெளிவு பெறவிரும்புவபர்களுக்கு மாத்திரம் உரியது.

இந்த கொள்கைகளும் கடவுள் யார்? உருவவிளக்கம், ஆன்மா, சக்தி, விக்கிரக வழிபாடு, உபாசனா தீட்சை, பூஜை ஏன்?, தியானம், சாதனையில் மனம், சித்தம் ஆகியவற்றின் செயற்பாடு, உண்மை யோகியின் தன்மை, யோகவிஞ்ஞானம், ஆன்மீகத்திற்கான வெளிவேடங்கள், குண்டலினி, சாதனைக்கான தயாரிப்புகள்,எமது துன்பத்திற்கான காரணங்கள் என்ன?, கடவிளின் காட்சி பெறுவதின் விளக்கம், சித்தி பெற்றபின்பு அதை பயன்படுத்துதல், தற்போதைய சடங்குகள் அவசியமானதா?, உண்மையான சித்தயோகியின் பண்புகள் என்பன சுருக்கமாக ஆனால் விளக்கமாக தரப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஸக்தி சுமனன்

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...