குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, October 31, 2014

சனி பெயர்ச்சி - ஸ்ரீ சனீஸ்வரர் உடன் ஒரு குருசிஷ்ய சம்பாஷனை


சனிஸ்வர பகவானே! குருதேவா! கடந்த ஒருவாரமாக இங்கு மக்கள் நீங்கள் இராசி மாறப்போகிறீர்கள் என்று பயந்து போய் இருக்கிறார்கள்!

புத்தரை வழிபடும் சகோதரர்களும் உங்களை கண்டு பயந்து பரிகாரம் என்று ஜோதிடர், கோயில் என்று ஓடியவண்ணம் இருக்கிறார்கள்!

கடவுள் இல்லை என்று நாத்திகமும், கொமினிசமும் பேசும் நண்பர்களும் பின்வாசலால் ஜோதிடரிடம் சென்று விசாரித்துக்கொள்கிறார்கள்!

தன்முயற்சி இல்லா மாணவர்கள் உங்கள் மேல் குற்றம் சாட்டிவிட்டு நீங்கள் இருக்கும் நிலையில் படித்தாலும் தலையில் ஏறாது என்று கூறுகிறார்கள்.

கணவனுக்கும் மனைவியிற்கும் வரும் மனஸ்தாபம் உங்களால் என்று குறை கூறுகிறார்கள்.

ஜோதிடர்களும், கோயில்களும் உங்கள் பாதிப்பினை இவர்கள் எல்லோருக்கும் குறைத்து தருவதாக வாக்குறுதி அளித்து ஸ்பெஷல் பக்கேஜ் அறிவித்துள்ளார்கள்!

இவற்றில் எவை உண்மை? எது பொய் சற்று விரிவாக கூற வேண்டுகிறேன் ஐயனே!
 *****************************************************
சித்த யோக மார்க்கத்தில் பயணிக்கும் நன் மனது கொண்ட அன்பனே!

உன் குருநாதர் உனக்கு உபதேசித்த சித்தர்களின் வாக்கான “அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உண்டு” என்பதனை நீ அறிவாய். இது உண்மையிலும் உண்மை!

அண்டத்தில் நவகோள்களில் ஒருவனாக, பூமிக்கு சக்தி அளித்து மனிதகுலத்தின், பூமியின் பரிணாமத்தினை இயக்குவதில் நானும் ஒரு பங்காளன்!

அதேபோல் பிண்டமாகி உன்னிலும் நான் இருக்கிறேன்! உன்னில் நான் இருக்கும் போது என்னை எண்ணி ஏன் பயப்படவேண்டும்! இது மனிதன் தான் யார் என்று அறியாமல் இருக்கும் அறியாமையில் வந்த பயம் அன்றி வேறில்லை!

மேலும் முற்காலத்தில் இந்த உண்மையை அறிந்த சித்தர்கள், ரிஷிகள் பாமரரும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் கதை ரூபமாக எழுதியதை கதையில் உள்ள கருத்தை புரிந்து கொள்வதை விட்டு விட்டு மக்களை பயமுறுத்த தொடங்கி விட்டனர்!

நான் முன்னர் கூறியபடி உன்னில் நான் இருக்கிறேன்! நான் மட்டுமல்ல! நவகோள்கள்! நட்சத்திரங்கள்! என பிரபஞ்ச சக்திகள் அனைத்துமே இருக்கின்றன! இறைவனின் படைப்பில் இவற்றை பெற்றே மனிதன் வாழ்வதற்கு ஏற்றவாறு படைக்கப்படுள்ளான்!

மனிதன் அடிப்படையில் செயலாற்றுவதற்கு ஒன்பது வகையான பிரபஞ்ச அடிப்படை சக்திகள் தேவைப்படுகிறது! அவற்றை தருபவற்றை நவகோள்கள் என்கிறார்கள்.

இந்த சக்திகளை பெறும் மனிதன் தனது மனத்தின் மூலம் அவற்றை நல்லதாகவோ, தீயதாகவோ சமைத்துக்கொள்கிறான்! இதனை நீ தெளிவாக விளங்கி கொள்ளவேண்டும்!

நவகோள்களான நாம் நன்மையினை, தீமையினை நாமாக வழங்குவதில்லை! நீங்கள் உங்கள் மனதினால் சமைக்கும் எண்ணங்களை தகுந்த நேரத்தில் செயற்படுத்துவோம்! இப்படி செயற்படுத்துவதில் ஒவ்வொரு நவகோள் நாயகர்களுக்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கிறது!

எனது தனித்தன்மை என்னவென்றால் நல்லெண்ணம், தெய்வ பக்தி, தூய மனம் உடைய ஒருவனுக்கு அவன் செய்யும் செயலுகான பலனை பலமடங்காக எனது சக்தி மூலம் பெருக்கி கொடுப்பேன்!

அதேபோல் ஆணவம், வஞ்சனை, சமூகத்திற்கு விரோதமான செய்கை செய்பவர்கள் போன்றோருக்கும் அதேவிதியினை பின்பற்றி பலன் கொடுப்பதில் வஞ்சனை செய்வதில்லை!'

