குரு நாதர் ஆசியுடன்
குரு நாதர் ஆசியுடன்.............
இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!
இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!
ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ
ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ
ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ
ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !
ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ
ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!
ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ
இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!
மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here
2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்
நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.
அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே
உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!
ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே
இங்கே
Saturday, December 31, 2016
அகத்திய மகரிஷி அருளிய சோடச சூத்திரம் {பாடல்கள் 01 - 04 வரை}
இன்று அமாவாசை, அகஸ்திய மகரிஷி அருளிய சோடச கலை இரகசியம் சுருக்கமாக இங்கு பதியப்படுகிறது. விரிவான சித்த வித்யா விளக்கவுரை விரைவில் குருவருளால் வெளியாகும் |
Tuesday, December 27, 2016
Saturday, December 17, 2016
குரு உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இன்றைய சூழலில் இப்படி பன்னிரெண்டு வருடங்கள் குருவுடன் வாழ்வது என்பது சாத்தயமற்ற ஒன்றாகிவிட்டது. அப்படியானால் ஒருவரும் சாதனை செய்து சித்தி பெறமுடியாதா? இல்லை நிச்சயமாக முடியும்.
எப்படி சாத்தியம்?
- அக்காலத்தில் பன்னிரெண்டு வருடம் சாதனை செய்வதற்குரிய சூழல் குருவால் உருவாக்கப்பட்டது, இன்று அது மாணவர்களது கைகளில் இருக்கிறது. அவர்கள் தாமாக உருவாக்கிக் கொள்ள முடியும்.
- அக்காலத்தில் தொழில்நுட்ப வசதிகள் இல்லாமையால் சாதனை நுட்பங்களை கற்பதற்கு பன்னிரெண்டு வருடங்கள் தேவைப்பட்டது.
- அக்காலத்தில் குருவுடன் வாழ்வதால் அவருடைய தெய்வ காந்த சக்தி எம்முடன் கலந்து எமது சாதனைக்கு உதவும். குருவுடன் வாழ்ந்தாலும் தகுந்த பக்குவம் இல்லாமல் அவருடைய சக்தியை ஏற்றுக்கொள்ள முடியாது.
இதன் உண்மை விளக்கம் என்னவென்றால்;
- ஒருவன் தான் பெற்ற சாதனையினை தகுந்த ஒழுக்க விதிமுறைகளுடன் பன்னிரெண்டு வருடங்கள் சாதனை செய்யவேண்டும் என்பதே முதன்மை விதி. இதற்கான விளக்கம் எமது அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நூலில் விளக்கியுள்ளோம்.
- இரண்டாவது ஒருவன் தனது மன, பிராண சக்திகள் வீணாக்காமல் இருக்கும் ஒழுக்க நெறிகளை தனது வாழ்வில் பின்பற்ற தொடங்குதல். இதனையே இயம, நியமம் என்று யோக சாத்திரம் கூறும்.
- சாதனை நுணுக்கங்களை கற்றுக்கொள்ள இன்று ஒலி, ஒளி, எழுத்து ஊடகங்கள் இருக்கின்றன.
- அடுத்து பல்லாயிரக்கணக்கான வருடங்கள் இந்த உண்மைகளை தமது அனுபவ அறிவின் மூலம் பிரபஞ்சத்தில் தொடர்ச்சியாக பேரொளி நிலையில் மகாகாரண சரீரத்தில் இருந்து பேணிவரும் குருபரம்பரையில் உள்ள ஒருவருடன் தொடர்பினை ஏற்படுத்தல். இந்த தொடர்பு நாம் தேடிக்கிடைப்பதில்லை. எமது பக்குவம்/ஆன்ம பரிணாமம் உயரும்போது தொடர்பு தானாக கிடைக்கும்.
ஆகவே ஒருவன் ஆன்ம சாதனையில் முன்னேறி தனது சாதனை மூலம் மன, பிராண சக்திகளை வலுப்படுத்தி நன்மைகள் பெற்று உயரவேண்டுமானால்;
- முதலில் அதற்குரிய பண்புகளை தன்னில் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
- இந்த பண்புகளை வளர்ப்பதன் மூலம் குருபரம்பரையுடன் தொடர்பு ஏற்படும்.
- அப்படி ஏற்பட்ட தொடர்பினால் சாதனகளை கற்றுக்கொண்டு பன்னிரெண்டு வருடம் இடைவிடாமல் செய்து வர எமது பரிணாமம் உயரும்.
இந்த உண்மைகளின் அடிப்படையில் எமது உபதேசங்களை ஒழுங்கு படுத்தியுள்ளோம்.
- எம்மிடம் உபதேசம் பெற உங்களுக்கு விருப்பம் இருப்பின் தாராளமாக எம்மால் உதவ முடியும்.
- அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது:
- கீழ்வரும் படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.
- படிவம்
- பின்னர் உபதேச குறிப்பினை கீழ்வரும் மூன்று முறைகளில் பெற்றுக்கொள்ள முடியும்;
- தெரிவு 01: மூன்று நாள் அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் வகுப்பில் பங்கு பற்றி நேரில் சந்தித்து உபதேசம் பெற்றுக்கோள்வது.
- தெரிவு 02: எம்மால் கூறப்படும் குறித்த நேரத்தில் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி உபதேசம் பெற்றுக்கொள்ளலாம்.
- தெரிவு 03: உபதேச ஒலி நாடாவினை பெற்றுக்கொள்ளல்.
- தெரிவு 01 & 02 ஐ தெரிவு செய்பவர்கள் ஒரு முறையாவது வகுப்பில் கலந்துகொள்வது தெளிவு பெற உதவும்.
- எல்லாவற்றிற்கும் அடிப்படை குரு, மகாகாரண ரூபத்தில் ஒளி நிலையாய் இருக்கும் குருமண்டலத்துடன் நாம் எப்படி எம்மை இணைத்துக்கொள்வது என்ற குரு சாதனா. இந்த சாதனையின் பயனாக எம்மை உயர்ந்த தெய்வ சக்தி பொருந்திய குருமண்டலத்துடன் இணைத்துக்கொள்ள முடியும்.
- இரண்டாவது அகத்தியர் மூலகுரு மந்திரம், பீஜ மந்திரங்கள் மனதையும் பிராணனையும் உயர்ந்த பிரபஞ்ச சக்திகளுடன் இணைக்கும் கருவிகள், மனதில், வாக்கில் இவற்றின் மூலம் சக்தி அலைகளை உருவாக்கி எம்மில் பரிணாம உயர்வை உருவாக்கும். இப்படி ஐந்து சக்தி வாய்ந்த ஒருவனின் ஆன்ம பரிணாமத்தை தூண்டி இறை சாதனையில் முன்னேறக்கூடிய மன, பிராண வலிமையினை தரக்கூடியது அகத்தியர் மூலகுரு மந்திரம். இது பற்றிய மேலதிக விபரங்களை அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நூலில் அறிந்து கோள்ள முடியும்.
- மூன்றாவது காயத்ரி மந்திரம், இது எல்லா அறிவிற்கும் மூலம், பிராணனை இரட்சிப்பது. எவ்வளவு சாதனை செய்தாலும் சக்தி பெற்றாலும் அதனை சரியாக பயன்படுத்த தெளிந்த புத்தி தேவை இதனை தருவது காயத்ரி மந்திர ஜெபம்.
- நான்காவது காயத்ரி சித்த சாதனை; எவ்வளவு தெய்வ சாதனைகள், ஜெபம், இறைவழிபாடு செய்தாலும் சித்தம் என்ற ஆழ்மனத்தில் போட்ட விதைகளே வாழ்க்கையில் விருட்ஷமாகி பலனை தரும். ஆகவே சித்தத்தில் தகுந்த விதைகளை பதிக்காமல் எவரும் நல்ல பலனை பெற்று விட முடியாது. அதனை சாதிப்பது காயத்ரி சித்த சாதனை.
- இந்த நான்கு பயிற்சிகளையும் நாம் கற்பிக்கும் சுவாசத்தை கவனித்தல், தீர்க்க சுவாசம் ஆகிய இரண்டு அடிப்படை பிராண சாதனைகளுடன் செய்து வர உங்கள் மனம் சுத்தியாகி, பிராணன் வலுப்பட்டு உங்கள் வாழ்வு சீராக தொடங்கும்.