ஆகவே நல்லெண்ணமும், தூய மனது கொண்டவனும் என்னை நினைத்து அஞ்சத்தேவையில்லை! இப்படி பயந்த எண்ணங்களை எடுப்பதால் பலர் நன்மைகள் செய்தும் தீயபலனை அனுபவிக்கும் நிலைக்கு ஆளாகின்றனர்! ஏனெனில் மனிதர்களாகிய நீங்கள் மனதில் எதை விதைக்கிறீர்களோ அவற்றை பெருக்கி உங்களுக்கு தரும் சக்திகளே நாம் அன்றி எமக்கு விருப்பு வெறுப்பு எதுவும் இல்லை!

என்னை மந்தன் என்றும், நொண்டி என்றும் கூறுவார்கள்! இதை நீ புரிந்து கொண்டிருப்பாய் என்று எண்ணுகிறேன்! இந்த சூரியமண்டலத்தில் மெதுவாக சுழல்பவன் என்பதனை பாமரர்கள் விளங்க குறித்த சொற்கள் அவை! வேகமாக ஓடுபவன் கண்களில் சில விடயங்கள் தப்பிவிடும் அனால் மெதுவாக நடப்பவனால் பலத்தை அவதானிக்க முடியும், அதுபோல் மனிதரது எண்ணம், செய்கை என்பவற்றில் விதைத்ததற்கான பலனை தருவதில் நிச்சயமானவன் நான்!

எனது சக்தியினை அதிகம் பெற்றவன் உலக மாயையில் இருந்து வெளிப்பட்டு பேருண்மையினை அறியும் ஆற்றல் உள்ளவனாவான்! பிரபஞ்ச உண்மைகளை அறிய ஆர்வம் கொண்டவனும், நிமிடத்திற்கு நிமிடம் கற்கவேண்டும் என்று உன்னைப்போல் ஆர்வம் கொண்டவனும் எனது சக்தியினை அதிகம் பெற்றவர்கள்!

எனது சக்தி ஒவ்வொருவனுக்கும் அவனது உண்மை தன்மையினை உணர்த்தும்!  எப்படி என்றால் பல நேரங்களில் அவன் மனதில் விதைத்ததை அவனாலேயே அறிய முடிவதில்லை! அதற்கான பலனை இன்பமாகவோ துன்பமாகவோ நான் தரும்போது அவன் எதை விதைத்தான் என்பதனை அறிவித்து ஞானம் பெறுவதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுதுகிறேன். ஆனால் மனிதர்களது மனநிலை ஏற்பு இல்லாததால் அவர்கள் அவற்றை பெறுவதில்லை.

அன்பனே, ஒருவிடயத்தினை புரிந்து கொள்! எனது பாதிப்பில் இருந்து யாரும் தப்ப முடியாது! ஆனால் நான் தருவது நல்லதா? கேட்டதா? என்பது எப்போதுமே உனது தெரிவு அன்றி எனது விருப்பம் அல்ல!

உண்மைகளை கடுமையாக சொல்லி அனுபவத்தினை கொடுத்து ஞானத்தினை பெறவைக்கும் மனித உடல் தாங்கிய குருவில் எனது இந்த சக்தி செயற்படுகிறது.

மேலே நீ கேட்ட பரிகாரங்கள், பூஜைகள், யாகங்கள்  என்பன தன்னை அறிந்த ஞானம் பெற்ற ரிஷிகள் எனதும், மற்றைய கோள்களின் சக்திகளை ஈர்பதற்கு ஏற்படுத்திய வழிகள்! இவற்றை எவ்வளவு செய்தாலும் நீ உன்னில் விதைத்ததை தான் பெறுவாய் என்பதனை நினைவில் கொள்!

ஆகவே உனக்கு துன்பம் ஏற்படும் போது யாரையும், எதனையும் குறை சொல்ல வேண்டாம், உனது இதயத்தினை திறந்து என்னை குருவாக தியானித்து அந்த துன்பத்திற்கு காரணமான எனது செய்கை, எண்ணம்  என்ன என்பதனை தியானி! உனது ஆழ்மனம் மூலம் அது உணரவைக்கப்படும்! அதன்பின்னர் அத்தகைய செயலை எண்ணத்தினை நான் எடுக்க மாட்டேன் என்ற உறுதியினை எடுத்து மனதில் அன்பு, பரிவு, பாசம் போன்ற நல்ல எண்ணங்களை விதை! நன்மை பெறுவாய்!
இப்படி கணத்திற்கு கணம் தன்னை திருத்திக் கொண்டு ஞானத்துடன் வாழ்பவனுக்கு எனது சக்தி நன்மையினை அளிக்கும்.

பயத்துடன், சுய ஒழுக்கம் இல்லாமல், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களுக்கு அவர்கள் உள்ளிருப்பவற்றை வெளிப்படுத்துவேன்!
ஆகவே எனது சக்தி நன்மை செய்ய வேண்டுமா, தீமை செய்ய வேண்டுமா என்பது எப்போதும் உன்னிடமே உள்ளது என்பதனை அறிந்து மனதில் நல்லெண்ணங்களையும் நற் செய்கைகளையும் விதைத்து வா! நன்மை பெறுவாய்!
உண்மையை அறிந்து உயர்வு பெற ஆசிகள்!


நன்றி ஐயனே!



பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...