- இந்த நிலை வரை நீங்கள் உங்களை வலிமைப் படுத்திக்கொண்டாலே உலக வாழ்வு இன்பமாகத் தொடங்கும்.
- இதற்கு மேல் உயர்ந்த சாதனை செய்ய தானாகவே குருமண்டலம் வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
- நமக்கு மேல் எம்மை வழிநடாத்தும் குருமண்டலம் இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் உபதேசத்தினை பெற்றுக்கொள்வது.
- பெறும் உபதேசப்படி தினசரி சாதனையினை ஒழுங்காக செய்வது.
- நம்பிக்கையுடன் கூடிய சாதனை சிரத்தை எனப்படும்.
- நாம் செய்யும் சாதனையால் எமக்கு நன்மை கிடைக்கிறதா என்பதை எப்படி அறிவது?
- உபதேசம் பெற்றும் நாற்பத்து ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக செய்து வர உங்கள் மன, உடல், சூழலில் நிச்சயமான நல்ல மாற்றங்கள் ஏற்பட ஆரம்பிக்கும்.
- இது வெறுமனே நம்பிக்கையால் ஏற்படும் அற்புதம் அல்ல, உங்களில் உறைந்திருக்கும் மன, பிராண, உடல் சக்திகளை ஒரு ஒழுங்கு முறைக்கு கொண்டு வந்து, எம்மை விட பலம் பொருந்திய தெய்வ சக்தியுடன் இணைப்பதால் ஏற்படும் மாற்றம். இதனை யோக அறிவியலை தெரிந்து கொள்வதன் மூலம் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
இதனை உபதேசிக்கும் நீங்கள் எமக்கு குருவா?
- எனது தனிப்பட்ட நிலையில் அத்தகைய நிலையை நான் குறித்த வரைவிலக்கணத்துடன் ஏற்றுக்கொள்கிறேன். இன்று குரு என்றவுடன் ஒருவித அடிமை நிலை மனோபாவத்தை ஏற்படுத்துவதே குரு சிஷ்ய உறவு முறையாக பார்க்கப்படுகிறது.
- எமது நிலை "விஸ்வ மித்ரா" ; இறை சாதனை செய்ய விரும்பும் அன்பர்களுக்கு நட்புடன் வழிகாட்டும் முறை. ஆகவே எம்மிடம் சாதனை பயில விரும்பினால் நாம் குரு பரம்பரையில் கற்றவற்றை நாம் கூறும் ஒழுங்கில் பயிற்சிக்க நீங்கள் தயாராக இருந்தால் தாராளமாக எம்மை அணுகலாம்.
- நீங்கள் குரு என்று கற்பிக்கும் எந்த வேடங்களும் எமக்கு பொருந்தாது என்பதும் அத்தகைய எதிர்பார்ப்புடன் எம்மை அணுகினால் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாவீர்கள் என்பதனையும் உங்களுக்கு அறியத்தர விரும்புகிறேன்.
காட்டிடை அலைந்திடாமல் காணலிடை நலிந்திடாமல்
பூவுலகம் தன்னை சுத்த பொய் என்றும் புகன்றிடாமல்
புறத்தொரு மதத்தினோரைப் புண்பட பேசிடாமல்
சேவைகள் செய்தற்போதும் தெய்வத்தை தெரிவோம் என்று
தெளிவுற காட்டினாய் உன் தினசரி வாழ்கைதன்னால்
தீவினை இருட்டை போக்கி ஜகமெல்லாம்
விளங்கும் ஆத்ம யோக ஞான தீபமே
என்பதே எமது குருபரம்பரை பற்றிய வரைவிலக்கணம்.
- இல்லறத்தில் இருந்து கொண்டு, குருநாதர் காட்டிய வழியில் சாதனை செய்துகொண்டு, வாழ்க்கைக்கு தேவையான செல்வத்தை எனது சொந்த உழைப்பின் மூலம் சம்பாதித்து எமது குருமண்டலத்தை நம்பி வருபவர்களுக்கு வழிகாட்டி வருகிறோம்.
- இந்தப் பணியில் எனது என்ற எந்த தன்முனைப்பும் இல்லை. நான் என்ற நிலை இன்றி நாம் என்று குருமண்டலத்தின் ஆணைக்கு இணங்க ஸக்தி சுமனன் ஆகிய "நான்" கருவியாக இருக்கிறேன்.
- நீங்கள் உபதேசம் பெற்று சிரத்தையுடன் (நம்பிக்கையுடன் கூடிய செயல்) சாதனை செய்து வர குருமண்டலத்தின் அருட்சக்தி உங்களின் மனதின் மூலம் வழிகாட்ட தொடங்கும்.
- எமது வழிகாட்டலில் இணைபவர்கள் எந்த விடயத்தையும் தெய்வ குணத்துடன், அறிவு சக்தியுடன் அணுகும் பண்புடையவர்களாக இருக்க வேண்டும். இந்த பண்புகள் எவை என்பதை சாதனா நியதிகள் என்ற உபதேச பாடத்தின் மூலம் அறிந்து கொள்வீர்கள்.
இதற்கு நாம் ஏதும் கட்டணங்கள் செலுத்த வேண்டுமா?
- எம்முடைய எதிர்பார்ப்பு இங்கு எதுவும் இல்லை!
- நாம் பெறும் ஒவ்வொன்றிற்கான நன்றியை திருப்பி செலுத்த வேண்டும் என்பது பிரபஞ்ச நியதி. அந்த நன்றி கீழ்வரும் ஒன்றாக இருக்கலாம்.
- புதிய நூல்கள், பிரசுரம் வெளியிட தகுந்த பொருளதவிகளை செய்தல்.
- ஆர்வமுள்ள அன்பர்களுடன் இந்த சாதனை முறைகளை பகிர்ந்து கொள்ளல்.
- உங்கள் பிரதேசங்களில் வகுப்புகளை நடாத்துவதற்குரிய ஏற்பாடுகளை செய்தல்.
- உங்கள் வீட்டில் ஆர்வம் உள்ள சாதகர்களை அழைத்து குழுவாக சாதனை செய்தல்.
- அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நூலை வாங்கி நூலகங்களுக்கு, நண்பர்களுக்கு அன்பளிப்பு செய்தல்.
- இவை எதுவும் உங்கள் விருப்பத்துடன் கூடிய மனப்பூர்வமான ஒன்றாக இருக்க வேண்டும். நாம் உங்களுடைய பங்களிப்பில் எதுவித எதிர்பார்ப்புடனும் இந்த பணியை செய்யவில்லை என்பதை தெளிவு படுத்துகிறோம்.
அன்புடன்
Friday, December 16, 2016
அகத்தியர் யோக ஞானதிறவுகோல் வகுப்பும் மூலகுரு மந்திர உபதேசமும்
அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் எனும் நூல் அகத்தியர் ஞானம் முப்பது என்ற அகத்திய மகரிஷியின் கிரியா வாசி சிவ யோக விளக்கங்களை கூறும் அரிய பாடல் தொகுப்பு.
இந்த நூலின் சிறப்பு ஒரு மானிடனாக பிறப்பெடுத்தவன் தான் அடையக்கூடிய மிக உயர்ந்த இறை நிலையை (சித்தர்கள் கூறும் மகாகாரண சரீரம், திருச்சிற்றம்பலம், இறவா நிலை, சொருப சமாதி) அடைய விருப்பம் கொண்ட மாணவனை ஆரம்பம் நிலை முதல் இறுதி நிலை வரை அவன் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்களை படிப்படியாக எடுத்துரைக்கும்.
இன்று யோகம் பயில விரும்பும் பலர் அதன் முழுமையான வரை படத்தை அறிந்து கொண்டு பயிலத் தொடங்குவதில்லை. தமது வாழ்க்கையில் ஏற்படும் ஏதாவது ஒரு பிரச்சனைக்கு உகந்த தீர்வாக எடுத்துக்கொண்டு ஆரம்பிப்பதால் அந்த பிரச்சனை தீர்ந்தவுடன் அவர்களது பயணம் நின்று விடுகிறது. ஆனால் முழு வரை படத்தையும் அறிந்தவன் ஆர்வத்துடன் விரிந்த பிரபஞ்ச உண்மைகளை அறியும் ஆர்வத்துடன் முன்னேறுகிறான்.
இப்படி முன்னேறுவதன் பயனாக அவனது மன, பிராண சக்திகள் அதிகரித்து தனது உலக வாழ்க்கையிலும் அரிய சித்திகளை பேற்று இன்பத்தை அனுபவித்து அதைவிட உயர்ந்த இன்பத்தை அனுபவிக்கும் நோக்குடன் உயர்கிறான்.
இந்த பயணத்திற்குரிய முழுமையான வழிகாட்டி இந்த நூல்.
இந்த முப்பது பாடல்களும் மெய்ஞான குரு அகத்திய மகரிஷியின் ஆசியுடன் தியான சாதனை மூலம் விளக்கவுரை பெறப்பட்டு நூலாக வெளியிடப்பட்டுள்ளது.
நூலைக்கற்ற பலரும் அவற்றில் சந்தேகம் தெளிய வேண்டும் என்றும், அகத்தியர் மூல குரு மந்திர உபதேசம் பெற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டதை அடுத்து கீழ்வரும் வகுப்பு திட்டம் 2017ம் ஆண்டு ஜனவரி முதல் ஆரம்பிக்க பட இருக்கிறது.
இதன் பிரகாரம்:
இலங்கையில்:
- ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் குறைந்தது இருபது மாணவர்கள் பதிவு செய்த பின்னர் வகுப்பு அறிவிக்கப்படும்.
- வகுப்பின் தொடக்கத்தில் அகத்தியர் மூல குரு மந்திரமும், சித்த வித்யா குருமண்டல நாமாவளி, காயத்ரி மந்திர உபதேசம் வழங்கப்படும்.
- பின்னர் இரண்டு நாட்களில் தினசரி தியானப் பயிற்சியுடன் பாடல்களுக்கான சுருக்க விளக்கவுரையும் கற்பிக்கப்படும்.
- மூன்றாவது நாள் அடிப்படி பயிற்சி, தினசரி சாதனை வழிகாட்டல் தரப்படும்,
- ஆசிரியரின் நேரம் தானமாக தரப்படுகிறது. மாணவர்கள் விரும்பிய நன்கொடையினை தரலாம்,பெறப்படும் நன்கொடைகள் இந்த பணி
- கற்கும் மாணவர்களை ஏதாவது ஒருவகையில் இந்த நல்ல விடயங்களை மற்றவர்களுக்கு சென்றடைய செய்யும் பணியில் இணைத்துக்கொள்ள எதிர்பார்க்கப்படுவர்.
- வகுப்புக்களை ஏற்பாடு செய்ய ஒருங்கிணைப்பாளர் ஒருவர் நியமிக்கப்படுவார்.
- வகுப்புபிற்குரிய செலவுகளை {வகுப்பு நடாத்துவதற்குரிய இடம், ஆசிரியரின் பயண, தங்குமிட செலவுகள்} மாணவர்கள் பங்களிப்பு செய்வதோ, ஏற்பாடு செய்வதோ எதிர்பார்க்கப்படுகிறது.
- வெளிநாடுகளில்
- வகுப்புக்களை ஏற்பாடு செய்ய ஒருங்கிணைப்பாளர் ஒருவர் நியமிக்கப்படுவார்.
வகுப்புபிற்குரிய செலவுகளை {வகுப்பு நடாத்துவதற்குரிய இடம், ஆசிரியரின் பயண, தங்குமிட செலவுகள்} மாணவர்கள் பங்களிப்பு செய்வதோ, ஏற்பாடு செய்வதோ எதிர்பார்க்கப்படுகிறது.
கீழ்வரும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்.
https://goo.gl/forms/gV2tr3Lif25qkHKx1
பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்
பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள் எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால் சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...
-
போகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு வாசிப்பு ஓம் போக நாதர் பாதம் போற்றி இது போகர் ஏழாயிரத்தினை வாசித்து யோக தாந...
-
இதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...
-
குருநாதர் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் தனது ஸௌபாக்யா மந்திர சாதனா ஒலி நாடாவில் மூன்று ஆசீர்வாத மந்திரங்களை கூறியுள்ளார். இந்த மூன்று மந்திரங்க...